search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Suspend"

    • சத்தியமங்கலம் வனத்துறை அதிகாரிகள் இது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.
    • தீபக்குமார், மூர்த்தி 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து வனத்துறை அதிகாரிகள் அதிரடி உத்தரவிட்டனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரியில் சத்தியமங்கலம் வனத்துறைக்கு சொந்தமான சோதனை சாவடி உள்ளது. வனப்பகுதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு வன சோதனை சாவடியில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சோதனை சாவடி வழியாக வாகனத்தில் சென்ற கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த லாரி டிரைவரிடம் சோதனை சாவடி பணியில் இருந்த வனவர் தீபக்குமார் மற்றும் வேட்டை தடுப்பு காவலர் மூர்த்தி ஆகிய 2 பேரும் சேர்ந்து லஞ்சம் கேட்டு அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். லஞ்சம் தர மறுத்ததால் டிரைவரை அவர்கள் சரமாரியாக தாக்கினர்.

    இது குறித்த வீடியோ வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சத்தியமங்கலம் வனத்துறை அதிகாரிகள் இது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

    அதில் டிரைவரை வனவர் தீபக்குமார், வேட்டை தடுப்பு காவலர் மூர்த்தி ஆகியோர் ஆகியோர் தாக்கியது உறுதியானது. இதனையடுத்து தீபக்குமார், மூர்த்தி 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து வனத்துறை அதிகாரிகள் அதிரடி உத்தரவிட்டனர்.

    இந்நிலையில் வனத்துறையினர் லாரி ஓட்டுனரை தாக்கிய காட்சியை வீடியோ எடுத்த மற்றொரு லாரி ஓட்டுனரை வனத்துறையினர் மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது.

    • மேட்டூர் நகராட்சி பொறி யாளர் மணிமாறன், நக ராட்சி ஆணையாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.
    • நேற்று (30-ந் தேதி) அவர் ஓய்வு பெற இருந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம், மேட்டூர் நகராட்சி பொறி யாளர் மணிமாறன், நக ராட்சி ஆணையாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். நேற்று (30-ந் தேதி) அவர் ஓய்வு பெற இருந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    மணிமாறன் நங்கவள்ளி பேரூராட்சியில் உதவி பொறியாளராக பணியாற்றியபோது, பேரூராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாகவும் அதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் இவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசின் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் செயலாளர் சிவதாஸ் மீனா நகராட்சி பொறியாளர் மணிமாறனை சஸ்பெண்டு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். 

    • கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.
    • காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் போலீசார் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.

    கள்ளக்குறிச்சி உட்கோட்டம் கரியாலுர் போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் ராமலிங்கம்.இவர் தற்போது நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் பணி புரிந்து வருகிறார்.

    இவர் கரியாலூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த போது சாராய வியாபாரிகளிடம் ரகசிய தொடர்பில் இருந்து வந்த காரணத்தினால் அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுத்து சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான கஞ்சா, குட்கா மற்றும் சாராயம் காய்ச்சுதல், கடத்துதல், விற்பனை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளிடம் தொடர்பில் இருந்து, காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் போலீசார் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • பணி பெற்று தருவதாகவும், பதவி உயர்வு வாங்கி தருவதாகவும் கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
    • கணேசன் மீது பல்வேறு புகார்களின் அடிப்படையில் ஏற்கனவே 2 முறை சஸ்பெண்டு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    சேலம்:

    சேலம் ஆவினில் பால் பண்ணை பிரிவில் சிறப்பு நிலை டெக்னீசியனாக கணேசன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் மீது பதவி உயர்வு பெற்று தருவதாகவும், ஆவினில் வேலை பெற்று தருவதாகவும் கூறி பணம் பெற்றதாக புகார்கள் வந்தன. அந்த புகாரை 3 அலுவலர்கள் அடங்கிய குழு அமைத்து விசாரிக்கப்பட்டது.

    அதில், கணேசன் பணத்தை பெற்றுக் கொண்டு பணி பெற்று தருவதாகவும், பதவி உயர்வு வாங்கி தருவதாகவும் கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன் அறிக்கை அடிப்படையில் கணேசனை சஸ்பெண்டு செய்து, ஆவின் பொதுமேலாளர் விஜயபாபு உத்தரவிட்டார்.

    இவர் நேற்று (31-ந்தேதி) ஓய்வு பெற இருந்த நிலையில் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். கணேசன் மீது பல்வேறு புகார்களின் அடிப்படையில் ஏற்கனவே 2 முறை சஸ்பெண்டு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    புகார்கள் வந்ததை தொடர்ந்து நடவடிக்கை

    புதுக்கோட்டை ,

    புதுக்கோட்டை தஞ்சை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சரஸ்வதி புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் சமீபத்தில் புதிய பஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது சுகாதார பணிகள் சரியாக செய்யாமல் இருப்பதை கண்டறிந்தார். இதுகுறித்து விசாரித்ததில் பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்கள் வந்ததை தொடர்ந்து சுகாதார ஆய்வாளர்கள் மணிவண்ணன் மற்றும் கணேசன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    • செல்லம் (வயது 55). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த எழிலரசி என்பவருக்கும் வழித்தட பிரச்சினை இருந்து வந்துள்ளது.
    • இது தொடர்பாக இரு தரப்பினரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் இரும்பாலை அடுத்த முருங்கப்பட்டி பெத்தாம்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி செல்லம் (வயது 55). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த எழிலரசி என்பவருக்கும் வழித்தட பிரச்சினை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக இரு தரப்பினரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    இதனிடையே கடந்த வாரம் மீண்டும் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர்.

    இதில் எழிலரசியின் உறவினரான பெத்தாம்பட்டி அரசுப்பள்ளியில் அப்போது சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வரும் சந்திரன் (57) என்பவர் செல்லத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த செல்லம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தார். பின்னர் இரு தரப்பினரும் இரும்பாலை போலீசில் புகார் அளித்தனர்.

    இதில் எழிலரசி அளித்த புகாரின்பேரில் செல்லத்தின் மகன் தாமோதரனும், செல்லம் அளித்த புகாரின்பேரில் சந்திரனும் கைது செய்யப்பட்டனர்.

    இதனிடையே இந்த விவகாரம் குறித்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ரேச்சல் கலைச்செல்வி துறை ரீதியான விசாரணை நடத்தி, சத்துணவு அமைப்பாளர் சந்திரனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    • கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க கோரி மீனவ கிராம மக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலையில் திரண்டனர்.
    • கலெக்டர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால்தான் கலைந்து செல்வோம் என பொதுமக்கள் கூறினர்.

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்த 3 பேர் கள்ளச்சாராயம் குடித்து பலியானார்கள்.

    மேலும், 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் எக்கியார் குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க கோரி மீனவ கிராம மக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலையில் திரண்டனர்.

    எக்கியார் குப்பத்தில் உள்ள பூமீஸ்வரர்கோவில் பஸ் நிறுத்தம் அருகே அவர்கள் கண்ணீர்மல்க மறியலில் ஈடுபட்டனர். கலெக்டர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால்தான் கலைந்து செல்வோம் என பொதுமக்கள் கூறினர்.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மரக்காணம் காவல் ஆய்வாளர் அருள் வடிவேல் அழகன், மதுவிலக்கு கலால் காவல்துறை காவல் ஆய்வாளர் மரிய சோபி மஞ்சுளா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து டிஜிபி சைலேந்திர பாபு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

    • கடந்த மாதம் 29-ந்தேதி திருக்கழுக்குன்றத்தில் பட்டப்பகலில் சர்புதீன் மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
    • போலீஸ்காரர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றத்தை அடுத்த ருத்ரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சர்புதீன்(37). சமூக ஆர்வலர். இவர், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக கோர்ட்டில் உத்தரவு பெற்று இருந்தார்.

    இந்த மோதலில் கடந்த மாதம் 29-ந்தேதி திருக்கழுக்குன்றத்தில் பட்டப்பகலில் சர்புதீன் மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கு தொடர்பாக திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த, பேரூராட்சி கவுன்சிலர் தவுலத்பீ, அவரது மகன் பாரூக் உள்பட மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கொலையாளிகளுக்கு உடந்தையாக போலீஸ் நிலையத்தில் எடுக்கப்படும் நடவடிக்கை மற்றும் தகவல்களை பரிமாறியதாக திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலைய நீதிமன்ற பொறுப்பு காவலர் பிரசாந்த்(32) என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு பிரதீப் பிறப்பித்து உள்ளார்.

    இது தொடர்பாக மேலும் ஒரு போலீசாரிடம் விசாரணை நடந்து வருகிறது. அவர் மீதும் துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    கொலையாளிகளுக்கு தகவலை பரிமாறியதாக போலீஸ்காரர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நீதிமன்ற வளாகத்தில் இருந்தபடி ஸ்ரீபுகழ் இந்திரா, உறவினர்கள் சிலரிடம் செல்போன் மூலம் பேசினார்.
    • போலீஸ் ஏட்டுகள் சுரேஷ் கார்த்திகேயன், அய்யனன் ஆகிய 2 பேரும் கைதிக்கு செல்போன் கொடுத்தது தெரியவந்தது.

    மதுரை:

    மதுரையைச் சேர்ந்தவர் ஸ்ரீபுகழ் இந்திரா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இணையதளத்தில் 'வீடு ஒத்திக்கு விடப்படும்' என்று விளம்பரம் கொடுத்தார். இதனை நம்பி பலர் அவரை தொடர்பு கொண்டனர். அப்போது அவர்களிடம் ஸ்ரீபுகழ் இந்திரா பணம் பெற்றுக் கொண்டார். ஆனால் பணம் கொடுத்தவர்களுக்கு ஒத்திக்கு வீடுகள் தரப்பட வில்லை.

    எனவே பாதிக்கப்பட்டவர்கள் மாநகர போலீசில் புகார் கொடுத்தனர். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஸ்ரீ புகழ் இந்திரா குத்தகை என்ற பெயரில் பலரிடம் பணம் வசூலித்து ஏமாற்றியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்காக ஸ்ரீபுகழ் இந்திராவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிமன்ற வளாகத்தில் இருந்தபடி ஸ்ரீபுகழ் இந்திரா, உறவினர்கள் சிலரிடம் செல்போன் மூலம் பேசினார்.

    மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கைதி ஒருவர் செல்போனில் பேசிய வீடியோ, சமூக வலைதளத்தில் பரவியது. இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    அப்போது போலீஸ் ஏட்டுகள் சுரேஷ் கார்த்திகேயன், அய்யனன் ஆகிய 2 பேரும் கைதிக்கு செல்போன் கொடுத்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் சஸ்பெண்டு செய்து மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார்.

    • பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் தப்பி ஓடினார்
    • பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி.உத்தரவு

    பெரம்பலூர்,

    சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 30). இவர் பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வழக்கில் பிரபாகரனை நேற்று முன்தினம் சேலம் மாவட்டம், ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையின் இடையே பிரபாகரன் தப்பி ஓடி விட்டார். பின்னர் அவரை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் ஆயுதப்படை போலீஸ்காரர் பிரபாகரன் மீது துறை ரீதியான நடவடிக்கையாக, அவரை பணியிடை நீக்கம் செய்து பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவிட்டாா்.

    நேற்றுடன் ஓய்வுபெற இருந்த நிலையில் பால்வள மேம்பாட்டு ஆணையர் பிரகாஷ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
    மதுரை மண்டல பால்வளத்துறை துணை ஆணையர் சிறிஸ்துதாஸை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    நேற்றுடன் ஓய்வுபெற இருந்த நிலையில் பால்வள மேம்பாட்டு ஆணையர் பிரகாஷ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    மேலும், கிறிஸ்துதாஸ் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை முடியும் வரை ஓய்வுபெற அனுமதி இல்லை என்றும் ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.

    இதையும் படியுங்கள்.. 133 கோடி மக்களின் வாழ்க்கையை மாற்றியமைத்தார் பிரதமர் மோடி- உ.பி முதல்வர் பாராட்டு
    சிந்தாதிரிப்பேட்டை காவல் ஆய்வாளர் சிவசுப்பிரமணியனை சஸ்பெண்ட் செய்து சென்னை காவல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
    சென்னை சிந்தாதிரிப் பேட்டையைச் சேர்ந்த பா.ஜ.கவின் எஸ்.சி.- எஸ்.டி. பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்து வந்த பாலசந்திரன் (30) கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

    பைக்கில் வந்த 3 பேர் பாலசந்திரனை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதையடுத்து, கொலை வழக்கில் தொடர்புடையதாக பிரதீப், அவனது கூட்டாளிகளான கலைவாணணன், ஜோதி, பிரதீப் சகோதரர் சஞ்சய் ஆகிய 4 பேரை சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இந்நிலையில், பாஜக நிர்வாகி பாலசந்தர் கொலையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காத புகாரில் சிவசுப்பிரமணியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    சிந்தாதிரிப்பேட்டை காவல் ஆய்வாளர் சிவசுப்பிரமணியனை சஸ்பெண்ட் செய்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

    இதையும் படியுங்கள்.. டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு
    ×