search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stolen"

    • பச்சாபாளையம் கோவில் திருமண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பல்லடம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    பல்லடம் :

    பல்லடத்தில் உள்ள பச்சாபாளையம் கோவில் திருமண மண்டபத்தில் நேற்று திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. திருமணத்திற்காக வந்த கோவையைச் சேர்ந்த கார்த்திகா(வயது 28) என்பவர் மணமகனது அறையில் அவரது கைப்பை வைத்துவிட்டு சென்றுள்ளார்.

    அதில் அவர் அணிந்திருந்த சுமார் 12 சவரன் தங்க நகை, ரொக்கம் ரூ. 24 ஆயிரம் ஆகியவற்றை கைப்பையில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், திருமண வேலைகளில் மும்முரமாக இருந்தவர் சிறிது நேரம் கழித்து சென்று பார்த்தபோது கை பையை காணவில்லை. இதுகுறித்து திருமண மண்டபத்தில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார். யாரும் எடுக்கவில்லை எனக் கூறியதாக கூறப்படுகிறது .இதையடுத்து அவர் பல்லடம் போலீசில் புகார் அளித்துள்ளார்.புகாரின் பேரில் போலீசார் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண மண்டபத்தில் நகை மற்றும் பணம் காணாமல் போனது திருமண வீட்டாருக்கு அதிர்ச்சி- சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.

    • மர்பநபர் ஒருவர் ஓடுவதை கண்டு சஞ்சீவ்குமார் சார்தா அதிர்ச்சி அடைந்தார்.
    • இதுகுறித்து அவர் சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார்.

    கோவை,

    கோவை வேலாண்டிபாளையம் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் சஞ்சீவ்குமார் சார்தா(55). இவர் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல கடையில் வியாபாரத்தை முடித்து விட்டு வீட்டிற்கு வந்தார்.

    பின்னர் குடும்பத்தினருடன் வீட்டில் உள்ள 1-வது மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து அடையாளம் தெரியாத மர்பநபர் ஒருவர் ஓடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே, வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அலமாரியில் வைக்கப்பட்டிருந்த 6½ கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.42 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர் சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.

    • கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ளது.
    • கோவிலில் உண்டியல் உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை,

    கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று அதிகாலையில் கோவில் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு திருட்டு போயிருப்பதை கோவில் பாதுகாவலர் ஒருவர் பார்த்தார்.

    நள்ளிரவில் கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே இது குறித்து கோவில் நிர்வாகத்தினருக்கு தகவல் கொடுத்தார்.

    அவர்கள் இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் கோவிலில் ஆய்வு செய்தனர். மேலும் அங்கிருந்த சி.சி.டி.வி காமிரா காட்சிகளை கைப்பற்றி பணத்தை கொள்ளையடித்து சென்ற நபர்களின் உருவம் பதிவாகியுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலும் உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது? அதனை கொள்ளையடித்து சென்றவர்கள் யார்? இந்த சம்பவத்தில் ஒரே நபர் ஈடுபட்டாரா? அல்லது கூட்டு சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவிலில் உண்டியல் உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வெளியூர் செல்வதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர்.
    • பேரூர் டி.எஸ்.பி ராஜபாண்டியன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

    வடவள்ளி,

    கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள சக்தி நகரை சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு திருமணமாகி விட்டது.

    கண்ணன் கேரள மாநிலம் பாலக்காடு மாநிலத்தில் வருமான வரித்துறை துணை கமிஷனராக பணியாற்றி வருகிறார்.

    நேற்று காலை கண்ணன் தனது குடும்பத்தினருடன் சென்னைக்கு சென்று விட்டார். இன்று காலை கண்ணனின் வீடு திறந்து கிடப்பதை அருகே வசித்து வருவர்கள் பார்த்தனர். சந்தேகம் அடைந்த அவர்கள் சம்பவம் குறித்து உடனடியாக கண்ணனுக்கு தகவல் கொடுத்தனர்.

    இதை கேட்டதும் அதிர்ச்சியான கண்ணன், சம்பவம் குறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்தததும் வடவள்ளி இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, அங்கு பீரோ திறந்து கிடந்தது. மேலும் அதில் வைக்கப்பட்டிருந்த 70 பவுன் நகைகளும் மாயமாகி இருந்தன. இவர்கள் வெளியூர் செல்வதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டிற்குள் நுழைந்து பீரோவை திறந்து அதில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றதும் போலீசின் விசாரணையில் கண்டுபிடிக்க ப்பட்டது.

    இதையடுத்து போலீசார் வீடு முழுவதும் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது. கொள்ளையன் தான் மாட்டிக்கொள்ளாமல் இருக்க இதனை தூவி சென்றது தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் அந்த வீட்டில் உள்ள கண்காணிப்பு காமிராவில் ஏதாவது காட்சிகள் பதிவாகி இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய சென்றபோது, அங்கு அதற்கன சர்வரும் திருடப்பட்டு இருந்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருக்கும் காட்சிகளை ஆய்வு செய்து, அதில் கொள்ளையன் உருவம் பதிவாகி இருக்கிறதா என்பதை பார்த்து வருகின்றனர்.

    மேலும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, வீட்டில் உள்ள தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிய நாய் யாரையும் கவ்வி பிடிக்க வில்லை. இதற்கிடையே சம்பவம் பற்றி அறிந்ததும் பேரூர் டி.எஸ்.பி ராஜபாண்டியன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

    இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து 30 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    வருமான வரித்துறை அதிகாரி வீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சோலாரை சரி செய்ய வந்து இருப்பதாக கூறி ஏமாற்றினார்
    • நகைகளை கொள்ளையடித்து சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை சூலூர் அருகே உள்ள ராசிபாளையத்தை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 61). இவர் தமிழக அரசால் வழங்கப்பட்ட வீட்டில் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று பரமசிவம் வீட்டில் இருந்த போது 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அங்கு வந்தார். அவர் அரசால் வழங்கப்பட்டு உள்ள சோலாரை சரி செய்ய வந்து இருப்பதாக கூறினார்.

    பின்னர் அந்த வாலிபர் சோலார் பேட்டரிகளை சரி செய்து கொண்டு இருந்தார். அப்போது அந்த வாலிபர் பரமசிவத்தை மாடிக்கு சென்று சோலாரை சரி செய்யுமாறு கூறினார். இதனையடுத்து அவர் மேலே சென்றார்.

    அப்போது அந்த வாலிபர் பரமசிவம் வீட்டில் உள்ள பீரோவை திறந்து அதில் இருந்த தங்க காசு மாலை, செயின், கம்மல், மோதிரம் உள்பட 10 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தனது பையில் வைத்தார். சிறிது நேரத்துக்கு பின்னர் பரமசிவம் கீழே வந்தார். பின்னர் அந்த வாலிபர் வேலை முடிந்து விட்டதாக கூறி தப்பிச் சென்றார்.

    கடந்த 21-ந் தேதி பரம சிவத்தின் குடும்பத்தினர் அந்த பகுதியில் நடந்த கோவில் நிகழ்ச்சிக்கு புறப்பட்டு கொண்டு இருந்தனர். அப்போது பீரோவை திறந்து பார்த்த போது அதில் இருந்த தங்க நகைகள் மாயமாகி இருந்தது தெரிய வந்தது. சோலார் சரி செய்ய வந்த வாலிபர் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து பரமசிவம் சூலூர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சோலார் சரி செய்ய வந்ததாக கூறி முதியவரை ஏமாற்றி 10 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • வீட்டிற்கு திரும்பிய லலிதா கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
    • ராமநாதபுரம் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை நஞ்சுண்டாபுரம் அருகே உள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி லலிதா (வயது 54). துணி தேய்க்கும் வேலை செய்து வருகிறார். இவர்களது பேத்திக்கு காது குத்து நிகழ்ச்சி வைத்து உள்ளனர்.

    சம்பவத்தன்று இதற்காக லலிதா தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் டவுன்ஹாலில் உள்ள ஜவுளி கடைக்கு துணிகள் எடுக்க சென்றார். அப்போது அவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். பின்னர் அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 34 பவுன் தங்க நகைகள், ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை பட்ட பகலில் கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    வீட்டிற்கு திரும்பிய லலிதா கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ேள சென்று பார்த்த போது அறையில் பீரோவில் இருந்த 34 பவுன் தங்க நகைகள், ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் இது குறித்து அவர் ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

    அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த 2 மர்மநபர்களின் கை ரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து 34 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    • எட்வி ன்ஜார்ஜ் கூடலூர் போலீசில் புகார் அளித்தார்.
    • திருடியது கூடலூர் யானைசெத்தகொல்லியை சேர்ந்த மனோகரன்(37) என்பது தெரியவந்தது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் எட்வின் ஜார்ஜ்(வயது58).

    இவர் கூடலூர்-தேவர்சோலை ரோடு பகுதியில் சொந்தமாக கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு இவர் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் மறுநாள் காலை வழக்கம் போல கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    இதை பார்த்து அதிர்ச்சியான அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, கடையில் இருந்த ரூ.14 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடு போய் இருந்தது.

    இவர் கடையை பூட்டி சென்றதை நோட்டமிட்ட நபர்கள் அதன்பின்னர் கடையை உடைத்து உள்ளே நுழைந்து பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து எட்வி ன்ஜார்ஜ் கூடலூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கடையை உடைத்து பொருட்களை திருடியது கூடலூர் யானைசெத்தகொல்லியை சேர்ந்த மனோகரன்(37) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • டாலர் உள்பட 13 பவுன் தங்க நகைகளை கொள்ளை யடித்து தப்பிச் சென்றனர்.
    • கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை சூலூர் அருகே உள்ள சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி லட்சுமி (வயது 38). இவர் அந்த பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று லட்சுமி தனது வீட்டை பூட்டி விட்டு கடைக்கு தேவையான பொருட்கள் வாங்கு வதற்காக திருப்பூரு க்கு சென்றார். அப்போது பட்டப்பகலில் இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த தங்க செயின், மாலை, கம்மல், மோதிரம், டாலர் உள்பட 13 பவுன் தங்க நகைகளை கொள்ளை யடித்து தப்பிச் சென்றனர். பொருட்களை வாங்கி விட்டு வீட்டிற்கு திரும்பிய லட்சுமி முன் பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து சுல்தான் பேட்டை போலீ சாருக்கு தகவல் தெரி வித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொ ள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் மளிகை கடை உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.   

    • செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன. திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்றனர்.
    • 20 -க்கும் மேற்பட்ட பக்தர்களின் விலை உயர்ந்த செல்போன்கள் திருடப்பட்டுள்ளது

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக காரமடை அரங்கநாத சுவாமி கோவில் இருந்து வருகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமகத்தன்று திருத்தேர் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டின் தேரோட்டம் கடந்த பிப்ரவரி 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடஙகியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் சப்பரத்தில் எழுந்தருளிய எம்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    அதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டமானது கடந்த மார்ச் 6 -ந் தேதி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நடைபெற்றது. நேற்று பந்த சேவை, தண்ணீர் சேவை எடுத்து ஊர்வலமாக வந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரங்கனை தரிசனம் செய்து அருளாசி பெற்றுச்சென்றனர்.

    மேலும், காவல்துறையினர் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு காமிராக்களை பொருத்தி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அதனையும் மீறி கூட்ட நெரிசலை பயன்படுத்தி தேர்த்திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் 20 -க்கும் மேற்பட்டோரின் விலை உயர்ந்த செல்போன்கள் திருடுப்போய் உள்ளது. இச்சம்பவம் குறித்து காரமடை போலீசில் புகார் அளித்தனர். இதனால் காவல் துறையினர் தங்களது கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில் தேர்த்திருவிழா கூட்டத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 20 -க்கும் மேற்பட்ட பக்தர்களின் விலை உயர்ந்த செல்போன்கள் திருடப்பட்டுள்ளது. அதில் 7 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன. திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்றனர்.

    • விஜயகுமார் காங்கயம் காவல் நிலையத்தில் புகாா் செய்தார்.
    • கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

    காங்கயம் :

    காங்கயம், பழையகோட்டை பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (25). இவா் அப்பகுதியில் உள்ள செல்போன் கடையில் வேலை செய்து வருகிறாா். இந்நிலையில், பழையகோட்டை சாலைப் பகுதியில் உள்ள தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை இரவு நிறுத்தியுள்ளாா். மறுநாள் காலை பாா்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயகுமார் இது குறித்து காங்கயம் காவல் நிலையத்தில் புகாா் செய்தார்.

    போலீசார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் பொருத்த ப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • ஓட்டல் ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ஓட்டலின் அருகே உள்ள ஒரு அறையை வாடகைக்கு எடுத்து அதில் ஓட்டல் ஊழியர்கள் தங்கி இருந்தனர்.

    கோவை,

    நெல்லை மாவட்டம் ராதாபுரத்தை சேர்ந்தவர் நாராயண பெருமாள்(வயது24). இவர் கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார்.

    அந்த ஓட்டலின் அருகே உள்ள ஒரு அறையை வாடகைக்கு எடுத்து அதில் ஓட்டல் ஊழியர்கள் தங்கி இருந்தனர். அவருடன் அதே ஓட்டலில் வேலை செய்து வரும் சாத்தான்குளம் பன்னம்பாறையை சேர்ந்த அஜித்குமார்(25) மற்றும் குன்னத்தூரை சேர்ந்த ஷாலின்(24) ஆகியோரும் தங்கி இருந்தனர்.

    இந்த நிலையில், நாராயண பெருமாளுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் அவர் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் அறையில் இருந்து வந்தார். மேலும் அவர் தன்னுடன் அறையில் தங்கியவர்களின் பொருட்களை திருடியதாக தெரிகிறது.இதனையறிந்த ஓட்டல் நிர்வாகம் நாராயணபெருமாளை வேலையை விட்டு நீக்கியது. அவரை நீக்கியதால் அவரது நண்பர் அஜித்குமாரும் வேலையை விட்டு நின்றுவிட்டார். இதனைத்தொடர்ந்து இருவரும் தங்களது சொந்த ஊருக்கு செல்லாமல் அறையில் இருந்தனர்.

    கடந்த 6-ந் தேதி தனது அறையில் இருந்த ஷாலினிடம் இருவரும் பணம் கேட்டு மிரட்டினர். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த இருவரும் பீர் பாட்டிலை உடைத்து கழுத்தில் வைத்து மிரட்டி ஷாலினிடம் இருந்த 1 பவுன் தங்க செயின், மோதிரம் மற்றும் செல்போனை பறித்தனர். இருவருக்கும் பயந்து ஷாலின் போலீசில் புகார் அளிக்காமல் இருந்துள்ளார்.

    இதனை அறிந்த ஓட்டல் நிர்வாகத்தினர் இது குறித்து காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டல் ஊழியர்கள் நாராயண பெருமாள் மற்றும் அஜித்குமாரை கைது செய்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கேரள வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • ரெயில் நிலையம் பிளாட்பாரம் முழுவதும் சோதனை செய்து திருடனை தேடினர்.

    கோவை,

    நெல்லையை சேர்ந்தவர் பால சுப்பிரமணி (வயது 50). இவர் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று அவர் நெல்லை செல்வதற்காக தனது நண்பர் கோவை சேர்ந்த விஜய் (45) என்பவருடன் ரெயில் நிலையம் வந்தார். நெல்லை செல்வதற்காக நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ெரயில் ஏறினார். அப்போது தான் கொண்டு வந்த லேப் -டாப் பேக்கை ரெயில் இருக்கையில் வைத்தார்.

    பின்னர் கீழே இறங்கி வழி அனுப்ப வந்த நண்பர் விஜயையுடன் பேசி கொண்டு இருந்தார். ரெயில் புறப்படும் நேரமானதும் இருக்கைக்கு சென்றார். அப்போது தான் வைத்த லேப்-டாப் பேக் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அக்கம் பக்கத்தில் தேடி பார்த்து கிடைக்காததால் அவர் விஜயிடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க கூறி புறப்பட்டு சென்றார். பின்னர் இதுகுறித்து விஜய் ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் ரமேஷ், மகாராஜன், மாரிமுத்து ஆகியோர் உடனே ரெயில் நிலையம் பிளாட்பாரம் முழுவதும் சோதனை செய்து திருடனை தேடினர்.

    அப்போது 5-வது பிளாட் பாரத்தில் வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்தார். போலீசார் அவரை படித்து விசாரித்தனர். அதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதனால் போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் பாலக்காட்டை சேர்ந்த சியாஸ் (வயது 20) என்பதும், அவர் ரெயிலில் பாலசுப்பிரமணியின் லேப்-டாப் மற்றும் ரூ.4000 திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் லேப்-டாப் மற்றும் ரூ.4000 பறிமுதல் செய்து சியாசை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். புகார் வந்த சில மணி நேரங்களில் திருடனை கையும் களவுமாக பிடித்த போலீசாரை பொதுமக்கள், உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

    ×