என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு
- விஜயகுமார் காங்கயம் காவல் நிலையத்தில் புகாா் செய்தார்.
- கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.
காங்கயம் :
காங்கயம், பழையகோட்டை பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (25). இவா் அப்பகுதியில் உள்ள செல்போன் கடையில் வேலை செய்து வருகிறாா். இந்நிலையில், பழையகோட்டை சாலைப் பகுதியில் உள்ள தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை இரவு நிறுத்தியுள்ளாா். மறுநாள் காலை பாா்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயகுமார் இது குறித்து காங்கயம் காவல் நிலையத்தில் புகாா் செய்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் பொருத்த ப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.
Next Story






