பல்லடம் திருமண மண்டபத்தில் 12 பவுன் தங்க நகை திருட்டு

பச்சாபாளையம் கோவில் திருமண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. பல்லடம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

பல்லடம் :

பல்லடத்தில் உள்ள பச்சாபாளையம் கோவில் திருமண மண்டபத்தில் நேற்று திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. திருமணத்திற்காக வந்த கோவையைச் சேர்ந்த கார்த்திகா(வயது 28) என்பவர் மணமகனது அறையில் அவரது கைப்பை வைத்துவிட்டு சென்றுள்ளார்.

அதில் அவர் அணிந்திருந்த சுமார் 12 சவரன் தங்க நகை, ரொக்கம் ரூ. 24 ஆயிரம் ஆகியவற்றை கைப்பையில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், திருமண வேலைகளில் மும்முரமாக இருந்தவர் சிறிது நேரம் கழித்து சென்று பார்த்தபோது கை பையை காணவில்லை. இதுகுறித்து திருமண மண்டபத்தில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார். யாரும் எடுக்கவில்லை எனக் கூறியதாக கூறப்படுகிறது .இதையடுத்து அவர் பல்லடம் போலீசில் புகார் அளித்துள்ளார்.புகாரின் பேரில் போலீசார் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண மண்டபத்தில் நகை மற்றும் பணம் காணாமல் போனது திருமண வீட்டாருக்கு அதிர்ச்சி- சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com