search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரமடை கோவில் தேரோட்டத்தின் போது பக்தர்கள் கூட்டத்தில் 20 செல்போன்கள் திருட்டு
    X

    காரமடை கோவில் தேரோட்டத்தின் போது பக்தர்கள் கூட்டத்தில் 20 செல்போன்கள் திருட்டு

    • செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன. திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்றனர்.
    • 20 -க்கும் மேற்பட்ட பக்தர்களின் விலை உயர்ந்த செல்போன்கள் திருடப்பட்டுள்ளது

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக காரமடை அரங்கநாத சுவாமி கோவில் இருந்து வருகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமகத்தன்று திருத்தேர் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டின் தேரோட்டம் கடந்த பிப்ரவரி 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடஙகியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் சப்பரத்தில் எழுந்தருளிய எம்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    அதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டமானது கடந்த மார்ச் 6 -ந் தேதி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நடைபெற்றது. நேற்று பந்த சேவை, தண்ணீர் சேவை எடுத்து ஊர்வலமாக வந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரங்கனை தரிசனம் செய்து அருளாசி பெற்றுச்சென்றனர்.

    மேலும், காவல்துறையினர் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு காமிராக்களை பொருத்தி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அதனையும் மீறி கூட்ட நெரிசலை பயன்படுத்தி தேர்த்திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் 20 -க்கும் மேற்பட்டோரின் விலை உயர்ந்த செல்போன்கள் திருடுப்போய் உள்ளது. இச்சம்பவம் குறித்து காரமடை போலீசில் புகார் அளித்தனர். இதனால் காவல் துறையினர் தங்களது கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில் தேர்த்திருவிழா கூட்டத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 20 -க்கும் மேற்பட்ட பக்தர்களின் விலை உயர்ந்த செல்போன்கள் திருடப்பட்டுள்ளது. அதில் 7 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன. திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்றனர்.

    Next Story
    ×