search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stolen"

    • ராணி நகையை திருடிவிட்டு வெளியே வரவும் தயாராக நின்ற காரில் ஏறி தப்பிச் சென்றது தெரியவந்தது.
    • கைது செய்யப்பட்ட மதன்ராஜிடம் 4½ பவுன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது.

    சூலூர்,

    சூலூர் அருகே கலங்கல் செல்லும் பாதையில் வசிக்கும் கண்ணன் (44) தனது வீட்டின் கீழ் தளத்தில் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த 13-ந் தேதி கடையில் உரிமையாளர் கண்ணன் மற்றும் தங்க வேலை செய்யும் ஆசாரி சீனிவாசன் ஆகியோர் இருந்தனர். அப்போது பர்தா அணிந்த பெண் ஒருவர் கடைக்கு வந்து தன்னிடம் 13 பவுன் பழைய தங்க நகை உள்ளது, அதை மாற்றி எனக்கு 10 பவுன் புதிய தங்க நகை தருமாறு கேட்டார்.

    நகைக்கடை உரிமையாளர் 13 பவுன் பழைய தங்க நகையை உரசி பார்க்க திரும்பிய போது அங்கிருந்த புதிய 10 பவுன் தங்க நகைகளை எடுத்துக்கொண்டு தயாராக இருந்த காரில் அந்த பெண் தப்பி ஓடி விட்டார்.

    இதையடுத்து கண்ணன் சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சூலூர் போலீசார் கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    விசாரணையில் நகை கடையில் 10 பவுன் நகையை திருடிச் சென்றது சேலம் மாவட்டம் மணியனூர் காந்தி நகரைச் சேர்ந்த மதன்ராஜ் (வயது 40) மற்றும் அவரது உறவுப் பெண் காட்பாடியைச் சேர்ந்த ராணி (35) என்பது தெரியவந்தது. 2 பேரும் திட்டமிட்டே அந்த நகைக்க டைக்கு சென்றுள்ளனர்.

    மதன்ராஜ் காருடன் வெளியே தயாராக நின்றுள்ளார். ராணி நகையை திருடிவிட்டு வெளியே வரவும் தயாராக நின்ற காரில் ஏறி தப்பிச் சென்றது தெரியவந்தது. இவர்களில் மதன்ராஜ் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 4½ பவுன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது.

    ராணி தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள்.

    • மோகன்குமாரின் வீட்டின் ஜன்னல் வழியாக மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர்.
    • இதுகுறித்து அன்னூர் போலீசாருக்கு மோகன்குமார் தகவல் தெரிவித்தார்.

    கோவை,

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள அச்சம்பாளையத்தை சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 38). தனியார் நிறுவன ஊழியர். சம்பவத்தன்று மதியம் இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் வேலைக்கு சென்றார்.

    அப்போது மோகன்குமாரின் வீட்டின் ஜன்னல் வழியாக மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், மோதிரம், வளையல், கம்மல் உள்பட 13 பவுன் தங்க நகைகள், 2 வெள்ளி குத்துவிளக்கு, ரூ. 2 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றார்.

    மாலையில் வேலை முடிந்த தும் வீட்டிற்கு திரும்பிய மோகன்குமார் வீட்டின் பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப் பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

    இதனை வைத்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் பட்டப்பகலில் 13 பவுன் தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    • வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 4 பவுன் நகை மற்றும் காமிராவை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை சின்னவேடம்பட்டியை சேர்ந்தவர் வடிவேலு (வயது 46). இவர் தனியார் கார்ப்பரேட் வங்கியில் மானேஜராக உள்ளார். இவரது மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று காலையில் வடிவேலு மற்றும் அவரது மனைவி 2 பேரும் வழக்கம்போல வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றனர். மாலை அவரது மனைவி பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்க ப்பட்டிப்பதை கண்டு அவர் அதிர்ச்சியடை ந்தார். அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவை உடைத்து அதில் இருந்த 4 பவுன் நகை மற்றும் காமிராவை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து வடிவேலு சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டப் பகலில் வீட்டின் கதவை உடைத்து நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஈஸ்வர மூர்த்தி தனது காரை சிட்ரா அருகே உள்ள ஓட்டல் முன்பு நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார்.
    • ஈஸ்வர மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கோவை,

    கோவை கோவில்பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி (வயது50). ரியல் எஸ்டேட் அதிபர்.

    நேற்று இரவு இவர் வீட்டில் இருந்து ரூ.70 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு நண்பரான கண்ணன் என்பவருக்கு கொடுப்பதற்காக காரில் புறப்பட்டார்.

    இரவு 9.30 மணியளவில் ஈஸ்வர மூர்த்தி தனது காரை சிட்ரா அருகே உள்ள ஓட்டல் முன்பு நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார்.

    திரும்பி வந்து பார்த்த போது காரில் இருந்த பணம் மாயமாகி இருந்தது. ஈஸ்வரமூர்த்தி சாப்பிட சென்றதை நோட்டமிட்டு, மர்மநபர் கார் கண்ணாடியை உடைத்து காருக்குள் இருந்த ரூ.70 லட்சம் பணத்தைத் திருடி சென்றது தெரிய வந்தது.

    இதுகுறித்து ஈஸ்வர மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் மர்ம நபர் பணத்தை திருடிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்.

    கோவை ஒண்டிப்புதூர் கிருஷ்ணன் நாயுடு வீதியை சேர்ந்தவர் தேவராஜ் (63). ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியர்.

    சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் பணம் எடுப்பதற்காக அந்த பகுதியில் உள்ள வங்கிக்கு சென்றார்.

    வங்கியில் இருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டு வெளியில் வந்த அவர் பணத்தை மொபட்டில் உள்ள சீட்டுக்கு அடிப்பகுதியில் வைத்தார். இதனைத் தொடர்ந்து தேவராஜ் மொபட்டில் சிங்காநல்லூர் திருச்சி ரோட்டில் உள்ள மற்றொரு வங்கிக்கு சென்றார்.

    மோட்டார் சைக்கிளை வங்கி முன்பு நிறுத்திவிட்டு வங்கியினுள் சென்றார். பின்னர் வந்து பார்த்த போது, வண்டியில் வைத்திருந்த பணம் மாயமாகி இருந்தது. இவர் வங்கிக்குள் சென்றதை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர் வண்டியில் இருந்த பணத்தை எடுத்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள். நாமக்கல் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் தினேஷ் (32). என்ஜினியரிங் பட்டதாரி. சம்பவத்தன்று இவர் வேலைக்கு நேர்காணலுக்காக கோவைக்கு வந்தார்.

    அப்போது பீளமேட்டில் உள்ள தொழில்நுட்ப பூங்கா அருகே அவரை, வாலிபர் ஒருவர் நேர்காணல் செய்தார். அப்போது அந்த நபர் ஐ.டி கம்பெனியில் வேலை என்பதால் கட்டாயமாக லேப்டாப் மற்றும் செல்போன் வேண்டும் என்றார். மேலும் அப்ளிகேஷனை லேப்டாப் செல்போனில் ஏற்ற ரூ.10 ஆயிரமும் கேட்டார்.

    இதை நம்பிய தினேசும், தனது செல்போன், லேப் டாப் மற்றும் ரூ.6 ஆயிரம் கொடுத்தார். அதனை வாங்கி கொண்ட நபர் சிறிது நேரத்தில் வருகிறேன் என கூறி சென்றார். ஆனால் அதன் பின்னர் அவர் வரவில்லை.

    தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த தினேஷ் காட்டூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை ஏமாற்றி யதாக அன்னூர் அடுத்த செங்காளி பாளையத்தைச் சேர்ந்த மோகன்ராஜ்(34) என்பவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை வெரைட்டி ஹால் ரோடு பகுதியை சேர்ந்தவர் தயாநிதி. இவரது மனைவி மசக்காரணி (50). சம்பவத்தன்று இவர் ராஜ வீதி வழியாக வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் முகவரி கேட்டார். அப்போது மசக்காரணி முகவரியை கூறிக்கொண்டிருந்தார்.

    கண் இமைக்கும் நேரத்தில் அந்த வாலிபர் மசக்காரணி கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச்சென்றார்.

    இதுகுறித்து அவர் வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் செயினை பறித்துச் சென்ற வாலி பரை தேடி வருகிறார்கள்.

    • தமிழ்ச்செல்வனின் தாயார், கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
    • புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கோவை,

    கோவை சவுரிபாளையம் கருணாநிதி நகரை சேர்ந்தவர் தமிழ் செல்வன் (வயது 41 ). இவரும், இவரது மனைவியும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். இவரது தாயார் பக்கத்து வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் தமிழ் செல்வன் மற்றும் அவரது மனைவி இருவரும் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டனர். சம்பவத்தன்று மதியம் வேலைக்கு சென்ற தமிழ்செல்வனின் மனைவி சாப்பிட வீட்டிற்கு வந்தார். சாப்பிட்ட பின்னர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து மகன் வீட்டிற்கு சென்ற தமிழ்ச்செல்வனின் தாயார், கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    அவர் உடனடியாக தனது மகனுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். தமிழ் செல்வன் வீட்டிற்கு வந்து பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் அதில் இருந்த 29 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.25,000 பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றிருப்பது தெரி யவந்தது.

    இதுகுறித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளை யர்களை தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் பூட்டிய வீட்டை உடைத்து நகை திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இதுகுறித்து மேத்யூ மேல்குன்னூர் போலீசில் புகார் அளித்தார்.
    • மேத்யூவின் வீட்டின் அருகே வசித்து வரும் ஆரோக்கிய மேரி என்பவர் தான் நகை, பணத்தை திருடியது தெரிய வந்தது.

    குன்னூர்,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அட்டடி பகுதியை சேர்ந்தவர் மேத்யூ. இவரது உறவினர் ஒருவர் வீட்டில் திருமண நிகழ்ச்சி நடந்தது. இதற்காக மேத்யூ தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு அங்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்திருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டில் உள்ள பீரோவை பார்த்தார்.

    அப்போது அதில் வைத்திருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் மாயமாகி இருந்தது. இவர்கள் வெளியில் சென்றதை நோட்டமிட்டு மர்மநபர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து மேத்யூ மேல்குன்னூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மேத்யூவின் வீட்டின் அருகே வசித்து வரும் ஆரோக்கிய மேரி என்பவர் தான் நகை, பணத்தை திருடியது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, ஆரோக்கிய மேரியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து நகை, பணத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • மர்மநபர்கள் போலீசில் சிக்காமல் இருப்பதற்காக வீடு முழுவதும் மிளகாய் ெபாடியை தூவி சென்றனர்.
    • போலீசார் அப்பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    கோவை,

    கோவை நஞ்சுண்டாபுரம் புதூர் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(34).

    இவர் வெள்ளக்கிணறு அருகே உள்ள பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சந்தியா என்ற மனைவி உள்ளார்.

    இவர்களுடன் ராதாகிருஷ்ணனின் தந்தை பாண்டியராஜன் மற்றும் தாயார் சாந்தியும் ஒன்றாக வசித்து வருகின்றனர். இவர்கள் சொந்தமாக அந்த பகுதியில் பேன்சி ஸ்டோரும் நடத்தி வருகிறன்றனர்.

    நேற்று மதியம் ராதாகிருஷ்ணன் தனது தாய் மற்றும் மனைவியுடன், பேன்சி ஸ்டோருக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக வீட்டை பூட்டி விட்டு கோவைக்கு சென்று விட்டனர். பாண்டியராஜனும் மோட்டார் சைக்கிளை சரி செய்ய காந்திபுரம் சென்றார்.

    இந்த நிலையில் பாண்டியராஜன் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியான அவர் உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது வீட்டிற்குள் இருந்த பீரோவும் திறந்து கிடந்ததுடன், அதில் இருந்த துணிகளும் ஆங்காங்கே சிதறி கிடந்தன. இதையடுத்து பீரோவை சோதனை யிட்டார். அதில் வீட்டில் வைத்திருந்த செயின், ஆரம், நெல்லிக்காய் மாலை, 2 ஜோடி கம்மல் என மொத்தம் 26 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது.

    இவர்கள் வீட்டை விட்டு வெளியில் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், அதன்பின்னர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து நகையை திருடி சென்றதும்,போலீசில் சிக்காமல் இருப்பதற்காக வீடு முழுவதும் மிளகாய் ெபாடியை தூவி சென்றதும் தெரிய வந்தது.

    இதுகுறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். வீட்டில் தடயங்கள் ஏதாவது உள்ளதா எனவும் சோதனை செய்தனர்.

    மேலும் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காமிரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழ்செல்வி அரவிந்தன் கைப்பையில் இருந்த வைர மோதிரத்தை திருடியுள்ளார்.
    • அரவிந்தன் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார்.

    கோவை,

    கோவை ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகரை சேர்ந்தவர் அரவிந்தன் . டாக்டர். இவரது வீட்டில் கோவையை சேர்ந்த தமிழ்செல்வி ( வயது45) என்பவர் தங்கி இருந்து வீட்டு வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், அரவிந்தன் தனது கைப்பையில் வைத்திருந்த வைர மோதிரம் காணாமல் போனது.

    இதுகுறித்து அவர் சந்தேகத்தின் பேரில், தமிழ் செல்வியிடம் கேட்டபோது முன்னுக்குபின் முரணாக பதில் அளித்து அதனை எடுக்க வில்லை என கூறி மறுத்தார். இதில் ஏற்பட்ட பிரச்சினையில் அவர் தமிழ் செல்வியை வேலையை விட்டு நீக்கி விட்டார். பின்னர் அவரது வீட்டில் சரோஜா என்ற பெண்ணை வேலைக்கு அமர்த்தினார்.

    சரோஜா, தமிழ்செல்வியிடம் சென்று காணாமல் போன வைர மோதிரம் குறித்து கேட்ட போது, அவர் தான் வைர மோதிரத்தை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து தமிழ்செல்வி அந்த மோதிரத்தை திருப்பி கொடுத்து விட்டார். தொடர்ந்து அரவிந்தன் தனது வீட்டு பீரோவில் வைத்திருந்த 11 பவுன் தங்க நகை, 2 வைர மூக்குத்தி, 4 வாட்சுகள் மற்றும் ரூ.2 லட்சம் பணம் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தார்.

    இவற்றின் மொத்த மதிப்பு ரூ.11 லட்சம் ஆகும். இதுகுறித்து அரவிந்தன் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். அதில் வேலைக்கார பெண் தமிழ்செல்வி மீது சந்தேகம் உள்ளதாக தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • 3 பேரும் அதிகாலை 2 மணி வரை பேசிக் கொண்டிருந்தனர்.
    • மாயமான முத்தம்மாளை போலீசார் தேடி வருகின்றனர்.

    பொள்ளாச்சி,

    கோவை ஆனைமலை அருகே தர்மராஜ் காலனியை சேர்ந்தவர் கமலம் (வயது 70). இவரது மகள் செல்வி (47). செல்வி மாசாணி அம்மன் கோவில் அருகே உள்ள பொம்மை கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் செல்விக்கும், அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து செல்வி கடந்த சில மாதங்களாக தனது தாயுடன் வசித்து வருகிறார். இவர்களது வீட்டில் கோவையை சேர்ந்த முத்தம்மாள் (50) என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்தார். இவர் ஓட்டலில் வேலை செய்து வருகிறார்.

    கமலம் மற்றும் அவரது மகள் செல்வி ஆகியோர் இரவில் மொட்டை மாடியில் படுத்து தூங்குவதை வழக்கமாக வைத்திருந்தனர். நேற்று இவர்களது வீட்டிற்கு முத்தமாள் வந்தார்.

    அப்போது அவர் நானும், இன்று உங்களுடன் மொட்டை மாடியில் படுத்து கொள்கிறேன் என தெரிவிக்கவே 3 பேரும் மொட்டை மாடிக்கு சென்றனர்.அங்கு நேரம் போவது தெரியாமலும், தூங்காமலும் வெகுநேரமாக பேசி கொண்டே இருந்தனர். இவர்கள் அதிகாலை 2 மணி வரை பேசிக் கொண்டிருந்தனர்.

    அப்போது முத்தம்மாள் நான் டீ போட்டு எடுத்து வருகிறேன் என கூறி விட்டு சென்று மீண்டும் டீயுடன் வந்தார்.

    அதனை கமலம் மற்றும் அவரது மகளுக்கு கொடுத்தார். பின்னர் 3 பேரும் சேர்ந்து டீ குடித்து விட்டு தூங்கி விட்டனர்.

    இந்த நிலையில் இன்று காலை கமலம் வீட்டிற்கு அருகே வசிக்கும் முத்துராஜா என்பவர் தேங்காய்களை போடுவதற்கு வந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லை.

    இதையடுத்து மொட்டை மாடியில் சென்று பார்த்தார்.அப்போது செல்வியும், கமல மும் வாயில் நுரை தள்ளியபடி கிடந்தனர். இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர் சம்பவம் குறித்து, செல்வியின் கணவருக்கு தகவல் தெரிவித்தார்.

    அவர் உடனடியாக இங்கு வந்து 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே கமலம், செல்வி ஆகியோர் கழுத்து மற்றும் வீட்டில் வைத்திருந்த 24 பவுன் நகைகள் மாயமாகி உள்ளதாக செல்வியின் கணவர் ஆனைமலை போலீசில் புகார் அளித்தார்.

    இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இவர்களது வீட்டில் இருந்த முத்தம்மாள் திடீரென மாயமாகி விட்டார். இதனால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

    மேலும் இவர் கொடுத்த டீயை குடித்த பின்பு தான் தாயும், மகளும் மயங்கி உள்ளனர். இதனால் அவர் டீயில் ஏதாவது மயக்க மாத்திரை அல்லது வேறு ஏதாவது கலந்து கொடுத்தாரா? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

    நாமக்கல் அன்பு நகரில் உல்லாச வாழ்க்கைக்காக ஆடு திருடிய 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் அன்பு நகரில் போலீசார் வாகன தணிக்கையில்  ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் 2 சிறுவர்கள் ஆட்டு குட்டியை எடுத்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் ஆட்டுக்குட்டியை போட்டு விட்டு தப்பி ஓடினர். 

    அவர்களை துரத்தி பிடித்த போலீசார் விசாரணை செய்ததில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் நாமக்கல் இ.பி. காலனி, மற்றும் கொண்டிசெட்டிபட்டியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்கள் நாமக்கல் தனியார் பள்ளி விடுதியில் தங்கி பயின்று வந்தனர். 

    இந்த நிலையில் பள்ளியில் வீட்டிற்கு செல்வதாக கூறி விட்டு எஸ்.கே.நகரில் உள்ள ஒரு வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடி கொண்டு துத்திக்குளம் பகுதியில் ஆட்டுக்குட்டியை திருடி சென்றுள்ளனர். மேலும் அவர்கள் உல்லாச வாழ்க்கைக்காக செலவிற்கு ஆடு திருடியதாக போலீசார் விசாரணையில் கூறியுள்ளனர்.

    மேலும் இந்த திருட்டு சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட மற்றொரு இளைஞரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
    சேலம் சூரமங்கலம் அடுத்த பெரிய மோட்டூர் பகுதியில் திருவிழாவில் மோட்டார்சைக்கிள் திருடிய வாலிபர் கைது.
    சேலம்:

    சேலம் சூரமங்கலம் அடுத்த பெரிய மோட்டூர் பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி  இன்று காலையில் நடந்தது. 

    அப்போது அதே ஊரை சேர்ந்த கோபி (வயது 29) என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் சேலம் டவுன் கிச்சிப்பாளையம் குப்பைமேடு ஹவுசிங் போர்டு காலனியைச்சேர்ந்த  தங்கராஜ் (27) என்பவர் அந்த மோட்டார்சைக்கிளை திருட முயற்சி செய்தார். இதைபார்த்த கோபி ஓடி வந்து அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

    இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு, தங்கராைஜ கைது செய்தனர்.
    திருவிழாவில் மோட்டார்சைக்கிள் திருடிய வாலிபர் கைது
    சேலம்:

    சேலம் சூரமங்கலம் அடுத்த பெரிய மோட்டூர் பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி  இன்று காலையில் நடந்தது. 

    அப்போது அதே ஊரை சேர்ந்த கோபி (வயது 29) என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் சேலம் டவுன் கிச்சிப்பாளையம் குப்பைமேடு ஹவுசிங் போர்டு காலனியைச்சேர்ந்த  தங்கராஜ் (27) என்பவர் அந்த மோட்டார்சைக்கிளை திருட முயற்சி செய்தார். இதைபார்த்த கோபி ஓடி வந்து அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

    இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு, தங்கராைஜ கைது செய்தனர்.
    ×