search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தங்க நகை"

    • ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
    • ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற பெங்களூரு சிறப்பு கோர்ட்டின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார்.

    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த பெங்களூரு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு, ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் மார்ச் மாதம் 6, 7-ந் தேதிகளில் ஒப்படைக்குமாறு கடந்த மாதம் (பிப்ரவரி) 19-ந் தேதி உத்தரவிட்டது.

    அதன்படி கர்நாடக அரசு ஜெயலலிதாவின் தங்க, வைர, வைடூரிய நகைகள், வெள்ளி பொருட்களை தமிழக அரசிடம் இன்று (புதன்கிழமை) ஒப்படைக்க ஏற்பாடுகளை செய்திருந்தது. முன்னதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ஜெயலலிதாவின் வாரிசான தன்னிடம், அவரது பொருட்களை ஒப்படைக்க வேண்டும் என்று கோரி உரிமை கொண்டாடினார். ஆனால் அவரது மனுவை சிறப்பு கோர்ட்டு தள்ளுபடி செய்துவிட்டது. இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டில் ஜெ.தீபா மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மனு நேற்று நீதிபதி முகமது நவாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ஜெயலலிதாவின் வாரிசிடம் தான் அவரது பொருட்களை ஒப்படைக்க வேண்டும் என்றும், சொத்து குவிப்பு வழக்கின் இறுதி தீர்ப்பில் இருந்து ஜெயலலிதாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளதால், அவரை குற்றவாளியாக கருத முடியாது என்றும் வாதிட்டார்.

    மேலும், ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்கும்படி பெங்களூரு சிறப்பு கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு தடை விதிக்குமாறும் கோரினார். அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கிரண் ஜவலி, இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய காலஅவகாசம் வழங்குமாறு கோரினார்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முகமது நவாஸ், ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற பெங்களூரு சிறப்பு கோர்ட்டின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார். மேலும் இதுதொடர்பான அடுத்த விசாரணையை வருகிற 26-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். ஐகோர்ட்டின் இந்த உத்தரவால், ஜெயலலிதாவின் பொருட்கள் திட்டமிட்டபடி இன்று தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

    • வழக்கு கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டதால், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அங்குள்ள கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
    • இதையடுத்து நாளை கோர்ட்டு பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பெங்களூரு:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாக கடந்த 1996-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    அப்போது அவரது வீட்டில் இருந்து 11,344 புடவைகள், 750 காலணிகள், 91 கை கடிகாரம், 28 கிலோ மதிப்பிலான 468 வகையான தங்கம், வைர நகைகள் மற்றும் 700 கிலோ வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இந்த வழக்கு கர்நாடக வுக்கு மாற்றப்பட்டதால், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அங்குள்ள கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு கோர்ட்டு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. இந்த தீர்ப்பு வருவதற்கு முன்பே ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால், அவரது பெயர் தீர்ப்பில் இருந்து கைவிடப்பட்டது. சசிகலா உள்பட மற்ற 3 பேரும் சிறை தண்டனையை அனுபவித்தனர்.

    இந்த சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும் விதிப்பட்டது. இதையடுத்து அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை ஏலம் மூலம் விற்று அபராத தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்கும்படி பெங்களூரு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு கடந்த மாதம் உத்தரவிட்டது. இந்த பொருட்களை நாளை, நாளை மறுநாள் (7-ந் தேதி)தமிழக அரசிடம் கர்நாடக அரசு ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    அதன்படி நாளை (புதன்கிழமை) ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் கர்நாடக அரசு ஒப்படைக்க உள்ளது. இதற்காக மாநில அரசு தன்வசம் உள்ள பொருட்களை ஒப்படைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த பொருட்களை பெற்றுக்கொள்ள தமிழக, உள்துறை அதிகாரிகள் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை உயர் அதிகாரிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு பெங்களூரு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பின்னர் நகைகள் மற்றும் உடமைகள் சரிபார்க்கப்பட்டு தமிழக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். 6 பெரிய டிரங்கு பெட்டிகளில் அந்த பொருட்கள் கண்டெய்னர் லாரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. மேலும் இவை அனைத்தையும் பதிவு செய்ய வீடியோகிராபரும் அழைத்துச் செல்லப்படுகிறார்.

    இதையடுத்து நாளை கோர்ட்டு பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    • அந்த வழியே சென்றவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • இருவரும் திருப்பூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் குருவாயூரப்பன் நகரை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி மோகனப்பிரியா ( வயது 28). இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று மோகனப்பிரியா மணியம்பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு குழந்தையுடன் ஸ்கூட்டரில் சென்றுள்ளார். பெருந்தொழுவு கரியாம்பாளையம் என்ற இடம் அருகே சென்ற போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் முகவரி கேட்டு மோகனப்பிரியாவிடம் பேச்சு கொடுத்தனர். அப்போது திடீரென அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிக்கொடியை பறித்துக் கொண்டு அவரை தள்ளி விட்டு சென்றனர். இதில் நிலைத்தடுமாறி விழுந்த மோகன பிரியாவுக்கும் குழந்தைக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியே சென்றவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரும் திருப்பூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . இது குறித்து அவிநாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை வைத்து மர்மநபர்கள் யாரென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பஸ்சின் இருக்கைக்கு கீழ் ஒரு தங்க பிரேஸ்லெட் கிடந்தது.
    • நகையை பத்திரமாக கொண்டு வந்து வழங்கிய கண்டக்டர் சத்தியதாசை அதிகாரிகள் பாராட்டினர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வடசேரியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நேற்று காலை ஒரு அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ் மார்த்தாண்டம் அருகே சென்ற போது பஸ்சின் இருக்கைக்கு கீழ் ஒரு தங்க பிரேஸ்லெட் கிடந்தது. இதைப் பார்த்த பயணி ஒருவர் உடனே அதை மீட்டு பஸ் கண்டக்டர் சத்தியதாசிடம் கொடுத்தார். அந்த பிரேஸ்லெட் ¾ பவுன் இருந்தது. பின்னர் பஸ் நாகர்கோவில் வந்ததும் பிரேஸ்லெட் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இதற்கிடையே பஸ்சில் பயணம் செய்த காரங்காடு பகுதியைச் சேர்ந்த ஜெஸ்லின் பினி என்பவரின் பெற்றோர் தனது மகள் நகையை தவறவிட்டு விட்டதாக கூறி பஸ் நிலையத்தில் வந்து விசாரித்தனர்.

    இதைத் தொடர்ந்து அவர்களை அழைத்து போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் பிரேஸ்லெட்டின் அடையாளங்களை கேட்டறிந்தனர். அப்போது பிரேஸ்லெட்டின் அடையாளங்களையும், ஜெஸ்லின் பினி பஸ்சில் பயணம் செய்தது குறித்த விவரங்களும் சரியாக இருந்ததைத் தொடர்ந்து அந்த பிரேஸ்லெட்டை உரியவரிடம் ஒப்படைத்தனர். நகையை பத்திரமாக கொண்டு வந்து வழங்கிய கண்டக்டர் சத்தியதாசை அதிகாரிகள் பாராட்டினர்.

    • பச்சாபாளையம் கோவில் திருமண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பல்லடம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    பல்லடம் :

    பல்லடத்தில் உள்ள பச்சாபாளையம் கோவில் திருமண மண்டபத்தில் நேற்று திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. திருமணத்திற்காக வந்த கோவையைச் சேர்ந்த கார்த்திகா(வயது 28) என்பவர் மணமகனது அறையில் அவரது கைப்பை வைத்துவிட்டு சென்றுள்ளார்.

    அதில் அவர் அணிந்திருந்த சுமார் 12 சவரன் தங்க நகை, ரொக்கம் ரூ. 24 ஆயிரம் ஆகியவற்றை கைப்பையில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், திருமண வேலைகளில் மும்முரமாக இருந்தவர் சிறிது நேரம் கழித்து சென்று பார்த்தபோது கை பையை காணவில்லை. இதுகுறித்து திருமண மண்டபத்தில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார். யாரும் எடுக்கவில்லை எனக் கூறியதாக கூறப்படுகிறது .இதையடுத்து அவர் பல்லடம் போலீசில் புகார் அளித்துள்ளார்.புகாரின் பேரில் போலீசார் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண மண்டபத்தில் நகை மற்றும் பணம் காணாமல் போனது திருமண வீட்டாருக்கு அதிர்ச்சி- சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.

    • பக்தி பரவசத்தில் தனது 1.75 பவுன் தங்கசெயினை தவறுதலாக உண்டியலில் செலுத்தினார்.
    • கோவில் நிர்வாகம் கண்காணிப்பு கேமிரா மூலம் அவர் உண்டியலில் நகை செலுத்தியதை உறுதி செய்தனர்.

    பழனி:

    பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் பத்தியூர் பகவதிபடி பகுதியை சேர்ந்தவர் சசிதரன்பிள்ளை மகள் சங்கீதா. இவர் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பழனி கோவிலுக்கு வந்தார். பக்தி பரவசத்தில் தனது 1.75 பவுன் தங்கசெயினை தவறுதலாக உண்டியலில் செலுத்தினார்.

    பின்னர் இதுகுறித்து கோவில் நிர்வாகத்திடம் கடிதம் மூலம் தெரிவித்தார். இதையடுத்து கோவில் நிர்வாகம் கண்காணிப்பு கேமிரா மூலம் அவர் உண்டியலில் நகை செலுத்தியதை உறுதி செய்தனர். உண்டியல் சட்டத்தின்படி உண்டியலில் செலுத்திய பொருட்களை திரும்ப வழங்க வழியில்லை. ஆனால் பக்தரின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு கோவில் அறங்காவலர் குழுதலைவர் சந்திரமோகன் தனது சொந்த செலவில் ரூ.1லட்சத்து 9 ஆயிரம் மதிப்பில் 17.460 கிராமம் எடையுள்ள புதிய தங்கசங்கிலியை வழங்கினார்.

    கோவில் தலைமை அலுவலகத்தில் சங்கீதாவிடம் நகை ஒப்படைக்கப்பட்டது.

    • இரவு பூஜைகளை முடித்து விட்டு கோவில் பூசாரி செந்தில் நடையை சாத்திவிட்டு சென்றுவிட்டார்.
    • தங்க செயின் மற்றும் 2.5 கிராம் எடை கொண்ட தாலி சுட்டியையும் திருடிச் சென்றிருந்தது தெரிய வந்தது.

    கன்னியாகுமரி :

    இரணியல் அருகே திங்கள்நகர் சுனைமலை யில் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.

    சம்பவத்தன்று இரவு பூஜைகளை முடித்து விட்டு கோவில் பூசாரி செந்தில் நடையை சாத்திவிட்டு சென்றுவிட்டார். நேற்று காலை கோவிலை திறக்க பூசாரி வந்துள்ளார். அப்போது கோவில் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அவர் கோவில் நிர்வாகி ராமசாமிக்கு தகவல் தெரிவித்தார். அவர் வந்து பார்த்தபோது யாரோ மர்ம நபர்கள் கோவில் பூட்டை உடைத்து கோவிலுக்குள் சென்று அம்மன் சிலையில் இருந்த 6 கிராம் எடை கொண்ட தங்க செயின் மற்றும் 2.5 கிராம் எடை கொண்ட தாலி சுட்டியையும் திருடிச் சென்றிருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து ராமசாமி இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பயணிகள் எடுத்து போலீசில் ஒப்படைத்தனர்
    • ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை 5 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலைய த்துக்கு வந்தது.

    இதைத் தொடர்ந்து பயணிகள் அனைவரும் ரெயிலில் இருந்து இறங்கி சென்றனர். அதன்பிறகு ரெயில் புறப்பட்டு கன்னியா குமரி சென்றது.

    இந்த நிலையில் பயணிகள் இறங்கி சென்ற முதலாவது பிளாட்பாரத்தில் 2 பவுன் தங்க நகை கிடந்தது. இதைப் பார்த்த சக பயணிகள் உடனே நகையை மீட்டு அக்கம் பக்கத்தில் உள்ள வர்களிடம் விசாரித்தனர். ஆனால் நகைக்கு யாரும் உரியை கோர வில்லை.

    இதனையடுத்து நகையை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் ஒப்ப டைத்தனர். இதுபற்றி ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    நகையை தவற விட்ட வர்கள் நகையின் அடையா ளங்களை தெரிவித்து பெற்றுச் செல்லுமாறு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • 2 வாலிபர்கள் தங்கள் முகம் தெரியாத அளவில் ‘மாஸ்க்’ அணிந்து மரிய செல்வி கழுத்தில் கிடந்த 2½ பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற னர்.
    • கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி, நகை பறித்து விட்டு தப்பிச் சென்ற வர்கள் உருவம் அதில் பதிவாகி இருக்கிறதா? என போலீசார் ஆய்வு

    கன்னியாகுமரி :

    குலசேகரம் அருகே உள்ள கல்லடி மாமூடு பகுதி யைச் சேர்ந்தவர் ராஜமணி. இவரது மனைவி மரிய செல்வி (வயது 63).

    கணவர் இறந்து விட்ட நிலையில் மகன் ரமேஷ்குமா ருடன் மரியசெல்வி வசித்து வருகிறார். இவர் இன்று காலை வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிள் வேக மாக வந்தது.

    அதில் 2 வாலிபர்கள் தங்கள் முகம் தெரியாத அளவில் 'மாஸ்க்' அணிந்து வந்தனர். அவர்கள் கண்ணி மைக்கும் நேரத்தில் மரிய செல்வி கழுத்தில் கிடந்த 2½ பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்ற னர்.

    இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த மரிய செல்வி சுதாரித்து கூச்ச லிட்டார். அவரது சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்த மகன் ரமேஷ்குமார் மற்றும் அக்கம் பக்கத்தினர் வருவத ற்குள் நகை பறித்த மர்ம நபர்கள் மாயமாக மறைந்து விட்டனர்.

    இதுகுறித்து குலசேகரம் போலீசில் புகார் செய்யப்ப ட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசார ணையை தொடங்கினர். அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி, நகை பறித்து விட்டு தப்பிச் சென்ற வர்கள் உருவம் அதில் பதிவாகி இருக்கிறதா? என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலும் அந்த வழியாக நடைபயணம் சென்ற வர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்ற னர். காலை நேரத்தில் வீட்டு முன்பு நின்ற மூதாட்டியிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காலையில் எல்சிபாய் தனது மகனை கல்லூரியில் விட சென்றார்
    • புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    குமாரபுரம் அருகே உள்ள கொற்றியோடு கன்றுபிலாவிளை பகுதியை சேர்ந்தவர் ஜோசப்ராஜ் (வயது 46). இவரது மனைவி எல்சிபாய் (42).

    இவர்களது மகன் லட்சுமிபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முதல் நாள் என்பதால் காலையில் எல்சிபாய் தனது மகனை கல்லூரியில் விட சென்றார். பின்னர் வீட்டிற்கு செல்வதற்காக மண்டைக்காட்டில் இருந்து திங்கள்நகர் வந்த பஸ்சில் சென்றார்.

    திங்கள்நகர் பஸ் நிலையம் வந்து இறங்கியபோது அவரது கழுத்தில் கிடந்த 5½ பவுன் தாலி செயினை காணவில்லை. இதுகுறித்து எல்சிபாய் இரணியல் போலீசில் புகாரளித்தார். புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிசிடிவி உதவியுடன் பார்த்தபோது, குப்பையில் இருந்து சில எலிகள் அந்த உணவுப்பையை எடுத்துக்கொண்டு சாக்கடைக்குள் சென்றது தெரியவந்தது.
    • சாக்கடைக்குள் தேடியபோது அந்த பை கிடைத்தது. அதில் இருந்த நகைகளும் பத்திரமாக இருந்தன.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த சுந்தரி பிளானிபெல் என்பவர் கோகுல்தாம் காலனி பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார்.

    அவர் தனது தங்க நகைகளை வங்கியில் அடகு வைக்க சென்றபோது வழியில் இருந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு, தான் கொண்டு சென்ற உணவுப் பையை தந்துள்ளார். அதில் தவறுதலாக நகைகளையும் வைத்துள்ளார்.

    சுந்தரி வங்கிக்கு சென்று பார்த்தபோதுதான் நகை, தான் கொண்டு வந்த பையில் இல்லை என தெரியவந்தது. இதையடுத்து அவர் திரும்பி சென்று குழந்தைகளை தேடியுள்ளார். ஆனால் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு அவர் காவல்நிலையத்தை தொடர்புகொண்டு புகார் அளித்துள்ளார்.

    இதையடுத்து போலீசார் உதவியுடன் தேடியதில், அந்த குழந்தைகள் இருக்கும் இடம் தெரியவந்தது. அவர்களிடம் விசாரித்ததில் அந்த பையை குழந்தைகள் குப்பையில் போட்டுவிட்டதாக கூறினர். குப்பையை சென்று பார்த்தபோது அதில் நகைகள் இல்லை. இதை தொடர்ந்து போலீசார் சிசிடிவி உதவியுடன் பார்த்தபோது, குப்பையில் இருந்து சில எலிகள் அந்த உணவுப்பையை எடுத்துக்கொண்டு சாக்கடைக்குள் சென்றது தெரியவந்தது.


    இதையடுத்து சாக்கடைக்குள் தேடியபோது அந்த பை கிடைத்தது. அதில் இருந்த நகைகளும் பத்திரமாக இருந்தன.

    அந்த நகைகளின் மதிப்பு ரூ.5 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நகைகளை போலீசார் சுந்தரியிடம் ஒப்படைத்தனர்.

    ×