என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gold bars"

    • கோல்ட் இ.டி.எப். என்பது தங்கத்தை ஷேர் வடிவில் வாங்கும் முறையாகும்.
    • எல்லா ஆப்களும் உறுதியானவை அல்ல

    மாலைமலர் வாசகர்களுக்கு அன்பார்ந்த வணக்கங்கள். செல்வம் என்னும் சிம்மாசனத்தில் அமர ஆசைப்பட்டு, அதற்கான வழி, வகைகளைப் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இன்று பார்ப்பது இந்தியர்களின் டார்லிங் என வர்ணிக்கப்படும் தங்கத்தின் மீதான முதலீடுகள்.

    நாற்பதாயிரம் வருடங்களுக்கு முந்தைய குகை ஓவியங்களில் தங்கம் பற்றிய குறிப்பு காணப்படுவது, தங்கத்துக்கும், நமக்குமான நீண்ட உறவைக் காட்டுகிறது. மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்று மனிதர்களின் மூவாசைகளில் ஒன்றான தங்கத்தை அழகுக்காக உபயோகித்தோம்; ஆபரணமாக அணிந்தோம்; பஸ்பமாகச் செய்து ஆரோக்கியத்தைக் காக்க உண்டோம். பண்டமாற்றாக, கரன்சியாக பலப்பல உருவங்கள் எடுத்து நம்முடன் பயணித்த தங்கம் இன்று ஒரு முதலீட்டு முறையாக - ஒருவரின் மொத்த முதலீட்டில் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை இருக்கவேண்டிய பொருளாக – பார்க்கப்படுகிறது.

    தங்கத்தின் மீதான காதலில் முதல் இடத்தில் சீனா இருக்க, இரண்டாம் இடத்தில் இந்தியா இருக்கிறது. இவ்வுலகில் உள்ள தங்கத்தில் இருபது சதவிகிதம் (சுமார் 25000 டன்) இந்தியாவின் வீடுகளிலும், கோவில்களிலும் தூங்குகிறது. ஆனாலும் நம் தங்க தாகம் தீராததால் வருடாவருடம் 600 டன் முதல் 1000 டன் வரை தங்கம் இறக்குமதி செய்கிறோம்.

    தங்கம் என்பது பெண் குழந்தைகளுக்கு சீதனமாகக் கொடுக்க வேண்டிய பொருள் என்னும் நமது எண்ணம் மாறி, கல்வியும், வேலையுமே அவர்கள் உயர்வுக்கு வழி என்ற விழிப்புணர்வு வந்தபின் தங்கத்தின் மீதான நம் மோகம் குறைந்துள்ளது. ஆனால் இன்று அது ஒரு நல்ல மாற்று முதலீடாக உருவெடுத்திருக்கிறது. ஏனெனில், போர், பயங்கரவாதம் போன்ற நேரங்களில் பங்குச்சந்தை, மியூச்சுவல் பண்ட் போன்ற முதலீடுகளின் மதிப்பு குறையும்; ஆனால் தங்கம் அமெரிக்க டாலருக்கு மாற்றாக நிற்பதால் அதன் மதிப்பு கூடும்.

    பொதுவாக நாம் தங்கத்தை விற்பதை விட அதன் மீது கடன் வாங்குவதையே பெரிதும் விரும்புகிறோம். கோவிட் காலத்தில் வருமானம் பாதிக்கப்பட்டதில் நமக்கு பெரிதும் கை கொடுத்தது, அவ்வப்போது ஆசையாக வாங்கி வைத்த கால் சவரன், அரை சவரன் நகைகள்தானே? ஆனால் பெரும்பாலானவர்கள் தங்கள் தங்கத்தை விற்கவில்லை; தங்களிடம் இருக்கும் தங்கத்தின் மீது கடன் பெறவே முற்பட்டனர்.

     

    வேறு எல்லாத் தொழில்களும் பாதிக்கப்பட்டாலும், தங்க அடமானக் கடன் தரும் தொழில் மட்டும் ஜரூராக நடைபெற்றது; இன்றும் நடைபெற்று வருகிறது. இது சாதாரண மக்களின் சேமிப்பை எந்த அளவு பாதிக்கிறது, தேவை ஏற்படும் போது தங்கத்தை அடகு வைத்து கடன் பெறுவது சரியா, அல்லது விற்பதுதான் சரியா என்பது பற்றி பலவிதக் கருத்துக்கள் நிலவுகின்றன.

    தங்கத்தை ஏன் அடகு வைக்கிறோம்? என்றாவது ஒரு நாள் மீட்டு விடலாம் என்ற நம்பிக்கையின் காரணமாகத்தானே? இந்த நம்பிக்கைக்கு வலுவான அடித்தளமாக, போதுமான வருமானம் இருப்பவர்கள் நகையை அடகு வைக்கலாம். இப்போதைக்கு தினசரி வாழ்வை நடத்துவதற்கே வருமானம் போதாமல் இருப்பவர்கள் இன்னும் கடன் சுமையையும், வட்டிச் சுமையையும் ஏற்றிக் கொள்வதைத் தவிர்த்து, தங்கத்தை விற்றுவிட்டு ஒரு நல்ல நேரமும், வருமானமும் வரும்வரை காத்திருந்து மீண்டும் வாங்கலாம்.

    இதுவரை நகைக்கடன்களுக்கு வட்டியை மட்டும் கட்டி, கடனை மீண்டும் புதுப்பிக்கும் வசதி இருந்தது. இனி கடன் தொகை + வட்டி என முழுப்பணத்தையும் மொத்தமாகவோ, சில்லறையாகவோ கட்டி கடனை முடித்தபின்னரே மீண்டும் கடன் தரப்படும். தங்கத்தின் மீது கடன் பெற விரும்புவோர் இதனை நினைவுகொள்வது நல்லது.

    டிசம்பர் 1, 2016இல் சிபிடிடி (CBDT) அறிவிப்பின்படி ஒரு இந்தியர் எவ்வளவு தங்கம் வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். ஆனால் அதற்கு முறையான கணக்குகள் இருக்க வேண்டும். நம்மில் பலரிடமும் பாரம்பரியமாக வந்த நகைகள் இருக்கும்; ஆனால் அதற்கு கணக்கு இருக்க வாய்ப்பில்லை என்பதால் திருமணமான பெண்கள் 500 கிராம் வரைக்கும், திருமணமாகாத பெண்கள் 250 கிராம் வரைக்கும், ஆண்கள் 100 கிராம் வரைக்கும் கணக்குக் காட்டத் தேவையில்லை.

    இதற்கு மேல் தங்கம் இருக்கும் பட்சத்தில், அதை வாங்கிய ரசீது, அந்த வருடத்தின் வருமான வரித் தாக்கல் நகல் போன்றவற்றைக் காட்ட வேண்டும். பாரம்பரியமாக வந்த தங்கம் என்றால் உயில், செட்டில்மென்ட் பத்திரம், தானப் பத்திரம் போன்ற சான்றுகளைக் காட்ட வேண்டும். இதுவரை இந்த விதிமுறைகளை அரசாங்கம் நிர்ப்பந்திக்கவில்லை என்றாலும், வரக்கூடிய காலங்களில் கடுமை காட்டலாம்.

    ஆகவே, தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் முதலில் தங்களிடம் ஏற்கெனவே இருக்கும் தங்கத்தின் அளவை கணக்கெடுத்து பின் செயல்படுவது நல்லது. தங்கம் வாங்கிய ரசீதுகளை பத்திரப்படுத்தி வைப்பது அவசியம். நாம் வாங்கும் தங்கத்தின் அளவு நம் வருமானத்திற்கு உட்பட்டதாக இருப்பதும் மிக அவசியம்.

     

    சுந்தரி ஜகதீசன்

    தங்கத்தை ஆபரணமாக மாற்றும் போது செய்கூலி, சேதாரம் என்று ஒரு 20 சதவிகித செலவு; வாங்கிய பின்னும் அதை பத்திரமாகப் பாதுகாக்க லாக்கர் செலவு - இவை தவிர அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்யமுடியாத நிலை - போன்ற காரணங்களால் இன்று முதலீட்டாளர்கள், தங்க நகைகள் வாங்குவதை விட பேப்பர் கோல்ட் வாங்குவதை விரும்புகிறார்கள்.

    பேப்பர் கோல்ட் என்று செல்லமாகக் குறிப்பிடப்படும் டிஜிட்டல் கோல்ட் மார்ச் 2003இல் அறிமுகமானது. 99.9 சதவீதம் சுத்தமான இந்தத் தங்கத்தின் விலை, உலகம் முழுவதும் ஒன்றாகவே இருப்பது அதன் கவர்ச்சி அம்சங்களில் ஒன்று. செய்கூலி, சேதாரத்தின் நஷ்டங்கள், பாதுகாக்கும் செலவு இவை இல்லாதிருப்பதும் ஒரு முக்கியமான பாஸிட்டிவ் விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

    கோல்ட் இ.டி.எப். என்பது தங்கத்தை ஷேர் வடிவில் வாங்கும் முறையாகும். 99.9 சதவீதம் சுத்தமான தங்கத்தை உலகம் முழுவதும் உள்ள அதே விலையில் வாங்கி ஷேர்களாகப் பிரித்து விற்கின்றனர். இதனால் இதன் விலையில் வெளிப்படைத்தன்மை அதிகம். எஸ்.பி.ஐ., ஐ.டி.பி.ஐ. ஆக்சிஸ் போன்ற வங்கிகளும், இன்வெஸ்கோ, நிப்பான் போன்ற நிறுவனங்களும் இதில் ஈடுபட்டுள்ளன. குறைந்த பட்சமாக ஒரு கிராம் வாங்கலாம். இதில் சிப் வசதி கிடையாது. என்ட்ரி லோட், எக்ஸிட் லோட் என்று எதுவும் கிடையாது. எக்ஸ்பென்ஸ் ரேஷியோவும் 0.5 சதவீதம் முதல் 1.25 சதவீதம் அளவே. இதற்கு ஒரு டீமேட் அக்கவுன்ட் தேவை. ஏற்கெனவே டீமேட் அக்கவுன்ட் துவங்கி பங்குச் சந்தையில் ஈடுபட்டுள்ளவர்கள் இதை எளிதாக வாங்கலாம்.

    கோல்ட் மியூச்சுவல் பண்டுகளின் அடிப்படை முதலீடு தங்கம் அல்ல; தங்க வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களே. இதனால் இங்கு வெளிப்படைத்தன்மை குறைகிறது. குறைந்த பட்ச முதலீடு ரூ.1000/. இதற்கு டீமேட் அக்கவுன்ட் தேவை இல்லை. சிப் வசதி உண்டு. என்ட்ரி லோட் இல்லை; ஆனால் எக்ஸிட் லோட் உண்டு. எக்ஸ்பென்ஸ் ரேஷியோவும் அதிகம்.

    கோல்ட் இ.டி.எப். வாங்குவதா அல்லது கோல்ட் மியூச்சுவல் பண்டில் இறங்குவதா என்பது பற்றி ஒரு பட்டிமன்றமே நடத்தலாம். இதில் முடிவெடுக்க வேண்டியவர்கள் நாம்தான். ஷேர் மார்க்கெட் முதலீட்டை விரும்புபவர்கள் இ.டி.எப்பிலும், மியூச்சுவல் பண்ட் முதலீடு சுலபம் என்று எண்ணுபவர்கள் கோல்ட் மியூச்சுவல் பண்டிலும் முதலீடு செய்யலாம்.

    டிஜிட்டல் கோல்டை எம்.எம்.டி.சி என்ற அரசு நிறுவனமும், பேம்ப் என்ற ஸ்விஸ் நிறுவனமும் சேர்ந்து அறிமுகப்படுத்தின. இன்று ஜிபே, தனிஷ்க் போன்றவற்றின் ஆப்களில் ஒரு மில்லிகிராம் 24 காரட் தங்கத்தின் விலை சுமார் ரூ.10. இருந்த இடத்தில் இருந்தபடியே ஒரு நொடியில் தங்கம் வாங்கும் வசதி இந்த ஆப்களில் உள்ளது. நமக்குப் பணம் தேவை என்றால் இங்கேயே விற்க முடியும். தங்க வடிவில் தேவை என்றாலும் உடனே கிராம் கணக்கில் தங்கம் நம் கையில் தரப்படும். இல்லாவிட்டால் சில அங்கீகரிக்கப்பட்ட நகைக்கடைகள் மூலம் நகையாகவும் வாங்கிக் கொள்ளலாம்.

    ஆனால் எல்லா ஆப்களும் உறுதியானவை அல்ல. சமீபத்தில் ஆதித்ய பிர்லா கேப்பிடல் நிறுவனம் வழங்கும் ஆப்பில் சைபர் தாக்குதல் ஏற்பட்டு, 435 பேர் அக்கவுன்ட்டுகளில் இருந்து தங்கம் மாயமானது. அந்த நிறுவனம் இதை சரிக்கட்டி விட்டாலும், ஆப்பில் தங்கம் வாங்குபவர்கள் ஸ்ட்ராங்கான பாஸ்வர்ட் உபயோகிப்பது, அடிக்கடி ஆப் நடவடிக்கைகளைக் கண்காணிப்பது போன்ற முன்ஜாக்கிரதை ஏற்பாடுகளைக் கைக்கொள்வது நலம்.

    தங்க இறக்குமதியைக் குறைக்க 2015இல் மோடி அரசு சில திட்டங்களை முன்வைத்தது. அதில் ஒன்று சாவரின் கோல்ட் பாண்ட். தற்போது இதனை வழங்குவதை அரசு நிறுத்தி வைத்துள்ளது என்றாலும் முன்பு வாங்கியவர்கள் சந்தையில் விற்பதால், தங்கம் விலை குறையும்போது வாங்கி வைக்கலாம்.

    தற்போது தங்கத்தின் விலை சவரனுக்கு சுமார் ரூ. 86.720/ ஆக உள்ளது. இனி வரக்கூடிய காலங்களில் இது இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்பே கூறியது போல் நம் மொத்த முதலீட்டில் 5 முதல் 10 சதவிகிதம் தங்கம் நகை வடிவிலோ, அல்லது பேப்பர் உருவிலோ இருப்பது நல்லது.

    உங்களிடம் எவ்வளவு கிராம் தங்கம் உள்ளது? தற்போது வாங்க எண்ணினால் நகை அல்லது இ.டி.எப். அல்லது கோல்ட் பாண்ட் அல்லது டிஜிட்டல் கோல்ட் போன்றவற்றில் எதை வாங்க விரும்புவீர்கள்?

    • நடுக்கடலில் ரூ. 1.50 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • இலங்கையை சேர்ந்த 5 பேர் கைது.

    ராமேசுவரம்

    இலங்கை தலைமன்னார் வழியாக ராமேசுவரத்திற்கு தங்கம் கடத்தல் நடைபெற உள்ளதாக தலைமன்னார் கடற்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து, கடற் படையினர் தீவிர கண் காணிப்பு பணியில் ஈடுபட்ட னர். அப்போது சந்தேகத் திற்கு இடமாக ராமேசுவரம் நோக்கி சென்ற படகை இடைமறித்து சோதனை யிட்ட போது அதில், 2 கிலோ 150 கிராம் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து, தலை மன்னார் கடற்படை முகா மிற்கு படகு மற்றும் அதில் இருந்து 5 பேரை கைது செய்து மேல் விசாரணைக்கு அழைத்து சென்றனர். தலை மன்னார் பகுதியை சேர்ந்த வர்கள் என்பதும் தங்கத்தை நடுக்கடலில் தமிழக படகில் கொடுக்க கொண்டு செல் லப்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந் துள்ளது. இது குறித்து தொடர்ந்து இலங்கை கடற் படையினர் மற்றும் போலீ சார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    மேலும் இந்த தங்கத்தை நடுக்கடலில் யாரிடம் கொடுக்க கொண்டு செல் லப்பட்டது குறித்து மத்திய, மாநில உளவுத்துறையினர் ரகசிய விசாரணையில் ஈடு பட்டுள்ளனர். கடத்தப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.1.50 கோடி மதிப்பு இருக்கும் என அதிகாரி ஒருவர் தெரி வித்தார்.

    • சட்ட விரோதமாக தங்கக்கட்டிகள் கடத்தப்படுவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    கின்ஷாசா:

    ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் சட்ட விரோதமாக பல தங்கச்சுரங்கங்கள் செயல்படுகின்றன. அவற்றை கள்ளச்சந்தையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பலர் அதிகளவில் வருமானம் ஈட்டுகின்றனர். ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலையில் இது நாட்டின் பொருளாதாரத்தில் மேலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    இந்தநிலையில் அங்குள்ள கிவு மாகாணத்தில் சட்ட விரோதமாக தங்கக்கட்டிகள் கடத்தப்படுவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனத்தை சோதனை செய்தபோது அதில் 12 தங்கக்கட்டிகள் மற்றும் சுமார் ரூ.7 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை கைப்பற்றிய போலீசார் அந்த காரில் இருந்த 3 சீனர்களையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×