search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "special bus"

    • சேலம் கோட்டத்தில் இருந்து பழனி, வடலூர், திருவண்ணாமலைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
    • சிறப்பு பஸ்கள் வருகிற 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை இயக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் சார்பில் பண்டிகை காலங்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி, வருகிற 5-ந் தேதி தைப்பூசம் மற்றும் பவுர்ணமி கொண்டாடப்படுகிறது.

    தைப்பூசம், பவுர்ணமியையொட்டி தமிழகம் முழுவதும் அனைத்து போக்குவரத்து கழக கோட்டங்களிலும் பழனி, திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    அதுபோல், சேலம் கோட்டத்தில் இருந்து பழனி, வடலூர், திருவண்ணாமலைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

    இந்த சிறப்பு பஸ்கள் வருகிற 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை இயக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், வருகிற 5-ந் தேதி தைப்பூசம், பவுர்ணமியை முன்னிட்டு சேலம் கோட்டத்தில் இருந்து பழனி, வடலூர், திருவண்ணாமலை, கபிலர்மலை, காளிப்பட்டிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இந்த சிறப்பு பஸ்கள் 4-ந் தேதி முதல் இயக்கப்படவுள்ளது என்றனர்.

    • குடும்பம், குடும்பமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.
    • பக்தர்களும் பஸ், வாகனங்களில் அதிகளவில் பழனி கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    பொள்ளாச்சி,

    திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பால தண்டாயுதபாணி கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் குடும்பம், குடும்பமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.

    இதனால் எப்போதுமே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். வருகிற 27-ந் பழனி கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இதனை காண தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தர உள்ளனர். தற்போது தைப்பூச திருவிழாவும் வர உள்ளது.

    இதனையொட்டி திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து, விரதமிருந்து கோவிலுக்கு பாத யாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இதுதவிர பக்தர்களும் பஸ், வாகனங்களில் அதிகளவில் பழனி கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    அடுத்த மாதம் 5-ந் தேதி பழனியில் தைப்பூச திருவிழா நடக்க உள்ளது. இதனை காண பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மக்கள் கோவிலுக்கு செல்வார்கள்.

    பக்தர்களின் வசதிக்காக பொள்ளாச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பழனிக்கு கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி வருகிற பிப்ரவரி மாதம் 3-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை 4 நாட்கள் தைப்பூச திருவிழாவையொட்டி பழனிக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக சுழற்சி முறையில் கூடுதலாக 25 சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் அந்த நேரத்தில் கூட்டத்தை பொறுத்து அதிக பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு பொங்கல் சிறப்பு பஸ்கள் 12-ந்தேதி முதல் இயக்கப்படுகின்றன.
    • 2 நாட்களில் அரசு பஸ்களில் மட்டும் 4 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    பொங்கலை சொந்த ஊரில் கொண்டாடவே மக்கள் விரும்புவதால் வேலை மற்றும் தொழில் ரீதியாக சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் 2 நாட்களுக்கு முன்பே பயணத்தை தொடங்கி விட்டனர்.

    சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்ல வசதியாக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு பஸ்களுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்து பயணிக்கின்ற வசதி உள்ளது.

    இதுவரையில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு 2 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு பொங்கல் சிறப்பு பஸ்கள் 12-ந்தேதி முதல் இயக்கப்படுகின்றன. 2 நாட்களில் அரசு பஸ்களில் மட்டும் 4 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. 12 மற்றும் 13 ஆகிய நாட்களிலும் மொத்தம் 6796 பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினத்தைவிட நேற்று மக்கள் கூட்டம் பல மடங்கு அதிகரித்தது.

    கோயம்பேடு, கே.கே.நகர், தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி, உள்ளிட்ட 6 பஸ் நிலையங்களிலும் நள்ளிரவு வரை கூட்டம் அலைமோதியது.

    குறிப்பாக கோயம்பேடு பஸ் நிலையம் மாலை 4 மணியில் இருந்து பயணிகள் கூட்டத்தால் திணறியது. இரவு நேரத்தில் பிளாட்பாரத்தில் நடக்க முடியாத அளவிற்கு கூட்டம் நிரம்பி வழிந்தது.

    குடும்பம் குடும்பமாக மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து சென்றனர். பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், நிறுவனங்களுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டதால் மக்கள் சாரை சாரையாக வந்து கொண்டே இருந்தனர்.

    முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமின்றி முன்பதிவு செய்யாமல் கடைசி நேரத்தில் பயணம் செய்ய வருபவர்களுக்காக சிறப்பு பஸ்கள் இயக்க தயாராக இருந்தன.

    போக்குவரத்து கழக அதிகாரிகள், ஊழியர்கள் பொது மக்களுக்கு ஒலிப்பெருக்கி மூலம் தகவல்களை தெரிவித்து கொண்டே இருந்தனர்.

    மக்கள் கூட்டம் நள்ளிரவை கடந்து அதிகாலை 3.30 மணி வரை வந்து கொண்டே இருந்ததால் அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    இதற்கிடையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சிறப்பு பஸ் இயக்கத்தை நேரில் ஆய்வு செய்தார். கோயம்பேடு உள்ளிட்ட சிறப்பு பஸ் நிலையங்களுக்கு சென்று தேவையான அளவு பஸ் வசதியை ஏற்படுத்தி கொடுத்தார். இடமில்லை, பஸ் இல்லை என்ற பேச்சுக்கு வாய்ப்பு கொடுக்காத வகையில் பொதுமக்களுக்கு பஸ் வசதி செய்து கொடுக்கப்பட்டதை நள்ளிரவு வரை பார்வையிட்டார்.

    ஆம்னி பஸ் பேருந்து நிலையத்திலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களிலும் சொந்த ஊர் செல்ல மக்கள் நிரம்பி இருந்தனர். முன்பதிவு அல்லாத பெட்டிகளில் நிற்பதற்கு கூட இடம் இல்லாமல் நெரிசலில் பயணம் செய்தனர்.

    வெளியூர் செல்லும் பொது மக்கள் வசதிக்காக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதலாக இரவு நேர பஸ்கள் இயக்கப்பட்டன. இதுதவிர மெட்ரோ ரெயில் சேவையும் நீட்டிக்கப்பட்டது.

    நெரிசல் மிகுந்த நேரங்களில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்பட்டு வந்த மெட்ரோ ரெயில் சேவை இரவு 10 மணி வரை நேற்று நீட்டிக்கப்பட்டது.

    5 நிமிடத்திற்கு ஒரு சேவை என்ற அளவில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டன. மெட்ரோ ரெயில் சேவை இன்று நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்படுகிறது.

    அனைத்து மெட்ரோ ரெயில் முனையங்களில் இருந்து செல்லும் கடைசி மெட்ரோ ரெயில் இரவு 11 மணிக்கு பதிலாக 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    • இன்று சென்னையில் இருந்து 2,100 தினசரி பஸ்களுடன் 1,943 சிறப்புப் பஸ்களும் இயக்கப்படுகிறது.
    • சிறப்புப் பஸ்களில் 1 லட்சத்து 87 ஆயிரத்து 103 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

    சென்னை :

    பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நேற்றிரவு நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    12-ந்தேதி சென்னையில் இருந்து தினசரி இயக்கக் கூடிய 2 ஆயிரத்து 100 பஸ்களுடன், 586 சிறப்புப் பஸ்கள் இயக்கப்பட்டு 1 லட்சத்து 34 ஆயிரத்து 300 பயணிகள் பயணம் செய்துள்ளனர். மேலும், பல்வேறு ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பிற பகுதிகளுக்கு 1,220 பஸ்கள் இயக்கப்பட்டு 61 ஆயிரத்து 225 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

    வெள்ளிக்கிழமை (நேற்று) இரவு 7 மணி நிலவரப்படி, தினசரி இயக்கக் கூடிய 2,100 பஸ்களில் 1,544 பஸ்களும், 1,855 சிறப்புப் பஸ்களில் 904 பஸ்களும் இயக்கப்பட்டு 1 லட்சத்து 32 ஆயிரத்து 192 பயணிகள் பயணம் செய்துள்ளனர். ஆக மொத்தம் 2 நாட்களில் (நேற்று இரவு 7 மணி நிலவரம்) சென்னையில் இருந்து 5 ஆயிரத்து 134 பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. இதில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 492 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

    14-ந்தேதி (இன்று) சென்னையில் இருந்து 2,100 தினசரி பஸ்களுடன் 1,943 சிறப்புப் பஸ்களும் இயக்கப்படுகிறது. சிறப்புப் பஸ்களில் 1 லட்சத்து 87 ஆயிரத்து 103 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த முன்பதிவு வாயிலாக ரூ.10 கோடியே 3 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

    காணும் பொங்கலை முன்னிட்டு 17-ந்தேதி அன்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், அண்ணா சதுக்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா, கோவளம், மாமல்லபுரம், பெசன்ட் நகர் கடற்கரை, குயின்ஸ் லேண்ட் ஆகிய இடங்களுக்கு 480 சிறப்புப் பஸ்கள் இயக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொங்கல் பண்டிகையையொட்டி நாளை முதல் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
    • இன்று பிற்பகலுக்கு மேல் பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகின்றன.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் வசதிக்காக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து நேற்று முதல் பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    அரசு பஸ்களில் கட்டணம் குறைவாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் முன்பதிவு செய்து பயணம் செய்கிறார்கள். சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தவிர்க்க 6 பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் கூடுதலாக 651 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிட்டு இருந்த நிலையில் நள்ளிரவு வரை 586 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. நள்ளிரவு 12 மணி வரையில் இயக்கப்பட்ட 2,686 பஸ்களில் ஒரு லட்சத்து 34 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர்.

    இதுதவிர ஆம்னி பஸ்களில் 20 ஆயிரம் பேரும் சென்ட்ரல், எழும்பூரில் இருந்து ரெயில்கள் மூலம் சுமார் 1 லட்சம் பேரும் பயணம் செய்துள்ளனர்.

    இந்த நிலையில் இன்று வெளியூர் செல்லும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால் 1,855 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களையும் சேர்த்து மொத்தம் 4000 பஸ்கள் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு புறப்பட்டு செல்கின்றன.

    அரசு பஸ்கள் மூலம் மட்டும் 2 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் இன்று பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பொங்கல் பண்டிகையையொட்டி நாளை முதல் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இன்று பிற்பகலுக்கு மேல் பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகின்றன.

    இதனால் குழந்தைகளுடன் பெற்றோர்கள் இன்று சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கிறார்கள். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து பெரும்பாலானவர்கள் இன்று இரவு வெளியூர் பயணத்தை மேற்கொள்வதால் பஸ், ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் காலையில் இருந்து மக்கள் கூட்டம் அதிகரித்தது. பகல் நேர பயணத்தை மேற்கொண்டனர். கோயம்பேடு பஸ்நிலையத்தில் இருந்து திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, விழுப்புரம், திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர், பெங்களூர் ஆகிய நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    நேற்று ஒரேநாளில் 1½ லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இது இன்று 2 லட்சத்தை தாண்டும். வழக்கமாக பொங்கல் பண்டிகை நாட்களில் 5 லட்சம் பேர் பயணம் செய்வார்கள். இந்த ஆண்டு 6 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இதற்கு காரணம் முன்பதிவில் அதிகளவில் அரசு பஸ்கள் சேர்க்கப்பட்டது தான். நேற்று 20 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணித்தனர்.

    இன்று பயணம் செய்ய 45 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். பொது மக்கள் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்யவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பஸ் நிலையங்களுக்கு வரும் மக்களுக்கு அவர்களின் தேவை அறிந்து பஸ்கள் இயக்கப்படும்.

    பிற போக்குவரத்து கழக பஸ்கள் முழுமையாக இயக்கப்பட்ட நிலையில் மேலும் தேவைப்பட்டால் சென்னை மாநகர பஸ்களை இயக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கூடுதலாக 5 இடங்களில் இருந்து பஸ்கள் புறப்பட வழிவகை செய்யப்பட்டிருந்தது.
    • பயணிகளின் வசதிக்காக 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை :

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 12-ந்தேதி (நேற்று) முதல் 14-ந்தேதி வரையிலான 3 நாட்கள் சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்திருந்தார்.

    அதேபோல பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு, 16-ந்தேதி முதல் 18-ந் தேதிவரை, தினசரி இயக்கக்கூடிய 2,100 பஸ்களுடன் 4,334 சிறப்புப் பஸ்களும், மற்ற ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 4,965 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 15 ஆயிரத்து 599 பஸ்களும் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ரெயில்களில் டிக்கெட் அனைத்தும் விற்று தீர்ந்த நிலையில் பொங்கல் சிறப்பு பஸ்களையே பயணிகள் பெரிதும் நம்பியிருந்தனர்.

    அதன்படி, சென்னையில் நேற்று முதல் சிறப்பு பஸ்கள் வெளியூர்கள் நோக்கி புறப்பட்டன. பயணிகள் சிரமமின்றி செல்லும் வகையில் சென்னையில் கோயம்பேடு தவிர கூடுதலாக 5 இடங்களில் இருந்து பஸ்கள் புறப்பட வழிவகை செய்யப்பட்டிருந்தது. அதன்படி கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர் மாநகர் போக்குவரத்துக்கழக பஸ் நிலையம், தாம்பரம் அறிஞர் அண்ணா பஸ்நிலையம் (மெப்ஸ்), தாம்பரம் ரெயில்நிலைய பஸ் நிறுத்தம் ஆகிய 6 இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு நேற்று சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    முதல் நாளான நேற்று வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் 651 சிறப்பு பஸ்களும் சேர்த்து மொத்தம் 2,751 பஸ்கள் இயக்கப்பட்டன. இதன்மூலம் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் நேற்று தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச்சென்றனர்.

    13-ந்தேதி (இன்று) வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் 1,855 சிறப்பு பஸ்களும் சேர்த்து மொத்தம் 3,955 பஸ்களும், 14-ந்தேதி (நாளை) வழக் கமாக இயக்கப்படும் 2,100 பஸ் களுடன் 1,943 சிறப்பு பஸ்களும் சேர்த்து மொத்தம் 4,043 பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

    சிறப்பு பஸ்கள் உள்பட 14-ந்தேதி வரை சென்னையில் இருந்து புறப்படும் வெளியூர் பஸ்களில் 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் ஏற்கனவே முன்பதிவு செய்துள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு 2 நாட்களே உள்ள நிலையில் முன்பதிவு செய்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பயணிகளின் வசதிக்காக 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பஸ்களின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கு மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக, 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும், ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151, 044-24749002, 044-26280445, 044-26281611 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    • பொங்கல் பண்டிகைக்காக நேற்று முதல் பொதுமக்கள் சொந்த ஊர் செல்லத் தொடங்கியுள்ளனர்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. சென்னையில் வசிக்கும் பெரும்பாலானோர் பொங்கல் பண்டிகையை கொண்டாட தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அவர்களின் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் மற்றும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.

    பொங்கல் பண்டிகையையொட்டி வழக்கமாக செல்லும் ரெயில்கள் மற்றும் சிறப்பு ரெயில்களில் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்து விட்டன.

    இதையடுத்து பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லும் மக்கள் பஸ்களையே நம்பி உள்ளனர்.

    இதையடுத்து பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகைக்காக நேற்று முதல் பொதுமக்கள் சொந்த ஊர் செல்லத் தொடங்கியுள்ளனர். நேற்று ஒரே நாளில் 20 ஆயிரம் பேர் அரசு பஸ்கள் மூலம் சொந்த ஊர் சென்றுள்ளனர்.

    மேலும் இன்று முதல் சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. இன்று வழக்கமாக இயக்கப்படும் 2100 அரசு விரைவு பஸ்களுடன், 651 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. இன்று மட்டும் 2751 பஸ்கள் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்கின்றன.

    நாளை (13-ந்தேதி) வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களுடன், 1855 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 3955 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. வருகிற 14-ந்தேதி வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களுடன், 1943 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 4043 பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த 3 நாட்களிலும் வழக்கமாக இயக்கப்படும் 6300 பஸ்களுடன் 4449 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 10749 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    மேலும் பயணிகளின் வருகைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கூடுதல் பஸ்கள் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள பருப்பு மண்டி, அண்ணாநகர் பணிமனை ஆகிய இடங்களில் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    சிறப்பு பஸ்களில் சென்னையில் இருந்து இன்று செல்ல 14,500 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இன்று முதல் வருகிற 14-ந்தேதி வரை பயணம் செய்ய இந்த சிறப்பு பஸ்களில் 1 லட்சத்து 64 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு பஸ் நிலையம், தாம்பரம் சானடோரியம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் 12 முன்பதிவு மையங்கள் வருகிற 14-ந்தேதி வரை செயல்படும்.

    பஸ்களின் இயக்கம் குறித்து அறிந்து கொள்ள 9445014450, 9445014436 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் 1800 425 6151, 044-2474 9002, 26280445, 26281611 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்.

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் கட்டுப்பாட்டு மையமும், முக்கிய பஸ் நிலையங்களில் 20 தகவல் மையங்களும் அமைக்கப்பட்டு உள்ளன.

    மேலும் பயணிகளின் வசதிக்காக சென்னையில் இன்று முதல் 340 சிறப்பு இணைப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. வருகிற 14-ந்தேதி வரை இணைப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    மேலும் பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து ரெயில்கள், அரசு விரைவு பஸ்கள், ஆம்னி பஸ்கள், கார்கள் மூலம் இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

    • சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் 450 அரசு விரைவு பஸ்களில் நாளை பயணம் செய்ய 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
    • குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய எல்லா பஸ்களும் நிரம்பிவிட்டதால் 500 சிறப்பு பஸ்கள் நாளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    கிறிஸ்துமஸ் பண்டிகை 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுவதால் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் நாளை (வெள்ளிக்கிழமை) இயக்கப்படுகிறது.

    பள்ளி, கல்லூரிகளுக்கு பண்டிகை விடுமுறை 9 நாட்கள் விடப்பட்டுள்ளதால் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். நீண்டதூரம் செல்லக்கூடிய அரசு விரைவு பஸ்களில் அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன.

    சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் 450 அரசு விரைவு பஸ்களில் நாளை பயணம் செய்ய 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய எல்லா பஸ்களும் நிரம்பிவிட்டதால் 500 சிறப்பு பஸ்கள் நாளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மதுரை, திருச்சி, நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பிற போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாலும், கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதாலும் ரெயில்களில் இடங்கள் நிரம்பிவிட்டதால் மக்கள் அரசு பஸ்களை நோக்கி வரக்கூடும் என்பதால் கூடுதலாக 500 பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளோம்.

    நாளை பிற்பகலில் இருந்து சிறப்பு பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து புறப்படும். வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்படும். பொதுமக்கள் தேவையை பொறுத்து கூடுதல் பஸ்கள் இயக்க தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நவ கைலாயங்களுக்கு நாளை மற்றும் 25-ந் தேதி, ஜனவரி 1, 8-ந் தேதிகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
    • இரவு 8 மணி வரை இந்த பஸ்களுக்கு முன்பதிவு செய்யலாம். இதற்கான கட்டணம் ரூ.600 ஆகும்.

    நெல்லை:

    நெல்லை மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மார்கழி மாத பிறப்பையொட்டி நவ கைலாயங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    அதன்படி நாளை ( ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 25-ந் தேதி, ஜனவரி 1, 8-ந் தேதிகளில் இந்த பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    இந்த நாட்களில் பாளை பஸ் நிலையத்தில் இருந்து காலை 7 மணிக்கு சிறப்பு பஸ்கள் புறப்பட்டு பாபநாசம், சேரன்மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர் (செங்காணி), முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென் திருப்பேரை, ராஜபதி, சேர்ந்தபூ மங்கலம் ஆகிய நவ கைலாயங்களுக்கு சென்றடையும்.

    இந்த பஸ்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை முன்பதிவு செய்யலாம். இதற்கான கட்டணம் ரூ.600 ஆகும். ஆன்மீக சுற்றுலா செல்லும் பக்தர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என்று நெல்லை போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பக்தர்கள் தடையின்றி தரிசனம் மற்றும் கிரிவலம் செய்துவிட்டு திரும்பி செல்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். இது குறித்த அறிவிப்புகளை வெளிப்படுத்த வேண்டும்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக டிசம்பர் 6-ந்தேதி அதிகாலை பரணி தீபமும் மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

    தீப திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த 2-ம் கட்ட ஆய்வுக் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது :-

    கார்த்திகைத் தீபத் திருவிழாவுக்கு 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள். 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.

    அங்கிருந்து பக்தர்கள் தடையின்றி தரிசனம் மற்றும் கிரிவலம் செய்துவிட்டு திரும்பி செல்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். இது குறித்த அறிவிப்புகளை வெளிப்படுத்த வேண்டும்.

    வரும் பவுர்ணமி கிரிவலத்தை தீபத் திருவிழாவுக்கான ஒத்திகையாக பார்க்க வேண்டும். கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களை உள்ளே அனுமதித்து, வெளியே செல்வதற்கான வழி தடத்தை இந்து சமய அறநிலையத்துறை தெரிவிக்க வேண்டும்.

    தரிசனத்துக்கு ஒரு சிலரை நீண்ட நேரம் அனுமதிப்பதால், கூட்ட நெரிசல் அதிகரிக்கிறது. காவல்துறை சார்பில் பாதுகாப்பு நடவடிக்கையை பலப்படுத்த வேண்டும் என்றார்.

    12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 2,692 சிறப்பு பஸ்கள் மூலம் 6,500 நடைகள் இயக்கப்பட உள்ளன.

    மகா தீபத்தன்று பரணி தீபம் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் காட்சி தருதல் நிகழ்வை விஐபிக்கள் தரிசிப்பதற்கு தேவையான நடவடிக்கை மற்றும் அவர்களுக்கு இருக்கைகள் ஒதுக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    • ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி விழாவை முன்னிட்டு சேலம் மண்டலம், தர்மபுரி மண்டலத்தில் இருந்து 200 சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • சிறப்பு பஸ் அக்டோபர் 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை இயக்கப்படும்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு போக் குவரத்து கழகம் சேலம் கோட்டம் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கியது. இம்மாவட்டங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் பல்வேறு வழித் தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முக்கிய விசேஷ நாட்களில் சேலம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.

    அந்த வகையில், ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி விழாவை முன்னிட்டு சேலம் மண்டலம், தர்மபுரி மண்டலத்தில் இருந்து 200 சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது. சேலத்தில் இருந்து சென்னை,கோவை, மதுரை, திருச்சி, திருப்பூர், ஈரோடு, புதுச்சேரி, பெங்களூர் உள்ளிட்ட ஊர்களுக்கு அதிகளவில் சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சிறப்பு பஸ் அக்டோபர் 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரைஇயக்கப்படும். அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தெலுங்கானா மாநிலத்துக்கு பிரதமர் வருகை ஏற்பாடுகளை செய்ய சென்றதால் என்னால் காரைக்கால் செல்ல முடியவில்லை.
    • பள்ளி மாணவர்களின் பஸ் இயக்க புதிதாக டெண்டர் விடப்பட்டுள்ளது. இன்னும் 10 நாட்களில் பஸ் இயக்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின ஆண்டையொட்டி 75 பள்ளிகளுக்கு சென்று மாணவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளேன். இன்று 5 பள்ளிக்கு செல்கிறேன். மாணவர்களோடு மதிய உணவு அருந்துகிறேன்.

    ஒவ்வொரு பள்ளியிலும் வெவ்வேறு நிகழ்வுகள் நடைபெறுவதால் பள்ளிகளின் குறைபாட்டை தெரிந்துகொண்டு சரிசெய்ய முடியும். புதிய கல்வி கொள்கை நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். அதை விரைந்து செயல்படுத்த வேண்டும். கல்வித்துறை, சுகாதாரத்துறை நவீனமயமாக மாற்றப்பட வேண்டும்.

    இதற்காக முதல்-அமைச்சர், கல்வித்துறை அமைச்சரிடம் பேசியுள்ளேன். காரைக்காலில் வாந்தி பேதியால் நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். தெலுங்கானா மாநிலத்துக்கு பிரதமர் வருகை ஏற்பாடுகளை செய்ய சென்றதால் என்னால் காரைக்கால் செல்ல முடியவில்லை.

    இருப்பினும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினேன். வாந்தி, பேதியை தடுக்கும் வழிமுறைகள் பற்றி அறிவுறுத்தினேன். பொதுமக்கள் பீதியடைய வேண்டாம். தற்போது வாந்தி, பேதி கட்டுக்குள் வந்துள்ளது. முதல்-அமைச்சரும் காரைக்காலுக்கு நேரில் சென்றுள்ளார்.

    பள்ளி மாணவர்களின் பஸ் இயக்க புதிதாக டெண்டர் விடப்பட்டுள்ளது. இன்னும் 10 நாட்களில் பஸ் இயக்கப்படும். 1 முதல் 5-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப்பட்டு விட்டது. 6-ம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு புத்தகம் வழங்கும் பணி தொடங்கி உள்ளோம்.

    மதிய உணவு பற்றி ஆய்வு செய்ய நேரில் சாப்பிட உள்ளேன். எந்த குறைபாடையும் நியாயப்படுத்தவில்லை. அனைத்து குறைபாடுகளும் சரிசெய்யப்படும். நாடு முழுவதும் கொரோனா தொற்று சற்று உயர்ந்துள்ளது. முக கவசம் அணிவது கட்டாயம். தடுப்பூசி செலுத்தாதவர்கள் தடுப்பூசி செலுத்த வேண்டும்.

    கொரோனாவை தடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு தீவிரப்படுத்தியுள்ளது. சி.பி.எஸ்.இ. முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. தேர்வு முடிவுகள் வெளியானவுடன் சென்டாக் அறிவிப்பு வெளியிடப்படும்.

    பிரதமர் என்னை சந்தித்தபோது புதுவையை பற்றி கேட்டறிந்தார். புதுவையில் பல வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல திட்டங்கள் வர உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×