search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு பஸ்"

    • வழக்கமாக இயக்கப்படும் பஸ்களை விட பிற பகுதிகளிலும் சிறப்பு பஸ்கள் நாளை பிற்பகல் முதல் இயக்கப்பட உள்ளன.
    • சிறப்பு ரெயில்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக நேற்று அரசு பொது விடுமுறை அறிவித்து இருந்தது. தனியார் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு கட்டாயம் விடுப்பு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தததால் சொந்த ஊர்களுக்கு 17, 18 ஆகிய தேதிகளில் புறப்பட்டு சென்றனர்.

    சென்னை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தங்கி வேலை செய்து வந்த கூலி தொழிலாளர்கள், ஊழியர்கள் ஓட்டு போடுவதற்காக சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இதற்காக அரசு சிறப்பு பஸ்கள் இயக்கின. தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்களை சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கியது.

    இந்த நிலையில் ஓட்டு போட சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக கூடுதலாக பஸ் வசதியை அரசு போக்குவரத்து கழகங்கள் இன்று (சனிக்கிழமை) முதல் செய்துள்ளது. அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு சனி, ஞாயிறு தொடர் விடுமுறை கிடைப்பதால் 22-ந்தேதி (திங்கட்கிழமை) வேலைக்கு செல்ல வசதியாக பெரும்பாலும் நாளை பயணத்தை தொடர்வார்கள்.

    அதனால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கோவை, சேலம், ஓசூர், திருப்பூர், சிதம்பரம், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு கூடுதலாக பஸ்கள் விடப்பட்டுள்ளது.

    வழக்கமாக இயக்கப்படும் பஸ்களை விட பிற பகுதிகளிலும் சிறப்பு பஸ்கள் நாளை பிற்பகல் முதல் இயக்கப்பட உள்ளன.

    தூத்துக்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் விடப்பட்டு உள்ளது. இந்த ரெயில் தூத்துக்குடியில் இன்று மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு எழும்பூருக்கு நாளை அதிகாலை 3.50 மணிக்கு வந்து சேருகிறது. பின்னர் 4.45 மணிக்கு சென்ட்ரல் நிலையம் சென்றடைகிறது.

    இந்த சிறப்பு ரெயிலில் உள்ள அனைத்து பெட்டிகளும் முன்பதிவு செய்யப்படாதவை. இந்த ரெயில் மதுரை, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் வழியாக இயக்கப்படுகிறது.

    மற்றொரு சிறப்பு ரெயில் திருச்சியில் இருந்து எழும்பூருக்கு இன்று இயக்கப்பட்டது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்ட ரெயில் பகல் 1.20 மணிக்கு எழும்பூர் வந்து சேர்ந்தது.

    இதே போல் தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு இன்று சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் தாம்பரத்தில் இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு நாளை காலை 11.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடைகிறது.

    மறுமார்க்கத்தில் திருநெல்வேலியில் இருந்து நாளை பகல் 3.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.55 மணிக்கு தாம்பரம் வந்து சேருகிறது. சிறப்பு ரெயில்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இது குறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் கூறும்போது நாளை (ஞாயிற்றுக்கிழமை) பயணம் செய்ய 34 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். மொத்தம் 1.25 லட்சம் இடங்கள் உள்ளன. பொதுமக்கள் நெரிசலை தவிர்க்க அரசு பஸ்களில் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்றார்.

    • வாரத்தில் 7 நாட்களும் அதிகாலை 5.15 மணிக்கு கும்பகோணம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
    • பயணிகள் www.tnstc.in என்ற இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் மட்டுமே முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    தஞ்சாவூா்:

    பயணிகள் மற்றும் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு ஏற்ப தமிழக அரசு சார்பில் கும்பகோணத்தில் இருந்து புறப்பட்டு ஒரே நாளில் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள நவக்கிரக தலங்களுக்கு ஒரே பஸ்சில் பயணம் செய்து எந்த ஒரு சிரமமும் இன்றி மீண்டும் கும்பகோணம் பஸ் நிலையத்தை வந்தடையும் வகையில் நவக்கிரக சிறப்பு சுற்றுலா பஸ் இயக்கம் கடந்த மாதம் 24-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.

    பொதுமக்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றதையடுத்து வயதானவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க குளிர்சாதன வசதியுடன் (ஏ.சி.வசதி) கூடிய மேலும் கூடுதலாக ஒரு சிறப்பு சுற்றுலா பஸ் கும்பகோணம் போக்குவரத்து கழகம் சார்பில் வருகிற 25-ந் தேதி முதல் வாரத்தில் 7 நாட்களும் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

    இந்த பஸ்சில் நபர் ஒருவருக்கு ரூ.1350 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வாரத்தில் 7 நாட்களும் அதிகாலை 5.15 மணிக்கு கும்பகோணம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு நவகிரக தலங்களுக்கு சென்று இரவு 8 மணியளவில் மீண்டும் கும்பகோணம் பஸ் நிலையம் வந்தடையும்.

    எனவே, இந்த பஸ்சில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் www.tnstc.in என்ற இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் மட்டுமே முன்பதிவு செய்து பயணச்சீட்டை பெற்றுக்கொள்ள முடியும். நேரடியாக பஸ்சில் பயணச் சீட்டு பெற்றுக்கொள்ள முடியாது. மேற்கண்ட தகவல் கும்பகோணம் போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்க ப்பட்டுள்ளது.

    • கூட்டம் இருந்தால் 18, 19-ந் தேதிகளில் பஸ்களை இயக்கவும் தயாராக உள்ளனர்.
    • வெளியூர் சென்றவர்கள் நேற்று முதல் திருப்பூர் திரும்ப தொடங்கியுள்ளனர்.

    திருப்பூர்:

    தீபாவளி பண்டிகையை கொண்டாட திருப்பூரில் இருந்து தொழிலாளர்கள் சொந்த ஊர் நோக்கி சென்றனர். குறிப்பாக சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்கள் மூலமாக தொழிலாளர்கள் புறப்பட்டனர். கடந்த 9-ந் தேதி முதல் கோவில்வழி, மத்திய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் பகுதிகளில் இருந்து 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    தீபாவளிக்கு முந்தைய நாளான கடந்த 11-ந் தேதி இரவு கோவில்வழி பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. 40 ஆயிரம் பேர் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். புதிய பஸ் நிலையத்தில் இருந்து 30 ஆயிரம் பேர், மத்திய பஸ் நிலையத்தில் இருந்து 10 ஆயிரம் பேர் என 80 ஆயிரம் பேர் புறப்பட்டனர். கடந்த 9,10,11-ந் தேதிகளில் மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் திருப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளதாக அரசு போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வெளியூர் சென்றவர்கள் நேற்று முதல் திருப்பூர் திரும்ப தொடங்கியுள்ளனர். இதற்காக சிறப்பு பஸ்கள் இயக்கம் தொடங்கியது. நாளை (புதன்கிழமை) வரை பஸ்கள் இயக்கப்பட உள்ளது. கூட்டம் இருந்தால் 18, 19-ந் தேதிகளில் பஸ்களை இயக்கவும் தயாராக உள்ளனர்.

    • சென்னையில் இருந்து மதுரை-ராமநாதபுரத்திற்கு 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கை கேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    காரைக்குடி

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) மண்டல மேலாளர் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பண்டியையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிட்., கும்பகோணம், பொது மக்கள் எளிதாக எவ்வித சிரமம் இன்றி, இடையூறும் இன்றி, பயணம் செய்ய ஏதுவாக சென்னையிலிருந்து மதுரை, ராமநாதபுரம், காரைக்குடி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால் வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங் கொண்டம், கருர், புதுக்கோட்டை ஆகிய இடங்களுக்கு வருகிற 9-ந் தேதி அன்று 250 கூடுதல் பஸ்களும், 10-ந் தேதி அன்று 750 கூடுதல் பஸ்களும், 11-ந் தேதி அன்று 520 கூடுதல் பஸ்களும், மேலும் திருச்சியிலிருந்து மதுரை, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய இடங்களுக்கு மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கு 9-ந் தேதி அன்று 100 கூடுதல் பஸ்களும், 10 மற்றும் 11-ந் தேதிகளில் 250 கூடுதல் பஸ்களும், அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பஸ்களும் பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.மேலும் 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை சென்னையிலிருந்து பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் தீபாவளி முடிந்து மீண்டும் அவரவர் ஊர்களுக்கு செல்ல 12-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை மேற்குறிப்பிட்டவாறு கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தீபாவளி பண்டிகையை யொட்டி பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கை கேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆடிக் கிருத்திகை பண்டிகையை வருகிற 9-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
    • பயணிகளின் வசதிக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஆடிக் கிருத்திகை பண்டிகையை வருகிற 9-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நாளை (7-ந் தேதி) முதல் 10-ந்தேதி வரை திருத்தணிக்கு கூடுதலாக 300 சிறப்பு பஸ்கள் இயக்க காஞ்சிபுரம் போக்குவரத்துக் கழக மண்டலத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பயணிகளின் வசதிக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்-திருத்தணிக்கு 100 பஸ்கள், அரக்கோணம்-திருத்தணிக்கு 25 பஸ்கள், சென்னை-திருத்தணிக்கு 100 பஸ்கள், திருப்பதி-திருத்தணிக்கு 75 பஸ்கள் என மொத்தம் 300 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோடை விடுமுறை ஒரு புறமும் அரசு ஊழியர்களுக்கு மே தினத்தையொட்டி (திங்கட்கிழமை) நாளை முதல் 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது.
    • ஆம்னி பஸ்களில் ரூ.2 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.4 ஆயிரம் என கட்டணம் நிர்ணயித்து வசூலிக்கிறார்கள்.

    சென்னை:

    அரசு பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை நாளை முதல் விடப்பட்டு உள்ளது. ஏற்கனவே தனியார் பள்ளி மாணவர்கள் ஆண்டு இறுதி தேர்வை முடித்துவிட்டு கோடை விடுமுறையில் உள்ளனர்.

    அரசு பொதுத் தேர்வை எழுதிய மாணவர்களும் தேர்வு முடிவுக்காக காத்து இருக்கின்ற நிலையில் வெளியூர்களுக்கு பயணத்தை தொடங்கிள்ளனர்.

    கோடை விடுமுறை ஒரு புறமும் அரசு ஊழியர்களுக்கு மே தினத்தையொட்டி (திங்கட்கிழமை) நாளை முதல் 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது. அதனால் வெளியூர் பயணம் செய்ய மக்கள் பஸ், ரெயில்களில் முன்பதிவு செய்துள்ளனர்.

    அனைத்து ரெயில்களும் நிரம்பிவிட்டதால் ஆம்னி பஸ்களில் கொள்ளை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆம்னி பஸ்களில் ரூ.2 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.4 ஆயிரம் என கட்டணம் நிர்ணயித்து வசூலிக்கிறார்கள்.

    இதனால் அரசு பஸ்களை நாடி பலரும் வருகிறார்கள். அரசு விரைவு பஸ்கள் மற்றும் பிற போக்குவரத்து அரசு பேருந்துகள் இந்த 4 நாட்களும் நிரம்பிவிட்டன. இன்று முதல் மே 1-ந் தேதி வரை 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    சென்னையில் இருந்து மட்டும் 25 ஆயிரம் பேர் வெளியூருக்கு பயணம் செய்ய முன்பதிவு செய்து உள்ளனர். வெளியூர்களில் இருந்து சென்னை திரும்பவும் ஆயிரக்கணக்கானவர்கள் முன்பதிவு செய்து பயணத்தை மேற்கொள்கின்றனர்.

    இன்று முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து வழக்கமாக இயக்கப்படும். 2100 பஸ்களுடன் கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    மே தினத்தையொட்டி தொடர் அரசு விடுமுறை நாட்கள் வருவதால் அரசு பஸ்களில் முன்பதிவு பண்டிகை காலத்தில் இருப்பது போன்று பதிவாகி உள்ளது. 4 நாட்களுக்கு 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து உள்ளனர். பயணி கள் கூட்டம் இன்று மாலையில் இருந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதனால் 4 நாட்களுக்கும் கூடுதலாக தலா 500 பஸ்களை இயக்க திட்டமிட்டு உள்ளோம்.

    அரசு விரைவு போக்குவரத்து கழகம், விழுப்புரம், சேலம், கோவை, மதுரை, புதுவை ஆகிய போக்குவரத்து கழகங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கிறது. ஆம்னி பஸ்களை விட கட்டணம் பல மடங்கு குறைவாக இருப்பதால் தற்போது அரசு பஸ்களில் மக்கள் அதிகளவில் பயணம் செய்ய ஆர்வம் காட்டு கிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அரசு பஸ்களில் நடக்கும் விறுவிறுப்பான முன்பதிவு போல ஆம்னி பஸ்களில் நடக்கவில்லை.
    • அரசு பஸ்களில் கட்டணம் குறைவாக இருப்பதால் ஏழை-எளிய மக்கள் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட செல்லும் பொதுமக்கள் வசதிக்காக 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை சிறப்பு பஸ்கள் அரசு சார்பில் இயக்கப்படுகின்றன.

    சென்னையில் இருந்து புறநகரங்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் 6,500 சிறப்பு பஸ்கள் 4 நாட்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    பொங்கல் பண்டிகை 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை வருவதால் பெரும்பாலானவர்கள் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் பயணத்தை தொடங்குவார்கள். அதன் அடிப்படையில் சென்னையில் இருந்து 6 சிறப்பு பஸ்நிலையம் மூலம் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    சொந்த ஊர் செல்லக்கூடியவர்கள் அரசு பஸ்களில் ஒரு மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்யத் தொடங்கிவிட்டனர். பொங்கலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே இருப்பதால் அரசு விரைவு பஸ், ரெயில்கள் அனைத்தும் நிரம்பி விட்டன.

    சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பஸ்கள் அனைத்திலும் இருக்கைகள் நிரம்பியதால் பிற போக்குவரத்துக் கழக பஸ்கள் முன்பதிவில் இணைக்கப்பட்டு விறுவிறுப்பாக புக்கிங் நடைபெற்று வருகின்றன.

    விழுப்புரம், சேலம், மதுரை, கும்பகோணம், கோவை, திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக பஸ்களுக்கும் தற்போது முன்பதிவு தொடங்கி உள்ளன. 13-ந்தேதி வெளியூர் செல்ல அதிகளவில் முன்பதிவு செய்துள்ளனர்.

    குறிப்பாக மதுரை, திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் பகுதிக்கு விடப்பட்டுள்ள சிறப்பு பஸ்கள் நிரம்பி வருகின்றன. 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை சுமார் 2 லட்சம் பேர் முன் பதிவு செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    சென்னை கோயம்பேட்டில் இருந்து புறப்படக்கூடிய அரசு விரைவு பஸ்கள் அனைத்தும் நிரம்பி விட்டதால் ஆன்லைன் முன்பதிவில் மற்ற போக்குவரத்து கழக பஸ்கள் இணைக்கப்பட்டு இருப்பதாக மேலும் தெரிவித்தனர்.

    இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து சொந்த ஊருக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அரசு பஸ்களில் நடக்கும் விறுவிறுப்பான முன்பதிவு போல ஆம்னி பஸ்களில் நடக்கவில்லை. 13-ந் தேதிக்கு மட்டும் 70 சதவீதம் ஆம்னி பஸ்கள் நிரம்பி இருப்பதாகவும் மற்ற நாட்களில் அதிக இடங்கள் காலியாக இருப்பதாகவும் உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

    வழக்கமான அளவில் தான் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்ற நிலை உள்ளது. கூடுதலாக விடுவதற்கு இதுவரையில் வாய்ப்பு இல்லை என்று சங்கத்தலைவர் அன்பழகன் தெரிவித்தார்.

    அதேவேளையில் அரசு பஸ்களில் கட்டணம் குறைவாக இருப்பதால் ஏழை-எளிய மக்கள் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள்.

    • ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி விழாவை முன்னிட்டு சேலம் மண்டலம், தர்மபுரி மண்டலத்தில் இருந்து 200 சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • சிறப்பு பஸ் அக்டோபர் 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை இயக்கப்படும்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு போக் குவரத்து கழகம் சேலம் கோட்டம் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கியது. இம்மாவட்டங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் பல்வேறு வழித் தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முக்கிய விசேஷ நாட்களில் சேலம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.

    அந்த வகையில், ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி விழாவை முன்னிட்டு சேலம் மண்டலம், தர்மபுரி மண்டலத்தில் இருந்து 200 சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது. சேலத்தில் இருந்து சென்னை,கோவை, மதுரை, திருச்சி, திருப்பூர், ஈரோடு, புதுச்சேரி, பெங்களூர் உள்ளிட்ட ஊர்களுக்கு அதிகளவில் சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சிறப்பு பஸ் அக்டோபர் 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரைஇயக்கப்படும். அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×