search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "special bus"

    • பயணிகள் வசதிக்காக சென்னை கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி ஆகிய 3 இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.
    • பயணிகள் சிரமம் இல்லாமல் சொந்த ஊருக்கு செல்ல தென்னக ரெயில்வேயும் சிறப்பு ரெயில்களை இயக்கியது.

    சென்னை:

    ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் இன்றும், நாளையும் வழக்கமான வார விடுமுறை என்பதால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.

    இதனால் ஆயுத பூஜையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்கு சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் செல்வதற்கு பஸ், ரெயில்களில் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தனர்.

    பயணிகளின் வசதிக்காக தமிழக அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. வழக்கமாக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சுமார் 2,100 பஸ்கள் இயக்கப்படும். பயணிகள் முன்பதிவு அதிகரித்ததால் கூடுதலாக 2,265 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதுபோல மற்ற ஊர்களில் இருந்து 1,700 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த பஸ்களில் பயணம் செய்வதற்காக நேற்று மக்கள் பஸ் நிலையங்களுக்கு படை எடுத்தனர். சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் நேற்று மதியத்தில் இருந்து மக்கள் கூட்டம் அலைமோதியது.

    மாலை 6 மணிக்கு பிறகு பயணிகள் அலை அலையாக வரத் தொடங்கினார்கள். இதனால் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் நிரம்பி வழிந்தது.

    பயணிகள் வசதிக்காக சென்னை கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி ஆகிய 3 இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த 3 பஸ் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக கோயம்பேட்டில் திரண்ட மக்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாத அளவுக்கு திணறல் ஏற்பட்டது.

    முன்பதிவு செய்திருந்தவர்கள் தங்களது பஸ் எங்கு நிற்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் திணறினார்கள். நள்ளிரவு வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதற்கு வசதியாக மெட்ரோ ரெயில்களும் கூடுதலாக விடப்பட்டு இருந்தது.

    பயணிகள் சிரமம் இல்லாமல் சொந்த ஊருக்கு செல்ல தென்னக ரெயில்வேயும் சிறப்பு ரெயில்களை இயக்கியது. வடமாநிலங்களுக்கு அதிகளவு சிறப்பு ரெயில்கள் விடப்பட்டன. இதனால் சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    தொடர் விடுமுறை காரணமாக சொந்த வாகனங்களில் தங்களது ஊர்களுக்கு புறப்பட்டு செல்பவர்களின் எண்ணிக்கையும் நேற்று அதிகமாக இருந்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து கடும் நெரிசலுடன் காணப்பட்டது.

    நேற்று மட்டும் ரெயில்கள் மூலம் சுமார் 1.5 லட்சம் பயணிகள் வெளியூர்களுக்கு சென்றனர். ஆம்னி பஸ்களிலும் சுமார் 1.5 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். சிறப்பு பஸ்கள் மூலம் சுமார் 1 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

    சொந்த வாகனங்கள் மூலமாக சென்றவர்கள் எண்ணிக்கையும் 1 லட்சம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று மட்டும் 5 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றிருக்கிறார்கள்.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக பஸ், ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று சொந்த ஊர்களுக்கு செல்ல இயலாதவர்கள் இன்று காலை முதல் பஸ்களில் புறப்பட்டு சென்றனர்.

    இதனால் இன்றும் சென்னையில் கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி பஸ் நிலையங்களில் அதிக கூட்டம் காணப்பட்டது.

    • தலைமை செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் செயலாளர், அனைத்து போக்குவரத்து கழக நிர்வாக துறை இயக்குனர்கள் கலந்து கொள்கிறார்கள்.
    • சென்னையில் 5 பஸ் நிலையங்களில் இருந்து எந்தெந்த தேதியில் சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்து முடிவு செய்யப்படுகிறது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்ல வசதியாக தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இந்த வருடம் பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பயணம் மேற்கொள்ள வசதியாக சிறப்பு பஸ்கள் விடுவது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

    தலைமை செயலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் செயலாளர், அனைத்து போக்குவரத்து கழக நிர்வாக துறை இயக்குனர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    சென்னையில் 5 பஸ் நிலையங்களில் இருந்து எந்தெந்த தேதியில் சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்து முடிவு செய்யப்படுகிறது. பொது போக்குவரத்து அதிகரித்து வருவதால் கடந்த ஆண்டை விட கூடுதலாக பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    • தொடர் விடுமுறை காரணமாக பஸ், ரெயில்களில் ஒரு வாரத்திற்கு இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன.
    • தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்கள் மட்டுமின்றி கோவை, கேரளா மார்க்கமாக செல்லும் அனைத்து ரெயில்களும் நிரம்பி விட்டன.

    சென்னை:

    ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை நாட்கள் சனி, ஞாயிறு விடுமுறையுடன் சேர்ந்து வருவதால் 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதால் வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால் சிறப்பு பஸ்கள் இயக்குவதாக அரசு அறிவித்துள்ளது.

    சென்னையில் இருந்து வருகிற 20, 21 மற்றும் 22-ந்தேதி ஆகிய நாட்களில் 2,265 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ் பஸ் நிறுத்தம், பூந்தமல்லி பைபாஸ் ஆகிய 3 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு நடந்து வருகிறது.

    சென்னையில் இருந்து தினமும் 2,100 பஸ்கள் வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன. 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கூடுதலாக 1000 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    தொடர் விடுமுறை காரணமாக பஸ், ரெயில்களில் ஒரு வாரத்திற்கு இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன. 20-ந் தேதியில் இருந்து அடுத்த வாரம் 27-ந்தேதி வரை ரெயில்களில் எல்லா வகுப்புகளும் நிரம்பி விட்டன.

    தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்கள் மட்டுமின்றி கோவை, கேரளா மார்க்கமாக செல்லும் அனைத்து ரெயில்களும் நிரம்பி விட்டன.

    இதே போல வடமாநிலங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்களும் நிரம்பி செல்கின்றன. இடங்கள் நிரம்பி காத்திருப்போர் பட்டியல் அதிகரித்துள்ளது.

    இதுபோல அரசு விரைவு பஸ்களிலும் அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன. குறிப்பாக 20, 21 மற்றும் 24-ந்தேதிகளில் இடங்கள் இல்லை. பிற போக்குவரத்து கழக பஸ்களிலும் விறுவிறுப்புடன் முன்பதிவு நடைபெறுகிறது. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    20-ந்தேதி பயணம் செய்ய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரூ.29 ஆயிரம் பேர் முன் பதிவு செய்துள்ளனர்.

    சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களுக்கு வசதியாக தேவையான அளவு பஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ளோம். தமிழகம் முழுவதும் 2,500 அரசு பஸ்களில் தற்போது முன்பதிவு நடைபெற்று வருகிறது. தீபாவளி பண்டிகையை போல ஆயுத பூஜை தொடர் விடுமுறையால் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆம்னி பஸ்களில் வழக்கம் போல பயணிகளின் தேவையை பொறுத்து கட்டணத்தை உயர்த்தி விட்டனர். ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    ஏ.சி. வசதி இல்லாத இருக்கைகளுக்கு ரூ.1,500 வரை வசூலிக்கப்படுகிறது. ஏ.சி.வசதியுடன் இருக்கையாக இருந்தால் ரூ.2ஆயிரம் வரையிலும், படுக்கையாக இருந்தால் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரையிலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    சென்னையில் இருந்து 20, 21, 22 மற்றும் வெளியூர்களுக்கு சென்னை திரும்ப 24, 25-ந்தேதிகளில் பயணம் செய்ய பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன.

    • குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் திருவிழா வாகும்.
    • மனுவைபெற்றுக் கொண்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சம்ப ந்தப்பட்ட போக்கு வரத்துதுறை அதிகாரி களிடம் கலந்து சிறப்பு அரசு பஸ்கள் இயக்கபடும் என்று கூறினார்.

    உடன்குடி:

    உடன்குடி கிழக்குஒன்றிய தி.மு.க. செயலாளர் இளங்கோ, உடன்குடி பேரூ ராட்சி கவுன்சிலர் அஸ்ஸாப், செட்டியாபத்து ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் மற்றும் தி.மு.க. வினர், தமிழக மீன்வளம், மீனவர்நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணனை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் திருவிழா வாகும். உலக நாடுகளில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் கோவி லுக்கு வந்து செல்வார்கள். பக்தர்களின் வசதிக்காக திருவிழாவில் முக்கிய நாட்களான வருகிற 22, 23,24.25 ஆகிய தேதிகளிலும், பக்தர்கள் திரும்பிச் செல்வ தற்கு வசதியாக 26, 27, 28 ஆகிய நாட்களில் மொத்தம் 7 நாட்கள் தமிழகத்தில் முக்கிய ஊர்களான சென்னை, கோவையில் இருந்து திருச்செந்தூர் மற்றும் உடன்குடி பகுதிக்கு சிறப்பு அரசு பஸ்களை மதுரை, தூத்துக்குடி, நெல்லை வழியாக இயக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

    மனுவைபெற்றுக் கொண்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சம்ப ந்தப்பட்ட போக்கு வரத்துதுறை அதிகாரி களிடம் கலந்து சிறப்பு அரசு பஸ்கள் இயக்கபடும் என்று கூறினார்.

    • 90 சிறப்பு பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
    • கூட்ட நெரிசலுக்கு ஏற்ப நாள் முழுதும் பஸ் இயக்கப்படும்.

    திருப்பூர்

    ஞாயிற்றுக்கிழமை மற்றும் விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையை முன்னிட்டு திருப்பூரில் இருந்து 90 சிறப்பு பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

    நாளை முகூர்த்த தினம், 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி அரசு விடுமுறை என்பதால், வெளியூர் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும். பயணிகள் வசதிக்காக திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சேலம், திருவண்ணாமலைக்கு 20 பஸ்கள்,கோவில்வழி பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, தேனி, நாகர்கோவில், திருநெல்வேலி, திருச்செந்தூர் மற்றும் செங்கோட்டைக்கு 50 பஸ்கள், திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து, தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், திருவாரூர், நாகை, வேளாங்கன்னி உள்ளிட்ட பகுதிகளுக்கு 20 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 90 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    இது குறித்து திருப்பூர் போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கூட்ட நெரிசலுக்கு ஏற்ப நாள் முழுதும் பஸ் இயக்கப்படும். வெளியூர் சென்றவர் திரும்ப ஏதுவாக திங்கள்கிழமை இரவு சிறப்பு பஸ் இயங்கும்.

    அனைவருக்கும் ஒரே நேரத்தில் பயணிக்க திட்டமிடாமல், முன்கூட்டியே பஸ் நிலையத்திற்கு வந்து, பஸ்களின் தங்களுக்கான இருக்கையை உறுதி செய்து கொள்வது நல்லது.

    சிறப்பு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால், பயணிகள் புகார் தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர். 

    20-ந் தேதி மற்றும் 21-ந் தேதி ஆகிய நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    கோவை,

    அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை மண்டலத்தின் சார்பில் வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த நாட்களான நாளை(சனிக்கிழமை), 20-ந் தேதி மற்றும் 21-ந் தேதி ஆகிய நாட்களில் பொதுமக்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்று வர சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    கோவை மற்றும் சுற்றுப்புற ஊர்களிலிருந்து மதுரை, தேனி, திருச்சி, சேலம், ஊட்டி போன்ற ஊர்களுக்கு செல்லவும் மற்றும் சென்று மீண்டும் ஊர் திரும்பவும் ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித்தடப் பஸ்களுடன் கூடுதலாக 60 சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. எனவே பொதுமக்கள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு 18-ந்தேதி (இன்று) கூடுதலாக 500 சிறப்பு பஸ்களும், 19-ந்தேதி (நாளை) 350 பஸ்களும் இயக்கப்படும்.
    • சிறப்பு பஸ் இயக்கப்படுவதை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    சென்னை:

    தொடர் விடுமுறை நாட்கள், பொது விழாக்கள், கூபமுகூர்த்த நாட்களில் சென்னையில் இருந்தும், பிற இடங்களில் இருந்தும் பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் விரைவு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    வரும் 20-ந்தேதி மற்றும் 21-ந்தேதி ஆகிய தொடர் வளர்பிறை முகூர்த்த நாட்களை முன்னிட்டு, 18-ந்தேதி (இன்று) 19-ந்தேதி (நாளை) ஆகிய நாட்களில் சென்னையில் இருந்தும், பிற இடங்களில் இருந்தும், கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு 18-ந்தேதி (இன்று) கூடுதலாக 500 சிறப்பு பஸ்களும், 19-ந்தேதி (நாளை) 350 பஸ்களும் இயக்கப்படும்.

    மேலும் பல்வேறு இடங்களில் இருந்து அதாவது கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கும் 400 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 1,250 பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதுமட்டுமின்றி, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டு உள்ளது. சிறப்பு பஸ் இயக்கப்படுவதை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    மேலும், அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக பஸ்களில் ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் ஒரே தடத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு சிறப்பு சலுகையாக, அடுத்து வரும் தொடர் பயணங்களுக்கு அதாவது 6-வது பயணம் முதல் 50 சதவீத கட்டணச்சலுகை அளிக்கப்படுகிறது.

    இதன்படி இத்திட்டத்தின் மூலம் மே 8-ந்தேதி முதல் ஆகஸ்டு 15-ந்தேதி வரை 1,682 பயணிகளுக்கு இச்சலுகை வழங்கப்பட்டு உள்ளது. மேற்கூறிய சலுகையை பெற பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
    • சென்னைக்கு 75 சிறப்பு பேருந்துகள் பயணிகளின் தேவைக்கேற்ப இயக்கம் செய்யப்படுகிறது.

    மதுரை

    தமிழ்நாடு அரசு போக்கு–வரத்துக் கழகத்தின் மதுரை மேலாண் இயக்குநர் ஆறுமு–கம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா–வது:-

    வார இறுதி நாட்கள் மற்றும் சுதந்திர தினவிழா தொடர் விடுமுறை வரு–வதை முன்னிட்டு வருகிற 11.8.2023 முதல் 15.8.2023 வரை திருச்சி, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் பல் வேவறு பகுதிகளுக்கு 200 பேருந்துகளும்,

    சென்னையில் இருந்து 11 மற்றும் 12-ந்தேதிகளில் மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட் டங்களுக்கு 85 பேருந்துகளும், வார விடுமுறை மற்றும் சுதந்திர தினவிழா முடிந்து 15.8.2023 அன்று ஊர் திரும்ப ஏதுவாக மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட் டங்களிலிருந்து சென் னைக்கு 75 சிறப்பு பேருந்து–கள் பயணிகளின் தேவைக் கேற்ப இயக்கம் செய்யப்ப–டுகிறது.

    மேலும் 16.8.2023 அன்று ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டும் மதுரை கோட்ட இயக்க பகுதிகளிலி–ருந்து தாணிப்பாறை சுந்தர மகாலிங்கம் கோவில், இருக் கன்குடி மாரியம்மன் கோவில், மாசாணியம்மன் கோவில், ராமேசுவரம் கோவில் மற்றும் பிற பகு–திகளுக்கு பயணிகளின் தேவைக்கேற்றார்போல் சிறப்பு பேருந்துகள் இயக்கப் பட உள்ளது.

    பயணிகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வதற்கு ஏதுவாகவும், பயணிகளுக்கு வழிகாட்டவும், சிறப்பு பேருந்துகளை கண்காணிக்க–வும், முக்கிய பேருந்து நிலை–யங்களில் அலுவலர்கள், பொறியாளர்கள், கண்கா–ணிப்பாளர்கள், பணியா–ளர்கள் மற்றும் பயணசீட்டு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • ரெயில்கள், பஸ்கள் அனைத்தும் நிரம்பி வழிவதால் கோடை விடுமுறை முடிந்து சொந்த ஊர் செல்ல வழியின்றி பொதுமக்கள் பலர் தவித்து வருகின்றனர்.
    • இந்நிலையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வருகிற 7-ந்தேதி திறக்கப்பட உள்ளது. இதனால் பஸ்கள், ரெயில்களில் முன்பதிவுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    கோடை விடுமுறை

    ரெயில்கள், பஸ்கள் அனைத்தும் நிரம்பி வழிவதால் கோடை விடு முறை முடிந்து சொந்த ஊர் செல்ல வழியின்றி பொதுமக்கள் பலர் தவித்து வருகின்றனர். இந்நிலையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நெல்லை மேலாண்மை இயக்குனர் மோகன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சொந்த ஊர்

    கோடை விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்ப வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நெல்லை மண்டலம் சார்பில் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில் பட்டி, நாகர்கோவில், மார்த்தாண்டம் ஆகிய ஊர்களில் இருந்து சென்னைக்கு 60 சிறப்பு பஸ்களும், கோவைக்கு 60 சிறப்பு பஸ்களும், திருப்பூருக்கு 30 சிறப்பு பஸ்களும், மதுரைக்கு 100 சிறப்பு பஸ்களும் என 250 சிறப்பு பஸ்கள் இன்றும், நாளை யும் இயக்கப்படுகிறது.

    முக்கிய பஸ் நிலையங்களில் இருந்து பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு தேவைப்படும் ஊர்களுக்கு சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளவும், சீரான பஸ்கள் இயக்கத்தை உறுதி செய்யவும், சிறப்பு அலுவலர்கள் பணிய மர்த்தப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் தங்கள் போக்குவரத்து பயன்பாட்டிற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கோடை விடுமுறை ஒரு புறமும் அரசு ஊழியர்களுக்கு மே தினத்தையொட்டி (திங்கட்கிழமை) நாளை முதல் 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது.
    • ஆம்னி பஸ்களில் ரூ.2 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.4 ஆயிரம் என கட்டணம் நிர்ணயித்து வசூலிக்கிறார்கள்.

    சென்னை:

    அரசு பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை நாளை முதல் விடப்பட்டு உள்ளது. ஏற்கனவே தனியார் பள்ளி மாணவர்கள் ஆண்டு இறுதி தேர்வை முடித்துவிட்டு கோடை விடுமுறையில் உள்ளனர்.

    அரசு பொதுத் தேர்வை எழுதிய மாணவர்களும் தேர்வு முடிவுக்காக காத்து இருக்கின்ற நிலையில் வெளியூர்களுக்கு பயணத்தை தொடங்கிள்ளனர்.

    கோடை விடுமுறை ஒரு புறமும் அரசு ஊழியர்களுக்கு மே தினத்தையொட்டி (திங்கட்கிழமை) நாளை முதல் 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது. அதனால் வெளியூர் பயணம் செய்ய மக்கள் பஸ், ரெயில்களில் முன்பதிவு செய்துள்ளனர்.

    அனைத்து ரெயில்களும் நிரம்பிவிட்டதால் ஆம்னி பஸ்களில் கொள்ளை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆம்னி பஸ்களில் ரூ.2 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.4 ஆயிரம் என கட்டணம் நிர்ணயித்து வசூலிக்கிறார்கள்.

    இதனால் அரசு பஸ்களை நாடி பலரும் வருகிறார்கள். அரசு விரைவு பஸ்கள் மற்றும் பிற போக்குவரத்து அரசு பேருந்துகள் இந்த 4 நாட்களும் நிரம்பிவிட்டன. இன்று முதல் மே 1-ந் தேதி வரை 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    சென்னையில் இருந்து மட்டும் 25 ஆயிரம் பேர் வெளியூருக்கு பயணம் செய்ய முன்பதிவு செய்து உள்ளனர். வெளியூர்களில் இருந்து சென்னை திரும்பவும் ஆயிரக்கணக்கானவர்கள் முன்பதிவு செய்து பயணத்தை மேற்கொள்கின்றனர்.

    இன்று முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து வழக்கமாக இயக்கப்படும். 2100 பஸ்களுடன் கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    மே தினத்தையொட்டி தொடர் அரசு விடுமுறை நாட்கள் வருவதால் அரசு பஸ்களில் முன்பதிவு பண்டிகை காலத்தில் இருப்பது போன்று பதிவாகி உள்ளது. 4 நாட்களுக்கு 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து உள்ளனர். பயணி கள் கூட்டம் இன்று மாலையில் இருந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதனால் 4 நாட்களுக்கும் கூடுதலாக தலா 500 பஸ்களை இயக்க திட்டமிட்டு உள்ளோம்.

    அரசு விரைவு போக்குவரத்து கழகம், விழுப்புரம், சேலம், கோவை, மதுரை, புதுவை ஆகிய போக்குவரத்து கழகங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கிறது. ஆம்னி பஸ்களை விட கட்டணம் பல மடங்கு குறைவாக இருப்பதால் தற்போது அரசு பஸ்களில் மக்கள் அதிகளவில் பயணம் செய்ய ஆர்வம் காட்டு கிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வருகிற 6, 13, 20 மற்றும் 27-ந்தேதிகளில் புதிய பஸ் நிலையத்திலிருந்து சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது.
    • சிறப்பு பஸ்களுக்கு ரூ.600 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கோடை விடுமுறையையொட்டி நவதிருப்பதி மற்றும் நவ கைலாய தலங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன்படி வருகிற மே மாதம் சனிக்கிழமை தோறும் நவதிருப்பதி, ஞாயிற்றுக்கிழமை தோறும் நவ கைலாய கோவில்களுக்கு செல்வதற்கு நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

    அதன்படி நவ திருப்பதி தலங்களான ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி, இரட்டை திருப்பதி, கருங்குளம், தென்திருப்பேரை, திருக்கோளூர் மற்றும் ஆழ்வார் திருநகரி உள்ளிட்ட இடங்களுக்கு பக்தர்கள் சென்று வருவதற்கு வருகிற 6, 13, 20 மற்றும் 27-ந்தேதிகளில் புதிய பஸ் நிலையத்திலிருந்து சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது. இதற்கு கட்டணமாக ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் நவகைலாய கோவில்களான பாபநாசம், சேரன்மகாதேவி, கோடக நல்லூர், முறப்பநாடு, குன்னத்தூர், ஸ்ரீவை குண்டம், தென்திருப்பேரை, சேர்ந்த பூமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருவதற்கு வருகிற 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ள பஸ்களுக்கு ரூ.600 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளதாகவும், இதனை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் போக்கு வரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சேலம் கோட்டத்தில் இருந்து பழனி, வடலூர், திருவண்ணாமலைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
    • சிறப்பு பஸ்கள் வருகிற 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை இயக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் சார்பில் பண்டிகை காலங்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி, வருகிற 5-ந் தேதி தைப்பூசம் மற்றும் பவுர்ணமி கொண்டாடப்படுகிறது.

    தைப்பூசம், பவுர்ணமியையொட்டி தமிழகம் முழுவதும் அனைத்து போக்குவரத்து கழக கோட்டங்களிலும் பழனி, திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    அதுபோல், சேலம் கோட்டத்தில் இருந்து பழனி, வடலூர், திருவண்ணாமலைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

    இந்த சிறப்பு பஸ்கள் வருகிற 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை இயக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், வருகிற 5-ந் தேதி தைப்பூசம், பவுர்ணமியை முன்னிட்டு சேலம் கோட்டத்தில் இருந்து பழனி, வடலூர், திருவண்ணாமலை, கபிலர்மலை, காளிப்பட்டிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இந்த சிறப்பு பஸ்கள் 4-ந் தேதி முதல் இயக்கப்படவுள்ளது என்றனர்.

    ×