search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Opening for School"

    • ரெயில்கள், பஸ்கள் அனைத்தும் நிரம்பி வழிவதால் கோடை விடுமுறை முடிந்து சொந்த ஊர் செல்ல வழியின்றி பொதுமக்கள் பலர் தவித்து வருகின்றனர்.
    • இந்நிலையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வருகிற 7-ந்தேதி திறக்கப்பட உள்ளது. இதனால் பஸ்கள், ரெயில்களில் முன்பதிவுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    கோடை விடுமுறை

    ரெயில்கள், பஸ்கள் அனைத்தும் நிரம்பி வழிவதால் கோடை விடு முறை முடிந்து சொந்த ஊர் செல்ல வழியின்றி பொதுமக்கள் பலர் தவித்து வருகின்றனர். இந்நிலையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நெல்லை மேலாண்மை இயக்குனர் மோகன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சொந்த ஊர்

    கோடை விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்ப வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நெல்லை மண்டலம் சார்பில் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில் பட்டி, நாகர்கோவில், மார்த்தாண்டம் ஆகிய ஊர்களில் இருந்து சென்னைக்கு 60 சிறப்பு பஸ்களும், கோவைக்கு 60 சிறப்பு பஸ்களும், திருப்பூருக்கு 30 சிறப்பு பஸ்களும், மதுரைக்கு 100 சிறப்பு பஸ்களும் என 250 சிறப்பு பஸ்கள் இன்றும், நாளை யும் இயக்கப்படுகிறது.

    முக்கிய பஸ் நிலையங்களில் இருந்து பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு தேவைப்படும் ஊர்களுக்கு சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளவும், சீரான பஸ்கள் இயக்கத்தை உறுதி செய்யவும், சிறப்பு அலுவலர்கள் பணிய மர்த்தப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் தங்கள் போக்குவரத்து பயன்பாட்டிற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×