search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோடை விடுமுறையையொட்டி நவகைலாய, நவதிருப்பதி தலங்களுக்கு சிறப்பு பஸ்கள் - நெல்லை போக்குவரத்து கழகம் ஏற்பாடு
    X

    கோடை விடுமுறையையொட்டி நவகைலாய, நவதிருப்பதி தலங்களுக்கு சிறப்பு பஸ்கள் - நெல்லை போக்குவரத்து கழகம் ஏற்பாடு

    • வருகிற 6, 13, 20 மற்றும் 27-ந்தேதிகளில் புதிய பஸ் நிலையத்திலிருந்து சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது.
    • சிறப்பு பஸ்களுக்கு ரூ.600 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கோடை விடுமுறையையொட்டி நவதிருப்பதி மற்றும் நவ கைலாய தலங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன்படி வருகிற மே மாதம் சனிக்கிழமை தோறும் நவதிருப்பதி, ஞாயிற்றுக்கிழமை தோறும் நவ கைலாய கோவில்களுக்கு செல்வதற்கு நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

    அதன்படி நவ திருப்பதி தலங்களான ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி, இரட்டை திருப்பதி, கருங்குளம், தென்திருப்பேரை, திருக்கோளூர் மற்றும் ஆழ்வார் திருநகரி உள்ளிட்ட இடங்களுக்கு பக்தர்கள் சென்று வருவதற்கு வருகிற 6, 13, 20 மற்றும் 27-ந்தேதிகளில் புதிய பஸ் நிலையத்திலிருந்து சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது. இதற்கு கட்டணமாக ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் நவகைலாய கோவில்களான பாபநாசம், சேரன்மகாதேவி, கோடக நல்லூர், முறப்பநாடு, குன்னத்தூர், ஸ்ரீவை குண்டம், தென்திருப்பேரை, சேர்ந்த பூமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருவதற்கு வருகிற 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ள பஸ்களுக்கு ரூ.600 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளதாகவும், இதனை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் போக்கு வரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×