search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "spain"

    லிபியா கடல் பகுதியில் தத்தளித்த அகதிகளை ஸ்பெயினை சேர்ந்த தொண்டு நிறுவனத்தினர் பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்தனர். #migrantboat
    மாட்ரிட்:

    மத்திய தரைக்கடல் வழியாக அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும் படகுகள், நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. சமீப காலமாக ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள மக்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 25 லட்சத்தை எட்டியுள்ளது.

    இதுதவிர, கடந்த ஆண்டில் மட்டும் இத்தாலி நாட்டுக்கு புகலிடம் தேடிச் செல்லும் வழியில் சுமார் ஐயாயிரம் பேர் காணாமல் போனதாகவும், கடலில் மூழ்கி இறந்துவிட்டதாகவும் தெரிகின்றது. இருப்பினும், உள்நாட்டில் பசி, பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள லிபியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் இன்றும் அடைக்கலம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக படையெடுத்தவாறு உள்ளனர். 

    லிபியா நாட்டின் கடற்பகுதி வழியாக சென்றால் கண்காணிப்பு அதிகமாக உள்ளதால் துனிசியா கடற்பகுதி வழியாக இவர்கள் பெரும்பாலும் இத்தாலியை நோக்கிச் செல்கின்றனர்

    இதற்கிடையே, ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் நோக்கத்தில் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த சுமார் 180 அகதிகள் சென்ற படகு கடந்த மாதம் 3-ம் தேதி துனிசியா கடற்பகுதியில் கவிழ்ந்த விபத்தில் 68 பேர் உயிரிழந்தனர். கடலில் மூழ்கி காணாமல் போன பலரை தேடும் பணி நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், இத்தாலி நாடு அனுமதி மறுத்ததால் லிபியா கடல் பகுதியில் 60க்கு மேற்பட்ட அகதிகள் சிக்கித் தவிப்பதாக தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, ஸ்பெயினை சேர்ந்த தொண்டு நிறுவனத்தினர் மீட்புக் கப்பலில் சென்று நடுக்கடலில் தத்தளித்த 60 அகதிகளை இன்று பத்திரமாக மீட்டனர்.

    அவர்களில் 5 குழந்தைகள்,  5 பெண்கள் , 50 ஆண்கள் உள்பட மொத்தம் 60 பேர் இருந்தனர். அவர்களுக்கு தேவையான முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன என மீட்பு பணி அதிகாரிகள் தெரிவித்தனர். #migrantboat
    உலக கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றில் ஸ்பெயினை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய ரஷிய வீரர்களுக்கு அதிபர் புதின் பாராட்டு தெரிவித்துள்ளார். #WorldCup2018 #SPARUS #SpainvRussia
    மாஸ்கோ:

    ரஷியாவில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின் மற்றும் ரஷியா அணிகள் மோதின. ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் செர்கய் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

    இதற்கு பதிலடியாக ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் ரஷியா வீரர் ஏரியம் டியுபா ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்தன.
      
    கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. ஆட்டத்தின் இடையே மழை பெய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



    இறுதியாக, பெனால்டி ஷூட் முறை நடத்தப்பட்டது. இதில் அபாரமாக செயல்பட்ட ரஷியா அணி 4-3 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது.

    இந்நிலையில், உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய ரஷிய வீரர்களுக்கு அதிபர் புதின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
     
    இதுதொடர்பாக ரஷிய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்காவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்பெயின் - ரஷியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற கால்பந்து போட்டியின் ஆரம்பம் முதல் முடிவு வரை அதிபர் புதின் கண்டுகளித்தார். சிறப்பாக விளையாடி நாட்டுக்கு பெருமை சேர்த்த வீரர்களுக்கு அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என கூறியுள்ளார். #WorldCup #SPARUS #SpainvRussia #Football #WorldCupRussia2018 #FifaWorldCup18 #FIFA
    உலக கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் டென்மார்க் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி குரோஷியா காலிறுதியில் நுழைந்தது. #WorldCup2018 #CRODEN #CroatiavDenmark
    உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் குரோஷியா - டென்மார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்தில் டென்மார்க் அணியின்  மதியாஸ் ஜோர்ஜென்சன் ஒரு கோல் அடித்து தனது அணிக்கு வலு சேர்த்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆட்டத்தின் 4வது நிமிடத்தில் குரோஷியா அணி வீரர் மரியோ மண்டூகிக் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனிலை அடைந்தது. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் குரோஷியா - டென்மார்க் அணிகள் 1-1 என சமனிலை வகித்தன.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

    கூடுதலாக வழங்கப்பட்ட முதல் 15 நிமிடங்களில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்காததால் மறுபடியும் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இறுதியில், கிடைத்த பெனால்டி வாய்ப்பை குரோஷியா அணி பயன்படுத்தவில்லை. அப்போதும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.



    இறுதியாக, பெனால்டி ஷூட் முறை நடத்தப்பட்டது. இதில் டென்மார்க் அடித்த முதல் வாய்ப்பை கோலை குரோஷியா கோல் கீப்பர் தடுத்தார். அடுத்து குரோஷியா அடித்த கோலையும் டென்மார்க் கோல் கீப்பர் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    தொடர்ந்து, இரண்டாவது வாய்ப்பை டென்மார்க் கோலாக மாற்றியது. இதனால் 1-0 என முன்னிலை வகித்தது. குரோஷியா இரண்டாவது வாய்ப்பை கோலாக் மாற்றியதால் 1-1 என சமநிலை அடைந்தது.

    டென்மார்க் மூன்றாவது வாய்ப்பை கோலாக மாற்றியதால் 2-1 என முன்னிலை பெற்றது. குரோஷியாவும் அடுத்த வாய்ப்பை கோலாக மாற்றியது. இதனால் இரு அணிகளும் 2-2 என சமநிலை பெற்றன.

    டென்மார்க் அணியின் 4வது வாய்ப்பை குரோஷிய அணி கோல் கீப்பர் அபாரமாக தடுத்தார்.  குரோஷியா அணியின் 4வது வாய்ப்பையும் கோல் கீப்பர் தடுத்ததால் சமநிலை நீடித்தது.

    டென்மார்க் அணியின் கடைசி வாய்ப்பை குரோஷியா கீப்பர் தடுத்து விட்டார். இதனால், குரோஷியா அணி தனது கடைசி வாய்ப்பை கோலாக மாற்றி 3-2 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது. #WorldCup #CRODEN #CroatiavDenmark #Football #WorldCupRussia2018 #FifaWorldCup18 #FIFA
    உலக கோப்பை கால்பந்து போட்டியில் நாக் அவுட் சுற்றில் ரஷியா அணி 4-3 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. #WorldCup2018 #SPARUS #SpainvRussia
    ரஷியாவில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், இன்று இரவு 7.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் ஸ்பெயின் மற்றும் ரஷியா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் அபாரமாக விளையாடினர். ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் செர்கய் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.



    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் ரஷியா வீரர் ஏரியம் டியுபா ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதிய்ல் இரு அணிகளும்  1-1 என சமநிலை வகித்தன.
     
    கூடுதலாக வழங்கப்பட்ட முதல் 15 நிமிடங்களில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்காததால் மறுபடியும் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அப்பொழுது மழை பெய்ததால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இறுதியாக, பெனால்டி ஷூட் முறை நடத்தப்பட்டது. முதலில் ஸ்பெயின் ஒரு கோல் அடித்தது.

    அதற்கு பதிலடியாக ரஷியாவும் ஒரு கோல் அடித்தது. மறுபடியும் ஸ்பெயின் ஒரு கோல் அடிக்க 2-1 என ஆனது. ரஷியா மறுபடியும் கோல் அடிக்க 2-2 என சமனானது.

    அடுத்த வாய்ப்பை ஸ்பெயின் அடித்த கோலை கோ கீப்பர் தடுத்தார். ரஷியா தனது அடுத்த வாய்ப்பை கோல் அடித்ததால் 2-3 என்ற கணக்கில் முன்னேறியது. ஸ்பெயின் ஒரு கோல் அடிக்க 3-3 என சமனானது.

    அடுத்து கோல் போட்டதால்  ரஷியா 3-4 என முன்னேறியது. இறுதியாக ஸ்பெயின் கோல் தடுக்கப்பட்டதால் 4-3 என்ற கணக்கில் ரஷியா வென்றது. #WorldCup #SPARUS #SpainvRussia #Football #WorldCupRussia2018 #FifaWorldCup18 #FIFA 
    உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் மற்றும் மொராக்கோ அணிகளுக்கு இடையிலான போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. #WorldCup2018 #SPAMOR
    உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்துள்ள ஸ்பெயின் மற்றும் மொராக்கோ அணிகள் மோதின.

    போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் முதல் பாதியில் 14-வது நிமிடத்தில் மொராக்கோ அணியின் காலித் பவுடாய் ஒரு கோல் அடித்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்பெயின் அணியின் இஸ்கோ 19-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால்
    ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன. 

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் 81-வது நிமிடத்தில் மொராக்கோ அணியின் யூசுப் என் நெய்ஸ்ரி ஒரு கோல் அடித்தார். இதனால் மொராக்கோ வெல்லும் என எதிர்பார்த்தனர்.

    ஆனால், கூடுதலாக வழங்கப்பட்ட நிமிடங்களில் முதலிலேயே, 91வது நிமிடத்தில் ஸ்பெயினின் லாகோ அஸ்பாஸ் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமனிலைக்கு கொண்டு வந்தார்.

    இறுதியில், ஸ்பெயின் மற்றும் மொராக்கோ அணிகளுக்கு இடையிலான போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
    இதனால் இரு அணிகளுக்கும் தலாஒரு புள்ளி கிடைத்தது. ஆனாலும், புள்ளிகள் அடிப்படையில் ஸ்பெயின் அணி அடுத்த சுற்றில் நுழைந்தது. அடுத்த சுற்றில் ரஷ்யா அணியுடன் மோதவுள்ளது.
    நட்சத்திர வீரரான கிறிஸ்டியனோ ரொனால்டோ போர்ச்சுக்கல் அணிக்காக 6-வது முறையாக ஹாட்ரிக் கோல் அடித்து உள்ளார். #WorldCupRussia2018 #WorldCup2018 #Ronaldo
    சோச்சி:

    உலக கோப்பை கால் பந்து போட்டியில் இந்திய நேரப்படி நேற்று இரவு 11.30 மணிக்கு சோச்சி நகரில் நடந்த ஆட்டத்தில் ஸ்பெயின்-போர்ச்சுக்கல் அணிகள் மோதின.

    சம பலம் வாய்ந்த இரு அணிகள் மோதிய ஆட்டம் என்பதாலும், போர்ச்சுக்கல் கேப்டன் ரொனால்டோ மீது அதிக எதிர்பார்ப்பு இருந்ததாலும் போட்டி விறுவிறுப்பாக இருந்தது என்று எதிர்பார்க்கப்பட்டது.

    அதற்கு ஏற்றாற் போலவே ஆட்டத்தின் ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பாக இருந்தது.

    இந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ஹாட்ரிக் கோல் அடித்து அசத்திய ரொனால்டோவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

    நட்சத்திர வீரரான கிறிஸ்டியனோ ரொனால்டோ போர்ச்சுக்கல் அணிக்காக 6-வது முறையாக ஹாட்ரிக் கோல் அடித்து உள்ளார்.



    மேலும் நான்கு உலக கோப்பை போட்டிகளில் கோல் அடித்த 4-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    பீலே (பிரேசில்), சீலர், குளோஸ் (ஜெர்மனி) ஆகியோர் நான்கு உலக கோப்பை போட்டிகளில் கோல் அடித்துள்ளனர். #WorldCupRussia2018 #WorldCup2018 #Ronaldo
    உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ‘பி’ பிரிவில் இன்று நடைபெற்ற போர்த்துகல், ஸ்பெயின் இடையேயான லீக் போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. #FIFA2018 #WolrdCup2018 #PORESP

    சோச்சி:

    உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ரஷியா 5-0 என சவுதி அரேபியாக துவம்சம் செய்தது. நேற்று மூன்று ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் உருகுவே, எகிப்தையும், இரண்டாவது ஆட்டத்தில் ஈரான், மொராக்கோவையும் வீழ்த்தின.



    மூன்றாவது ஆட்டம் இந்திய நேரப்படி நேற்று இரவு 11.30 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ள போர்த்துகல் - ஸ்பெயின் அணிகள் மோதின. 

    ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்தில் போர்த்துகல் அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதில் அந்த அணியின் கேப்டனும்,  நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்தார். இதனால் மூன்றாவது நிமிடத்திலேயே போர்த்துகல் அணி 1-0 என முன்னிலை பெற்றது. 



    அதைத்தொடர்ந்து 24-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் தியாகோ கோஸ்டா சிறப்பான முறையில் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது. அதன்பின் 44-வது நிமிடத்தில் போர்த்துகல் அணியின் ரொனால்டோ மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்ட முடிவில் போர்த்துகல் அணி 2-1 என முன்னிலையில் இருந்தது.



    தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதிநேர ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் தியாகோ கோஸ்டா இரண்டாவது கோல் அடித்தார். 58-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் நாச்சோ ஒரு கோல் அடித்தார். இது ஸ்பெயின் அணிக்காக அவர் அடிக்கும் முதல் கோலாகும். இதனால் ஸ்பெயின் அணி 3-2 என முன்னிலை பெற்றது.



    அதன்பின் ஆட்டம் முடிய 2 நிமிடமே இருக்கும் நிலையில், கிடைத்த பிரீ-கிக் வாய்ப்பை ரொனால்டோ சரியாக பயன்படுத்தி கொண்டு கொல் அடித்தார். இது அவரது ஹாட்ரிக் கோல் ஆகும். இதனால் ஆட்டம் மீண்டும் 3-3 என சமனானது. அதைத்தொடர்ந்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் எந்த கோலும் அடிக்கப்படாததால் இந்த போட்டி 3-3 என சமனில் முடிந்தது. இதனால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.



    நாளை நடைபெறும் லீக் போட்டிகளில் பிரான்ஸ் - ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா - ஐஸ்லாந்து, பெரு - டென்மார்க், குரோசியா - நைஜீரியா அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #FIFA2018 #WolrdCup2018 #PORESP
    ரஷியா உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடக்கவிருக்கும் ஆட்டங்கள் குறித்த விவரத்தை காண்போம். #FIFO2018
    சோச்சி:

    21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி நேற்று ரஷியாவில் கோலாகலமாக தொடங்கியது. பிரமாண்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இங்கிலாந்து பாப் பாடகர் ராப்பி வில்லியம்ஸ், ரஷிய பாடகி எய்டா பாரிபுலினா நிகழ்ச்சிகள் கவர்ந்தது.

    32 நாடுகள் பங்கேற்றுள்ள இப்போட்டியில் தொடக்க நாளாக நேற்று ஒரே ஒரு ஆட்டம் நடந்தது. ரஷியா - சவுதி அரேபியா அணிகள் மோதின.

    இதில் ரஷியா 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று மூன்று ஆட்டங்கள் நடக்கிறது. இதில் இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு ஸ்பெயின் - போர்ச்சுக்கல் (பிபிலா) அணிகள் மோதும் ஆட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நட்சத்தி வீரரும் கேப்டனுமான ரொனால்டோவை போர்ச்சுக்கல் அணி அதிகம் நம்பி இருக்கிறது. மேலும் அந்த அணியில் புருனே ஆல்வ்ஸ், பெபே, ரபெல் குயரிரோ போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் பலம் வாய்ந்ததாக இருக்கிறது. கேப்டன் செர்ஜியோ ரமோஸ், இனியஸ்டா சில்வா, பியூ, ஜோர்டி அல்பா ஆகிய நட்சத்திர வீரர்கள் இடம் பெற்று உள்ளனர்.

    இதனால் ஸ்பெயினின் அதிரடியை போர்ச்சுக்கல் சமாளிக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ரொனால்டோ தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியம்.

    முன்னதாக மாலை 5.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் உருகுவே - எகிப்து (ஏ) அணிகள் மோதுகின்றன. உருகுவே அணியில் லூயிஸ் சுவாரஸ், கலாஸ் ஆகியோர் பக்கபலமாக உள்ளனர்.

    எகிப்து அணி முன்னணி வீரரான முகமது சலாவை நம்பி இருக்கிறது. இரவு 8.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் மொராசகோ - ஈரான் (பி) மோதுகின்றன. #FIFO2018
    ஸ்பெயின் பாராளுமன்றத்தில் மரியானா ரஜாய் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்ததை அடுத்து, பெட்ரோ சான்செஸ் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். #SpainPM #PedroSanchez

    மாட்ரிட்:

    ஸ்பெயின் நாட்டின் பிரதமராக மரியானா ரஜாய் பதவி வகித்து வந்தார். சமீபத்தில் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக இவரது கட்சி பிரமுகர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவருக்கு சுமார் 33 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது.

    இதையடுத்து, பிரதமர் ஊழலை தடுக்க முடியவில்லை என்பதால் அவர் பதவி விலக வேண்டும் என அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதுதொடர்பாக ஸ்பெயின் பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில், ரஜாய் பதவி விலக வேண்டும் எனவும், ரஜாய் பிரதமராக இருப்பது மக்களுக்கு மட்டுமன்றி அவரது கட்சிக்குமே சுமையாக இருப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சான்செஸ் கூறினார்.



    இதனிடையே, ரஜாய் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மரியானா ரஜாய் தோல்வியடைந்தார். இதனால் ரஜாய் பதவி விலகினார்.

    இதனை அடுத்து, பெட்ரோ சான்செஸ் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். அவருக்கு ஆதரவாக 180 பேரும், எதிராக 169 பேரும் வாக்களித்தனர். பெட்ரோ சான்செஸ் கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, சான்செஸ் பிரதமாராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
     #SpainPM #PedroSanchez
    ஸ்பெயின் பாராளுமன்றத்தில் பிரதமர் மரியானா ரஜாய் மீது எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளதை அடுத்து, இன்று அதன்மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. #Spain #MarianoRajoy
    மாட்ரிட்:

    ஸ்பெயின் நாட்டின் பிரதமராக மரியானா ரஜாய் பதவி வகிக்கிறார். சமீபத்தில் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக இவரது கட்சி பிரமுகர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவருக்கு சுமார் 33 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது.

    இதையடுத்து, பிரதமர் ஊழலை தடுக்க முடியவில்லை என்பதால் அவர் பதவி விலக வேண்டும் என அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதுதொடர்பாக ஸ்பெயின் பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில், ரஜாய் பதவி விலக வேண்டும் எனவும், ரஜாய் பிரதமராக இருப்பது மக்களுக்கு மட்டுமன்றி அவரது கட்சிக்குமே சுமையாக இருப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சான்செஸ் கூறினார்.

    இதனை அடுத்து, ரஜாய் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ளது.

    பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 176 வாக்குகள் தேவைப்படும் நிலையில், ரஜாய் மற்றும் அவரது கூட்டணி கட்சி வாக்குகளின் எண்ணிக்கை 169 மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #noconfidencevote #Spain #MarianoRajoy
    21-வது உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் ஸ்பெயின், குரோஷிய அணி வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. #WorldCupSquads2018
    ஜாக்ரெப்:

    21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் அடுத்த மாதம் (ஜூன்) 14-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான 24 பேர் கொண்ட குரோஷிய அணியை பயிற்சியாளர் ஜட்கோ டாலிச் நேற்று அறிவித்தார். லூக்கா மோட்ரிச், இவான் ராகிடிச், மரியோ மான்ட்ஜூகிச், இவான் பெரிசிச் போன்ற முன்னணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    இதே போல் ஸ்பெயின் அணி வீரர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நட்சத்திர வீரர்கள் இனியஸ்டா, டேவிட் சில்வா, செர்ஜியோ ரமோஸ், ஜோர்டி ஆல்பா, ஜெரார்டு பிக்யூ உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர். அதே சமயம் தகுதி சுற்றில் விளையாடிய ஆல்வரோ மோரட்டா மற்றும் மார்கஸ் அலோன்சோ நீக்கப்பட்டுள்ளனர். முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் அணி, போர்ச்சுகல், மொராக்கோ, ஈரான் ஆகிய அணிகளுடன் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.

    இதற்கிடையே உலககோப்பை போட்டிக்கான பெல்ஜியம் அணியில் இடம் கிடைக்காத விரக்தியில் அந்த அணியின் நடுகள வீரர் 30 வயதான ராட்ஜா நையிங்கோலன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.  #WorldCupSquads2018
    ×