search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக கோப்பை கால்பந்து காலிறுதிக்குள் நுழைந்த ரஷியா அணிக்கு அதிபர் புதின் பாராட்டு
    X

    உலக கோப்பை கால்பந்து காலிறுதிக்குள் நுழைந்த ரஷியா அணிக்கு அதிபர் புதின் பாராட்டு

    உலக கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றில் ஸ்பெயினை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய ரஷிய வீரர்களுக்கு அதிபர் புதின் பாராட்டு தெரிவித்துள்ளார். #WorldCup2018 #SPARUS #SpainvRussia
    மாஸ்கோ:

    ரஷியாவில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின் மற்றும் ரஷியா அணிகள் மோதின. ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் செர்கய் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

    இதற்கு பதிலடியாக ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் ரஷியா வீரர் ஏரியம் டியுபா ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்தன.
      
    கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. ஆட்டத்தின் இடையே மழை பெய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



    இறுதியாக, பெனால்டி ஷூட் முறை நடத்தப்பட்டது. இதில் அபாரமாக செயல்பட்ட ரஷியா அணி 4-3 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது.

    இந்நிலையில், உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய ரஷிய வீரர்களுக்கு அதிபர் புதின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
     
    இதுதொடர்பாக ரஷிய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்காவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்பெயின் - ரஷியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற கால்பந்து போட்டியின் ஆரம்பம் முதல் முடிவு வரை அதிபர் புதின் கண்டுகளித்தார். சிறப்பாக விளையாடி நாட்டுக்கு பெருமை சேர்த்த வீரர்களுக்கு அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என கூறியுள்ளார். #WorldCup #SPARUS #SpainvRussia #Football #WorldCupRussia2018 #FifaWorldCup18 #FIFA
    Next Story
    ×