search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "South Korea"

    தென்கொரியாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வை சரிசெய்யாத காரணத்தால் நிதி மந்திரி மற்றும் நிதி கொள்கை செயலாளர் ஆகியோரை அதிபர் மூன் ஜே பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். #SouthKorea #MoonJae
    சியோல்:

    கொரிய தீபகற்பத்தில் வடகொரியாவின் செல்வாக்கு நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. இதனால் தென் கொரியாவின் செல்வாக்கு சரிந்து வரும் நிலையில் உள்ளது.

    இதையடுத்து, தென் கொரியாவின் பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. அந்நாடு பொருளாதார ஏற்றத்தாழ்வை சந்தித்து வருகிறது.



    இந்நிலையில், பொருளாதார ஏற்றத்தாழ்வு நிலையை சரிசெய்யாத காரணத்தால் தென் கொரியா நிதி மந்திரி கிம் டாங் யென் மற்றும் நிதி கொள்கை செயலாளர் ஜங் ஹா சங் ஆகியோரை அதிபர் மூன் ஜே பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் என அதிபரின் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #SouthKorea #MoonJae
    அயோத்தி நகரில் ராமர் பெயரில் விமான நிலையமும் தசரத மன்னர் பெயரில் மருத்துவ கல்லூரியும் அமைக்கப்படும் என உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் தெரிவித்துள்ளார். #YogiAdityanath
    லக்னோ:

    கொரியா நாட்டு மன்னரை மணந்த அயோத்தி இளவரசிக்கு உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அயோத்தி நகரில் அமைக்கப்பட்டுள்ள நினைவகத்தை தென்கொரியா அதிபரின் மனைவி கிம் ஜங்-சூக் மற்றும் உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் இன்று திறந்து வைத்தனர்.

    இந்த திறப்பு விழாவின்போது உரையாற்றிய யோகி ஆதித்யாநாத், அயோத்தி நகரம் அமைந்துள்ள ஃபைஸாபாத்  மாவட்டத்துக்கு அயோத்தி மாவட்டம் என பெயர் சூட்டப்படும் என அறிவித்தார்.

    அயோத்திக்கு யாராலும் அநீதி இழைக்க முடியாது. நமது பெருமை, கவுரவம், பெருமிதம் ஆகியவற்றின் அடையாளமாக திகழும் அயோத்தியில் ராமர் பெயரில் விமான நிலையமும் தசரத மன்னர் பெயரில் மருத்துவ கல்லூரியும் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். #Ayodhyamedicalcollege #KingDasharatha #KingDasharathamedicalcollege #YogiAdityanath
    கொரியா நாட்டு மன்னரை மணந்த அயோத்தி இளவரசிக்கு உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அயோத்தி நகரில் அமைக்கப்பட்டுள்ள நினைவகத்தை தென்கொரியா அதிபரின் மனைவி இன்று திறந்து வைத்தார். #YogiAdityanath #KimJungSook
    லக்னோ:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை மூன்று நாட்கள் தீபஉற்சவம் நடைபெறுகிறது.

    இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்து சேர்ந்த கிம் ஜங்-சூக் நேற்று பிரதமர் நரேந்திர மோடிம் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

    நேற்றிரவு உத்தரப்பிரதேசம் மாநில தலைநகரான லக்னோ வந்து சேர்ந்த அவருக்கு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இரவு விருந்து அளித்து உபசரித்தார்.

    அயோத்தி இளவரசியான சூரிரத்னா கி.பி. 48-ம் ஆண்டுவாக்கில் தென் கொரியாவுக்கு சென்று அங்குள்ள ஒரு சமஸ்தானத்தின் மன்னரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் ஹர் ஹூவாங்-ஓக் என அயோத்தி இளவரசி அழைக்கப்பட்டார். வரலாற்று குறிப்புகளில் அவரது பெயர் ஹூ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த வரலாறை நினைவுகூரும் வகையில் கொரியா அரசின் ஒத்துழைப்புடன் உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தி நகரில் ஹூ-வின் பெயரால் சுமார் 10 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவில் சரயு நதிக்கரை ஓரத்தில் உள்ள பூங்காவுக்குள் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத்துடன் இன்று அயோத்தி நகருக்கு வந்த தென்கொரியா அதிபரின் மனைவி கிம் ஜங்-சூக் இன்று அந்த நினைவிடத்தை திறந்து வைத்தார்.



    இந்த திறப்பு விழாவின்போது இந்தியா மற்றும் தென்கொரியா நாட்டு கலைக்குழுவினர் நடத்திய நடன நிகழ்ச்சியை யோகி ஆதித்யாநாத், கிம் ஜங்-சூக் உள்ளிட்டோர் ரசித்து மகிழ்ந்தனர்.

    இன்றிரவு சுமார் 3 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி வழிபாடு நடத்தப்படும் பிரமாண்டமான தீப உற்சவத்தில் தென்கொரிய அதிபரின் மனைவி கிம் ஜங்-சூக் பங்கேற்கிறார். பின்னர், டெல்லி திரும்பும் அவர் தனிவிமானத்தில் தென்கொரியாவின் சியோல் நகருக்கு புறப்பட்டு செல்கிறார். #YogiAdityanath #KimJungSook #QueenHuh #QueenHuhMemorial 
    அயோத்தி தீபவிழாவில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள தென்கொரியா அதிபரின் மனைவி இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். #SouthKoreanFirstLady #KimJung-sook #Modi
    புதுடெல்லி:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை மூன்று நாட்கள் தீபஉற்சவம் நடைபெறுகிறது. இதில் உ.பி. கவர்னர் ராம் நாயக், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.

    நாளை சுமார் 3 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி வழிபாடு நடத்தப்படும் பிரமாண்டமான தீப உற்சவத்தில் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் மனைவி கிம் ஜங்-சூக் பங்கேற்கிறார்.



    இதற்காக சிறப்பு விமானம் மூலம் நேற்றிரவு டெல்லி வந்து சேர்ந்த கிம் ஜங்-சூக் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். #SouthKoreanFirstLady #KimJungsook #Modi
    அயோத்தியில் நடைபெறும் தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள தென்கொரியா அதிபரின் மனைவி இன்று டெல்லியில் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்தார். #Ayodhya #DiwaliCelebrations #KoreaFirstLady
    புதுடெல்லி:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை மூன்று நாட்கள் தீபஉற்சவம் நடைபெறுகிறது. இதில் உ.பி. கவர்னர் ராம் நாயக், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.
     
    நாளை சுமார் 3 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி வழிபாடு நடத்தப்படும் பிரமாண்டமான தீப உற்சவத்தில் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் மனைவி கிம் ஜங்-சூக் பங்கேற்கிறார்.

    இதற்காக சிறப்பு விமானம் மூலம் நேற்றிரவு டெல்லி வந்து சேர்ந்த கிம் ஜங்-சூக் இன்று வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்துப் பேசினார்.

    பின்னர் கிழக்கு டெல்லியில் உள்ள ஏ.எஸ்.என் பள்ளிக்கு சென்றார். அங்கு உள்ள மாணவ- மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.

    இன்று மாலை உத்தரப்பிரதேசம் மாநில தலைநகரான லக்னோ வந்து சேரும் அவருக்கு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இரவு விருந்து அளித்து உபசரிக்கிறார்.



    லக்னோவில் இருந்து நாளை அயோத்திக்கு செல்லும் கிம் ஜங்-சூக், சரயு நதிக்கடையில் நடைபெறும் பிரமாண்ட தீப உற்சவத்தில் பங்கேற்கிறார்.

    பின்னர், அயோத்தியில் ராணி ஹர் ஹூவாங்-ஓக் நினைவிடத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். அயோத்தி இளவரசியான சூரிரத்னா என்பவர் தென் கொரியாவுக்கு சென்று அந்நாட்டு மன்னரை மணந்த பின்னர் ஹர் ஹூவாங்-ஓக் என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    உ.பி.யில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு கிம் ஜங்-சூக் 7-ம் தேதி காலை சிறப்பு விமானம் டெல்லி சென்று, அங்கிருந்து தென்கொரியாவுக்கு புறப்படுகிறார்.

    தென்கொரிய அதிபரின் மனைவி வருகையையொட்டி அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  #Ayodhya #DiwaliCelebrations #KoreaFirstLady
    இரு நாட்டு எல்லையில் உள்ள பான்முஞ்சோமில் துப்பாக்கி, பாதுகாப்பு சாவடிகளை அகற்றிக்கொள்ள இரு கொரிய நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன. #NorthKorea #SouthKorea #Panmunjom
    சியோல்:

    1953-ம் ஆண்டு கொரியப் போர் முடிந்த பின்னர், வட கொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே தீராத பகை நிலவி வந்தது. இப்போது இவ்விரு நாடுகள் இடையே நட்புறவு துளிர்த்து வருகிறது.

    வட கொரிய தலைவர் கிம்ஜாங் அன்னும், தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் 3 முறை நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர். கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முடிவுக்கு கொண்டு வர இருவரும் ஒப்புக்கொண்டனர்.



    இந்த நிலையில், இரு நாட்டு எல்லையில் உள்ள பான்முஞ்சோமில் துப்பாக்கி, பாதுகாப்பு சாவடிகளை அகற்றிக்கொள்ள இரு கொரிய நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன. இந்த பான்முஞ்சோமில்தான் இரு நாட்டு படைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இப்போது அங்கு துப்பாக்கி பாதுகாப்பையும், பாதுகாப்பு சாவடிகளையும் விலக்கிக்கொள்ள முடிவு எடுத்து இருப்பது இரு நாடுகளுக்கு இடையேயான உறவு வேகமாக வளர்வதற்கு வழி வகுக்கும்.

    இது தொடர்பாக தென்கொரியா விடுத்துள்ள அறிக்கையில், “ அக்டோபர் 25-ந் தேதிக்குள் (நாளைக்குள்) பான்முஞ்சோமில் இருந்து துப்பாக்கி பாதுகாப்பு மற்றும் ராணுவ பாதுகாப்பு சாவடிகளை அகற்றிக்கொள்ள இரு கொரியாக்களும், அமெரிக்க படை மையமும் ஒப்புக்கொண்டுள்ளன. மேலும் அடுத்த இரு நாட்கள் மூன்று தரப்பினரும் கூட்டு சோதனை நடத்திக்கொள்ளவும் சம்மதிக்கப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.   #NorthKorea #SouthKorea #Panmunjom 
    700 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் கட்டப்பட்ட தனது முதல் ஏவுகணை தாங்கிய நீர்மூழ்கி கப்பலை நாட்டுக்கு தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் இன்று அர்பணித்தது வைத்தார். #SouthKorea
    சியோல்:

    பரம எதிரியாக இருந்த வடகொரியா உடன் சமீபத்தில் சமரசம் செய்து கொண்ட தென் கொரியா, கொரிய தீபகற்பத்தில் தனது ராணுவ பலத்தை காட்டும் விதமாக ஏவுகணை தாங்கிய நீர்மூழ்கி கப்பலை இன்று கடற்படையில் இணைத்துள்ளது. 700 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில், 3 ஆயிரம் டன் எடையில் கட்டப்பட்ட தோஷன் ஆங் சாங்-ஹோ என்று பெயரிடப்பட்ட இந்த நீர்மூழ்கியை அதிபர் மூன் ஜேஇன் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

    சிறிய ரக மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இந்த நீர்மூழ்கியில் இருந்து ஏவ இயலும். நாட்டின் பாதுகாப்பை இந்த நீர்மூழ்கி ஒருபடி மேலே கொண்டு செல்லும் என அதிபர் மூன் பெருமிதமாக தெரிவித்துள்ளார். இந்த நீர்மூழ்கியை போல இன்னும் 2 நீர்மூழ்கி கட்டப்பட்டு வருவதாகவும் அடுத்த 5 ஆண்டில் கடற்படையில் இணைக்கப்படும் என அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது. 
    கொரிய போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான உடன்படிக்கையை தீவிரமாக செயல்படுத்தும்படி தென்கொரியாவை வடகொரியா அரசு வலியுறுத்தி உள்ளது. #KoreanWar #KimJongUn
    பியாங்யாங்:

    எலியும் பூனையுமாக இருந்த வடகொரியா, தென் கொரியா நாடுகளிடையே இருந்த போர்ப்பதற்றம் கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு தணியத் தொடங்கியது. போரை முடிவுக்கு கொண்டு வந்து, இணக்கமாக செல்வற்கு வடகொரிய அதிபர் முன்வந்ததையடுத்து, ஏப்ரல் மாதம் 27-ம் தேதி இரு நாட்டு தலைவர்களிடையே வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு நடைபெற்றது. வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், தென்கொரிய அதிபர் முன் ஜே இன் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.



    இந்த சந்திப்பின்போது, 65 ஆண்டுகளாக நீடித்து வந்த கொரிய போரை முடிவுக்கு கொண்டு வரவும், கொரிய தீபகற்பத்தினை அணு ஆயுதமற்ற பிரதேசம் ஆக்கவும் உறுதி பூண்டனர்.

    இந்நிலையில், கொரிய போரை முறைப்படி முடிவுக்கு கொண்டு வரும் வகையில், ஏப்ரல் மாதம் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்ததை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என தென் கொரியா அரசாங்கத்தை வடகொரியா வலியுறுத்தி உள்ளது.

    இது தொடர்பாக வடகொரிய இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், போர்நிறுத்த ஒப்பந்தத்தை நிறைவேற்றக்கூடிய கடமை தென் கொரியாவுக்கு உள்ளதாகவும், இனியும் தாமதிக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #KoreanWar #KimJongUn
    நொய்டாவில் உலகின் மிகப்பெரிய செல்போன் தொழிற்சாலையை இன்று திறந்து வைத்த பிரதமர் மோடி கொரியா தயாரிப்பு இல்லாத நடுத்தர இந்திய வீடுகள் கிடையாது என குறிப்பிட்டார்.
    புதுடெல்லி:

    புதுடெல்லி அருகே உள்ள தொழில் நகரமான நொய்டாவில் தென்கொரியா நாட்டு பிரபல மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனமான சாம்சங் 35 ஏக்கர் பரப்பளவில் அமைத்துள்ள உலகின் மிகப்பெரிய செல்போன் தொழிற்சாலையை இன்று மாலை தென்கொரியா அதிபர் மூன் ஜே இங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.

    இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, தற்கால டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் மனிதர்களின் வாழ்க்கை முறைகள் மிகவும் சுலபமாகி விட்டதாக குறிப்பிட்டார்.


    இந்தியாவில் சுமார் 40 கோடி மக்கள் ஸ்மார்ட் போன்களையும், 32 கோடி பேர் இண்டர்நெட் வசதியையும் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளில் 120 செல்போன் தொழிற்சாலைகள் உருவாகியுள்ளன.

    இவற்றில் 50 சதவீதம் தொழிற்சாலை நொய்டா நகரில் அமைந்துள்ளது. இதன் மூலம் சுமார் 4 லட்சம் மக்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

    இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில் கொரியா நிறுவனமான சாம்சங் தனி இடத்தை பிடித்துள்ளது என்பதில் சந்தேகமே இல்லை.

    நான் சில தொழிலதிபர்களை சந்திக்கும்போது நடுத்தர இந்திய மக்களின் வீடுகளில் கொரியா நாட்டு பொருட்கள் இல்லாத வீடுகளே இருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளேன் எனவும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். #NoidaSamsungmobilefactory #MoonJae-inModi
    அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் மற்றும் பிரதமர் மோடி மெட்ரோ ரெயிலில் நொய்டாவுக்கு பயணம் மேற்கொண்டனர். #SouthKorea #PMModi
    புதுடெல்லி:

    தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் 5 நாள் அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார். இன்று மத்திய மந்திரி சுரேஷ் பிரபு மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரை அவர் சந்தித்து பேசினார். அப்போது, இரு நாடுகள் இடையே சில வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    இதனை அடுத்து, உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சாம்சங் செல்போன் உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி மற்றும் மூன் ஜே-இன் ஆகிய இருவரும் டெல்லி மெட்ரோ ரெயிலில் ஒன்றாக நொய்டா சென்றடைந்தனர். 
    வடகொரியா அணு ஆயுதங்களை முற்றிலுமாக அழித்த பிறகே அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகள் விலக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ இன்று தெரிவித்தார். #denuclearisation
    டோக்கியோ :

    வடகொரியா, ஜப்பான், வியட்னாம், ஐக்கிய அரபு அமீரகம், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். பயணத்தின் முதல் நாடாக அவர், வடகொரியா தலைநகர் பியோங்யாங்கிற்கு கடந்த 5-ம் தேதி சென்றிருந்தார்.

    சமீபத்தில், அணு ஆயுதங்களை மிக வேகமாக அழிக்க வடகொரியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கா அவசரம் காட்டி அழுத்தம் கொடுத்தது. ஆனால், அவ்வளவு வேகமாக அழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது என அமெரிக்காவிற்கு எதிராக வடகொரியா காட்டமான அறிக்கையை வெளியிட்டிருந்தது.

    இதனால், வடகொரிய பயணத்தின் போது கிம் ஜாங் அன்னை சந்திக்காத பாம்பியோ, வடகொரிய உயர் அதிகாரிகளை சந்தித்தார், அவர்களிடம் சமீபத்தில் இருநாடுகளுக்கு இடையே போடப்பட்ட சிங்கப்பூர் ஒப்பந்தம் குறித்தும், அணு சோதனை மையங்களை அழிப்பது தொடர்பாகவும் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.



    வடகொரியா பயணத்தை முடித்துகொண்டு, பாம்பியோ நேற்று ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றடைந்தார். அங்கு தென்கொரியா மற்றும் ஜப்பான் நாட்டின் வெளியுறவு மந்திரிகள் உடன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வடகொரியா அணு ஆயுதங்களை முற்றிலுமாக அழித்த பிறகே அந்நாட்டின் மீது விதிக்கப்படுள்ள பொருளாதார தடைகள் விலக்கிக்கொள்ளப்படும்.

    மேலும், சிங்கப்பூர் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளவாறு, அணு ஆயுதங்கள் வடகொரியாவில் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதா? என ஆய்வு குழுவினர் ஆய்வு செய்து சரிபார்த்த பின்னரே பொருளாதார தடைகள் விலக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என பாம்பியோ தெரிவித்தார்.
    தென்கொரிய அதிபர் மூன் ஜே 4 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வரவுள்ளதாக அந்நாட்டு அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #MoonJaevisitIndia
    சியோல்:

    தென்கொரிய அதிபர் மூன் ஜே ஜூலை 8-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது அவர் இந்திய பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.

    இதுதொடர்பாக தென்கொரிய அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று அதிபர் மூன் ஜே இந்தியா வரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்தியாவுக்கு முதல்முறையாக வருகைதரும் மூன் ஜே, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். பிரதமர் மோடியுடனான சந்திப்பில் இருநாட்டு பொருளாதார உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவைத் தொடர்ந்து மூன் ஜே சிங்கப்பூர் செல்ல இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #MoonJaevisitIndia
    ×