என் மலர்

  நீங்கள் தேடியது "Mike pompeo"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கா அந்நாட்டிற்கு வலியுறுத்தி உள்ளது. #AmericaAdjoursPakistan #PulwamaAttack
  வாஷிங்டன்:

  புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. நேற்று  இந்திய விமானப்படை விமானங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குறிவைத்து சரமாரியாக குண்டுகளை வீசின. இதில் பயங்கரவாத முகாம் அழிக்கப்பட்டது.

  இந்த பதிலடி தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

  இந்திய விமானப்படையினர், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மீது நேற்று நடத்திய தாக்குதலையடுத்து, இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உடன் பேசினேன். அப்போது, பிராந்திய பாதுகாப்பு மற்றும் நாட்டின் அமைதியை பராமரிப்பது தொடர்பாக அவரிடம் எடுத்துரைத்தேன்.

  இதேபோல் பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி குரேஷியிடம் பேசினேன். அவரிடம், பாகிஸ்தானில் உள்ள அனைத்து  பயங்கரவாத அமைப்புகள் மீதும் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தேன்.  இரு நாடுகளும் ராணுவ நடவடிக்கையை தவிர்த்துவிட்டு, நேரடியாக கலந்துரையாடி இந்த விவகாரத்தில் சுமூகமான தீர்வை கொண்டு வர வேண்டும் என இரு நாடுகளின் மந்திரிகளிடமும் வலியுறுத்தி உள்ளேன்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  இதேபோல் பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும், இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரசம் பிறக்க வேண்டும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.  #AmericaAdjoursPakistan #PulwamaAttack

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி எடுக்காவிட்டால், அவர்களை பொறுப்பேற்க வைப்போம் என அமெரிக்க வெளியுறவு மந்திரி கூறியுள்ளார். #Pakistan # MikePompeo
  வாஷிங்டன்:

  பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. பயங்கரவாதிகளை அந்த நாடு பாரபட்சமின்றி ஒடுக்குவதில்லை. இது குறித்து அமெரிக்கா, பல முறை சுட்டிக்காட்டியும், பாகிஸ்தான் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் அந்த நாட்டின் மீது அமெரிக்கா கடும் அதிருப்தியில் உள்ளது.இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவு மந்திரி     வாஷிங்டனில் நிருபர்களிடம் பேசினார்.

  அப்போது அவர் கூறுகையில், “பாகிஸ்தான் தனது மேற்கு எல்லையில் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி எடுக்காவிட்டால், அவர்களை பொறுப்பேற்க வைப்போம். கடந்த செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் சென்று, அந்த நாட்டின் பிரதமர் இம்ரான்கானை சந்தித்துப் பேசியபோது, இதை தெளிவுபடுத்தினேன்” என்று குறிப்பிட்டார்.

  “தெற்கு ஆசியாவுக்கும், மத்திய ஆசியாவுக்குமான அமெரிக்க வெளியுறவுக்கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்பதையும் பாகிஸ்தான் பிரதமரிடம் தெளிவுபடுத்தி விட்டேன். மேற்கு எல்லையில் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளிக்கக்கூடாது என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளேன்” என்றும் மைக் பாம்பியோ கூறினார்.

  மேலும், “எல்லா பயங்கரவாதிகளையும் பாரபட்சம் இல்லாத வகையில் ஒழித்துக்கட்ட பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது வரையில், அந்த நாட்டுக்கான நிதி உதவியை நிறுத்தி வைக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் முடிவில் மாற்றம் இல்லை” எனவும் மைக் பாம்பியோ கூறினார். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலையில் தொடர்புடைய சவுதி அரேபியா அதிகாரிகளின் விசாக்கள் ரத்தாகும் என அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். #JamalKhashoggi #MikePompeo
  வாஷிங்டன்:

  சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்தவர், அந்த நாட்டின் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (59). சமீபத்தில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த 2-ம் தேதி சென்ற அவர், மாயமானார்.

  அவர் அந்த தூதரகத்துக்குள் வைத்து சவுதி அரேபிய ஏஜெண்டுகளால் கொல்லப்பட்டு விட்டார் என்று பல தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை இதுவரை சவுதி அரேபியா மறுத்து வந்தது.

  பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி மாயமானது தொடர்பாக மன்னர் சல்மான் விசாரணைக்கு உத்தரவிட்டார். சவுதி அரேபிய அதிகாரிகளின் அனுமதி பெற்று, துருக்கி போலீஸ் அதிகாரிகள் இஸ்தான்புல் துணை தூதரகம் சென்று விசாரித்தனர்.

  இதற்கிடையே, இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்தில் ஜமால் கசோக்கி கொல்லப்பட்டார் என சவுதி அரேபியா உறுதி செய்தது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.  இந்நிலையில், பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலையில் தொடர்புடைய சவுதி அரேபியா அதிகாரிகளின் விசாக்கள் ரத்தாகும் என அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக அவர் கூறுகையில், பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலையில் தொடர்புடைய சவுதி அரேபிய அதிகாரிகளின் விசாக்களை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

  ஏற்கனவே, ஜமால் கசோக்கி படுகொலை தொடர்பாக சவுதி அரேபியா அரசு அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. #JamalKhashoggi #MikePompeo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சவுதி மன்னர் சல்மானை அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ சந்தித்தார். இப்போது இரு தலைவர்களும் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி மாயமானது பற்றி விரிவாக விவாதித்தனர். #SaudiKingSalman #MikePompeo
  ரியாத்:

  சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்தவர், அந்த நாட்டின் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (வயது 59). இந்த நிலையில் அவர் சமீபத்தில் துருக்கி நாட்டுக்கு சென்றார். அங்கு இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த 2-ந் தேதி சென்ற அவர், மாயம் ஆனார்.  அவர் அந்த தூதரகத்துக்குள் வைத்து சவுதி அரேபிய ஏஜெண்டுகளால் கொல்லப்பட்டு விட்டார் என்று பல தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  ஆனால் இந்தக் குற்றச்சாட்டை இதுவரை சவுதி அரேபியா மறுத்து வருகிறது. இது ஆதாரமற்றது, தவறானது என அந்த நாடு திட்டவட்டமாக கூறுகிறது.

  பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி சவுதி அரேபியாவால் கொலை செய்யப்பட்டிருந்தால், அந்த நாட்டின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரித்தார்.

  அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி மாயம் ஆனது தொடர்பாக மன்னர் சல்மான் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே சவுதி அரேபிய அதிகாரிகளின் அனுமதி பெற்று, துருக்கி போலீஸ் அதிகாரிகள் இஸ்தான்புல் துணைத்தூதரகத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

  இதற்கிடையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சவுதி அரேபிய மன்னர் சல்மானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அதைத் தொடர்ந்து டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார்.

  அந்தப் பதிவில் அவர், “ சவுதி மன்னரை தொடர்பு கொண்டு பேசினேன். அவர், எங்கள் சவுதி அரேபிய குடிமகனுக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்கிறார். அவர் இந்தப் பிரச்சினையில் விடை காண்பதற்கு துருக்கியுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். மன்னரை சந்தித்துப் பேசுதற்காக வெளியுறவு மந்திரியை அங்கு (சவுதி அரேபியா) உடனே அனுப்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

  அதன்படி அவர் வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவை சவுதி அரேபியா அனுப்பினார்.

  நேற்று ரியாத் போய்ச் சேர்ந்த மைக் பாம்பியோ, சவுதி மன்னர் சல்மானை சந்தித்துப் பேசினார். பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி மாயம் ஆனது பற்றி இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினர். பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானையும் மைக் பாம்பியோ சந்தித்து விட்டு துருக்கி நாட்டுக்கு விரைகிறார்.

  இதற்கு மத்தியில் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி விவகாரத்தில் நடந்தது என்ன என்பது பற்றி சவுதி அரேபியாவும், துருக்கியும் தெரிவிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் மிச்செல்லி பசேலெட் வலியுறுத்தி உள்ளார். #SaudiKingSalman #MikePompeo 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்ப்பியோ மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் இடையே இன்று சந்திப்பு நடைபெற்றதை அடுத்து, ட்ரம்ப் உடனான 2-வது கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #MikePompeo #KimJongUn #NorthKorea #US
  பியாங்யோங்:

  ஜப்பான், வடகொரியா, சீனா உள்ளிட்ட  தெற்காசிய நாடுகளில் அமெரிக்க வெளியுறத்துறை மந்திரி மைக் பாம்ப்பியோ சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

  வடகொரியா-அமெரிக்கா இடையில் சமீபத்தில் சிங்கப்பூரில் செய்யப்பட்ட அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றுவது தொடர்பாக  வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்-னை வலியுறுத்துவது அவரது பயணத்தின் அதிமுக்கிய நோக்கமாக உள்ளது.

  இதையடுத்து இன்று காலை வடகொரிய தலைநகர் பியாங்யோங்கில் அதிபர் கிம் ஜாங் அன் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்ப்பியோ இடையேயான சந்திப்பு நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் வரை இந்த சந்திப்பு நடைபெற்றது.  இந்த சந்திப்பு தொடர்பான முழுமையான தகவல்கள் வெளியிடப்படவில்லை எனினும், இந்த சந்திப்பு இனிமையான ஒன்றாக அமைந்ததாக மைக் பாம்ப்பியோ தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடனான சந்திப்பின்போது போடப்பட்ட அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கான வழிமுறைகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

  மேலும், இருநாடுகளுக்கும் இடையேயான நம்பிக்கையை வலுப்படுத்த வேண்டும் என்பதே தனது லட்சியம் என குறிப்பிட்டுள்ள மைக் பாம்ப்பியோ, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரது அடுத்த சந்திப்பு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் எனவும் கூறியுள்ளார். #MikePompeo #KimJongUn #NorthKorea #US
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ மற்றும் அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் ஜேம்ஸ் மேடிஸ் ஆகியோர் பிரதமர் மோடியை டெல்லியில் இன்று சந்தித்தனர். #PMModi #MikePompeo #JamesMattis
  புதுடெல்லி:

  இந்தியா, அமெரிக்கா நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் நடைபெற்றது.

  இதில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா ஸ்வராஜ், பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ, பாதுகாப்புத்துறை செயலர் ஜேம்ஸ் மேட்டீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
   
  பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை தொடர்பான முக்கிய அம்சங்கள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், இரு நாடுகளுக்கு இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

  அதன்பின்னர், அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ, அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் ஜேம்ஸ் மேடிஸ் மற்றும் இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினர். அப்போது இருதரப்பில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. #PMModi #MikePompeo #JamesMattis
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் டெல்லியில் இன்று கையெழுத்தானது. #SushmaSwaraj #NirmalaSitharaman #MikePompeo #JamesMattis
  புதுடெல்லி:

  இந்தியா, அமெரிக்கா நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் நடைபெற்றது.

  இதில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா ஸ்வராஜ், பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ, பாதுகாப்புத்துறை செயலர் ஜேம்ஸ் மேட்டீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
   
  பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை தொடர்பான முக்கிய அம்சங்கள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், இரு நாடுகளுக்கு இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

  அப்போது பேசிய சுஷ்மா சுவராஜ், ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்பின் கொள்கை முடிவை வரவேற்கிறோம். பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் இரு நாடுகளும் இணைந்து செயலபட்டு வருகிறோம் என தெரிவித்தார்.
   
  இதேபோல், பயங்கரவாதம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் இரு நாடுகளும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம் என பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். #SushmaSwaraj #NirmalaSitharaman #MikePompeo #JamesMattis
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவுடனான வெளியுறவு மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சகங்களின் பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ இன்று டெல்லி வந்தடைந்தார். #MikePompeo #SushmaSwaraj
  புதுடெல்லி:

  இந்தியா, அமெரிக்க நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை செப்டம்பர் 6-ம் தேதி (நாளை) டெல்லியில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

  இந்த பேச்சுவார்த்தையில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா ஸ்வராஜ், பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் உடன் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ மற்றும் பாதுகாப்புத்துறை செயலர் ஜேம்ஸ் மேட்டீஸ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

  இதில் இரு நாடுகளுக்கும் இடையிலான வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை தொடர்பான முக்கிய அம்சங்கள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளது. இந்த விவகாரங்களில் இரு நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்படவுள்ளது என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  இந்நிலையில், இந்தியாவுடனான வெளியுறவு மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சகங்களின் பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ இன்று டெல்லி வந்தடைந்தார்.

  டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய மைக் பாம்பியோவை வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். #MikePompeo #SushmaSwaraj
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அணு ஆயுதங்களை அழித்தால் மட்டுமே வடகொரியாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தும் என அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்தார். #MikePompeo
  வாஷிங்டன்:

  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரது சந்திப்பு கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெற்றது.

  அப்போது, அணு ஆயுத சோதனை மையங்கள் விரைவில் அழிக்கப்படும் என கிம் ஜாங் அன் டிரம்பிடம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, வடகொரியா அணு ஆயுத சோதனை மையங்களை அழித்து வந்தது.

  ஆனாலும், வடகொரியா அரசு தற்போதும் அணு ஆயுதங்களை சோதனைக்கு உட்படுத்தி வருகிறது என சமீபத்தில் அமெரிக்கா குற்றம் சாட்டியது.
    
  இந்நிலையில், அணு ஆயுதங்களை அழித்தால் மட்டுமே வடகொரியாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த தயாராகும் என அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்தார்.

  இதுதொடர்பாக அவர் கூறுகையில், டிரம்புடனான சந்திப்பில் கிம் ஜாங் அன் தெரிவித்ததை போல் அணு ஆயுதங்கள் அழிக்கப்பட வேண்டும். அப்படி அழிக்கப்பட்டால் மட்டுமே அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு தயாராகும் என தெரிவித்துள்ளார்.

  முன்னதாக, மைக் பாம்பியோ வடகொரியாவுக்கு செல்லவிருந்த பயணத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #MikePompeo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மைக் பாம்பியோ இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். #Vajpayee #VajpayeePassesAway #AtalBihariVajpayee
  இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் (93) டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் நேற்று மாலை காலமானார்.
  மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட வாஜ்பாய் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மந்திரிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

  வாஜ்பாய் மறைவிற்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அமெரிக்கா சார்பில் அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது,   வாஜ்பாயை இழந்து வாடும் இந்தியாவுக்கு, நானும், அமெரிக்க மக்களும் உறுதுணையாக இருப்போம் என்றும், அவரது மறைவு பெரும் துயரத்தை உண்டாக்கியுள்ளது. அவரது மறைவில் வாடும் இந்தியாவுக்காக பிரார்த்திக்கிறோம். அவரது ஆட்சிகாலம் முதல் தற்போது வரை இரு நாடுகளுக்கிடையேயான உறவு சிறப்பாக இருந்து வருகிறது. அவரது நோக்கமே, இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவுக்கு காரணமாக இருந்தது. 

  இந்தியா-அமெரிக்கா இடையேயான கூட்டுறவுக்கு, அவரது ஜனநாயக பங்குகள் மூலம் அடைந்த பொருளாதார வளர்ச்சி மற்றும் உலக பாதுகாப்பே உதாரணம் என்று அவர் கூறியுள்ளார். #Vajpayee #VajpayeePassesAway #AtalBihariVajpayee

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வடகொரியா இன்னும் அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது என அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ குற்றம் சாட்டியுள்ளார். #MikePompeo
  வாஷிங்டன்:

  பெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு கடந்த மாதம் சிங்கப்பூரில் நடைபெற்றது.  சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள  கேபெல்லா ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெற்றது.  

  இந்த சந்திப்பின் போது, அணு ஆயுதங்கள் கைவிடல், பொருளாதார பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். 

  இதைத்தொடர்ந்து, வடகொரியா தங்கள் நாட்டில் செயல்பட்டு வரும் அணு ஆயுத சோதனை மையங்களை மூடுவதாக அறிவித்தது. ஆனால் அதில் மெத்தனம் காட்டியது வடகொரியா.

  இந்நிலையில், வடகொரியா இன்னும் அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது என அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ குற்றம் சாட்டியுள்ளார்.

  இதுதொடர்பாக அவர் கூறுகையில், டிரம்ப் - கிம் ஜாங் அன் சந்திப்பு நடந்து ஆறு வார காலமாகியும் வடகொரியா அணு ஆயுத சோதனை மையங்களை அழிக்கவில்லை.

  வடகொரியா அரசு இன்னும் அணு ஆயுதங்கள் தயாரிப்பதை நிறுத்தவில்லை. கிம் ஜாங் அன் கொடுத்த வாக்குறுதியால் அந்த பகுதியில் நிலவிய பதட்டம் பெருமளவு குறைந்துள்ளது என தெரிவித்துள்ளார். #MikePompeo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin