search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "atal bihari vajpayee"

    • நாங்கள் பாரத் ஜோடோ யாத்ராவில் ஒரு பகுதியாக இருந்தோம் என்றார் பரூக் அப்துல்லா.
    • ராகுலின் பாரத் நியாய யாத்ராவிலும் பங்கேற்போம் என தெரிவித்தார்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரியான பரூக் அப்துல்லா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நாங்கள் பாரத் ஜோடோ யாத்ராவில் ஒரு பகுதியாக இருந்தோம். பாரத் நியாய யாத்ராவிலும் பங்கேற்போம்.

    இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தைக்கு செல்லாவிட்டால் காஷ்மீரில் (காசாவில் இருப்பதுபோல) மோசமான சூழ்நிலை ஏற்படலாம்.

    ஒரு பக்கம் பாகிஸ்தானும், மறுபுறம் சீனாவும் உள்ளன. போர் மூண்டால் காஷ்மீர் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

    நம் நண்பர்களை மாற்றலாம், ஆனால் நம் அண்டை வீட்டாரை மாற்ற முடியாது என அடல் பிகாரி வாஜ்பாய் கூறியதை நினைத்துப் பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ள நிலையில், டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி, வாஜ்பாய் ஆகியோர் நினைவிடங்களுக்கு சென்று பிரதமர் மோடி இன்று மரியாதை செலுத்தினார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 352 தொகுதிகளை கைப்பற்றியது. பாஜக மட்டும் 303 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். 

    இந்நிலையில், டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோரின் நினைவிடங்களுக்கு சென்று பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்



    ராஜ்காட் சென்ற பிரதமர் மோடி மகாத்மா காந்திக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். 
    பாஜக மூத்த தலைவரான எல்.கே.அத்வானியின் உழைப்பின் பலனை அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் அனுபவித்து வருவதாக சிவசேனா கட்சி குற்றம்சாட்டியுள்ளது. #Advani #AmitShah #Modi #Shivsena
    மும்பை:

    பாஜக மூத்த தலைவர்களான அத்வானி மற்றும் அடல் பிகாரி வாஜ்பாய் ஆகியோரது வழிகாட்டலால் உருவாக்கப்பட்ட பாஜகவின் பலன்களை அமித் ஷா, மோடி ஆகியோர் அனுபவித்து வருகின்றனர் சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது.

    இதுதொடர்பாக, சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் இன்று வெளியாகியுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    இந்திய அரசியலில் பீஷ்மாச்சாரியராக திகழ்ந்து வருபவர் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி. ஆனால் அவரது பெயர் பாராளுமன்ற தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெறாததில் ஆச்சர்யம் இல்லை. அத்வானியின் சகாப்தம் பாஜகவில் முடிவுக்கு வந்துவிட்டது.



    குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் 6 முறை தேர்வு பெற்றுள்ளார். ஆனால் தற்போது அந்த தொகுதியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா போட்டியிடுகிறார். இதன் அர்த்தம் அவரை வலுக்கட்டாயமாக ஓய்வுபெற வைத்துவிட்டனர்.

    பாஜகவை தோற்றுவித்தவர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் அத்வானி. அவருக்கு பூரண ஒத்துழைப்பு நல்கியவர் அடல் பிகாரி வாஜ்பாய். ஆனால், தற்போது இவர்கள் இருவரது இடத்தை மோடியும், அமித் ஷாவும் வகிக்கின்றனர். இதிலிருந்து கட்சியில் மூத்த தலைவர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படுவதில்லை என உறுதியாகிறது.

    பாஜக மூத்த தலைவரான அத்வானியின் அயராத உழைப்பின் பலனை பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் அனுபவித்து வருகின்றனர் எனவும் குற்றம் சாட்டியுள்ளது.#Advani #AmitShah #Modi #Shivsena
    இந்தியாவின் பிரதமராக மூன்று முறை பதவி வகித்த அமரர் ‘பாரத ரத்னா’ அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சிக் காலத்தின் சில சிறப்புகளை அவரது பிறந்தநாளான இன்று நினைவுகூர்வோம். #Vajpayee #Vajpayeebirthday #Vajpayeetribute
    புதுடெல்லி:

    மத்தியப்பிரதேசத்தில் உள்ள குவாலியர் நகரில் 25-12-1924 அன்று பிறந்த அடல் பிஹாரி வாஜ்பாய், வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து, இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்டதற்காக 1942-ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  அன்றுமுதல் தீவிரமாக தன்னை பொதுசேவையில் ஈடுபடுத்திக் கொண்ட அவர், 1957-ம் ஆண்டு பல்ராம்பூர் தொகுதியில் இருந்து முதன்முதலாக பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, எம்.பி. ஆனார்.

    அவரது பேச்சாற்றலை கண்டு வியப்படைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, 'என்றாவது ஒரு நாள் வாஜ்பாய் இந்தியாவின் பிரதமராக வருவார்' என தெரிவித்ததாக கூறப்படுகிறது. 1970-ம் ஆண்டு இந்தியாவில் நெருக்கடி நிலை சட்டம் (மிசா) பிரகடனப்படுத்தப்பட்டபோது, அதனை எதிர்த்துப் போராடி, கைதாகி, சிறைச் சென்ற முக்கிய அரசியல் தலைவர்களில் வாஜ்பாயும் ஒருவர் ஆவார்.

    பின்னர், பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக உயர்ந்த வாஜ்பாயின் பெயர் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அரசியலோடு ஒன்றிணைந்த பெயராகவே மாறிப்போய் விட்டது. அவரது சேவையை கவுரவிக்கும் வகையில் இந்திய அரசு 1992-ம் ஆண்டில் பத்மவிபூஷன் விருதினை வழங்கி சிறப்பித்திருந்தது.

    திருமணமே செய்து கொள்ளாமல் முழுநேர அரசியல்வாதியாக வாழ்ந்த அவர், இந்தியாவின் 10-வது பிரதமராக 16-5-1996 அன்று பதவி ஏற்றார். எனினும், பாராளுமன்றத்தில் போதுமான எம்.பி.க்களின் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் போனதை தொடர்ந்து 13 நாட்களிலேயே அவர் பதவி விலக நேர்ந்தது.

    பின்னர், 1998-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியதையடுத்து, இரண்டாவது முறையும் பிரதமராக அவர் பதவி ஏற்றார். தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் ஏற்பட்ட கருத்து மற்றும் கொள்கை முரண்பாடுகளின் விளைவாக இந்த முறையும் 13 மாதங்கள் மட்டுமே பிரதமராக அவர் பதவி வகிக்க முடிந்தது.

    அதன் பிறகு, அடுத்த ஓராண்டுக்குள் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 1999-ல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 303 எம்.பி.க்.களுடன் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றது. இதனையொட்டி, 13-10-1999 அன்று மூன்றாவது முறையாக அவர் இந்தியாவின் பிரதமர் ஆனார்.

    இம்முறை, முழுமையாக ஐந்தாண்டுகாலம் தனது பதவியை நிறைவுசெய்த வாஜ்பாய், பொக்ரான் அணுகுண்டு சோதனை, கார்கில் போர் ஆகியவற்றை வெற்றிகரமாக நடத்தி பாகிஸ்தானின் மூக்கை உடைத்தார். இதன் மூலம் இந்தியாவின் ஆற்றலையும், பெருமையையும் உலக நாடுகளுக்கு உணர்த்தினார்.

    தங்க நாற்கர விரைவு நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் வாயிலாக இந்தியாவின் உள்கட்டமைப்பையும் அவர் மேம்படுத்தினார்.

    தேர்ந்த அரசியல்வாதி, சிறந்த நிர்வாகி என புகழப்படும் வாஜ்பாய் கவிதைகள் எழுதும் கலையிலும் கைதேர்ந்து விளங்கினார்.



    2004-ம் ஆண்டு தனது ஐந்தாண்டுகால பதவியை நிறைவு செய்த வாஜ்பாய், அரசியலில் இருந்து விலகுவதாக 2005-ல் அறிவித்தார். உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் பூரண ஓய்வில் இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு 2015-ம் ஆண்டு நாட்டிலேயே மிகவும் உயரியதான ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டது.

    மரபுகளை எல்லாம் கடந்த வகையில் அந்நாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வாஜ்பாயின் இல்லம் தேடிச்சென்று சிறப்புக்குரிய இந்த விருதினை அவருக்கு வழங்கினார்.

    அடல் பிஹாரி வாஜ்பாய்(94) கடந்த 16-8-2018 அன்று உடல்நலக்குறைவால் டெல்லியில் காலமானார். முழு அரசு மரியாதையுடன்  நடைபெற்ற இறுதி ஊர்வலத்துக்கு பின்னர் ராஷ்டரிய  ஸ்மிரிதி ஸ்தல் திடலில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

    டெல்லியில் எரியூட்டப்பட்ட வாஜ்பாயின் அஸ்தி விமானம் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு முக்கிய ஆறுகளில் கரைக்கப்பட்டது.

    அவரது 94-வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் வாஜ்பாயின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்டு அவரது புகழுக்கு இந்திய அரசின் சார்பில் மணிமகுடம் சூட்டினார்.

    இந்நிலையில், வாஜ்பாயின் பிறந்தநாளான இன்று அமரர் வாஜ்பாய் தொடர்பான நினைவுகளையும் அவரது தனிச்சிறப்புகளையும் குறிப்பிட்டு பல்வேறு அரசியல் பிரமுகர்கள் சமூக வலைத்தளங்களில் புகழாரம் சூட்டி வருகின்றனர்.  #Vajpayee #Vajpayeebirthday #Vajpayeetribute 
    இமயமலையில் கங்கோத்திரி பனிமுகடு பகுதியில் உள்ள 4 சிகரங்களுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. #AtalBihariVajpayee #HimalayanPeak
    டேராடூன்:

    இமயமலையில் கங்கோத்திரி பனிமுகடு பகுதியில் 6,557 மீட்டர், 6,566 மீட்டர், 6,160 மீட்டர், 6,100 மீட்டர் உயரங்களில் உள்ள 4 சிகரங்களுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. அந்த சிகரங்களுக்கு முறையே அடல்-1, அடல்-2, அடல்-3, அடல்-4 என்று பெயர்கள் சூட்டப்பட்டு இருக்கிறது.



    இந்த தகவலை, சமீபத்தில் அந்த சிகரங்களுக்கு சென்று வந்த மலை ஏறும் குழுவுக்கு தலைவராக இருந்த நேரு மலை ஏறும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வரான கர்னல் அமித் பிஷித் நேற்று தெரிவித்தார். #AtalBihariVajpayee #HimalayanPeak
    வாஜ்பாய் அஞ்சலி கூட்டத்தில் சிரித்து பேசிக் கொண்டிருந்த சத்தீஸ்கர் மாநில பா.ஜனதா மந்திரிகள் இருவரை நீக்க வேண்டும் என்று வாஜ்பாயின் மருமகள் கருணா சுக்லா வலியுறுத்தி உள்ளார். #Vajpayee #KarunaShukla #BJP
    ராய்ப்பூர்:

    மறைந்த பிரதமர் வாஜ்பாய்க்கு நினைவு அஞ்சலி செலுத்தும் கூட்டம் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் சமீபத்தில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜனதா மந்திரிகளான பிரிஜி மோகன் (வேளாண்மை துறை), அஜய் சந்திரசேகர் (சுகாதாரத்துறை) ஆகியேர் ஒருவருக்கொருவர் சிரித்து பேசி கொண்டு இருந்தனர். அருகே இருந்த மற்றொரு மந்திரியும், மாநில பா.ஜனதா தலைவருமான தர்மலால் கவுசிக் அவர்களை அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.

    வாஜ்பாய் நினைவு கூட்டத்தில் 2 மந்திரிகள் சிரித்து பேசிய அந்த வீடியோ வைரலாக பரவியது.

    இந்த நிலையில் வாஜ்பாய் அஞ்சலி கூட்டத்தில் சிரித்து பேசிக் கொண்டிருந்த சத்தீஷ்கர் மாநில பா.ஜனதா மந்திரிகள் இருவரையும் நீக்க வேண்டும் என்று வாஜ்பாயின் மருமகள் கருணா சுக்லா வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நினைவு கூட்டத்தில் சிரித்து பேசிக் கொண்டிருந்தன் மூலம் பாரத ரத்னா விருது பெற்ற வாஜ்பாயை 2 மந்திரிகளும் அவமதித்து விட்டனர். அஞ்சலி செலுத்தும் கூட்டத்தில் சிரிப்பது மிகவும் அவமான ஒன்றாகும். வாஜ்பாய்க்கு அவமரியாதை ஏற்படுத்திய அந்த 2 மந்திரிகளையும் உடனடியாக டிஸ்மிஸ் வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வாஜ்பாய் அஸ்தியை வைத்து அரசியல் செய்வதாக பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் மீது கருணா சுக்லா ஏற்கனவே குற்றம் சாட்டி இருந்தார்.

    கருணா சுக்லா முதலில் பா.ஜனதாவில் இருந்தார். 2013-ல் அந்த கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். #Vajpayee #KarunaShukla #BJP
    அஸ்தியை கரைப்பதில் அரசியல் சாயம் பூசி வாஜ்பாயை பா.ஜனதா சிறுமைப்படுத்துவதாக சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது. #AtalBihariVajpayee #ShivSena
    மும்பை :

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி நாடு முழுவதும் உள்ள நதிகளில் கரைக்கப்பட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை பா.ஜனதா செய்துள்ளது.

    இது தொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இறந்தபின் உருவான அரசியல் வெற்றிடத்தை மோசமான மற்றும் பொருத்தமற்ற வழிகளில் நிரப்புவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

    பா.ஜனதா கட்சியில் மூத்த தலைவர்களுக்கு எந்த ஒரு மரியாதையும் இல்லை. ஆனால் இறந்த மூத்த தலைவர்களின் அஸ்தி மதிப்பு மிக்கதாக கருதப்படுகிறது.

    வாஜ்பாய் இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளாலும் முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக கருதப்பட்டார். இதனால் தான் அவரின் இறுதி ஊர்வலத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கலந்துகொண்டனர்.

    ஆனால் இறப்பிற்கு பின் அவரை சிறுமைப்படுத்தும் முயற்சிகள் நடக்கிறது.



    அவர் அஸ்தி கரைக்கப்படும் நிகழ்ச்சி ஒரு கட்சியால் நடத்தப்படுவதாக இருக்க கூடாது. அனைத்து கட்சிகளும் உள்ளடக்கிய ஒரு தேசிய நிகழ்வாக அது நடந்திருக்கவேண்டும்.

    ஜவகர்லால் நேருவும், அடல்பிகாரி வாஜ்பாயும் அரசியல் வட்டத்திற்கு அப்பாற்பட்ட மிகப்பெரிய தலைவர்கள் ஆவர். ஆனால் வாஜ்பாயின் அஸ்தியை கரைக்கும் நிகழ்ச்சிக்கு அரசியல் சாயம் பூசுவது நல்லதல்ல.

    சில மந்திரிகளும், கட்சியின் பொறுப்பாளர்களும் வாஜ்பாயின் அஸ்தி கலசத்தை வாங்கிக்கொண்டு, உலக கோப்பையை வென்றது போன்ற உணர்வை வெளிப்படுத்துகின்றனர்.

    எப்படி அவர்களால் மகிழ்ச்சியுடன் அவரின் அஸ்தியை வாங்க முடிகிறது? இது டி.வி. கேமராக்களில் பதிவாகிறது. சிலர் அந்த அஸ்தி கலசத்துடனேயே ‘செல்பி’ எடுத்து கொள்கின்றனர். இது வாஜ்பாயின் மீது நீங்கள் வைத்துள்ள பாசத்தின் முகமூடியற்ற வெளிப்பாடாகும்.

    வாஜ்பாயின் அஸ்தி அரசியலாக்கப்படுவதை கண்டு அவரின் குடும்பத்தினர் கூட வருத்தப்படுவார்கள். இது ஒரு தீவிரமான பிரச்சினையாகும். இனி யாருக்கும் இதுபோல் நிகழக்கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #AtalBihariVajpayee #ShivSena
    முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மரண தினம் குறித்து சிவசேனா முன்னணி தலைவர்களில் ஒருவரும், கட்சிப்பத்திரிகையான சாம்னாவின் ஆசிரியருமான சஞ்சய் ராவத் சந்தேகம் எழுப்பியுள்ளார். #SanjaiRaut #AtalBihariVajpayee
    மும்பை:

    பல்வேறு உடல் நலக்கோளாறுகளால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், கடந்த 16-ந் தேதி மாலையில் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரது உடல் மறுநாள் டெல்லியில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.



    வாஜ்பாய் இறந்து 10 நாட்கள் கடந்திருக்கும் நிலையில், அவரது இறப்பு தினம் குறித்து சிவசேனா தற்போது சந்தேகம் கிளப்பி இருக்கிறது. அந்த கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், கட்சிப்பத்திரிகையான சாம்னாவின் ஆசிரியருமான சஞ்சய் ராவத், இது தொடர்பாக அந்த பத்திரிகையில் கட்டுரை எழுதியுள்ளார்.

    அதில் அவர் கூறும்போது, ‘வாஜ்பாய் ஆகஸ்டு 16-ந் தேதி இறந்தார். ஆனால் 12 மற்றும் 13-ந் தேதிகளிலேயே அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. சுதந்திர தினத்தன்று தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு தேசிய துக்கம் அனுசரிப்பதை தவிர்க்கவும், பிரதமர் மோடி செங்கோட்டையில் உரையாற்றுவதற்காகவும், வாஜ்பாய் 16-ந் தேதி இந்த உலகை விட்டு சென்றுள்ளார் அல்லது அவரது இறப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

    இதன் மூலம் வாஜ்பாயின் மரண தினம் குறித்து மறைமுகமாக சிவசேனா சந்தேகம் கிளப்பி இருக்கிறது. பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனாவே வாஜ்பாய் மரண தினம் குறித்து சந்தேகம் கிளப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #SanjaiRaut #AtalBihariVajpayee 
    உத்தரபிரதேசத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தியை கரைக்க சென்றபோது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். #AtalBihariVaajpayee
    லக்னோ:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ந்தேதி மரணம் அடைந்தார். மறுநாள் 17-ந்தேதி அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

    வாஜ்பாய் அஸ்தியை நாடு முழுவதும் உள்ள நதிகளில் கரைக்க பா.ஜ.க. முடிவு செய்தது. அதன்படி கடந்த 22-ந்தேதி அனைத்து மாநில பா.ஜனதா முக்கிய நிர்வாகிகளை டெல்லிக்கு வரவழைத்து பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரால் வழங்கப்பட்டது.

    வாஜ்பாய் அஸ்தியை கரைக்கும் பணியில் பா.ஜனதாவினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

    உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி ஆற்றில் வாஜ்பாய் அஸ்தியை கரைக்க பா.ஜனதா நிர்வாகிகள் படகில் சென்றனர். முன்னாள் மாநில பா.ஜனதா தலைவர் ராம் திரிபாதி, எம்.பி. ஹரிஷ் திரிவேதி, எம்.எல்.ஏ. ராம் சவுத்ரி, மற்றும் மூத்த நிர்வாகிகள், போலீஸ் சூப்பிரண்டு திலீப்குமார் உள்பட பலர் படகில் இருந்தனர்.

    அதிகமான கூட்டத்தால் ஆற்றில் சென்ற சிறிய படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகு கவிழ்ந்ததால் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் தடுமாறி ஆற்றில் குதித்தனர். உடனே போலீசார் ஆற்றுக்குள் குதித்து எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலரை காப்பாற்றினர்.

    இந்த விபத்தில் அனைவரும் உயிர் தப்பினர். யாரும் ஆற்றில் மூழ்காமல் போலீசார் காப்பாற்றினார்கள்.  #AtalBihariVaajpayee
    இன்று வாஜ்பாய் அஸ்தி புதுவை நகர பகுதியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக ரதத்தில் கொண்டுவந்து வைக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
    புதுச்சேரி:

    மறைந்த பாரத பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி நாடு முழுவதும் புனித நதிகளிலும், கடலிலும் கரைக்கப்பட உள்ளது.

    இதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் பா.ஜனதா நிர்வாகிகள் அஸ்தியை கொண்டுவந்துள்ளனர். இந்த அஸ்திக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுவைக்கு அஸ்தியை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் விமானம் மூலம் புதுவைக்கு நேற்று கொண்டுவந்தார்.

    விமான நிலையத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அஸ்தியை உழவர்கரை நகராட்சி, அரியாங்குப்பம், பாகூர், நெட்டப்பாக்கம் ஆகிய கொம்யூன் பகுதிகளுக்கு கொண்டுசென்றனர். அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக அஸ்தி வைக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    இந்நிலையில் இன்று வாஜ்பாய் அஸ்தி புதுவை நகர பகுதியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக ரதத்தில் கொண்டுவந்து வைக்கப்பட்டது. நெல்லித் தோப்பு லெனின்வீதி காமராஜர் சிலை அருகிலும், உருளையன்பேட்டை கட்சி அலுவலகம், முத்தியால் பேட்டை மணிக்கூண்டு, நேருவீதி, காந்திவீதி சந்திப்பு, புஸ்சி வீதி மணிக்கூண்டு, உழவர் சந்தை, முதலியார்பேட்டை வானொலி திடல் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அஸ்தி ரதம் வைக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    இன்று மாலை வில்லியனூர், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பகுதிகளில் பொதுமக்கள் அஞ்சலிக்காக ரதம் செல்கிறது. நாளை பா.ஜனதா கட்சி தலைமை அலுவலகத்திலிருந்து அஸ்தி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கடற்கரை சாலை காந்தி திடலின் பின்புறம் கடலில் கரைக்கப்படுகிறது.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்துக்கு இன்று காலை நேரில் சென்று வாஜ்பாய் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தினார். #AtalBihariVajpayee #MKStalin
    சென்னை:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ந்தேதி டெல்லியில் காலமானார். அவரது அஸ்தி டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை கொண்டு வரப்பட்டது.

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் மூத்த தலைவர்கள் அஸ்தியை எடுத்து வந்தனர்.

    சென்னை விமான நிலையத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வேனில் வாஜ்பாய் அஸ்தி கலசங்கள், தியாகராய நகரில் உள்ள பா.ஜனதா அலுவலகமான கமலாலயத்துக்கு ஊர்வலமாக இரவு 7.30 மணிக்கு கொண்டு வந்தனர்.

    அங்கு பாரத மாதா சிலைக்கு முன்பு வைக்கப்பட்ட 7 அஸ்தி கலசங்களுக்கும் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன், முன்னாள் மேயர் சைதை துரைசாமி உள்பட பலரும் நேற்று அஞ்சலி செலுத்தினார்கள்.

    இன்று காலை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்துக்கு நேரில் சென்று வாஜ்பாய் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட நிர்வாகிகளும் சென்றிருந்தனர்.

    கட்சி அலுவலகம் வந்த மு.க.ஸ்டாலினை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

    வாஜ்பாய் அஸ்திக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின் சிறிது நேரம் அங்கு அமர்ந்திருந்தார். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரிடம் சோகத்தை பகிர்ந்து கொண்டார். அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டார். அதன் பிறகு கனிமொழி எம்.பி. வந்து வாஜ்பாய் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தினார்.



    வாஜ்பாய் அஸ்திக்கு இன்று முழுவதும் அஞ்சலி செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதைத் தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் அஸ்தியை கரைக்க ஊர்வலமாக எடுத்து செல்லப்பட உள்ளது.

    வாஜ்பாய் அஸ்தியை சென்னை, மதுரை, திருச்சி, கன்னியாகுமரி, ராமேசுவரம், ஈரோடு, தஞ்சை ஆகிய 7 இடங்களில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. #AtalBihariVajpayee #MKStalin
    முன்னாள் பிரதமரும், பா.ஜனதா மூத்த தலைவருமான வாஜ்பாய்க்கு மும்பையில் நினைவு சின்னம் அமைக்கப்படும் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.
    மும்பை :

    முன்னாள் பிரதமரும், பா.ஜனதா மூத்த தலைவருமான வாஜ்பாய் கடந்த 16-ந் தேதி உயிரிழந்தார். மும்பையில் அவருக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், உத்தரபிரதேச கவர்னர் ராம் நாயக், ரெயில்வே துறை மந்திரி பியூஷ் கோயல், மாநில பா.ஜனதா தலைவர் ராவ் சாகேப் தன்வே, மந்திரிகள் சுதிர் முங்கண்டிவார், சந்திரகாந்த் பாட்டீல், வினோத் தாவ்டே மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    இதில் மாநிலத்தில் உள்ள கோதாவரி, பஞ்சகங்கா மற்றும் சந்திரபாகா உள்ளிட்ட 14 ஆறுகளில் கரைப்பதற்காக வாஜ்பாயின் அஸ்தியை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வழங்கினார்.

    பின்னர் நிகழ்ச்சியில் முதல்-மந்திரி கூறியதாவது:-

    நாட்டை நேசிப்பதற்கான பாதையை வாஜ்பாய் காட்டியுள்ளார். நாம் அவரை தலைவணங்கி அவர் வகுத்து தந்த பாதையில் பயணிக்க வேண்டும். அவர் தன் சித்தாந்தங்களை வாய்வழியாக மட்டுமே சொல்லவில்லை. அதன்படி வாழ்ந்து காட்டினார்.

    அவர் இந்த நாட்டிற்கு தான் முதலில் முன்னுரிமை அளித்தார். அடுத்ததாக கட்சிக்கு, கடைசியில் தான் அவர் தன்னை பற்றி சிந்தித்தார். வாஜ்பாய் ஒன்றும் பொருளாதார மேதை இல்லை. ஆனால் மனித வளர்ச்சி தேவையானவற்றை அவர் அறிந்திருந்தார். அவர் சமூக நீதியை வலியுறுத்தினார்.

    அவருக்காக மும்பையில் மராட்டிய அரசு நினைவு சின்னம் அமைக்கும். அதற்கான வேலைகள் விரைவில் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×