என் மலர்
இந்தியா

101-வது பிறந்தநாள் - வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி
- முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் நல்லாட்சி தினமாகக் கொண்டாடப்படும் நிலையில், பல தலைவர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
- வாஜ்பாய் தனது முழு வாழ்க்கையையும் நல்லாட்சி மற்றும் தேசக் கட்டுமானத்திற்காக அர்ப்பணித்தார்.
மறைந்த முன்னாள் பிரதமர் பாரத ரத்னா வாஜ்பாயின் 101-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள 'சதைவ் அடல்' நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி ஆகியோர் மலர் தூவி மரியாதை அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் நல்லாட்சி தினமாகக் கொண்டாடப்படும் நிலையில், பல தலைவர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா, பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் நிதின் நபின், டெல்லி முதல்வர் ரேகா குப்தா மற்றும் பிற பிரமுகர்கள் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
நாட்டு மக்களின் இதயங்களில் ஆழமாக இடம்பிடித்த முன்னாள் பிரதமர் பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாயிக்கு அவரது பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவர் தனது முழு வாழ்க்கையையும் நல்லாட்சி மற்றும் தேசக் கட்டுமானத்திற்காக அர்ப்பணித்தார்.
அவர் ஒரு சக்திவாய்ந்த பேச்சாளராகவும், துடிப்பான கவிஞராகவும் எப்போதும் நினைவுகூரப்படுவார். அவரது ஆளுமை, படைப்புகள் மற்றும் தலைமைத்துவம் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழிகாட்டும் ஒளியாகத் தொடர்ந்து செயல்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






