search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ இந்தியா வந்தடைந்தார்
    X

    அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ இந்தியா வந்தடைந்தார்

    இந்தியாவுடனான வெளியுறவு மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சகங்களின் பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ இன்று டெல்லி வந்தடைந்தார். #MikePompeo #SushmaSwaraj
    புதுடெல்லி:

    இந்தியா, அமெரிக்க நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை செப்டம்பர் 6-ம் தேதி (நாளை) டெல்லியில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

    இந்த பேச்சுவார்த்தையில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா ஸ்வராஜ், பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் உடன் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ மற்றும் பாதுகாப்புத்துறை செயலர் ஜேம்ஸ் மேட்டீஸ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

    இதில் இரு நாடுகளுக்கும் இடையிலான வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை தொடர்பான முக்கிய அம்சங்கள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளது. இந்த விவகாரங்களில் இரு நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்படவுள்ளது என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், இந்தியாவுடனான வெளியுறவு மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சகங்களின் பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ இன்று டெல்லி வந்தடைந்தார்.

    டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய மைக் பாம்பியோவை வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். #MikePompeo #SushmaSwaraj
    Next Story
    ×