search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "snake bite"

    மண்ணச்சநல்லூர் அருகே வயல் வெளிக்கு சென்ற டிரைவரை பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    மண்ணச்சநல்லூர்:

    திருச்சி மாவட்டம் மண் ணச்சநல்லூர் அருகே உள்ள பூணாம்பாளையம் ஊர்காடு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் தமிழரசன் (வயது 23), கார் டிரைவர்.

    இவர் கடந்த 13-ந் தேதி ஊரின் அருகில் உள்ள வயல் வெளிக்கு சென்றுள்ளார். அப்போது அவரை பாம்பு கடித்துள்ளது. இதனால் மருத்துமனையில் சிகிச்சைபெற்று விட்டு வீடு திரும்பினார். இதற்கிடையே நேற்று வீட்டில் இருந்த அவருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் மண்ணச்சநல்லூரில் உள்ள ஒரு மருத் துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

    அங்கு டாக்டர்கள் சிகிச்சைகள் மேற்கொண்டும் தமிழரசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாம்பு கடித்ததால் ஏற்பட்ட பாதிப்பு அவரின் உயிரிழப்பிற்கு காரணம் என கூறப்படுகிறது.

    இருப்பினும் அவரின் சாவுக்கான காரணம் குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்த தமிழரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
    திருவெண்ணை நல்லூர் அருகே தண்ணீர் பாய்ச்சுவதற்க்காக வயலுக்கு சென்ற வியாபாரியை பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    திருவெண்ணை நல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கீழ் தணியாளம் பட்டு பகுதியை சேர்ந்தவர் பாலாஜி(வயது46) இவர் கெடிலம் பகுதியில் அரிசி கடை நடத்தி வருகிறார். இவர் கீழ்தணியாளம் பட்டு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் நெல்லும்  பயிரிட்டுள்ளார்.  

    நேற்று இரவு  பாலாஜி  வழக்கம் போல் அரிசிக்கடையில் வியாபாரம் முடிந்த பின்னர் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு வந்தார். அதன் பின்னர் விவசாய நிலத்தில் பயிரிட்டிருந்த நெல் பயிருக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்க்காக வயலுக்கு சென்றார். அங்கிருந்த மோட்டார் கொட்டகையை திறந்து பாலாஜி உள்ளே சென்றார். அப்போது பாலாஜியை பாம்பு கடித்தது. இதனால்  அவர் வலிதாங்க முடியாமல் அலறி துடித்தார். 

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து சென்றனர். பின்னர்  அவர்கள் பாலாஜியை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கபட்டது . பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பாலாஜி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து திரு வெண்ணை நல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே பாம்பு கடித்து வியாபாரி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    திருவெண்ணை நல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கீழ் தணியாளம் பட்டு பகுதியை சேர்ந்தவர் பாலாஜி(வயது46) இவர் கெடிலம் பகுதியில் அரிசி கடை நடத்தி வருகிறார். இவர் கீழ்தணியாளம் பட்டு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் நெல்லும் பயிரிட்டுள்ளார்.

    நேற்று இரவு பாலாஜி வழக்கம் போல் அரிசிக்கடையில் வியாபாரம் முடிந்த பின்னர் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு வந்தார். அதன் பின்னர் விவசாய நிலத்தில் பயிரிட்டிருந்த நெல் பயிருக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக வயலுக்கு சென்றார்.

    அங்கிருந்த மோட்டார் கொட்டகையை திறந்து பாலாஜி உள்ளே சென்றார். அப்போது பாலாஜியை பாம்பு கடித்தது. இதனால் அவர் வலிதாங்க முடியாமல் அலறி துடித்தார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் பாலாஜியை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பாலாஜி பரிதாபமாக இறந்தார்

    இதுகுறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லாரி டிரைவர் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள எய்யலூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 48).

    இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலைபார்த்துவந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு செல்வம் விடுமுறையில் எய்யலூருக்கு வந்தார்.

    செல்வம் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு கடித்தது. இதில் மயக்கமடைந்த செல்வத்தை உறவினர்கள் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை கடித்த பாம்பையும் எடுத்து சென்றனர். அங்கு செல்வத்துக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் செல்வம் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வீட்டின் தோட்டத்தில் செடி-கொடிகளை வெட்டி அப்புறப்படுத்தி கொண்டு இருந்த மளிகை கடைக்காரரை பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    திருபுவனை:

    திருபுவனை பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் பழனி. (வயது52). இவர் திருபுவனை- சன்னியாசிக்குப்பம் சாலையில் மளிகைகடை நடத்தி வந்தார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    சம்பவத்தன்று பழனி தனது வீட்டின் தோட்டத்தில் செடி-கொடிகளை வெட்டி அப்புறப்படுத்தி கொண்டு இருந்தார். அப்போது அவரை வி‌ஷப்பாம்பு ஒன்று கடித்து விட்டது. இதில் மயங்கி விழுந்த பழனியை அவரது குடும்பத்தினர் மீட்டு அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பாம்பு கடிக்கு மருந்து இல்லாததால் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு பழனி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வானூர் அருகே பாம்பு கடித்த பெண்ணை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்ற அவர் பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள வரகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி வெள்ளச்சி (வயது 63). இவர் கோழிகள் வளர்த்து வருகிறார். தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த இவரது கோழி முட்டையிட்டது. அதனை எடுக்க வெள்ளச்சி சென்றபோது, அங்கு கிடந்த பனை ஓலையில் இருந்த நல்லப்பாம்பு அவரை கடித்து விட்டது.

    மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் வெள்ளச்சி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கிளியனூர் போலீசில் வெள்ளச்சியின் மகன் ஆறுமுகம் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    நாமக்கலில் தனது மகனை கடித்த பாம்பை ஒரு பெண் துணிச்சலுடன் அடித்து கொன்று ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்த சம்பவம் மருத்துவமனையிலும், பொதுமக்கள் மத்தியிலும் நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள கொடுக்கால்புதூர் பகுதியை சேர்ந்தவர் விஜயராகவன். இவரது மனைவி ராணி. இவர்களது மகன் தர்‌ஷன் குமார் (வயது 6).

    இன்று காலையில் குழந்தை தர்சன் குமார் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தான். அப்போது அவனை வி‌ஷ பாம்பு ஒன்று திடீரென கடித்தது. இதனால் தர்‌ஷன்குமார் வலியால் சத்தம் போட்டு அம்மா... அம்மா என கதறி அழுதான்.

    மகனின் அழுகுரலை கேட்டு வீட்டிற்குள் இருந்த ராணி பதறி அடித்தப்படி வெளியே ஓடி வந்து பார்த்தார். மகனை பாம்பு கடித்தது தெரியவந்தது.

    இதையடுத்து அங்கு கிடந்த ஒரு கம்பை எடுத்து அந்த பாம்பை அடித்து கொன்று, அதனை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு இறுக்கமாக கட்டினார். பின்னர் மகனை தோளில் தூக்கி போட்டுக் கொண்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு விரைந்தார்.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் தர்‌ஷன்.

    நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மகனை கொண்டு வந்து சேர்த்தார். கடித்த பாம்பையும் ராணி தனது கையில் வைத்திருந்ததை பார்த்து மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் பயமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.

    பாம்பை பார்த்து பயந்து ஓடும் இந்த காலத்தில் ஒரு பெண் துணிச்சலுடன் பாம்பை அடித்து கொன்று தனது மகனை காப்பாற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்த சம்பவம் மருத்துவமனையிலும், பொதுமக்கள் மத்தியிலும் நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews

    சங்கரன்கோவில் அருகே பாம்பு கடித்து விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சின்னகோவிலான்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள நவநீதகிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 47). விவசாயி. இவரது மனைவி அய்யம்மாள். இவருக்கு சொந்தமான இடம் ஊரின் எல்லையில் உள்ளது. சம்பவத்தன்று இவர் வயலில் போட்டிருந்த சோளத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார்.

    அப்போது சோளத்திற்குள் மறைந்திருந்த விரியன்பாம்பு இவரை கடித்துள்ளது. உடனே வீட்டிற்கு வந்தவரை உறவினர்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்து பின் மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் பற்றி சின்னகோவிலான்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குடியாத்தம் அருகே நாகப்பாம்பு கடித்ததில் பெண் பரிதாபமாக இறந்தார். உறவினர்கள் பாம்பை அடித்துக்கொன்று ஆஸ்பத்திரிக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    குடியாத்தம்:

    குடியாத்தம் அருகேயுள்ள எர்த்தாங்கல் குட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் கோதண்டன். விவசாய கூலி. இவருடைய மனைவி அம்பிகா (வயது 40). நேற்றிரவு காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கினர்.

    அதிகாலை 2 மணியளவில் அம்பிகாவின் கையில் நாகப் பாம்பு கடித்தது. தூக்கத்தில் இருந்த அவர் ஏதோ பூச்சி என்று உதறி தள்ளியுள்ளார். மீண்டும் நாகப்பாம்பு கடித்த போது, அலறி அடித்து எழுந்தார்.

    குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், அம்பிகாவை மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். நாகப்பாம்பையும் அடித்துக் கொன்று ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். இதனால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.

    அம்பிகாவின் நிலைமை மிகவும் மோசமானதால், வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அம்பிகா இன்று காலை இறந்தார்.

    குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    தவளக்குப்பம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை வி‌ஷப்பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    பாகூர்:

    தவளக்குப்பம் அருகே டி.என். பாளையத்தை சேர்ந்தவர் சஞ்சீவி. இவரது மனைவி மகாலட்சுமி (வயது65). நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். நள்ளிரவில் காலில் ஏதோ பூச்சி கடித்தது போல மகாலட்சுமி உணரவே எழுந்து பார்த்தார். அப்போது வி‌ஷப்பாம்பு ஊர்ந்து செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    அருகில் தூங்கி கொண்டிருந்த தனது மகன் கணேசனிடம் தகவல் கூறிய மகாலட்சுமி சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை கணேசன் மற்றும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகாலட்சுமியை தவளக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சு மூலம் கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மகாலட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து தவளக்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×