என் மலர்

  செய்திகள்

  திருபுவனையில் மளிகை கடைக்காரர் பாம்பு கடித்து பலி
  X

  திருபுவனையில் மளிகை கடைக்காரர் பாம்பு கடித்து பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வீட்டின் தோட்டத்தில் செடி-கொடிகளை வெட்டி அப்புறப்படுத்தி கொண்டு இருந்த மளிகை கடைக்காரரை பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

  திருபுவனை:

  திருபுவனை பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் பழனி. (வயது52). இவர் திருபுவனை- சன்னியாசிக்குப்பம் சாலையில் மளிகைகடை நடத்தி வந்தார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

  சம்பவத்தன்று பழனி தனது வீட்டின் தோட்டத்தில் செடி-கொடிகளை வெட்டி அப்புறப்படுத்தி கொண்டு இருந்தார். அப்போது அவரை வி‌ஷப்பாம்பு ஒன்று கடித்து விட்டது. இதில் மயங்கி விழுந்த பழனியை அவரது குடும்பத்தினர் மீட்டு அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பாம்பு கடிக்கு மருந்து இல்லாததால் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு பழனி பரிதாபமாக இறந்து போனார்.

  இதுகுறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×