என் மலர்
நீங்கள் தேடியது "vendor died"
மண்ணச்சநல்லூர்:
சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சிமெண்ட் ஏற்றிக்கொண்டு லாரி வந்தது. திடீரென பழுதாகவே டிரைவர் லாரியை சாலையோரம் நிறுத்தினார். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த போலீஸ் வாகனம், லாரியின் பின்புறம் மோதியது. இதில் போலீஸ்காரர் உறையூரை சேர்ந்த பாலசுப்பிரமணி ( வயது 56) சம்பவ இடத்திலேயே இறந்தார். பெரம்பலூரை சேர்ந்த பாண்டியன் (52) படுகாயமடைந்தார்.
இந்த சம்பவம் பற்றி கொள்ளிடம் போலீசார் வழக்குபதிவு செய்து லாரி டிரைவர் ஆனந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி துவாக்குடி அண்ணா வளைவு, அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 50). இரும்பு வியாபாரி. இவரது மனைவி புஷ்பா (வயது 45). இவர்களுக்கு கார்த்திக் என்ற மகனும், ஹேமா என்ற மகளும் உள்ளனர். இதில் ஹேமா காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் ஹேமா கணவரின் உறவினர் மணிகண்டன், கார்த்திக்கிடம் தகராறில் ஈடுபட்டார்.
இது குறித்து துவாக்குடி போலீசில் புகார் செய்ய சக்திவேல், புஷ்பா, கார்த்திக் ஆகிய 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் இன்று காலை சென்றனர். பின்னர் வீடு திரும்பினர். துவாக்குடி அருகே ராவுத்தன்மேடு பிரிவு சாலையில் சென்ற போது பட்டுகோட்டையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சக்திவேல் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து துவாக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






