என் மலர்
நீங்கள் தேடியது "police man died"
கும்மிடிப்பூண்டி:
தேர்தல் பறக்கும் படை அதிகாரியான மீஞ்சூர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் தலைமையில் 3 மணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட ஆரணியில் இருந்து புதுவாயல் நோக்கி ஒரு ஜீப்பில் சென்றனர்.
ஜீப்பை டிரைவர் கண்ணன் ஓட்டினார். அதில் வெங்கல் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியற்றி வந்த கோவிந்தசாமி (வயது 55) மற்றும் போலீஸ்காரர்கள் கமலநாதன், லாசர், பெண் காவலர் இந்துமதி ஆகியோர் இருந்தனர்.
புதுவாயல் அருகே ஜீப் சென்று கொண்டு இருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் உள்ள புளியமரத்தில் மோதி கவிழ்ந்தது.
இதில் இடிபாடுகளில் சிக்கிய போலீஸ்காரர் கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே பலியானார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குண சேகரன், டிரைவர் கண்ணன், போலீஸ்காரர்கள் கமலநாதன், லாசர், இந்துமதி ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் கவரப்பேட்டை போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த 5 பேரையும் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதில் குணசேகரன், கமலநாதன் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
பலியான கோவிந்தசாமியின் சொந்த ஊர் தொளவேடு காலனி ஆகும். அவருக்கு லீலாவதி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.
தொடர் பணி மற்றும் அதிகாலை நேரத்தில் சென்றதால் டிரைவரின் தூக்க கலக்கத்தில் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
விபத்து நடந்த இடத்தை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இது குறித்து கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் கவரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மண்ணச்சநல்லூர்:
சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சிமெண்ட் ஏற்றிக்கொண்டு லாரி வந்தது. திடீரென பழுதாகவே டிரைவர் லாரியை சாலையோரம் நிறுத்தினார். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த போலீஸ் வாகனம், லாரியின் பின்புறம் மோதியது. இதில் போலீஸ்காரர் உறையூரை சேர்ந்த பாலசுப்பிரமணி ( வயது 56) சம்பவ இடத்திலேயே இறந்தார். பெரம்பலூரை சேர்ந்த பாண்டியன் (52) படுகாயமடைந்தார்.
இந்த சம்பவம் பற்றி கொள்ளிடம் போலீசார் வழக்குபதிவு செய்து லாரி டிரைவர் ஆனந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி துவாக்குடி அண்ணா வளைவு, அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 50). இரும்பு வியாபாரி. இவரது மனைவி புஷ்பா (வயது 45). இவர்களுக்கு கார்த்திக் என்ற மகனும், ஹேமா என்ற மகளும் உள்ளனர். இதில் ஹேமா காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் ஹேமா கணவரின் உறவினர் மணிகண்டன், கார்த்திக்கிடம் தகராறில் ஈடுபட்டார்.
இது குறித்து துவாக்குடி போலீசில் புகார் செய்ய சக்திவேல், புஷ்பா, கார்த்திக் ஆகிய 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் இன்று காலை சென்றனர். பின்னர் வீடு திரும்பினர். துவாக்குடி அருகே ராவுத்தன்மேடு பிரிவு சாலையில் சென்ற போது பட்டுகோட்டையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சக்திவேல் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து துவாக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






