search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Siege"

    • தொடர் கொள்ளை, செயின் பறிப்பால் பொதுமக்கள் அச்சம்
    • பொதுமக்களுடன் அ.தி.மு.க. கவுன்சிலர் பிரபாகரன் புகார் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு

    ரத்தினபுரி,

    கோவை ரத்தினபுரி அருகே உள்ள ஜி.பி.எம். நகர், பூம்புகார் நகர், சேவா நகர், லட்சுமிபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ரத்தினபுரி போலீஸ் நிலையத்தை இன்று முற்றுகையிட்டு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 15 நாட்களாக எங்கள் பகுதியில் 7-க்கும் மேற்பட்ட வீடுகளின் கதவை உடைத்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகிறது. நேற்று பகல் நேரத்திலேயே ஒரு வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளை யடிக்கப்பட்டது.

    எனவே இந்த பகுதியில் குடியி ருக்கும் எங்களுக்கு மிகவும் அச்சமாக உள்ளது. பெண்களாகிய நாங்கள் மிகுந்த பயமுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளோம். எனவே தொடர் கொள்ளை யில் ஈடுபடும் நபர்களை கைது செய்து எங்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு காலையில் நடை பயிற்சி சென்ற செயின் பறிப்பு முயற்சி நடந்துள்ளது. இதன் காரணமாக நகைகள் அணிந்து வெளியே செல்ல அச்சமாக உள்ளது.

    எனவே போலீசார் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இரவு மற்றும் பகல் நேரங்களில் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியி ருந்தனர். பொதுமக்களுடன் அ.தி.மு.க. கவுன்சிலர் பிரபாகரன் புகார் மனு அளிக்க வந்தார்.பெண்கள் உள்பட 100-க்கு மேற்பட்ட பொதுமக்கள் திடீரென போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    • இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.
    • போலீசார்- பா.ஜனதா.வினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    நாகப்பட்டினம்:

    சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு, சனாத னத்தை ஒழிப்போம் என்று சொல்லி இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தி யதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், மாநாட்டில் கலந்து கொண்ட இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தியும் செப்டம்பர் 11-ந்தேதி தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை அலுவ லகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என மாநில தலைவர் அண்ணா மலை அறிவித்திருந்தார்.

    அதன்படி நாகையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பு நேற்று பா.ஜ.க.வினர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் ஒன்று கூடினர்.

    தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வேண்டும், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் கோஷங்களை எழுப்பினர்.

    போலீசார் அனுமதி மறுத்து தடைகளை ஏற்படுத்தி தடுத்ததால் போலீசார் பாஜக வினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாரின் தடுப்புகளை உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.

    • நேரு எம்.எல்.ஏ. தலைமையில் திரண்டனர்
    • கஞ்சா கும்பல் பீகார் தொழிலாளர்களை தாக்கி பணத்தை பறித்து வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை உருளை யன்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோவிந்தசாலை அந்தோணியார் கோவில் வீதி அரசு குடியிருப்பு பகுதி மற்றும் கண்டாக்டர் தோட்டம் அரசு குடியிருப்பு பகுதி உள்ளது.

    இந்த பகுதிகளில் ரவுடிகள் மற்றும் போதை கும்பல அட்டகாசம் அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து சட்டசபையிலும் தொகுதி எம்.எல்.ஏ. நேரு பேசியுள்ளார். ஆனாலும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனிடையே நேற்று மாலை கோவிந்தசாலை அந்தோணியார் கோவில் வீதி அரசு குடியிருப்பு பகுதியில் கஞ்சா போதையில் சில இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்டு அப்பகுதியை சேர்ந்த பெண் வக்கீலை தாக்கியுள்ளனர்.

    இந்த நிலையில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து உருளையன்பேட்டையில் உள்ள சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு நேரு எம்.எல்.ஏ. தலைமையில் மற்றும் மனிதநேய மக்கள் சேவை இயக்கம் நிர்வாகிகள் திரண்டு முற்றுகையிட்டனர்.

    முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட நேரு எம்.எல்.ஏவிடம் இன்ஸ்பெக்டர்கள் பாபுஜி, நாகராஜன், வெங்கடாசலபதி, ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    போலீசாரிடம் நேரு எம்.எல்.ஏ. போதை கும்பல் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், கஞ்சா கும்பல் பீகார் தொழிலாளர்களை தாக்கி பணத்தை பறித்து வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

    மேலும், இது தொடர்பாக சீனியர் போலீஸ் சூப்பிரண்டு சந்திக்க வேண்டும் என கூறினார். அவரிடம் போலீசார் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு கூட்டம் ஒன்றில் பங்கேற்க சென்றிருப்பதால் மாலை அவரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கும்படி கூறி சமாதானப்படுத்தினர்.

    இதனையடுத்து நேரு எம்.எல்.ஏ. தலைமையிலான அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தின் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.

    • சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் நேரு தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர்
    • ஏற்காடு பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக வந்து ஏற்காடு தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டும், தபால் அலுவலக சாலையில் அமர்ந்தும் மத்திய அரசை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் நேரு தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் ஏற்காடு பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக வந்து ஏற்காடு தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டும், தபால் அலுவலக சாலையில் அமர்ந்தும் மத்திய அரசை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஞானசவுந்தரி போராட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது, விலைவாசி உயர்ந்து நிற்கிறது. வேலையில்லா திண்டாட்டத்தால் மக்கள் அவதிபடுகின்றனர். எனவே இந்த மக்கள் விரோத அரசை விரைவில் நாம் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றார். இந்த போராட்டதில் பழனிசாமி, கிருஷ்ணமூர்த்தி, தில்லைக்கரசி, மூர்த்தி, ஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவிகளின் பெற்றோர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று மதியம் பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒன்று திரண்டனர்.
    • மாணவிகள் பஸ்சில் ஏறுவது, இறங்குவதில் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

    போலீஸ் நிலையத்தில் புகார்

    ஏழை-எளிய மாணவிகள் பயின்று வரும் இப்பள்ளி தொடங்கும் நேரத்திலும், முடியும் வேளையிலும் பஸ் நிறுத்தத்தில் வாலிபர் சிலர் தொல்லை கொடுப்பதாகவும், பஸ்களில் மாணவிகளை முறையாக ஏற்றி செல்வதில் உரிய பாதுகாப்பின்றி கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

    மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிடவும், போக்குவரத்தை சீர் செய்திடவும் பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் சங்கம் கல்வி மேலாண்மை குழு மூலமாக பேட்டை போலீஸ் நிலையத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் போலீசாரின் போதிய நடவடிக்கை இன்றி மாணவிகள் இன்னலுக்கு ஆளாகி வருவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் மாணவிகளின் பெற்றோர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று மதியம் பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒன்று திரண்டனர்.

    மாணவிகளிடம் கேலி, கிண்டல் செய்வது, தவறாக அணுகுவது உள்ளிட்ட அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாணவிகள் பஸ்சில் ஏறுவது மற்றும் இறங்குவதில் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.அந்த வேளைகளில் போலீசார் மாணவிகளின் நலம் கருதி போக்குவரத்தை சீர் செய்திடவும் , மாணவி களுக்கு தொல்லை தரும் நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்தனர்.

    அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய டவுன் உதவி கமிஷனர் சுப்பையா பஸ் நிறுத்தத்தில் உரிய போலீசார் பாது காப்பு பணிகளை மேற்கொள்ள வும், போக்கு வரத்தினை சீர் செய்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி தெரி வித்ததையடுத்து அவர் கள் கலைந்து சென்றனர்.

    • அடியார்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
    • பண்ருட்டி யூனியன் அலுவலகம் அருகில் இருந்து திருமுறை ஊர்வலம் நடைபெற்றது.

    கடலூர்:

    திருவாசகம் என்பது தமிழில் பாடப் பெற்ற ஒரு பக்தி நூலாகும். இறைவன் மீதான துதிப்பாடல்களை சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் உலகத்தில் வாழும் அனைத்து உயிர்களுக்காகவும் இறைவனிடம் அழுதும், தொழுதும் பாடியதாகும். இந்த திருவாசகத்தை திருவாசக சித்தர் திருக்கழுகுன்றம் தாமோதரன் உலகம் முழுவதிலும் உள்ள சிவன் கோவிலுக்கு குழுவினரோடு சென்று முற்றோதல் நிகழ்த்தி வருகிறார் கடலூர் மாவட்டம், பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் திருவிழா இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில் திருவாசக சித்தர் திருக்கழு குன்றம் தாமோதரன் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கி பண்ணி சையுடன் திருவாசகப் பாடல்களை பாடினார்.

    விழாவிற்கு வர்த்தக சங்கத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். வர்த்தக சங்க மாவட்ட செயலாளர் வீரப்பன் முன்னிலை வைத்தார். விழாவில் பண்ருட்டி எம்.எல்.ஏ., வேல்முருகன், பண்ருட்டி நகர மன்ற தலைவர் ராஜேந்திரன், துணைத்தலைவர் சிவா, முன்னாள் அமைச்சர் எம்.சி. தாமோதரன், நகைக்கடை அதிபர் வைரக்கண்னு, எஸ்.பி அருள், தட்சணா கேஸ் அதிபர் வக்கீல் தட்சிணாமூர்த்தி, வக்கீல் தமிழரசன், அகில இந்திய முந்திரி சங்க தேசிய செயலாளர் ராமகிருஷ்ணன், பிரதிபா கேஷ்யூஸ். அதிபர் மாயகிருஷ்ணன், தமிழ்நாடு மளிகை வியாபாரிகள் சங்க மாநில தலைவர் கே.என்.சி. மோகன், வானவில் ராஜா மற்றும் அடியார்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு திருவதிகை வீரட்டா னேஸ்வரர் கோவில் விழாக்கோலம் பூண்டுள்ளது. முன்னதாக பண்ருட்டி யூனியன் அலுவலகம் அருகில் இருந்து திருமுறை ஊர்வலம் நடைபெற்றது.

    • இன்று அதிகாலை தூக்கணாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தவச்செல்வம் மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர்.
    • 16 பேர் மீது வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த இரண்டாயிரம் விளாக பகுதியில் தென்பெண்ணையாறு உள்ளது. இந்த பகுதியில் இருந்து மாட்டுவண்டிகள் மூலம் மணல் திருடிச் சென்று தங்கள் வீடு உள்ள பகுதிகளில் கொட்டுவைக்கின்றனர். பின்னர் வாகனங்கள் மூலமாக மணல் கடத்தப்பட்டு வருவதாகவும் தூக்கணாம்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்று அதிகாலை தூக்கணாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தவச்செல்வம் மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். வீடுகள் முன்பாக ஆற்று மணல் குவியல் குவியலாக இருந்தது.

    இந்த மணலை 2 வாகனங்களில் ஏற்றும் பணியில் ஒரு சிலர் ஈடுபட்டு வந்தனர். மினி லாரி, மர்ம நபர்களை பிடிக்க போலீசார் முயன்ற போது பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர். போலீசாரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் மர்ம நபர்கள் தப்பியோடினர். இதையடுத்து மணல் ஏற்றிக் கொண்டிருந்த 2 மினி லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தூக்கணாம்பாக்கம் போலீசார், புதுவை மாநிலம் கொம்பாக்கம் வேல்முருகன், குருவிநத்தம் நடராஜன் உள்ளிட்ட 16 பேர் மீது வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் வீடுகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் குவியல் குவியலாக கொட்டப்பட்டுள்ள மணலை பறிமுதல் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • தளவாய்பட்டி கிராம மக்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் இன்று காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள தளவாய்பட்டி கிராம மக்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் இன்று காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பேச்சுவார்த்தை

    இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தளவாய்பட்டி கிராமத்தில் சுமார் 150 வீடுகள் உள்ளன. எங்கள் கிராமத்தில் மாதம் ஒருமுறை தான் குடிநீர் வருகிறது. முறையாக குடிநீர் வினியோகம் செய்ய ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களை பலமுறை நேரில் சந்தித்து மனு கொடுத்தோம்.

    நடவடிக்கை இல்லை

    ஆனால் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. மேலும் குடிநீர் வழங்குவது எங்களது வேலை இல்லை என்று சொல்கிறார்கள்.

    எங்கள் பகுதியில் ஆழ்துளை கிணறும் இல்லை.

    இதனால் தண்ணீர் இல்லாமல் தினசரி வேலைக்கு செல்வதற்கும் முடியவில்லை. மேலும் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    எனவே எங்களுக்கு முறையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

    காலி குடங்களுடன் பெண்கள் ஊராட்சி மன்றம் முற்றுகை போராட்டம்

    ஜெயங்கொண்டம், 

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் துளாரக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட மேற்கு தெரு, ரோட்டு தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 40 க்கும் மேற்பட்ட குடியிருப்புக்கள் உள்ளது. இந்த பகுதியில் நீண்ட நாட்களாக தண்ணீர் சரிவர வரவில்லை. இதனால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். பலமுறை முறையிட்டும் எந்த பலனும் இல்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். முற்றுகையிட்ட பெண்களிடம், ஊராட்சி மன்ற தலைவர் செந்தில், துணைத் தலைவர் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். பெண்களின் முற்றுகை போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • 15 குடும்பங்களுக்கு கடந்த 1997-ம் ஆண்டு விவவாயி ஒருவரிடம் விவசாய தரிசு நிலத்தை ஆதிதிராவிட நலத்துறை மூலம் விலைக்கு வாங்கி அருந்ததியர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
    • மக்கள் சுமார் 20 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பாதையில் செல்லக்கூடாது என ஊருக்கு அருகில் உள்ள விவசாய நில உரிமையாளர்கள் சிலர் கூறியுள்ளனர்.

    சங்ககிரி:

    சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், வடுகப் பட்டி ஊராட்சி, தாதவராயன்குட்டை கிராமம், புதுகாலனி அருந்ததியர் தெருவைச் சேர்ந்த 15 குடும்பங்களுக்கு கடந்த 1997-ம் ஆண்டு விவவாயி ஒருவரிடம் விவசாய தரிசு நிலத்தை ஆதிதிராவிட நலத்துறை மூலம் விலைக்கு வாங்கி அருந்ததியர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. அதனையடுத்து, அங்கு வீடு கட்டி வசித்து வந்தனர். இந்த மக்கள் சுமார் 20 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பாதையில் செல்லக்கூடாது என ஊருக்கு அருகில் உள்ள விவசாய நில உரிமையாளர்கள் சிலர் கூறியுள்ளனர். அதனையடுத்து, நேற்று மதியம் 15 குடும்பத்தினரும் வடுகப்பட்டி வி.ஏ.ஓ., அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். நாங்கள் பயன்படுத்தி வந்த பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சர்வே செய்து தார் சாலை அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதனையடுத்து வடுகப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் முத்துசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர். முற்றுகை போராட்டம் குறித்து தகவல் அறிந்த சங்ககிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனையடுத்து, மக்கள் சங்ககிரி வந்து ஆர்.டி.ஓ., லோகநாயகியிடம் புகார் அளித்தனர். அப்போது அவர், பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை அளவீடு செய்யும் வரை விவசாய நில உரிமையாளர்கள் தடுக்க கூடாது என உத்திரவிட்டார். அதனையடுத்து அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    • கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    • மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

    சென்னை:

    மணிப்பூர் கலவரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நுங்கம்பாக்கத்தில் சாஸ்திரி பவனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சென்னை மாவட்ட செயலாளர் செல்வா தலைமையில் நடந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

    • மீன் பிடிப்பதில் தகராறு தொடர்பாக ஐ.ஜி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்
    • முற்றுகையால் திருச்சியில் இன்று காலை பரபரப்பு நிலவியது

    திருச்சி, ஜூலை.20-

    திருச்சி மாவட்டம் நத்தமாடிபாட்டி கீழகுறிச்சி கிராமத்தில் கடந்த 300 வருடங்களுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்து வரும் ஊர் பொதுகுளத்ததை அப்பகுதி கிராம மக்கள் ஆடுமாடுகளுக்கு தண்ணீர் காட்டுவதற்காகவும், மீன் பிடிப்பதற்காகவும் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் பஞ்சாயத்து தலைவர் வந்த பிறகு கடந்த 6 வருட காலமாக ஊர் பஞ்சாயத்து கட்டுபாட்டில் சென்ற நிலையில், அதில் மீன்குஞ்சுகள் விடப்படாமல் இருந்தது.இந்நிலையில் ஊர் முக்கியஸ்தர்கள் சேர்ந்து கடந்த மாதத்திற்கு முன்பு மீன்குஞ்சுகள் விட்டு, நேற்று மீன் பிடிக்க சென்ற போது, அங்கு வந்த ஒருவர் இந்த குளம் தங்களுடைய கட்டுபா ட்டில் உள்ளது என்று கூறி தனக்கு ஒரு தொகையை கொடுத்துவிட்டு, மீன்பிடி யுங்கள் என்று கூறியதில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து அந்த நபர் திரு வெறும்பூர் காவல்நி லையத்தில் கொடுத்த புகாரின்பேரில் இன்று விடியற்காலை 4 மணிக்கு வீட்டில் புகுந்து காவல்து றையினர் 6 பேரை கைது செய்துள்ளனர்.இதனை கண்டித்து இன்று திருச்சி மத்திய மண்டல ஐஐி அலுவலகத்தை அக்கிராமத்தை சேர்ந்த 150 பேர் முற்றுகையி ட்டுள்ளனர். எந்தவித முகாந்தி ரமும் இல்லாமல் கைது செய்ய ப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றுகூறி கோரிக்கைவிடுத்து போரா ட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ×