search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முற்றோதல்"

    • அடியார்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
    • பண்ருட்டி யூனியன் அலுவலகம் அருகில் இருந்து திருமுறை ஊர்வலம் நடைபெற்றது.

    கடலூர்:

    திருவாசகம் என்பது தமிழில் பாடப் பெற்ற ஒரு பக்தி நூலாகும். இறைவன் மீதான துதிப்பாடல்களை சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் உலகத்தில் வாழும் அனைத்து உயிர்களுக்காகவும் இறைவனிடம் அழுதும், தொழுதும் பாடியதாகும். இந்த திருவாசகத்தை திருவாசக சித்தர் திருக்கழுகுன்றம் தாமோதரன் உலகம் முழுவதிலும் உள்ள சிவன் கோவிலுக்கு குழுவினரோடு சென்று முற்றோதல் நிகழ்த்தி வருகிறார் கடலூர் மாவட்டம், பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் திருவிழா இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில் திருவாசக சித்தர் திருக்கழு குன்றம் தாமோதரன் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கி பண்ணி சையுடன் திருவாசகப் பாடல்களை பாடினார்.

    விழாவிற்கு வர்த்தக சங்கத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். வர்த்தக சங்க மாவட்ட செயலாளர் வீரப்பன் முன்னிலை வைத்தார். விழாவில் பண்ருட்டி எம்.எல்.ஏ., வேல்முருகன், பண்ருட்டி நகர மன்ற தலைவர் ராஜேந்திரன், துணைத்தலைவர் சிவா, முன்னாள் அமைச்சர் எம்.சி. தாமோதரன், நகைக்கடை அதிபர் வைரக்கண்னு, எஸ்.பி அருள், தட்சணா கேஸ் அதிபர் வக்கீல் தட்சிணாமூர்த்தி, வக்கீல் தமிழரசன், அகில இந்திய முந்திரி சங்க தேசிய செயலாளர் ராமகிருஷ்ணன், பிரதிபா கேஷ்யூஸ். அதிபர் மாயகிருஷ்ணன், தமிழ்நாடு மளிகை வியாபாரிகள் சங்க மாநில தலைவர் கே.என்.சி. மோகன், வானவில் ராஜா மற்றும் அடியார்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு திருவதிகை வீரட்டா னேஸ்வரர் கோவில் விழாக்கோலம் பூண்டுள்ளது. முன்னதாக பண்ருட்டி யூனியன் அலுவலகம் அருகில் இருந்து திருமுறை ஊர்வலம் நடைபெற்றது.

    ×