search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shock"

    • தினந்தோறும் வீட்டில் இருந்து ஆட்டோவில் ஏறி பள்ளிக்கு சென்று வருவார்.
    • தன்னுடைய தாய் வீட்டு வேலை செய்ய சொல்லியதாக கூறியுள்ளார்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா ராஜகிரி ஜின்னா தெருவை சேர்ந்தவர் முகமது ரபீக் (வயது 50).

    இவர் மலேசியாவில் உள்ள ஒரு பள்ளிவாசலில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செளவுதா பேகம் (வயது 40).இவருடைய மகள் ஹாரிஸா (வயது 13).

    இவர் ராஜகிரியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தினந்தோறும் வீட்டில் இருந்து ஆட்டோவில் ஏறி பள்ளிக்கு சென்று வருவார்.

    இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து மாணவி ஹாரிஸா வீடு திரும்பவில்லை. இதனால் அவருடைய தாயார் மகள் வீட்டிற்கு வரவில்லை என்று பள்ளிக்கு தேடி வந்துள்ளார்.

    அப்பொழுது ஹாரிஸா காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்களும், பெற்றோர்களும், ஊர் மக்களும் பள்ளி முன்பு கூட்டமாக குவிந்தனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பாபநாசம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது

    சம்பவ இடத்திற்கு பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி, சப் - இன்ஸ்பெக்டர்கள் இளமாறன், குமார், மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர்.

    அப்பொழுது அங்குள்ள சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து சோதனை செய்த போது அவர் பள்ளி முடிந்து பள்ளியிலிருந்து நடந்து சென்று ராஜகிரி பகுதியில் பஸ்சில் ஏறி சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர்.

    நேற்று இரவு பள்ளி மாணவி ஹாரிஸா கும்பகோணத்தில் பஸ்சில் ஏறி சென்னைக்கு சென்று ள்ளார். அங்கு கீழ்பாக்கத்தில் இறங்கியுள்ளார்.

    அங்கு தனியாக வந்து கொண்டிருந்த பள்ளி மாணவி ஹாரிஸாவை பார்த்த சென்னை பெருநகர காவல் ரோந்து பணி போலீசார்கள் அந்த மாணவியை மீட்டு விசாரணை செய்ததில் தன்னுடைய தாயார் வீட்டு வேலை செய்ய சொல்லி கூறியதாக கூறியுள்ளார்.

    அதனால் கோபத்தில் உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக சென்னைக்கு வந்து விட்டேன் என்று கூறியுள்ளார். உடனே குரோம்பே ட்டையில் உள்ளஅவரது சித்தப்பாவை வரவழைத்து அவரிடம் சென்னை கீழ்ப்பாக்கம் போலீசார்மாணவி ஹாரி சாவை ஒப்படைத்தனர்.

    பின்னர் மகள் கிடைத்த வுடன் ராஜகிரியிலிருந்து அவருடைய பெற்றோர்கள், உறவினர்கள் ஹாரிஸாவை அழைத்து வரசென்னைக்கு விரைந்துள்ளனர்.

    • கல்லூரி மாணவி தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
    • பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.

    கடலூர்:

    கடலூர் அடுத்த வெங்கடாம்புரம் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று தனது நண்பரை பார்ப்பதற்காக வடலூர் பகுதிக்கு 17 வயது கல்லூரி மாணவி செல்வதாக தனது பெற்றோர்களிடம் தெரிவித்து விட்டு சென்றார். இந்த நிலையில் கல்லூரி மாணவி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மாயமான மாணவியை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து வடலூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மாயமான கல்லூரி மாணவியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • நல்ல பாம்பு குட்டி ஒன்று ஆசிரியையின் மொபட்டில் புகுந்ததை கண்டு அதிர்ச்சி.
    • நல்ல பாம்பு குட்டியை பிடித்து வெளியே கொண்டு வந்து காட்டு பகுதியில் விட்டனர்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த மருதங்காவெளியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் ஆசரியர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி செல்வது வழக்கம்.

    இந்நிலையில், வழக்கம்போல் ஆசிரியை ஒருவர் தன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பள்ளிக்கு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து அவ்வழியாக வந்த சிலர் நல்ல பாம்பு குட்டி ஒன்று ஆசிரியையின் மொபட்டில் புகுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கத்தி கூச்சலிட்டனர்.

    உடனே, அப்பகுதி பேரூராட்சி கவுன்சிலர் செந்தில்குமார், முத்துப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு வந்த நிலைய அலுவலர் சுரேஷ் சந்திரகாந்த் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் திரை சீலன், அருள் ஜோதி, பாலாஜி அமுதன் ஆகியோர் நீண்ட நேரம் போராடி மொபட்டில் இருந்த நல்ல பாம்பு குட்டியை பிடித்து வெளியே கொண்டு வந்து காட்டு பகுதியில் விட்டனர். இதனால், பள்ளி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து பேரூராட்சி கவுன்சிலர் செந்தில்குமார் கூறும்போது:-

    பள்ளியின் அருகில் கருவை காடுகள் மண்டியிருப்பதால் அங்கிருந்து அடிக்கடி பாம்புகள், விஷபூச்சிகள் வெளியேறி குடியிருப்பு பகுதிகள் வருகிறது. எனவே, கருவை மரங்களை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • தங்க சங்கிலியை காணாததை கண்டும் அதிர்ச்சி அடைந்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கீழவாசல் ஆட்டு மந்தை தெருவில் படைவெட்டி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர்.

    இந்த நிலையில் நேற்று இரவு கோவிலில் வழக்கமான பூஜைகள் முடிந்து நடை சாத்தப்பட்டது. இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் கதவு திறந்து கிடப்பதை பார்த்தும், அம்மன் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை காணாததை கண்டும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரித்தனர். அதில் நள்ளிரவில் மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து அம்மன் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை திருடி சென்றது தெரிய வந்தது.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தன்னுடைய வீட்டில் அாிசி பையில் தனது நகைகளை வைத்திருந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாதாக்கோட்டை மேல தெருவை சேர்ந்தவர் அலெக்ஸ்சாண்டர்.

    இவரது மனைவி ஜெசிந்தா (வயது 49). இவர் தன்னுடைய வீட்டில் அாிசி பையில் தனது நகைகளை வைத்திருந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் அரிசி பையில் வைத்திருந்த நகையை காணவில்லை. அதிர்ச்சியடைந்த அவர் நகையை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது குறித்து அவர் 14 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்று விட்டதாக தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அபிராமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 14 பவுன் நகையை யாரும் திருடி சென்று விட்டார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செஞ்சி அருகே கடைக்கு சென்ற 10-ம் வகுப்பு மாணவன் திடீர் மாயமானார்.
    • கடைவீதிக்கு சென்று வருவதாக சொல்லிவிட்டு சென்றவன் மீண்டும் விடு திரும்பவில்லை.

    விழுப்புரம்:

    செஞ்சி அருகே அனந்தபுரம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன். அவரது மகன் சூர்யா (வயது 15).அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மன்தினம் விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தவன் மாலையில் கடைவீதிக்கு சென்று வருவதாக சொல்லிவிட்டு சென்றவன் மீண்டும் விடு திரும்ப வில்லை.அதிர்ச்சி அடைந்த மோகன் தனது மகனை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் மோகன் கிடைக்கவில்லை. இது குறித்து மோகன் அனந்தபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து சூர்யா என்ன ஆனார், எங்கு சென்றார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாய்கள் மூலம் வேதாரண்யம் வரை தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
    • 5 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் பீச்சியடித்து வெளியேறி வருகிறது.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாய் நேற்று உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக ஆற்றில் கலந்து வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் வாயிலாக திருவாரூர் வழியாக நாகை மாவட்டம் வேதாரண்யம் வரை குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

    இந்நிலையில் கொரடா ச்சேரி அருகே அம்மையப்பன் என்ற இடத்தில் சாலை ஓரத்தில், கொள்ளிடம் கூட்டு குடிநீரின் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, 5 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் பீச்சியடித்து வெளியேறி வருகிறது.

    இதனால் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி அருகிலுள்ள ஓடம்போக்கி ஆற்றில் கலந்து வருகிறது.

    இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு குழாயை உடைப்பு குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.

    உடைப்பு உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் கும்பகோணத்தில் உள்ள ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்று விட்டார்.
    • பீரோவை உடைத்து 3 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா இனாம் கிளியூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன்(வயது 45) . இவர் வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் கும்பகோணத்தில் உள்ள ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்று விட்டார்.

    திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து 3 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் வலங்கைமான் சப்- இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அரசு இசைப்பள்ளியில் நடப்பாண்டில் 2 மாணவர்கள் மட்டுமே சேர்க்கை நடைபெறுகிறது.
    • கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் மாணவ, மாணவியா் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து தற்போது 2 போ் என்ற அளவில் இருப்பது இசை ஆா்வலா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ராமநாதபுரம்

    தமிழகத்தில் கடந்த 2000ம் ஆண்டில் தி.மு.க, ஆட்சியின் போது ராமநாதபுரம் உள்பட 17 மாவட்டங்களில் தமிழ் வளா்ச்சிப் பண்பாட்டு மற்றும் இந்து சமய அறநிலை யத்துறை சாா்பில் அரசு இசைப் பள்ளி தொடங்கப் பட்டது. அந்த பள்ளிகளில் 3 ஆண்டுகளுக்கான சான்றிதழ் படிப்பு அறிமு கப்படுத்தப்பட்டுள்ளது.

    அதில் 12 முதல் 25 வயது வரையில் உள்ள இருபாலரும் சோ்க்கப்பட்டு வருகின்றனா்.ராமநாதபுரம் மாவட்ட அரசு இசைப் பள்ளி அரண்மனை பகுதியில் மாதம் ரூ.11 ஆயிரம் வாடகைக் கட்டி டத்தில் செயல்பட்டு வருகிறது.

    இங்கு குரலிசை, பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில், தேவாரம், மிருதங்கம், வயலின் ஆகியவை கற்பிக்கப் படுகிறது. ஆண்டுக் கட்டண மாக மாணவா்களிடம் ரூ.350 பெறப்படுகிறது. மாதந்தோறும் அரசு உதவி யாக ரூ.400 மாணவா்களுக்கு வழங்கப்படுகிறது.

    பள்ளியில் தலைமை ஆசிரியா் மற்றும் தவில், வயலின் தவிர அனைத்து பிரிவுகளுக்கும் என 5 ஆசிரியா்கள் உள்ளனா். ஒவ்வொரு பிரிவிலும் ஆண்டுக்கு 20 போ் என மொத்தம் 140 போ் வரை சோ்க்கலாம் என கூறப்படுகிறது.

    கடந்த 2011 ம் ஆண்டில் மட்டும் இசைப் பள்ளியில் 112 போ் சோ்ந்துள்ளனா். அதற்குப் பிறகு மாணவ, மாணவியா் சோ்க்கை படிப்படியாகக் குறைந்தது.

    ராமநாதபுரத்தில் உள்ள அரசு இசைப் பள்ளியில் கடந்த 2018-ம் ஆண்டில் 38 பேரும், 2019-ம் ஆண்டில் 12 பேரும், 2020-ம் ஆண்டில் 6 பேரும், கடந்த 2021 ம் ஆண்டில் 16 பேரும் சோ்ந்து உள்ளனா். நடப்பு ஆண்டில் ஜூன் மாதம் 2 போ் மட்டுமே சோ்ந்துள்ளனா். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் மாணவ, மாணவியா் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து தற்போது 2 போ் என்ற அளவில் இருப்பது இசை ஆா்வலா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • விருத்தாசலம் அருகே ஏரியில் தீ பற்றி எரிந்ததால் கிராமத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
    • நேற்று இரவு திடீரென, மர்மமான முறையில் ஏரியில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

    கடலூர்:

    விருத்தாசலத்தை அடுத்து மங்கலம்பேட்டைஅருகே பள்ளிப்பட்டு கிராமத்தில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரி முழுவதும் நிறைய கருவேல மரங்கள், விழல்கள் மற்றும் செடி, கொடிகளும் அடர்ந்து, வளர்ந்துக் கிடக்கிறது. நேற்று இரவு திடீரென, மர்மமான முறையில் ஏரியில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

    இந்த தீயானது கட்டுக் கடங்காமல் மள, மளவென பரவியது. கிராமப் பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், மங்கலம்பேட்டை போலீசாரும், மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் அய்யப்பன் தலைமையில், தீயணைப்பு படை வீரர்கள் ஸ்ரீ ரங்கன், கனகராஜ், செல்வம், மற்றும் ஓட்டுநர் அசோக் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று, தீயை அணைத்தனர். ஏரியின் மொத்த பரப்பளவான சுமார் 40 ஏக்கரில், சுமார் 10 ஏக்கர் அளவுக்கு தீயில் கருகி நாசமானது. 

    மலேசியாவின் புதிய மன்னராக சுல்தான் அப்துல்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் வரும் 31ம் தேதி பதவியேற்க உள்ளார். #Malaysiaking #Malaysiakingabdicates #SultanAbdullah
    கோலாலம்பூர்:

    மலேசியா நாட்டில் மன்னரின் முடியாட்சியின்கீழ், கூட்டாட்சி முறையிலான அரசியல் சட்டம் அமலில் உள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மன்னர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மன்னரின் தலைமையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர், துணைப் பிரதமர் ஆகியோர் அந்நாட்டின் ஆட்சியை நடத்தி, நிர்வகித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மலேசியா மன்னராக கடந்த 2016-ம் ஆண்டு இறுதியில் பதவியேற்ற மன்னர் ஐந்தாம் சுல்தான் முஹம்மது, தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே கடந்த 6-ம் தேதி பதவி விலகினார். 

    கடந்த ஆண்டு மருத்துவ விடுப்பில் சென்ற மன்னருக்கு, ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் ஒரு முன்னாள் மிஸ் மாஸ்கோ அழகியுடன் திருமணம் நடந்ததாக சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் வெளியாகின. இந்த தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் மன்னரின் ராஜினாமா அமைந்துள்ளதாக கருதப்படுகிறது. ஆனால், இந்த வதந்திகள் தொடர்பாக மன்னரின் அரண்மனை வட்டாரங்கள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

    பல்லாயிரம் ஆண்டுகாலமாக இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்துவரும் மலேசியாவில், 9 மாநிலங்களில் அரச பரம்பரையினர் ஆட்சி செலுத்தி வருகின்றனர். இந்த மாநிலங்களில் உள்ள மன்னர் குடும்பத்தில் உள்ளவர்கள், சுழற்சி முறையில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்வு செய்யப்பட்டு மன்னராக முடிசூட்டப்படுகின்றனர். 

    அவ்வகையில், மன்னர் ஐந்தாம் சுல்தான் முஹம்மது பதவி விலகியதைத் தொடர்ந்து, அடுத்த மன்னரைத் தேர்ந்து எடுப்பதற்கான நடைமுறை இன்று தொடங்கியது. இதற்காக நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில், சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹமது ஷா, புதிய மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் நாட்டின் 16வது மன்னர் ஆவார். புதிய மன்னர் சுல்தான் அப்துல்லா, ஜனவரி 31-ம் தேதி பதவியேற்க உள்ளார். 

    விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்ட சுல்தான் அப்துல்லா, உலக கால்பந்து அமைப்பான பிபா உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு அமைப்புகளில் பொறுப்பு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. #Malaysiaking #Malaysiakingabdicates #SultanAbdullah
    காமநாயக்கன்பாளையம் அருகே மின் கம்பத்தில் உள்ள தெருவிளக்கை சரி செய்தபோது மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர் இறந்தார். நிவாரணம் வழங்கக்கோரி கோவை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
    காமநாயக்கன்பாளையம்:

    காமநாயக்கன்பாளையம் அருகே உள்ள கோவில் பாளை யம் லட்சுமிநகரை சேர்ந்த முத்தான் என்பவரது மகன் வீரக்குமார் (வயது 27). இவர் பொங்கலூரில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று காட் டூர் அருகே வெள்ளநத்தம் ஆதிதிராவிடர் காலனி பகுதி யில் உள்ள மின்கம்பத்தில் ஏறி, மின்விளக்கை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வீரக் குமார் மீது மின்சாரம் பாய்ந் தது. இதில் மின்கம்பத் தில் இருந்து வீரக்குமார் தவறி கீழே விழுந்தார்.

    இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு கோவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வீரக்குமார் இறந் தார். இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்வாரிய ஊழியர் மின்சாரம் பாய்ந்து இறந்து சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற் படுத்தி உள்ளது.

    இதற்கிடையே வீரக் குமாரின் உடலை பார்க்க மின்வாரிய அதிகாரிகள் யாரும் வரவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தமிழ்நாடு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினர் அவருடைய இறப்புக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அவருடைய மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண் டும்.

    மேலும் ஒப்பந்த தொழி லாளர்களுக்கு அரசு அறிவித்து உள்ள கருணைத்தொகை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கோவை அரசு ஆஸ்பத்திரியில் உடலை வாங்க மறுத்து தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தி னர். இதனை தொடர்ந்து அவர்கள் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    ×