search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "security forces"

    ஜம்மு காஷ்மீரின் டிரால் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். #TralEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் டிரால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அந்த பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியாக் சுட தொடங்கினர். 



    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை நோக்கி சரமாரியாக சுட்டனர். இந்த தாக்குதலில்
    ஜெய்ஷ் இ மொகமது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். அவனிடம் இருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களும், வெடிமருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

    பயங்கரவாதிகள் நடமாட்டத்தை தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது என பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். #TralEncounter
    ஒடிசா மாநிலத்தின் மால்கங்கிரி மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 மாவோயிஸ்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். #NaxalsKilled
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதியில் போலீசாரும் ராணுவமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. மாவோயிஸ்டுகள் குறித்த தகவல் கிடைத்தால், அப்பகுதியை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி மாவோயிஸ்டுகளை அழித்து வருகின்றனர்.

    அவ்வகையில் மால்கங்கிரி மாவட்டம் கலிமேடா பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக இன்று காலை தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சுற்றி வளைத்தனர். அப்போது இரு தரப்பினருக்குமிடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 5 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அங்கு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. #NaxalsKilled
    மானாமதுரை ரெயில்நிலையத்தில், பாதுகாப்பான பயணம் குறித்து ரெயில்வே பாதுபடையினர் பாட்டுப்பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    மானாமதுரை:

    மானாமதுரை ரெயில் நிலையத்தில் பாதுகாப்பான பயணம் குறித்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் பாட்டுப்பாடி, தாளம் தட்டி வித்தியாசமான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, ரெயில்களில் பட்டாசு உள்ளிட்ட வெடி பொருட்களை எடுத்து செல்வது குறித்த விழிப்புணர்வை நாடு முழுவதும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஏற்படுத்தி வருகின்றனர்.

    அதன்படி மதுரை கோட்ட ரெயில்வே பாதுகாப்பு படை ஆணையர் மொய்தீன் உத்தரவுப்படி மானாமதுரை ரெயில் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் ரெயில்வே போலீசார், பயணிகளிடம் பாரம்பரிய முறைப்படி வேட்டி, தலைப்பாகை அணிந்து தண்டோரா போட்டு ஆடலுடன் பாட்டுப்பாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    அவர்கள் ரெயில்களில் பட்டாசு உள்ளிட்ட வெடிபொருட்களை கொண்டு செல்ல கூடாது, ரெயில்நிலையத்தில் சந்தேகப்படும்படி பொருட்கள் இருந்தால் அதை போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும், விதிகளை மீறி பட்டாசு கொண்டு சென்றால் வழக்கு பதிவு செய்யப்படும் என்பதை பாட்டுப்பாடி பயணிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    நேற்று மதியம் மானாமதுரை வழியாக சென்ற ரெயில் பயணிகள், ரெயில்வே பாதுகாப்பு படையினரின் வித்தியாசமான விழிப்புணர்வு பிரசாரத்தை ஆச்சர்யத்துடன் பார்த்து ரசித்தனர்.
    ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #ShopianEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள கட்போரா கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, பாதுகாப்பு படையினர் இன்று இரவு அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினர்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாதுகாப்பு படையினர் சுட்டனர். இந்த தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து, அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. #ShopianEncounter
    ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி ஒருவரை சுட்டுக் கொன்றனர். #KupwaraEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தின் ஹண்ட்வாரா பகுதியில் நேற்று நள்ளிரவு பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினர்.
    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. #KupwaraEncounter
    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புட்காம் அருகே தேசிய எல்லைக் கோட்டுப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படை இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. #JammuKashmir #Encounter
    போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைக்கோட்டுப் பகுதியில் அவ்வப்போது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்திய வீரர்களும் உரிய பதிலடி அளித்து வருகின்றனர்.

    அதேநேரத்தில் மழைக்காலத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயல்கின்றனர். ஐம்மு காஷ்மீர் மாநிலம் பட்காம் அருகே சாகூ அரிசால் பகுதியில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது.



    இந்த துப்பாக்கிச்சூடு குறித்த முழு விவரங்கள் வெளியாகாத நிலையில், இரண்டு முதல் மூன்று பயங்கரவாதிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தி வருவதாக இராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. #JammuKashmir #Encounter

    சிபிஐ இயக்குனர் மீதான நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் கட்சி போராட்டம் அறிவித்திருப்பதால், சிபிஐ அலுவலகங்கள் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #CongressProtests #AlokVerma #CBIVsCBI
    புதுடெல்லி:

    சிபிஐ அமைப்பில் லஞ்ச ஊழல் தொடர்பான மோதல் உச்சகட்டத்தை எட்டியதையடுத்து, சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர்  ராகேஷ் அஸ்தானா இருவரும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர்.

    சி.பி.ஐ இயக்குனர் அலோக் வர்மாவை நீக்கிய விவகாரத்தில் மத்திய அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது. ரபேல் ஒப்பந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களை அலோக் வர்மா சேகரித்து வந்த நிலையில், அவர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

    இந்நிலையில் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியதைக் கண்டித்து நாடு முழுவதிலும் உள்ள சிபிஐ அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும் காங்கிரஸ் கட்சி போராட்டம் அறிவித்தது. டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகம் முன்பு நடைபெறும் போராட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது.



    அதன்படி இன்று அனைத்து சிபிஐ அலுவலகங்கள் முன்பும் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சியினர் தயாராகினர். காங்கிரஸ் கட்சி போராட்டம் அறிவித்துள்ளதால், சிபிஐ அலுவலகங்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    காங்கிரசின் இந்த போராட்டத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெல்லியில் ராகுல் தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. #CongressProtests #AlokVerma #CBIVsCBI
    ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நேற்று மாலை துப்பாக்கி சண்டை நடைபெற்றது. #PulwamaEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பதான் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து, பதான் பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
    அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுடத்தொடங்கினர்.

    பயங்கரவாதிகளின் துப்பாக்கி சூட்டுக்கு பாதுகாப்பு படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் சேத விவரங்கள் வெளியாகவில்லை. தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. #PulwamaEncounter
    காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். #MilitantsKilled
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டத்துக்குட்பட்ட கிரால்ஹார் பகுதி வழியாக ஒரு கார் சந்தேகத்துக்கிடமான வகையில் வேகமாக வருவதை கண்ட பாதுகாப்பு படையினர் அந்த காரை நிறுத்தி சோதனையிட முயன்றனர்.



    சற்றும் எதிர்பாராத வகையில் காரில் இருந்தவர்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டவாறு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். பாதுகாப்பு படையினர் நடத்திய எதிர்தாக்குதலில் காரினுள் இருந்த இரு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். #MilitantsKilled
    காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் ஹிஸ்புல் முஜாகிதின் இயக்கத்தை சேர்ந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #HandwaraEncounter
    ஸ்ரீநகர்:

    காஷ்மீரின் தெற்கில் அமைந்துள்ள ஹந்த்வாராவில் சத்கண்ட் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அந்த பகுதிக்கு சென்ற பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.



    அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    விசாரணையில், அவர்கள் ஹிஸ்புல் முஜாகிதின் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அதில் ஒருவர் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பி ஹெச் டி பட்டம் முடித்ததும் தெரிய வந்தது.

    பயங்கரவாதிகள் நடமாட்டத்தை தொடர்ந்து. அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. #HandwaraEncounter
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எல்லை வழியாக அத்துமீறி ஊடுருவும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை தடுக்கும் முயற்சியில் இன்று மேலும் 2 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். #JKInfiltration #FnfiltrationBid #Militantskilled
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைக்கோட்டு பகுதிகள் வழியாக பயங்கரவாதிகள் அத்துமீறி நுழைவதை தடுக்க பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த சோதனையின் போது நேற்று வரை 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ஒரு வீரரும் வீர மரணம் அடைந்தார்.

    இந்நிலையில், இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா பகுதியில் நடந்த என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன் மூலம் 3 நாட்களில் 7 பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்துகொண்டு இருக்கிறது. #JKInfiltration #FnfiltrationBid #Militantskilled
    ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். #JammuAndKashmir #Kupwara #Encounter
    குப்வாரா:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    குப்வாரா மாவட்டத்தின் ஹந்வாராவுக்கு அருகே உள்ள குளூரா பகுதிகள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாதுகாப்பு படை சார்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பாதுகாப்பு படை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. 



    கடந்த ஆண்டு 220 பயங்கரவாதிகளும், இந்த ஆண்டு இதுவரை 142 பயங்கரவாதிகள் என கடந்த 2 ஆண்டுகளில் 360-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை தலைவர் ராஜீவ்ராய் பட்னாகர் நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #JammuAndKashmir #Kupwara #Encounter

    ×