search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "security forces"

    சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் 4 மாவோயிஸ்டுகளை சிஆர்பிஎப் வீரர்கள் சுட்டுக்கொன்றனர். #ChhattisgarhNaxals #ChhattisgarhEncounter
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வரும் மாவோயிஸ்டுகளை ஒடுக்க பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஏராளமான மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் இன்னமும் உள்ளது.



    இந்நிலையில், சுக்மா மாவட்டம் பீமாபுரம் பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து சிஆர்பிஎப் வீரர்கள் அப்பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். சிஆர்பிஎப் வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் 4 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. #ChhattisgarhNaxals #ChhattisgarhEncounter

    ஈராக்கில் பாதுகாப்பு படைகள் நிகழ்த்திய அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 6 பேர் பலியாகி உள்ளதாகவும், 7 பதுங்குமிடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
    பாக்தாத்:

    ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2017-ம் ஆண்டு பிற்பகுதியில் அங்கு தோற்கடிக்கப்பட்டு விட்டனர். இருப்பினும் அவர்களை முழுமையாக ஒடுக்கி விட முடியவில்லை.குறிப்பாக ஈராக்கின் கிழக்குப்பகுதியில் தியாலா மாகாணத்தில் இன்னும் அவர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் அந்த மாகாணத்தின் தலைநகரான பாகுபா நகரில் இருந்து 2 கி.மீ. வட கிழக்கில் உள்ள ஹாவ்த் அல் வக்ப் பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து கடந்த சில தினங்களாக பாதுகாப்பு படைகள் கடுமையான தாக்குதல்களை நடத்தி வந்தன. இந்த தாக்குதல் நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளது.இதில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 6 பேர் பலியாகி உள்ளதாகவும், 7 பதுங்குமிடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்த நடவடிக்கையில் ராணுவம், மாகாண அதிரடி போலீஸ் படையினர், துணை ராணுவத்தினர் கூட்டாக ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

    மேலும் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் சாலையோரங்களில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 20 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டன. இந்த தகவல்களை மாகாண கவுன்சில் பாதுகாப்பு குழு தலைவர் சாதிக் அல் உசைனி உறுதி செய்தார்.
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #Baramullaencounter #Soporeencounter
    ஜம்மு:

    ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்துக்குட்பட்ட சோபோர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று அதிகாலை அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

    அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில் தொடர்ந்து நீடித்துவரும் துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். #Baramullaencounter #Soporeencounter
    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பத்காம் மாவட்டத்தில் நடந்த சண்டையில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். #JKEncounter #MilitantsNeutralised
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பத்காம் மாவட்டம், கோபால்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று காலை அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகளை சுற்றி வளைத்தனர்.



    அப்போது பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இந்த மோதலில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. #JKEncounter #MilitantsNeutralised
    சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 10 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டு உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Naxalskilled #ChhattisgarhNaxalskilled
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தின் பீஜாப்பூர் மாவட்டத்தில் பாய்ராம்கார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட காட்டுப் பகுதியில் பாதுகாப்பு படையினர் இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த பகுதியில் மறைந்து இருந்த நக்சலைட்கள் பாதுகாப்பு படையினரை நோக்கி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 10 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர்.



    இதுதொடர்பாக, பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறுகையில், கொல்லப்பட்ட நக்சலைட்களின் சடலங்கள் மற்றும் அங்கிருந்து 11 துப்பாக்கிகளும் மீட்கப்பட்டன. தொடர்ந்து, அந்தப் பகுதியில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளனர். #Naxalskilled #ChhattisgarhNaxalskilled
    ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். #PulwamaEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அந்த மாவட்டத்தில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் சரமாரியாக சுடத் தொடங்கினர்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான் என பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பயங்கரவாதிகள் நடமாட்டத்தைத் தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. #PulwamaEncounter
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தில் இன்று ராணுவ வீரர்களுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #militantskilled #Baramulaencounter #Kashmirencounter
    ஜம்மு:

    ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்துக்கு உட்பட்ட பீன்னர் பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று பிற்பகல் அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

    அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில் தொடர்ந்து நீடித்துவரும் துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    ராணுவ தரப்பில் உண்டான இழப்பு தொடர்பாக உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. #militantskilled #Baramulaencounter #Kashmirencounter 
    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். #Pulwamasecurityforces #Pulwamaencounter
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்துக்குட்பட்ட சவுதரி பாக் கிராமத்தை ஒட்டியுள்ள பகுதியில் பாதுகாப்பு படையினர் இன்று வழக்கம்போல் வாகனங்களில் சென்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, அவ்வழியாக வந்த சில பயங்கரவாதிகள் இயந்திர துப்பாக்கிகளால் ரோந்து வாகனத்தின் மீது சரமாரியாக சுட்டனர். பாதுகாப்பு படையினரும் எதிர்தாக்குதல் நடத்தினர்.

    இருதரப்பினருக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகளில் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். இறந்தவனின் பெயர் வாஜித் கான் (எ) இர்பான் அஹமத் ராத்தர் என்று தெரியவந்துள்ளது. #Pulwamasecurityforces #Pulwamaencounter
    ஜம்மு காஷ்மீரின் டிரால் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #PulwamaEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் டிரால் நகரில் உள்ள குல்ஷன்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்களை கண்டதும் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாதுகாப்பு படையினரும் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.



    இந்த என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு ராணுவ வீரர் படுகாயம் அடைந்தார் என பாதுகாப்பு படையை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பயங்கரவாதிகள் நடமாட்டத்தை தொடர்ந்து, அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. #PulwamaEncounter
    ஜம்மு காஷ்மீரில் போலீசாரால் தேடப்பட்டு வந்த லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதி நவீத் ஜாட் உள்ளிட்ட 2 பேர் இன்று நடந்த துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டனர். #JKEncounter #NaveedJattGunnedDown
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் பத்காம் மாவட்டத்தில் உள்ள குத்போரா கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியை இன்று காலையில் சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

    இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நீடித்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பத்காம் மாவட்டத்தில் இணையதள சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டது.



    இந்த சண்டையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி நவீத் ஜாட் உள்ளிட்ட 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். காஷ்மீரின் மூத்தப் பத்திரிகையாளர் சுஜாத் புஹாரி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நவீத் ஜாட் பாகிஸ்தானைச் சேர்ந்தவன். கடந்த பிப்ரவரி மாதம் 6-ம் தேதி ஸ்ரீநகர் மருத்துவமனையில் இருந்து போலீஸ் காவலையும் மீறி தப்பிச் சென்றான். அவனை போலீசார் தேடி வந்த நிலையில், இன்று நடந்த என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளான். #JKEncounter #NaveedJattGunnedDown
    ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். #Pulwama #HizbulMilitants
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பாதுகாப்பு படையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு பதுங்கி இருந்த 2 பயங்கரவாதிகளை கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் இருவரும் ஜன் மொகமது ஷேக் மற்றும் நசிர் உல் இஸ்லாம் என்ற ஹிஸ்புல் முஜாகிதின் அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. 



    கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
    #Pulwama #HizbulMilitants
    ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். #JKEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் டிகுன் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று பயங்கரவாதிகள் இருந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.



    அப்போது பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். சிறிது நேரம் நடந்த இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். சண்டை நடந்த பகுதியில் இருந்து துப்பாக்கிகள், வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. #JKEncounter
    ×