என் மலர்

  நீங்கள் தேடியது "militant killed"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.
  ஸ்ரீநகர்:

  ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  இதையடுத்து அந்த பகுதிக்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்றனர். அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் அவர்களை கண்டதும் துப்பாக்கியால் சுட தொடங்கினர்.

  அவர்களுக்கு பதிலடியாக பாதுகாப்பு படையினரும் சரமாரியாக சுட்டனர். இதில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். #Pulwamasecurityforces #Pulwamaencounter
  ஜம்மு:

  ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்துக்குட்பட்ட சவுதரி பாக் கிராமத்தை ஒட்டியுள்ள பகுதியில் பாதுகாப்பு படையினர் இன்று வழக்கம்போல் வாகனங்களில் சென்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

  அப்போது, அவ்வழியாக வந்த சில பயங்கரவாதிகள் இயந்திர துப்பாக்கிகளால் ரோந்து வாகனத்தின் மீது சரமாரியாக சுட்டனர். பாதுகாப்பு படையினரும் எதிர்தாக்குதல் நடத்தினர்.

  இருதரப்பினருக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகளில் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். இறந்தவனின் பெயர் வாஜித் கான் (எ) இர்பான் அஹமத் ராத்தர் என்று தெரியவந்துள்ளது. #Pulwamasecurityforces #Pulwamaencounter
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜம்மு காஷ்மீரின் குப்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். #Jammukashmir
  ஸ்ரீநகர்: 

  ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் ஹண்ட்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினர் இன்று ஒரு வாகனத்தில் 
  சென்று கொண்டிருந்தனர்.

  அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.  இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாதுகாப்பு படையினர் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.

  இந்த தாக்குதலில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். இதையடுத்து, அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #Jammukashmir
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜம்மு காஷ்மீரின் டிரால் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். #TralEncounter
  ஸ்ரீநகர்:

  ஜம்மு காஷ்மீர் மாநிலம் டிரால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  இதையடுத்து, அந்த பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியாக் சுட தொடங்கினர்.   இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை நோக்கி சரமாரியாக சுட்டனர். இந்த தாக்குதலில்
  ஜெய்ஷ் இ மொகமது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். அவனிடம் இருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களும், வெடிமருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

  பயங்கரவாதிகள் நடமாட்டத்தை தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது என பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். #TralEncounter
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். #JKEncounter #MilitantKilled
  ஸ்ரீநகர்:

  ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தின் தெற்கு பகுதியில் உள்ள தூரு என்ற இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் சிறப்பு படையினரும் அந்த பகுதியை இன்று அதிகாலை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை முன்னேற விடாமல் துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். பாதுகாப்பு படை தரப்பில் ஒரு வீரர் உயிரிழந்தார். தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுகிறது.

  பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பாகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்டர்நெட் சேவைகளை அதிகாரிகள் நிறுத்திவைத்தனர். #JKEncounter #MilitantKilled
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் இன்று நடைபெற்றுவரும் தேடுதல் வேட்டையின் போது துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். #Militantkilled #Pulwamaencounter
  ஸ்ரீநகர்:

  ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்துக்கு உட்பட்ட டார்  கானி குன்ட் கிராமத்தில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இன்று காலை ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சிற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். 

  அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில் தொடர்ந்து நடைபெற்றுவரும் துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. #Militantkilled #Pulwamaencounter
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜம்மு காஷ்மீரில் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவனை போலீசார் சுட்டுக்கொன்றனர். #JKAttack #JKMilitantKilled
  ஸ்ரீநகர்:

  ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் அச்சாபல் பகுதியில் நேற்று இரவு காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவர்கள் மீது பயங்கரவாதிகள் சிலர் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து போலீசாரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டான்.  போலீசாரின் பதிலடியால் மற்ற பயங்கரவாதிகள் பின்வாங்கி தப்பிச் சென்றனர். கொல்லப்பட்ட பயங்கரவாதியின் அடையாளம் மற்றும் அவன் எந்த குழுவை சேர்ந்தவன் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் போலீஸ்காரர் ஒருவரும் காயமடைந்துள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சிகிச்சைக்கு பின் நலமுடன் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  ஆயுதங்களை கொள்ளையடிக்கும் முயற்சியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும், போலீசார் தக்க பதிலடி கொடுத்ததால் ஆயுத கொள்ளை முயற்சி முறியடிக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. தப்பி ஓடிய பயங்கரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. #JKAttack #JKMilitantKilled

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். #AnantnagEncounter
  ஸ்ரீநகர்:

  காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாத் பகுதியில் 3 பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  அதன்பேரில் பாதுகாப்பு படை வீரர்கள் கோகர்நாத் பகுதியில் சென்று தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.

  அப்போது கடோல் எனும் கிராமத்துக்குள் 3 தீவிரவாதிகளும் தஞ்சம் அடைந்து இருக்கும் தகவல் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு வீரர்கள் அந்த கிராமத்தை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.

  ராணுவ வீரர்கள் நாலாபுறமும் சூழ்ந்து கொண்டதை தொடர்ந்து இனி தப்பிச்செல்ல இயலாது என்பதை உணர்ந்த தீவிரவாதிகள், திடீரென பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட தொடங்கினார்கள். இருதரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

  நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் 3 பேரும் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகளும் வைத்திருந்த பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

  அனந்த்நாக் மாவட்டம் முழுவதும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இதற்காக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அந்த மாவட்டம் முழுவதும் செல்போன் தகவல் தொடர்பு சேவை முடக்கப்பட்டுள்ளது. #AnantnagEncounter
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜம்மு-காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதியை இந்திய பாதுகாப்பு படையினர் இன்று சுட்டுக் கொன்றனர். #militantkilled
  ஜம்மு:

  ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் உள்ள கேரன் எல்லைகோட்டுப் பகுதியில் இன்று இந்திய ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் வழக்கம்போல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

  இங்குள்ள வனப்பகுதி அருகே உஸ்த்தாத் கண்காணிப்பு கம்பம் வழியாக பாகிஸ்தானில் இருந்து ஒருவன் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றனர். இதை கவனித்துவிட்ட இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் அவர்களை திரும்பிப் போகும்படி எச்சரித்தனர்.

  அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாத அந்த பயங்கரவாதி, பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டபடி முன்னேறி வந்தான். பாதுகாப்பு படை வீரர்களும் எதிர்தாக்குதல் நடத்தினர்.

  இருதரப்புக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதியை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். கொல்லப்பட்டவனிடம் இருந்து ஏ.கே-47 ரக துப்பாக்கிகள் மற்றும் 4 தோட்டாக்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

  மரங்கள் நிறைந்த அந்த வனப்பகுதியில் வேறு யாராவது பதுங்கி இருக்கிறார்களா? என தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. #militantkilled
  ×