என் மலர்

  செய்திகள்

  சத்தீஸ்கர் மாநிலத்தில் 4 மாவோயிஸ்டுகளை சுட்டுக் கொன்றது துணை ராணுவம்
  X

  சத்தீஸ்கர் மாநிலத்தில் 4 மாவோயிஸ்டுகளை சுட்டுக் கொன்றது துணை ராணுவம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் 4 மாவோயிஸ்டுகளை சிஆர்பிஎப் வீரர்கள் சுட்டுக்கொன்றனர். #ChhattisgarhNaxals #ChhattisgarhEncounter
  ராய்ப்பூர்:

  சத்தீஸ்கர் மாநிலத்தில் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வரும் மாவோயிஸ்டுகளை ஒடுக்க பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஏராளமான மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் இன்னமும் உள்ளது.  இந்நிலையில், சுக்மா மாவட்டம் பீமாபுரம் பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து சிஆர்பிஎப் வீரர்கள் அப்பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். சிஆர்பிஎப் வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் 4 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. #ChhattisgarhNaxals #ChhattisgarhEncounter

  Next Story
  ×