என் மலர்

  நீங்கள் தேடியது "hizbul mujahideen militants"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். #Pulwama #HizbulMilitants
  ஸ்ரீநகர்:

  ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பாதுகாப்பு படையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

  அப்போது அங்கு பதுங்கி இருந்த 2 பயங்கரவாதிகளை கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் இருவரும் ஜன் மொகமது ஷேக் மற்றும் நசிர் உல் இஸ்லாம் என்ற ஹிஸ்புல் முஜாகிதின் அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.   கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
  #Pulwama #HizbulMilitants
  ×