search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "school student"

    • தனியார் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
    • பள்ளி மாணவனின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்தன.

    களியக்காவிளை: 

    கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மெதுகும்மல் நுள்ளிக்காடு பகுதியை சேர்ந்தவர் சுனில். இவரது மகன் அஸ்வின் (11) அதங்கோடு பகுதியிலிலுள்ள தனியார் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மாதம் 24ஆம் தேதி பள்ளிக்கு சென்று தேர்வு எழுதி விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்த அஸ்வினுக்கு அதே பள்ளி சீருடையில் வந்த மாணவன் ஒருவன், குளிர்பானம் ஒன்றை குடிக்க கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த குளிர்பானத்தில் ஆசிட் கலந்து இருந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில் 25ஆம் தேதி முதல் மாணவன் அஸ்வினுக்கு காய்ச்சல் அடித்துள்ளது. அவரது தாயார் ஷோபியா களியக்காவிளை பகுதியை சேர்ந்த தனியார் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றுள்ளனர். தொடர்ந்து அஸ்வினுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, கேரளா மாநிலம் நெய்யாற்றிங்கரை பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மாணவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஆசிட் திரவம் உட்கொண்டதால் இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாகவும் தெரிவித்தனர்.

    இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த தகவலின் அடிப்படையில் களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நெய்யாற்றிங்கரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி  மாணவன் அஸ்வின் இன்று உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் களியக்காவிளை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • கமல்நாத் பண்ருட்டி முத்தையர் மேல்நிலைப்பள்ளியில் 7-ம்வகுப்பு படித்து வருகிறான்.
    • ஓடிஏறுவதற்காக முயற்சித்தபோது தவறிவிழுந்தான். பஸ் சக்கரம் அவரது வலது தொடையில் ஏறியது.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே சின்னசேமக் கோட்டையை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் என்பவர் மகன் கமல்நாத் (12). இவர் பண்ருட்டி முத்தையர் மேல்நிலைப்பள்ளியில் 7-ம்வகுப்பு படித்து வருகிறான். இவன் நேற்று மாலை பள்ளி முடித்து வீட்டிற்கு செல்வதற்காக பண்ருட்டி நகராட்சி பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தான். அப்போது அரசுபேருந்து வழித்தடம் எண் 8 பி பஸ் வந்தது. அந்த பஸ், பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது.

    அதில்ஓடிஏறுவதற்காக முயற்சித்தபோது தவறிவிழுந்தான். பஸ் சக்கரம் அவரது வலது தொடையில்ஏறியது.இதனால்படுக்காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவனை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக கடலூர் கொண்டு செல்லப்பட்டார். அங்குஅவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ், ரங்கநாதன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தூத்துக்குடி அம்மன்கோவில் பகுதியை சேர்ந்த மாணவர்கள் அங்குள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் படித்து வருகின்றனர்.
    • பஸ்சில் இடம்பிடிப்பது தொடர்பாக 6-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருக்கும் மற்றொரு மாணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அம்மன்கோவில் பகுதியை சேர்ந்த மாணவர்கள் அங்குள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்று மாலை பள்ளி பேருந்தில் மாணவர்கள் வீடு திரும்பினர்.

    அப்போது பஸ்சில் இடம்பிடிப்பது தொடர்பாக 6-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருக்கும் மற்றொரு மாணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் 6-ம் வகுப்பு மாணவன் மற்றொரு மாணவனை தாக்கி உள்ளார்.

    இது தொடர்பாக அந்த மாணவன் தன் தந்தையிடம் கூறி உள்ளான். இதனை கேட்டு ஆத்திரமடைந்த அவர் 6-ம் வகுப்பு மாணவன் வீட்டிற்கு சென்று தட்டிக் கேட்டுள்ளார்.

    அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்தரமடைந்த அவர் 6-ம் வகுப்பு மாணவனை தாக்கி உள்ளார்.

    இதில் பலத்த காயமடைந்த மாணவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். இது தொடர்பாக முத்தையாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மகராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் டி.எஸ்.பி. சத்தியராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சந்தோஷ் கடைக்கு செல்வதற்காக சைக்கிளில் சென்று கொண்டிருந்தான்.
    • குமராபுரி பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஒரு தனியார் ஆம்புலன்ஸ் வேன் எதிர்பாராத விதமாக சைக்கிள் மீது மோதியது.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே முருங்கத்தொழுவு ரோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி செர்லின். இவர்களுக்கு சுபாஷ் (15), கவிதன் (13), சந்தோஷ் (12) ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.

    செர்லினுக்கும் அவரது கணவர் சுரேசுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இதையடுத்து செர்லின் தனியாக வசித்து வருகிறார்.

    இவர்களின் மூத்த மகன் சுபாஷ் மற்றும் கடைசி மகன் சந்தோஷ் இருவரும் செர்லினுடன் வசித்து வருகின்றனர். சந்தோஷ் சென்னிமலையில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.

    இந்த நிலையில் செர்லின். ஓட்டல் கடை வைப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். இதனால் சந்தோஷ் பள்ளிக்கு செல்லாமல் அவருக்கு உதவியாக இருந்தார்.

    இதையடுத்து சந்தோஷ் கடைக்கு செல்வதற்காக சைக்கிளில் சென்று கொண்டிருந்தான். அப்போது சென்னிமலை-வெள்ளோடு ரோட்டில் குமராபுரி பகுதியில் சந்தோஷ் சென்று கொண்டிருந்த போது ஒரு தனியார் ஆம்புலன்ஸ் வேன் எதிர்பாராத விதமாக சந்தோஷ் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட சந்தோஷ் படுகாயம் அடை ந்தார். உடனடியாக அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஆம்பு லன்ஸ் மூலம் பெருந்துறை ஐ.ஆர்.டி.டி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சந்தோஷ் பரிதாபமாக இறந்தான்.

    • மாணவன் அங்குள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான்.
    • சரக்கு ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    கோவை

    வெள்ளலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கோபால். தூய்மை பணியாளர். இவரது மகன் திலீப் (வயது 11). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    இன்று கோபால் தனது மகன் திலீப்பை அழைத்து கொண்டு குடியிருப்பு பகுதி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சிறுவன் திலீப் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கோபால் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். இந்த தகவல் கிடைத்ததும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் சிறுவனின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறும்போது' விபத்து நடந்த இடத்தில் பொது வாகனங்கள் செல்லக்கூடிய வழி அல்ல. அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு ஆட்டோவால் சிறுவன் இறந்துள்ளான். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • தாயார் இந்திரா தனது மகன் கிஷோரிடம் கடன் வாங்கி படிக்க வைத்தோம் என கண்டித்துள்ளார்.
    • சைக்கிள் நிறுத்தும் இடத்தில் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்று விட்டார்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அருகே சென்னப்ப நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (40). இவரது மனைவி இந்திரா (35). இவர்களது மகன் கிஷோர் (16).

    இவர் கடந்த ஆண்டு ஈரோடு ெரயில்வே காலனி மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது நடந்த தேர்வில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து அவர் சிறப்பு வகுப்பில் கலந்து கொண்டு படித்து வருகிறார்.

    இதை தொடர்ந்து அவர் மீண்டும் தேர்வு எழுதினார். இதில் அவர் சமூக அறிவியல் பாடத்தில் மீண்டும் தோல்வி அடைந்தாராம். இதனால் கிஷோரின் தாயார் இந்திரா தனது மகன் கிஷோரிடம் கடன் வாங்கி படிக்க வைத்தோம். தேர்ச்சி பெறாததை குறித்து கண்டித்து உள்ளார்.

    இதனால் கிஷோர் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். இதையடுத்து அவர் சைக்கிளை எடுத்து கொண்டு நஞ்சை ஊத்துக்குளி சென்றார். அங்கு சைக்கிள் நிறுத்தும் இடத்தில் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்று விட்டார்.

    ஆனால் அவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. அவரை அக்கம் பக்கம் தேடி பார்த்தும் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவனை தேடி வருகின்றனர்.

    • ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்
    • தண்ணீரில் மூழ்கிய நிலையில் இருந்தான்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே ஆலம்பாடி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சசிகுமார். கொத்தனார். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு ரிகாஸ்(வயது 9) என்ற மகனும், தேவிகாஸ்ரீ(5) என்ற மகளும் உண்டு. இதில் ரிகாஸ் பெரம்பலூரில் உள்ள ரோவர் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.

    இந்த நிலையில் நேற்று காலை ரிகாஸ், தனது மாமாவுடன் அருகே உள்ள ஊராட்சிக்கு சொந்தமான ஏரிக்கு சென்றான். அப்போது அப்பகுதியில் ரிகாஸ் ஒருபுறமும், அவனது மாமா மற்றொரு புறமும் இயற்கை உபாதை கழிக்க சென்றிருந்தனர். பின்னர் அவனது மாமா வந்து பார்த்தபோது ரிகாசை காணவில்லை. இதனால் அவன் வீட்டிற்கு சென்றிருப்பான் என்று நினைத்து, அவர் வீட்டிற்கு வந்தார்.

    ஆனால் ரிகாஸ் வீட்டிற்கு வராததை அறிந்து, அவனை பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் அவனை காணாததால், ஏரிக்கு சென்று பார்த்தனர். அங்கும் அவன் இல்லாததால் திரும்பி வந்து கிராமத்தில் தேடினர். இதையடுத்து மீண்டும் அவர்கள் ஏரிக்கு சென்று, அங்கு மண் எடுக்கப்பட்ட குழியில் நிரம்பிய தண்ணீரில் இறங்கி தேடினர்.

    அப்போது தண்ணீரில் மூழ்கிய நிலையில் இருந்த ரிகாசை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள், ரிகாஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

    • தமிழக அரசு நடத்திய செஸ் போட்டியில் தென்காசி மாவட்ட அளவில் 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான பிரிவில் முதலிடம் பெற்றார்.
    • 44- வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பார்வையாளராக கலந்து கொண்டு வெளிநாட்டு வீரர்களின் அணிவகுப்பில் தலைமை தாங்கி அழைத்துச் சென்றார்.

    சங்கரன்கோவில்:

    பாண்டியாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வரும் மாணவன் வசுந்தரன். இவர் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு நடத்திய செஸ் போட்டியில் தென்காசி மாவட்ட அளவில் 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான பிரிவில் முதலிடம் பெற்றார்.

    பின்னர் 44- வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பார்வையாளராக கலந்து கொண்டு வெளிநாட்டு வீரர்களின் அணிவகுப்பில் தலைமை தாங்கி அழைத்துச் சென்றார். மேலும் தமிழக அரசின் ஏற்பாட்டின் படி விமானத்தில் செஸ் விளையாடினார்.இவரது சகோதரர் கார்த்தி குமார் என்பவரும் 19 வயதுக்குட்பட்ட செஸ் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    வெற்றி பெற்ற வசுந்தரனுக்கு பாண்டியாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியை பராசக்தி தலைமை தாங்கினார்.ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர் மைக்கேல் ராஜ் வரவேற்றுப் பேசினார்.ஆசிரியர்கள் மாரித் தங்கம், ஏஞ்சல் மலர் மெரினா, பெர்ஜிலின், அழகு மகேஸ்வரி, வர்மா, வீரலட்சுமி, சகாயம், ஹெலன், கவிதா, குருவம்மாள், அருணா, ஐஸ்வர்யா, கவிதா மற்றும் மாணவர்களும், பொதுமக்களும பாராட்டி பேசினர்.

    விழாவில் மாணவனுக்கு ரொக்கப் பரிசும், சான்றிதழும், கேடயமும் வழங்கப்பட்டன. ஆசிரியர் வர்மா நன்றி கூறினார்.

    • பள்ளி மாணவர்களுக்கு சீருடை, பேனா வழங்கப்பட்டது.
    • ரோட்டரி சங்க பட்டய தலைவர் அலாவுதீன், ரோட்டரி சங்க தலைவர் சுல்தான் சம்சுல் கபீர், செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.

    கீழக்கரை

    கீழக்கரை ஹைராத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளி வளாகத்தில் ரோட்டரி சங்கத்தின் சார்பில் மாணவிகள் 32 பேருக்கு சீருடையும், மாணவ, மாணவிகள் 500 பேருக்கு பேனா வழங்கும் நிகழ்ச்சியும் தாளாளர் அப்துல் மத்தீன் தலைமையில் நடந்தது.

    ரோட்டரி சங்க பட்டய தலைவர் அலாவுதீன், ரோட்டரி சங்க தலைவர் சுல்தான் சம்சுல் கபீர், செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.

    தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார் வரவேற்றார். பள்ளி நிர்வாகிகள் ரமீஸ், அஜ்ஹர், ஆசிரியர்கள், ரோட்டரி உறுப்பினர்கள் பொருளாளர் சிவகார்த்திக், மருத்துவர் செய்யது ராசிக்தீன், தர்மராஜ், சுந்தரம், சபிர், செய்யது மிதாஹிதின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பூமியான் பேட்டையில் பஸ் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் மூளை சிதறி பரிதாபமாக இறந்துபோனான்.
    • செல்வம். இவர் தள்ளு வண்டியில் வைத்து பாஸ்ட் புட்கடை நடத்திவருகிறார்.

    புதுச்சேரி:

    பூமியான் பேட்டையில் பஸ் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் மூளை சிதறி பரிதாபமாக இறந்துபோனான். புதுவை ரெட்டியார் பாளையம் பவளநகரை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவர் தள்ளு வண்டியில் வைத்து பாஸ்ட் புட்கடை நடத்திவருகிறார். இவரது மகன் கிஷ்வந்த் (வயது 8). இவன் மூலகுளத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்துவந்தான்.

    பன்னீர் செல்வம் தனது மகனை மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். பூமியான் பேட்டையில் ஒரு தனியார் ஓட்டல் அருகே சென்ற போது எதிரே ஒருவர் மோட்டார் சைக்கிளில் குறுக்கே பாய்ந்ததால் அவரின் மீது மோதாமல் இருக்க பன்னீர் செல்வம் திடீர் பிரேக் போட்டார். இதனால் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் வலது புறத்தில் கிஷ்வந்தும் இடது புறத்தில் பன்னீர் செல்வமும் கீழே விழுந்தனர்.

    அந்த நேரத்தில் பின்னால் வந்த தனியார் பஸ் கிஷ்வந்த் மீது மோதியது. இதில் தலை நசுங்கி மூளை சிதறி சம்பவ இடத்திலேயே சிறுவன் கிஷ்வந்த் பரிதாபமாக இறந்து போனான். இது பற்றி தகவல் அறிந்ததும். வடக்கு போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது பற்றி அறிந்த போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டார். தந்தை கண் எதிரே பஸ் சக்கரத்தில் சிக்கி மாணவன் மூளை சிதறி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    பன்னீர் செல்வத்துக்கு ஏற்கனவே 3 மகள்கள் உள்ளனர். ஆண் குழந்தை வேண்டும் என்று விரும்பிய பன்னீர் செல்வம் அதற்காக செயற்கை கருவூற்றல் மூலம் கிஷ்வந்த் பிறந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே தேங்காய்திட்டு மரப்பாலத்தில் இருந்து தனியார் மருத்துவக் கல்லூரி பஸ் ஒன்று காலாப்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தது.

    இந்திராகாந்தி சிலை சதுக்கம் அருகே வந்த போது முன்னால் சென்ற கார் திடீரென வலது புறம் திரும்பியதால் கார் மீது மோதாமல் இருக்க கல்லூரி பஸ் டிரைவர் பஸ்ஸை இடது புறம் திருப்பினார். அப்போது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு கட்டையில் மோதி நின்றது. அதிஷ்ட்ட வசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    • திடீரென வேன் கதவு திறந்ததால் 6-ம்வகுப்பு மாணவன் தவறிவிழுந்து படுகாயமடை ந்தான்.
    • போலீசார் இந்த வாகனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு அருகே மயிலாடும்பாறையில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களை அழைத்து வருவதற்கு சிலர் வேன்களை வைத்துள்ளனர். அதன்படி நேற்று பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு வேன் நரியூத்து பகுதியில் உள்ளது.

    அப்போது திடீரென வேன் கதவு திறந்ததால் அதன் அருகே இருந்த அருள்மணி(11) என்ற 6-ம்வகுப்பு மாணவன் தவறிவிழுந்து படுகாயமடை ந்தான். அக்கம்பக்கத்தினர் மாணவனை மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்குபதிவு செய்து வேனை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இப்பகுதியில் மாணவ-மாணவிகளை பள்ளிகளுக்கு அழைத்துச்செல்ல பள்ளி வாகனங்கள் மட்டுமின்றி தனியாக வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் பயன்படுத்த ப்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான வாகன ங்களுக்கு முறையான ஆவணங்கள் கிடையாது. மேலும் பராமரிப்பு இன்றி காணப்படுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே போலீசார் இந்த வாகனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பள்ளி தலைமையாசிரியர் காலை 8:30 மணிக்கே ஆஜராகி விட வேண்டும்.
    • கூட்ட பொருள் சார்ந்த புத்தகம் இல்லையெனில் தலைமையாசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூரில் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாதாந்திர கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி பேசியதாவது:-

    அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க செய்ய வேண்டும்.அதற்கேற்ப பள்ளி தரத்தை மேம்படுத்துவதில் தலைமையாசிரியர்கள் கவனம் செலுத்துவது அவசியம். 10-ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, சனிக்கிழமைதோறும் ஆசிரியர்களை சுழற்சி முறையில் பாட வாரியாக வரவழைத்து, சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும். இதுதவிர தினமும் காலை, 8:30 மணிக்கும், மாலை 4:15 முதல், 5:30 மணிக்குள் சிறப்பு வகுப்புகள் நடத்தி கொள்ளலாம்.

    பள்ளி தலைமையாசிரியர் காலை 8:30 மணிக்கே ஆஜராகி விட வேண்டும். வகுப்பாசிரியர்கள் 'வாட்ஸ்அப்பில்' மட்டுமே தகவல்களை மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.தனிப்பட்ட முறையில் மாணவர்களுக்கு தகவல்கள், செய்திகள் அனுப்பப்படுவது தவிர்க்க வேண்டும். மாணவர்கள் தரப்பில் ஆசிரியர்கள் மீதான புகார்கள் பெறப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மாணவர்களின் புகார் பெட்டி வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டு பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும். திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து தொடக்க, மேல்நிலைப்பள்ளிகளில் சுகாதார பணியாளர்கள் வருகை சார்ந்த விவரம் ஒவ்வொரு மாதமும் 3-ந் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட வேண்டும்.ஆசிரியர் மானியம், பிற பணப்பயன்கள் உடனுக்குடன் பெற்று வழங்கப்பட வேண்டும். நிரந்தர அங்கீகாரம் பெற்ற உதவிபெறும் பள்ளிகள் ஒவ்வொரு ஆண்டும் கட்டட உறுதி சான்று, கட்டட உரிமை சான்று, தீயணைப்பு, சுகாதார சான்று ஆகியவை பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

    மிதிவண்டி, லேப்டாப் சார்ந்த இருப்பு பதிவேடுகள், சிறப்பு நிலை, தேர்வுநிலை, தகுதிகாண் பருவம், பணிவரன்முறை சார்ந்த ஆசிரியர்களின் கருத்துருக்கள் முறையாக பராமரிக்க வேண்டும். சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் பிற அமைப்புகள், மதம் சார்ந்த அமைப்புகளில் பொறுப்புகளில் இருப்பதாக பல புகார்கள் பெறப்பட்டு வருகின்றன.இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு, நிரந்தர சிகிச்சை பெறுவோருக்கு விபத்து காப்பீடு, உதவித்தொகை பெற ஆவண செய்தல் வேண்டும் என்றார்.

    மேலும் அவர் பேசுகையில், ஆதிதிராவிடர் கல்வி உதவித்தொகை, சிறப்பு ஊக்கத்தொகை திட்டம், கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு தகுதியான மாணவர்கள் பட்டியலை தயார்நிலையில் இருப்பது அவசியம். அடுத்த மாதாந்திர கூட்டத்தில் இதுசார்ந்த விவரங்கள் கேட்கப்படும். எனவே அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் இவற்றை நகல் எடுத்து தயாராக வைத்திருக்க வேண்டும். கலெக்டர், மற்றும் உயர்கல்வி அதிகாரிகள் பார்வையிட வரும்போது கூட்ட பொருள் சார்ந்த புத்தகம் இல்லையெனில் தலைமையாசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.  

    ×