search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sashti"

    • சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.
    • திருமண கோலத்தில் வள்ளி-மணவாளன் காட்சியளிப்பதும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் மரகதகல்லால் ஆன மயில், விநாயகர் உள்ளிட்ட சிலைகள் இருப்பதும், திருமண கோலத்தில் வள்ளி-மணவாளன் காட்சியளிப்பதும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    சிறுவாபுரி கோவிலுக்கு தொடர்ந்து 6 வாரங்கள் செவ்வாய்க்கிழமைகளில் வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வீடு, நிலம், வேலை வாய்ப்பு, திருமணம், குழந்தை பாக்கியம், உடல் ஆரோக்கியம் உள்ளிட்ட பக்தர்களின் நீண்டநாள் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    மேலும் இந்த கோவில் செவ்வாய் கிரகத்துக்கு உகந்த கோவில் என்றும் கூறப்படுகிறது. இதனால் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் கட்டுக்கடங்காத வகையில் பக்தர்களின் கூட்டம் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய முடியாமல் சிக்கி திணறி வருகிறார்கள்.

    இதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யவில்லை என்று பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்து வருகிறார்கள். செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 3 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை காத்தி ருந்து சாமி தரிசனம் செய்யும் நிலை நிலவிவருகிறது. ரூ.100 சிறப்பு கட்டண தரிசன வரிசையிலும் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து செல்கிறார்கள்.

    இதேபோல் கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்வதிலும், வாகனங்கள் வந்து செல்வதிலும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. சிறுவாபுரி-புதுரோடு சாலையிலும், சிறுவாபுரி-அகரம் சாலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    எனவே செவ்வாய்க்கி ழமை மற்றும் விழா காலங்களில் அதிகாலை 2 மணி முதல் நள்ளிரவு 11 மணி வரையில் நடை திறந்து பக்தர்கள் தரிசனம் நேரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:-

    சிறுவாபுரி கோவிலில் முருகனுக்கு உகந்த தினமான செவ்வாய்க்கிழமை, கிருத்திகை, சஷ்டி, அரசு விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட நாட்களில் விடியற்காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இவ்வாறு நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு போதுமான அளவு குடிநீர் வசதி, நிழல் தரும் பந்தல் வசதி, தேவையான கழிவறை வசதி தேவையான அளவு இல்லை.

    மேலும், கோவிலுக்கு செல்லும் வழியையும், தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும் வழியையும் ஒவ்வொரு வாரமும் மாற்றி, மாற்றி அமைப்பதால் பக்தர்கள், முதியவர்கள், பெண்கள்,குழந்தைகள் உள்ளிட்டோர் கோவிலுக்குள் செல்வதிலும், வெளியே வருவதிலும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

    சாலையின் இருபுறமும் வியாபாரிகள் சாலையை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைத்துள்ளனர். காவல்துறையினரும், வருவாய் துறையினரும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் ஒருவருக்கு, ஒருவர் ஒத்துழைப்பு இல்லாததால் சாலை ஓரம் உள்ள கடைகளை அப்புறப்படுத்த முடியாத நிலை நீடித்து வருகிறது.

    இதனால் பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்ல மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். செவ்வாய்க்கிழமை மற்றும் விழா காலங்களில் பக்தர்கள் தரிசன நேரத்தை அதிகரித்தால் கூட்ட நெரிசல் ஏற்படாது. வாகன நெரிசலை தவிர்க்க கூடுதலாக போக்குவரத்து போலீசாரை நியமனம் செய்து போக்கு வரத்தை சரிசெய்யவேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சஷ்டி விரதமும், வெள்ளிக்கிழமையும் இணைந்து வருவது சிறப்பு.
    • பெண்களுக்கு திருமாங்கல்ய பலம் கூடும்.

    சஷ்டி தினத்தில் முருகப்பெருமானின் அருளைப் பெற "சஷ்டி விரதம்" அனுஷ்டிக்கும் முறையையும், அதன் பலன்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.

    சஷ்டி தினத்தன்று காலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு வீடு முழுவதுமோ அல்லது வீட்டின் பூஜை அறையை மட்டுமோ சுத்தம் செய்ய வேண்டும், பின்பு பூஜையறையில் முருகன் படத்திற்கு முன்பு தீபமேற்றி, தூபங்கள் காட்டி, பால், பழம் நிவேதனம் வைக்க வேண்டும்.

    காலையில் இருந்து உணவேதும் அருந்தாமல் பூஜையறையில் அமர்ந்து "கந்த சஷ்டி கவசத்தையோ" வேறு ஏதேனும் முருகனின் மந்திரங்களையோ நாள் முழுவதுமோ அல்லது உங்களால் முடிந்த வரை ஜெபிக்க வேண்டும். வேலை காரணமாக வெளியில் செல்பவர்கள். ஓம் முருகா என்று மனதிற்குள் ஜெபித்தவாறு தங்கள் வேலையில் ஈடுபடலாம்.

    இந்த சஷ்டி விரத நாட்களில் புலால் உணவுகளையோ, போதை வஸ்துக்களையோ விரதமிருப்பவர் உண்ணக்கூடாது. மனதில் தீய எண்ணங்களோ, கடுமையான உணர்ச்சிகளோ இல்லாதவாறு இவ்விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். இந்த சஷ்டி விரதத்தை உணவருந்தாமலும், அப்படியில்லையெனில் ஒன்று அல்லது இரண்டு வேளை உணவு உட்கொண்டு மேற்கொள்ளலாம். வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மூன்று வேளை உணவு உட்கொண்டு இவ்விரதத்தை மேற்கொள்ளலாம்.

    சஷ்டி தினத்தன்று குழந்தை இல்லாத பெண்கள் விரதமிருப்பதால், அவர்களின் உடலின் குறைகள் நீங்கி முருகப்பெருமானின் அருளால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மேலும் நீண்ட நாள் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் ஆரோகியம் மேம்படும்.

    மேலும் இந்த விரதத்தை தொடர்ந்து மேற்கொள்பவர்களுக்கு எல்லா செல்வமும், எல்லாவற்றிலும் வெற்றியடையும் யோகமும் வாய்க்கும்.

    சஷ்டி விரதமும், வெள்ளிக்கிழமையும் இணைந்து வருவது சிறப்பு. தொடர்ந்து சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு அறிவுக் கூர்மையும், ஆற்றலும், செயல்திறனும் கூடும். குடும்ப உறவுகள் மகிழ்ச்சியாக இருக்கும். பெண்களுக்கு திருமாங்கல்ய பலம் கூடும்.

    சஷ்டி விரதம் இருப்பவர்கள், முதல் நாளான பஞ்சமி மதியம் முதலே விரதம் இருப்பது நல்லது. அன்று இரவு பால், பழம் மட்டும் சாப்பிட்டு, அடுத்த நாள் காலை நீராடி, சங்கல்பம் செய்து கொண்டு முருகப்பெருமானுடைய ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்ய வேண்டும்.

    மாலை பூஜை அறையில் விளக்கேற்றி, முருகப் பெருமானுக்கு மலர் மாலைகள் சாற்றி ஏதேனும் ஒரு நிவேதனத்தை வைத்துப் படைக்க வேண்டும். தூப தீபங்கள் காட்டி வணங்கி உபவாசத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.

    • `ஓம்' என்ற சொல் மந்திரங்களின் ஆதார சுருதி
    • இதயமே `ஓம்' என்ற வடிவத்தில் அமைத்திருக்கிறது.

    விநாயகருக்கான ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியில் விநாயக சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்க வேண்டும். இது தவிர மாதம் தோறும் தேய்பிறை சதுர்த்தி திதியில் சங்கடஹர சதுர்த்தி விரதம் வரும் கார்த்திகை மாதத் தேய்பிறை பிரதமை திதி வரையில் 21 நாட்கள் விநாயக சஷ்டி விரதம் அனுஷ்டிக்கலாம்.

    `ஓம்' என்பதின் அர்த்தம்

    `ஓம்'-என்பதற்கு நூறுக்கு அதிகமான அர்த்தங்கள் இருக்கின்றன. `ஓம்' என்ற சொல் மந்திரங்களின் ஆதார சுருதி பிற மந்திரங்களின் முன்னோடியாக வரும் பீஜமந்திரம் இந்த சொல்லில் இருந்து தான் மற்ற மந்திரங்கள் பிறந்தன. இது படைப்புக்கடவுள் பிரம்மனின் நாத வடிவம். ஓம் என்பது முழுமையை குறிக்கிறது.

    இது பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய மூவருக்கும் பொதுவானது.

    `ஓம்' என்பது சுற்றிக் கொண்டேயிருக்கும் பூமி கடவுளின் சங்கீத சுருதியுடன் சேர்ந்த ஒலி. இந்த `ஓம்' என்ற சொல் மனதை ஒருமுகப்படுத்தும் வித்தையைச் செய்கிறது. `ஓம்' என்ற நாதத்தில் கணபதி முழுமையாக இருக்கிறார். `ஓம்' என்பது ஆத்மாவின் இருப்பிடமான இதயத்தில் இருந்து 108 நாடிகளை இயக்குகிறது. இதயமே `ஓம்' என்ற வடிவத்தில் அமைத்திருக்கிறது.

    விநாயகரை துதிக்க மந்திரம்

    ஓம் சுமுகாய நம

    ஓம் ஏக தந்தாய நம

    ஓம் கபிலாய நம

    ஓம் கஜகர்ணகாய நம

    ஓம் லம்போதராய நம

    ஓம் விநாயகாய நம

    ஓம் விக்னராஜாய நம

    ஓம் கணாத்பதியே நம

    ஓம் தூமகேதுவே நம

    ஓம் கணாத்ய சசாய நம

    ஓம் பால சந்திராய நம

    ஓம் கஜானனாய நம

    ஓம் வக்ரதுண்டாய நம

    ஓம் சூர்ப்ப கன்னாய நம

    ஓம் ஏரம்பாய நம

    ஓம் ஸ்காந்த பூர்வஜாய நம

    மேலே உள்ள மந்திரத்தைச் சொன்னாலே, கஷ்டங்கள் நீங்கி வாழ்வு மலர்ந்து மணம் வீசும்.

    • நிலவின் பிறையை பொருத்தே திதிகளுக்கான பெயர்கள் வழங்கப்பட்டன.
    • பஞ்சாங்கத்தில் பதினைந்து திதிகளும் ஐந்து விதிகளுக்கு உட்பட்டவை.

    திதி என்ற சொல்லுக்கு நிகரான தமிழ்பதம் `நிலவின் பிறை தினம்' என பொருள் கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் நிலவின் பிறையை பொருத்தே திதிகளுக்கான பெயர்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு திதிக்குமான வடமொழி பெயருக்கு நிகரான தமிழ் பெயர்கள் என்னிடத்தில் இருக்கிறது. ஆனால் அவை எங்கிருந்து எடுக்கப்பட்டன என்பதற்கான தகவல் அதில் இல்லை.

    அவை முறையே...

    பிரதமை - ஒருமை

    துதியை - இருமை

    திரிதியை - மும்மை

    சதுர்த்தி - நான்மை

    பஞ்சமி - ஐம்மை

    சஷ்டி - அறுமை

    சப்தமி - எழுமை

    அஷ்டமி - எண்மை

    நவமி - தொண்மை

    தசமி - பதின்மை

    ஏகாதசி - பதிற்றொருமை

    துவாதசி - பதிற்றிருமை

    திரையோதசி - பதின்மும்மை

    சதுர்த்தசி - பதினான்மை

    பவுர்ணமி - நிறைமதி

    அமாவாசை - மறைமதி

    என்பனவாகும்.

    பஞ்சாங்கத்தில் பதினைந்து திதிகளும் ஐந்து விதிகளுக்கு உட்பட்டவை. அவை முறையே "நத்தை திதி", "பத்ரை திதி", "சபை திதி", "இருத்தை திதி", "பூரணை திதி" என அழைக்கப்படுகிறது. இவை ஒவ்வொன்றும் மூன்று திதிகளை உள்ளடக்கியது. இதன் படியே பொதுப் பலன்கள் கூறப்படுகிறது.

    • திதி என்பதே காலப்போக்கில் மருவி தேதி ஆகி இருக்கலாம்.
    • பிரதமை திதியில் பிறந்தவர்கள் நன்றி மறவாதவர்களாகவும், இரக்க சிந்தனை கொண்டவர்களாகவும் இருப்பர்.

    பிரதமை, துதியை தினத்தில் பிறந்தவர்களுக்கான பலன்கள்:

    பிரதமை திதியில் பிறந்தவர்கள் நன்றி மறவாதவர்களாகவும், இரக்க சிந்தனை கொண்டவர்களாகவும், கூர்ந்த அறிவுடையவர்களாகவும், பொருளுடையவர்களாகவும், பொறுமையுடையவர்களாகவும், எந்த செயலையும் சிந்தித்து சிறப்பாக செய்பவர்களாகவும், எந்த திசை நோக்கி சென்றாலும் அங்கு புகழ் பெற்றவர்களாகவும், மகிழ்ச்சி நிறைந்தவர்களாகவும் சாதுவாகவும் இருப்பார்கள்.

    துவிதியை திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்:

    துதியை திதியில் பிறந்தவர்கள் வாய்மை தவறாதவர்களாகவும், பொய் சொல்லாதவர்களாகவும், புகழுடையவர்களாகவும், சொன்ன சொல்லைத் தவறாதவர்களாகவும், தன்னுடைய இனத்தவர்களகளை ரட்சிப்பவர்களாகவும், எவ்வித முயற்சியாலும் பொருள் தேடி வாழ்பவர்களாகவும் இருப்பார்கள்.

    திரிதியை, திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்:

    திரிதியை திதியில் பிறந்தவர்கள் நற்குணமுடையவர்களாகவும், தீயசெயல்கள் செய்ய அஞ்சுபவர்களாகவும், சுத்தமுடையவர்களாகவும், எந்த ஒரு செயலையும் யோசித்து முடிக்க வல்லவர்களாகவும், பிரபு என்று புகழ் பெறுபவர்களாகவும், பலசாலியாகவும், தேவாலயங்களைத் தேடித்தேடி தருமம் செய்பவர்களாகவும் இருப்பார்கள்.

    சதுர்த்தி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்:

    சதுர்த்தி திதியில் பிறந்தவர்கள் பூமியில் உள்ளவர்கள் யாவரும் புகழும் மணிமந்திரவாதியாகி பலருடைய நட்பையும் பெற்றவர்களாகவும். எந்த காரியங்களையும் முடிக்க வல்லவர்களாகவும். சித்தியுள்ளவர்களாகவும், பல நாடுகளுக்கு பயணம் செய்து புகழ் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.

    பஞ்சமி, திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்:

    பஞ்சமி திதியில் பிறந்தவர்கள் துயரத்தில் மூழ்கியவர்களாகவும், வேதாகமங்களை ஆராய்ச்சி பண்ணுபவர்களாகவும், நுட்ப தேகமுடையவர்களாகவும், பெண்களின் மீது விருப்பமுடையவர்களாகவும், மண்ணாசை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

    சஷ்டி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்:

    சஷ்டி திதியில் பிறந்தவர்கள் சோர்வுடைய மெலிந்த தேகத்தை உடையவர்களாகவும், யாவரும் போற்றும் புகழ் உடையவர்களாகவும், பிரபுக்களின் உதவிகளை பெற்றுக் கொள்ளக்கூடியவர்களாகவும், முன்கோபியாகவும் இருப்பார்கள்.

    திதி - பலன்கள்

    பவுர்ணமி முதல் அமாவாசை வரையான பதினைந்து நாட்களை `தேய்பிறை திதி' என்றும், பின்னர் அமாவாசை முதல் பௌர்ணமி வரையான பதினைந்து நாட்களை `வளர்பிறை திதி' என்றும் குறிப்பிடுவர்.திதி என்பதே காலப் போக்கில் மருவி தேதி ஆகியிருக்கலாம். இதனை சமஸ்கிருதத்தில் `கிருஷ்ணபட்சம்', `சுக்கிலபட்சம்' என்பர்.

    இவை முறையே பிரதமை, துதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரையோதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகும்.

    • நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் கந்த சஷ்டி விழாவின் 4-ம் நாளை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ வல்லவ விநாயகர் ஆலயத்தில் உள்ள வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமிக்கு கந்த சஷ்டி விழாவின் 4-ம் நாளை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தானம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷே கம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை கட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணியர் பக்தர்களுக்கு காட்சி யளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா முடிவில் அனைவருக்கும் அன்னதானமும், பிரசாதமும் வழங்கப்பட்டது.

    அதேபோல் பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகப்பெருமான் மற்றும் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். 

    • கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகனுக்கு சஷ்டியை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா நன்செய் இடையாறு காவேரி ஆற்றங்கரை அருகே உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பணசாமி கோவிலில் வள்ளி தெய்வானை சமேத பாலமுருகன், கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகனுக்கு சஷ்டியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் பரமத்திவேலூர் வட்டாரத்தில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேக ,ஆரதனைகளும்,சிறப்பு அலங்காரமும் நடை–பெற்றது. கபிலர்மலையில் ‌பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசுவாமி கோயில், பரமத்தி அடுத்த பிராந்தகத்தில் 34.5 அடி உயரத்தில் உள்ள ஆறுமுகக்கடவுள் கோயில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோயிலில்‌ உள்ள சுப்ரமணியர்,பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை‌ முருகன் கோயில், அனிச்சம்பாளையத்தில் உள்ள வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர்கோயில், பிலிக்கல்பாளையம் ‌விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோயில்,நன்செய்இடையார் திருவேலீஸ்வரர் கோயிலில் உள்ள ‌சுப்ரமணியர், ராஜா சுவாமி திருக்கோயில் உள்ள ராஜா சுவாமி,பேட்டை பகவதியம்மன் கோயிலில் உள்ள முருகன் மற்றும் கந்தம்பாளையம் அருகே உள்ள அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி,தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட கோயில்களில் சஷ்டியை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும்,சிறப்பு அலங்காரமும் நடை–பெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரில் ஆடி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகன் கோவில்களில் வழிபாடு நடந்தது.
    • 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகப்பெருமான், கோப்பணம் பாளையத்தில் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகன், பரமத்திவேலூர் தேரடி வீதியில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான வல்லப விநாயகர் ஆலயத்தில் உள்ள வள்ளி தெய்வானை உடனாகிய கல்யாண சுப்பிரமணிய சுவாமிக்கு ஆடி மாத வளர்பிறை சஷ்டியினை முன்னிட்டு பால் ,தயிர் ,பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் ,திருமஞ்சனம் ,பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர் .பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் நன்செய் இடையாறு மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ண சாமி கோவில் உள்ள வள்ளி தெய்வானை சமேதா பாலமுருகன், கபிலர்மலையில் ‌பிரசித்தி பெற்ற பாலசுப்பிர மணிய சுவாமி கோவில், பரமத்தி அடுத்த பிராந்தகத்தில் 34.5 அடி உயரத்தில் உள்ள ஆறுமுகக்கடவுள் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில்‌ உள்ள சுப்ர மணியர்,பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை‌ முருகன் கோவில், அனிச்சம்பாளையத்தில் உள்ள வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர்கோவில், பிலிக்கல்பாளையம் ‌விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவில், நன்செய்இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள ‌சுப்ரமணியர், ராஜா சுவாமி திருக்கோயில் உள்ள ராஜா சாமி, கந்தம்பாளையம் அருகே உள்ள அருணகிரி நாதர் மலையில் உள்ள வள்ளி,தெய்வானை சமேத சுப்பிரமணியர் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும்,சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதி களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    ×