search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தசமி"

    • நிலவின் பிறையை பொருத்தே திதிகளுக்கான பெயர்கள் வழங்கப்பட்டன.
    • பஞ்சாங்கத்தில் பதினைந்து திதிகளும் ஐந்து விதிகளுக்கு உட்பட்டவை.

    திதி என்ற சொல்லுக்கு நிகரான தமிழ்பதம் `நிலவின் பிறை தினம்' என பொருள் கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் நிலவின் பிறையை பொருத்தே திதிகளுக்கான பெயர்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு திதிக்குமான வடமொழி பெயருக்கு நிகரான தமிழ் பெயர்கள் என்னிடத்தில் இருக்கிறது. ஆனால் அவை எங்கிருந்து எடுக்கப்பட்டன என்பதற்கான தகவல் அதில் இல்லை.

    அவை முறையே...

    பிரதமை - ஒருமை

    துதியை - இருமை

    திரிதியை - மும்மை

    சதுர்த்தி - நான்மை

    பஞ்சமி - ஐம்மை

    சஷ்டி - அறுமை

    சப்தமி - எழுமை

    அஷ்டமி - எண்மை

    நவமி - தொண்மை

    தசமி - பதின்மை

    ஏகாதசி - பதிற்றொருமை

    துவாதசி - பதிற்றிருமை

    திரையோதசி - பதின்மும்மை

    சதுர்த்தசி - பதினான்மை

    பவுர்ணமி - நிறைமதி

    அமாவாசை - மறைமதி

    என்பனவாகும்.

    பஞ்சாங்கத்தில் பதினைந்து திதிகளும் ஐந்து விதிகளுக்கு உட்பட்டவை. அவை முறையே "நத்தை திதி", "பத்ரை திதி", "சபை திதி", "இருத்தை திதி", "பூரணை திதி" என அழைக்கப்படுகிறது. இவை ஒவ்வொன்றும் மூன்று திதிகளை உள்ளடக்கியது. இதன் படியே பொதுப் பலன்கள் கூறப்படுகிறது.

    • தசமி திதியில் பிறந்தவர்கள் தர்மம் செய்யும் குணமுடையவர்.
    • அஷ்டமி திதியில் பிறந்தவர்கள் திருமகளின் அருளை பெற்றவர்களாக இருப்பர்.

    நவமி திதியில் பிறந்தவர்கள் உலகில் யாவரும் புகழும் படியான பெயரெடுப்பவர்களாகவும், ஸ்தூல உடம்பு உடையவர்களாகவும், மனைவி, பிள்ளைகள் மேல் விருப்பமில்லாதவர்களாகவும், மற்ற பிற பெண்களின் மீது ஆசை கொண்டு அவர்களில் பலரை சேர்த்து வாழ்பவர்களாகவும், நாணமில்லாத பெண்களின் மனம்போல் நடப்பவர்களாகவும் இருப்பார்கள்.

    தசமி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்:

    தசமி திதியில் பிறந்தவர்கள் தர்மம் செய்யும் குணமுடையவர்களாகவும், கொடுக்கும் குணம் கொண்டவர்களாகவும், சினேகிதர்களுடன் பிரியமுடையவர்களாகவும், ஆசாரமுடையவர்களாகவும், சீலம் உடையவர்களாகவும், பெரியோர்களிடத்தில் அன்பு கொண்டவர்களாகவும், குற்றம் இல்லாதவர்களாகவும், மனைவி, மக்கள், உறவினர்களிடம் பிரியமுடையவர்களாகவும் இருப்பார்கள்.

    சப்தமி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்

    சப்தமி திதியில் பிறந்தவர்கள் அதிக வலு உடையவர்களாகவும், தீரர்களாகவும், செல்வம் உடையவர்களாகவும், பிரபுக்களாகவும், இரக்க குணம் உடையவர்களாகவும், உலகிலுள்ள அனைவருக்கும் நன்மை செய்யக் கூடியவர்களாகவும், உடலில் காசநோயை உடையவர்களாகவும் இருப்பார்கள்.

    அஷ்டமி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்:

    அஷ்டமி திதியில் பிறந்தவர்கள் திருமகளின் அருளை பெற்றவர்களாகவும், பிறவியிலேயே செல்வந்தராகவும், குழந்தைப்பேறு உடையவர்களாகவும், புத்திரர்களினால் புகழ் அடைபவர்களாகவும், காசநோயை உடையவர்களாகவும், காமுகர்களாகவும் இருப்பார்கள்.

    ஏகாதசி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்:

    ஏகாதசி திதியில் பிறந்தவர்கள் குருவிடத்தில் பிரியமுடையவர் களாகவும், தன தானிய முடையவர்களாகவும், தக்கபடி நீதி சொல்லும் நீதிமான்களாகவும், பூமியில் யாவருங் கண்டு மெச்சும் படியான காரியங்களை நேர்த்தியாக செய்பவர்களாகவும், கல்வியில் வல்லவர்களாகவும், உலகில் எல்லோரும் மதிக்கத்தகவர்களாகவும் இருப்பார்கள்.

    துவாதசி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்:

    துவாதசி திதியில் பிறந்தவர்கள் தானதர்மங்கள் செய்பவர்களாகவும், நல்ல குணமுடையவர்களாகவும், செல்வவளம் படைத்தவர்களாகவும், புதுமையான காரியங்களை அனைவரும் வியக்கும் வண்ணம் செய்கிறவர்களாகவும் இருப்பார்களாம். மேலும் ஆண்களாயின் பெண்கள் மகிழும்படியாக மன்மதனைப் போலும், பெண்களாயின் ஆண்கள் மகிழும்படியாக ரதிபோலும் இருப்பார்கள்.

    திரியோதசி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்:

    திரியோதசி திதியில் பிறந்தவர்கள் செல்வந்தர்களாகவும், பொய்யும், புரட்டுமாய் காலம் தள்ளுகிறவனாகவும், வாக்குச் சுத்தமில்லாதவனாய் இருப்பான் என்கிறார். பொய்யாக தன்னை மாந்திரிகன் என்று சொல்லிக் கொள்ளும் தற் பெருமைக்காரனாயிருப்பான்.

    சதுர்த்தசி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்:

    சதுர்த்தசி திதியில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்கு தீங்கு செய்பவர்களாகவும், பிறருடைய பொருளை அபகரிப்பவர்களாகவும். அடுத்தவர்களிடம் கலகம் செய்பவர்களாகவும், பிறர் மீது அவதூறு செய்பவர்களாகவும். அதிக முன்கோபமுடையவர்களாகவும், குரோத மனமுடையவர்களாகவும் இருப்பார்களாம்.

    பவுர்ணமி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்:

    பவுர்ணமி திதியில் பிறந்தவர்கள் நல்ல குணமுள்ளவர்களாகவும், புத்தியுள்ளவர்களாகவும், பொருமையுள்ளவர்களாகவும், வாக்கு பிசகாதவர்களாகவும், நேர்மையும் தயாள குணமும் கொண்டவர்களாகவும் இருப்பார்களாம். இந்த குணநலன்கள் இல்லை என்றால் எதிர்மறையாக களங்கம் கொண்டவர்களாகவும், உக்கிர தெய்வத்தை பூஜை செய்பவர்களாகவும், மந்திரத்தால் பலரை கெடுப்பவர் களாக இருப்பார்கள்.

    • திதி என்பதே காலப்போக்கில் மருவி தேதி ஆகி இருக்கலாம்.
    • பிரதமை திதியில் பிறந்தவர்கள் நன்றி மறவாதவர்களாகவும், இரக்க சிந்தனை கொண்டவர்களாகவும் இருப்பர்.

    பிரதமை, துதியை தினத்தில் பிறந்தவர்களுக்கான பலன்கள்:

    பிரதமை திதியில் பிறந்தவர்கள் நன்றி மறவாதவர்களாகவும், இரக்க சிந்தனை கொண்டவர்களாகவும், கூர்ந்த அறிவுடையவர்களாகவும், பொருளுடையவர்களாகவும், பொறுமையுடையவர்களாகவும், எந்த செயலையும் சிந்தித்து சிறப்பாக செய்பவர்களாகவும், எந்த திசை நோக்கி சென்றாலும் அங்கு புகழ் பெற்றவர்களாகவும், மகிழ்ச்சி நிறைந்தவர்களாகவும் சாதுவாகவும் இருப்பார்கள்.

    துவிதியை திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்:

    துதியை திதியில் பிறந்தவர்கள் வாய்மை தவறாதவர்களாகவும், பொய் சொல்லாதவர்களாகவும், புகழுடையவர்களாகவும், சொன்ன சொல்லைத் தவறாதவர்களாகவும், தன்னுடைய இனத்தவர்களகளை ரட்சிப்பவர்களாகவும், எவ்வித முயற்சியாலும் பொருள் தேடி வாழ்பவர்களாகவும் இருப்பார்கள்.

    திரிதியை, திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்:

    திரிதியை திதியில் பிறந்தவர்கள் நற்குணமுடையவர்களாகவும், தீயசெயல்கள் செய்ய அஞ்சுபவர்களாகவும், சுத்தமுடையவர்களாகவும், எந்த ஒரு செயலையும் யோசித்து முடிக்க வல்லவர்களாகவும், பிரபு என்று புகழ் பெறுபவர்களாகவும், பலசாலியாகவும், தேவாலயங்களைத் தேடித்தேடி தருமம் செய்பவர்களாகவும் இருப்பார்கள்.

    சதுர்த்தி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்:

    சதுர்த்தி திதியில் பிறந்தவர்கள் பூமியில் உள்ளவர்கள் யாவரும் புகழும் மணிமந்திரவாதியாகி பலருடைய நட்பையும் பெற்றவர்களாகவும். எந்த காரியங்களையும் முடிக்க வல்லவர்களாகவும். சித்தியுள்ளவர்களாகவும், பல நாடுகளுக்கு பயணம் செய்து புகழ் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.

    பஞ்சமி, திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்:

    பஞ்சமி திதியில் பிறந்தவர்கள் துயரத்தில் மூழ்கியவர்களாகவும், வேதாகமங்களை ஆராய்ச்சி பண்ணுபவர்களாகவும், நுட்ப தேகமுடையவர்களாகவும், பெண்களின் மீது விருப்பமுடையவர்களாகவும், மண்ணாசை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

    சஷ்டி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்:

    சஷ்டி திதியில் பிறந்தவர்கள் சோர்வுடைய மெலிந்த தேகத்தை உடையவர்களாகவும், யாவரும் போற்றும் புகழ் உடையவர்களாகவும், பிரபுக்களின் உதவிகளை பெற்றுக் கொள்ளக்கூடியவர்களாகவும், முன்கோபியாகவும் இருப்பார்கள்.

    திதி - பலன்கள்

    பவுர்ணமி முதல் அமாவாசை வரையான பதினைந்து நாட்களை `தேய்பிறை திதி' என்றும், பின்னர் அமாவாசை முதல் பௌர்ணமி வரையான பதினைந்து நாட்களை `வளர்பிறை திதி' என்றும் குறிப்பிடுவர்.திதி என்பதே காலப் போக்கில் மருவி தேதி ஆகியிருக்கலாம். இதனை சமஸ்கிருதத்தில் `கிருஷ்ணபட்சம்', `சுக்கிலபட்சம்' என்பர்.

    இவை முறையே பிரதமை, துதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரையோதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகும்.

    • திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரமாகும்.
    • கிருஷ்ண எனும் சொல்லுக்கு ‘கருமை’ என்றும் பொருள்.

    திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரமாகும்.

    1. சுக்ல பட்சம் (அல்லது) பூர்வ பட்சம் : வளர்பிறை

    2. கிருஷ்ண பட்சம் (அல்லது) அமர் பட்சம் : தேய்பிறை என இரண்டு வகைப்படும். சுக்லம் எனும் சமஸ்கிருத சொல்லுக்கு 'வெண்மை' என்றும், கிருஷ்ண எனும் சொல்லுக்கு 'கருமை' என்றும் பொருள்.

    பிரதமை முதல் அமாவாசை வரை தேய்பிறை 'கிருஷ்ண பட்சம்' அல்லது அமர பட்சம். பிரதமை முதல் பௌர்ணமி வரை வளர்பிறை 'சுக்ல பட்சம்' அல்லது பூர்வ பட்சம்.

    1. பிரதமை, 2. துவதியை, 3. திருதியை, 4. சதுர்த்தி, 5. பஞ்சமி, 6. சஷ்டி, 7. சப்தமி, 8. அஷ்டமி, 9. நவமி, 10. தசமி, 11. ஏகாதசி, 12. துவாதசி, 13. திரயோதசி, 14. சதுர்த்தசி, 15. பௌர்ணமி (அல்லது) அமாவாசை.

    சூரியனும் சந்திரனும் ஒரே பாகையில் இருப்பது 'அமாவாசை' ஆகும். சூரியன் நின்ற காகைகளுக்கு நேராக 180 டிகிரி சந்திரன் இருந்தால் 'பௌர்ணமி' ஆகும். சூரியனில் இருந்து சந்திரன் நகர்ந்து செல்லச்செல்ல சந்திரனின் பிறை நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாக கண்ணுக்கு தெரிய வரும். இவ்வாறு தினமும் வளர்ந்து வருவது 'வளர்பிறை' காலம் ஆகும்.

    பௌர்ணமிக்கு பின் முழுமதியில் இருந்து தினம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தெரியவரும். இவ்வாறு தேய்வதால் 'தேய்பிறை' காலம் என்கிறோம். இவ்வாறு வளர்பிறை காலம் 15 நாட்களும், தேய்பிறை காலம் 15 நாட்களும் கொண்டது ஒரு மாதமாகும்.

    திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள்:

    பிரதமை:- சந்தோஷ பிரியன், எதையும் யோசிக்கும் புத்தி உடையவன். செல்வந்தன்.

    துதியை:- கீர்த்தி உடையவன், சத்திவாசகன், பொய் சொல்லாதவன், பொருள் சேர்ப்பவன், தன் இனத்தாரை ரட்சிப்பவன்.

    திருதியை:- எண்ணியதை முடிப்பவன், தனவான், பயம் உள்ளவன், பராக்கிரமம் உடையவன், சுத்தமுடையோன், திருக்கோவில் கைங்கரியம் செய்பவன்.

    சதுர்த்தி:- அளவற்ற காரியங்களை சிந்திப்பவன். தேச சஞ்சாரம் செய்பவன், எல்லோருக்கும் நண்பன், அருள் மந்திரவாதி.

    பஞ்சமி:- வேத ஆராய்ச்சி உடையோன், பெண் மேல் அதிக பிரியமுள்ளவன், கருமி, துக்கம் உடையோன்.

    சஷ்டி:- பிரபுக்களால் விரும்பதக்கவன், செல்வன், மெலிந்தவன், முன் கோபி.

    சப்தமி:- செல்வம், தயாள சிந்தனை உடையோன், பராக்கிரமசாலி, எதிலும் கண்டிப்பு உடையவன்.

    அஷ்டமி:- புத்ர செல்வம் உடையோன், காமூகன், பிறவி செல்வம் உடையவன், லட்சுமி வாசம் உடையோன்.

    நவமி:- கீர்த்தி உடையவன், மனைவி மக்களை விரும்பாதவன், அதிக பெண் சிநேகம் உடையவன், கமனம் செய்பவன்.

    தசமி:- சீலம் உள்ளவன், தர்மவான், யோகியவான்.

    ஏகாதசி:- செல்வந்தன், நீதியுடன் இருப்பவன், அழகற்றவன், உதிதமானதை செய்பவன்.

    துவாதசி:- செல்வந்தன், தர்மவான், நூதன தொழில் செய்பவன், சீலம் உள்ளம் உள்ளவன்.

    திரயோதசி:- உறவினர் இல்லாதவன், மாந்தீரிகன், யோபி, கஞ்சன், கீர்த்திசாலி.

    சதுர்தசி:- குரோதம் உடையோன், பிறர் பொருளை அபகரிப்பதில் பிரியன், கோபி, பிறரை துஷ்டிப்பவன்.

    பௌர்ணமி:- புத்தி, விந்தை, பொறுமை, சத்யவான், தயாள சிந்தனை உடையோன், கலங்க முடையோன், உக்ரமுள்ள தேவதையை பூஜிப்பவன்.

    ×