search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sandalwood"

    • 10 ஆயிரத்து 8 வளையல்கள் மாலையாக கோர்க்கப்பட்டு அம்மனுக்கு அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
    • பால், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட 11 வகையான திரவிய பொருட்கள் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள தேவூரில் பிரசித்தி பெற்ற தேவ துர்க்கை அம்மன் கோவிலில் ஆடிபூரம் தினத்தை முன்னிட்டு ஏராளமானோர் தங்களது வேண்டுதல் நிறைவேற வளையல்களை கோவில் காணிக்கையாக வழங்கினர்.

    அதில் 10ஆயிரத்து 8 வளையல்கள் மாலையாக கோர்க்கப்பட்டு அம்மனுக்கு அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. முன்னதாக பால், பன்னீர் ,சந்தனம், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட 11 வகையான திரவிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது .

    அதனை தொடர்ந்து யாகசாலை பூஜையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீவிஜேந்திரசுவாமிகள் செய்திருந்தார்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் 24-ந்தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
    • அரசு பாதுகாப்பிற்கான அலுவல்களைக் கவனிக்கும் வகையில் குறிப்பிட்ட பணியாளா்களோடு செயல்படும்.

    ராமநாதபுரம்,

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வா்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டத்தில் உள்ள ஏா்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா நடைபெறுகிறது.

    சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு வருகிற 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதை ஈடு செய்யும் வகையில், வருகிற ஜூலை 2-ந்தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

    எனவே வருகிற 24-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கருவூலம், சாா்நிலைக் கருவூலங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற்கான அலுவல்களைக் கவனிக்கும் வகையில் குறிப்பிட்ட பணியாளா்களோடு செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஏர்வாடி தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
    • வருகிற 23-ந் தேதி மாலை சந்தனக்கூடு திருவிழா தொடங்கப்பட்டு, 24-ந்தேதி அதிகாலை தர்காவிற்கு சந்தக்கூடு வந்தடையும்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்காவில் ஆண்டு தோறும் சந்தனக்கூடு திருவிழா மதநல்லிணக்க ஒருமைப்பாட்டு விழாவாக ஏர்வாடி தர்கா பொது மகாசபை உறுப்பினர்கள் (ஹக்தார்) நடத்தி வருகின்றனர்.

    இந்த ஆண்டுக்கான 848-வது சந்தனக்கூடு திருவிழா கடந்த 1-ந்தேதி மவுலீதுடன் (புகழ்மாலை) தொடங்கியது. நேற்று முன்தினம் தர்கா மண்டபத்திற்கு எதிரே உள்ள கொடிமரம் மேடையில் அடிமரம் ஏற்றப்பட்டது.

    நேற்று (11-ந்தேதி) மாலை ஏர்வாடி குடியிருப்பில் உள்ள முஜாபிர் நல்ல இபுராகிம் லெவ்வை மகாலில் இருந்து கொடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக தர்காவை வந்தடைந்தது. அலங்கார ரதம் தர்காவில் 3 முறை வலம் வந்த பின்னர் பக்தர்களின் நாரே தக்பீர் முழக்கத்துடன் கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக தர்கா மண்டபத்தில் பக்தர்கள் ஒன்றிணைந்து மவுலீது ஒதினர்.

    இதைத் தொடர்ந்து செய்யது பாருக் ஆலிம் மத நல்லிணக்கம் தொடரவும், உலக மக்கள் மகிழ்ச்சியுடன் வாழவும் சிறப்பு பிரார்த்தனை செய்தார். ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின் பேரில் கீழக்கரை துணை போலீஸ் கண்காணிப்பாளர் சுபாஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக வருகிற 23-ந்தேதி மாலை சந்தனக்கூடு திருவிழா தொடங்கப்பட்டு 24-ந்தேதி அதிகாலை தர்காவிற்கு சந்தக்கூடு வந்தடையும்.

    பின்னர் பாதுஷா நாயகத்தின் மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும். 30-ந்தேதி கொடியிறக்கத்துடன், பக்தர்களுக்கு நேர்ச்சி வழங்கப்பட்டு விழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை தலைவர் பாக்கிர் சுல்தான், செயலாளர் சிராஜுதீன், உப தலைவர் சாதிக் பாட்ஷா ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபையினர் செய்து வருகின்றனர்.ஏர்வாடி தர்கா ஷரீப் சந்தனக்கூடு விழா சிறப்பாக நடத்துவது தொடர்பாக கலெக்டர் சங்கர்லால் குமாவத், அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் ஏர்வாடி தர்கா ஹத்தார் நிர்வாக சபை உறுப்பினர்களுடன் தர்காவில் ஆலோசனை நடத்தினார்.

    இதில் ஊராட்சி சார்பில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தவும், போக்குவரத்து துறை சார்பில் கூடுதலாக உள்ளூர் பஸ்களை இயக்கவும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மருத்துவர்கள் தலைமையில் செவிலியர்கள் அடங்கிய குழு அமைத்து ஆம்புலன்ஸ் வசதியுடன் தயார் நிலையில் இருக்கவும், காவல் துறையினர் தேவையான பாதுகாப்பு பணியில் ஈடுபடவும், பொதுமக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தவும் கலெக்டர், அலுவலர்கள் மற்றும் ஏர்வாடி தர்கா ஹத்தார் நிர்வாக சபை உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார்.

    இதில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சேக் மன்சூர், கீழக்கரை வட்டாட்சியர் சரவணன், கடலாடி ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை உள்ளிட்ட அலுவலர்கள், ஏர்வாடி தர்கா ஹத்தார் நிர்வாக சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பதி அருகே லோடு ஆட்டோவில் ரகசிய அறை அமைத்து செம்மரம் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பதி:

    திருப்பதி அருகேயுள்ள பாகபல்லி சோதனை சாவடியில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் லட்சுமி நாராயணா, கிருஷ்ணய்யா, சத்திய நாராயணா, ரவிக்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த டாடா ஏசி லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்த போது அந்த வாகனத்தில் எதுவும் இல்லை. ஆனால் லோடு ஆட்டோ டிரைவர் ஒரு வித பதட்டத்துடன் காணப்பட்டார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லோடு ஆட்டோவை தீவிர சோதனை செய்தனர். அப்போது லோடு ஆட்டோவின் உள்பகுதியில் அறை அமைத்து அதில் 2 வாலிபர்கள் மற்றும் 8 செம்மரங்கள் இருப்பதை கண்டு பிடித்தனர்.

    செம்மரங்களுடன் லோடு ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

    அவர்களிடம் ஜ.ஜி. காந்தாராவ் விசாரணை நடத்தினார். அதில் அவர்கள் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஈஸ்வர், ஹரிநாத், ரங்கநாதன் என தெரியவந்தது 3 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் அவர்கள் கூறுகையில் சிங்கம்-3 படத்தை பார்த்து ஆட்டோவில் ரகசிய அறை அமைத்து செம்மரம் கடத்தியதாக தெரிவித்துள்ளனர். #tamilnews
    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கும், தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும் ஒரேமாதிரியான சந்தனப் பேழை வடிவமைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #Jayalalithaa #Karunanidhi
    2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதி அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைந்தபோது, அவரது உடல் சந்தனப் பேழையில் வைத்து மெரினா கடற்கரையோரம் எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது.

    6 அடி நீளம், 2½ அடி அகலம் கொண்ட அந்த பெட்டியின் மேல் பகுதியில் “புரட்சித் தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா” என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தது.



    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும் அதே வடிவமைப்பில் சந்தனப் பேழை 6 அடி நீளம், 2½ அடி அகலத்தில் தயாரிக்கப்பட்டிருந்தது. பெட்டியின் மேல் பகுதியில் ஒரு புறம், “கலைஞர் மு.கருணாநிதி, தி.மு.க. தலைவர், 3-6-1924 - 7-8-2018” என்று எழுதப்பட்டிருந்தது. மற்றொரு புறம், “ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ, ஓய்வு கொண்டிருக்கிறான்” என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தது.

    கருணாநிதியின் உடல் அதில் வைக்கப்பட்டு, மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது.

    ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் ஒரேமாதிரி சந்தனப் பேழை வடிவமைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 2 சந்தனப் பேழைகளையும் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ‘ஹோமேஜ்’ நிறுவனமே வடிவமைத்திருந்தது. #Jayalalithaa #Karunanidhi
    சத்தியமங்கலம் வனப்பகுதியில் சந்தன கட்டைகள் கடத்திய 5 பேரை கைது செய்த வனத்துறையினர் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் சந்தன மரங்கள் அதிகம் உள்ளன.

    சந்தனமர கடத்தல் மன்னன் மாயாவி வீரப்பன் இருக்கும்போது சந்தன மரங்கள் அதிகமாக வெட்டி கடத்தப்பட்டன. அவன் மறைவுக்குப்பிறகு சந்தரமரம் கடத்தல் முற்றிலும் தடுக்கப்பட்டது.

    ஒரு சிலர் கடத்தி வந்ததையும் வனத்துறையினரின் தீவிர நடவடிக்கையால் கட்டுப்படுத்தப்பட்டது.எனினும் வனத்துறையினர் தீவிர ரோந்துபணியில் ஈடுபட்டு வந்தனர். கடத்தல் காரர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் சத்தியமங்கலம் வனப்பகுதி கே.என்.பாளையம் வனச்சரகம் கானாகுந்தூர் பகுதியில் வனத்துறையினர். ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 5 பேர் சந்தேகப்படும்படி திரிந்து கொண்டிருந்தனர். அவர்களை வனத்துறையினர் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்களிடம் 5 கிலோ சந்தன கட்டைகள் இருந்தது தெரிய வந்தது.

    அவர்கள் அந்த சந்தன கட்டைகளை கடத்தி கொண்டு சென்றது தெரியவர இந்த சந்தன கட்டைகள் அவர்களுக்கு எப்படி வந்தது? யாரிடம் வாங்கியது? எங்கு கொண்டு செல்லப்படுகிறது? என வனத்துறையினர் ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    கூடலூர் அருகே சந்தன மரங்களை மர்ம கும்பல் வெட்டி கடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி 21-வது வார்டுக் குட்பட்டது லோயர்கேம்ப். இங்கு 168 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் பெரியாறு நீர்மின்நிலையம் உள்ளது.

    இப்பகுதியில் மின் நிலையத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் வசித்து வருகின்றனர். இங்கு வெளியாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த குடியிருப்பு பகுதியில் ஏராளமான சந்தன மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம கும்பல் 2 சந்தன மரங்களை வெட்டி கடத்தி சென்றனர். இது குறித்து வனத்துறை மற்றும் லோயர்கேம்ப் போலீசில் மின்வாரியத்துறை சார்பாக புகார் அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், பல லட்சம் மதிப்புள்ள சந்தன மரங்கள் தொடர்ந்து வெட்டி கடத்தப்பட்டு வருகிறது.

    ஆனால் போலீஸ் மற்றும் வனத்துறையினர் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். தொடர்ந்து நடைபெறும் இந்த சம்பவங்களால் குடியிருப்பு வாசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    எனவே அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு சந்தன மரங்களை வெட்டி கடத்தும் கும்பலை பிடிக்க வேண்டும். வனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இது குறித்து வனத்துறை அதிகாரி கூறுகையில், மின்வாரிய குடியிருப்பில் வெளியாட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் உள்ளவர்களின் உதவியுடன்தான் சந்தன மரம் வெட்டி கடத்தி இருக்க கூடும். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என கூறினர்.

    ×