search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லோடு ஆட்டோவில் ரகசிய அறை அமைத்து செம்மரம் கடத்தல்- சினிமா பார்த்து கடத்தியதாக கைதானவர்கள் வாக்குமூலம்
    X

    லோடு ஆட்டோவில் ரகசிய அறை அமைத்து செம்மரம் கடத்தல்- சினிமா பார்த்து கடத்தியதாக கைதானவர்கள் வாக்குமூலம்

    திருப்பதி அருகே லோடு ஆட்டோவில் ரகசிய அறை அமைத்து செம்மரம் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பதி:

    திருப்பதி அருகேயுள்ள பாகபல்லி சோதனை சாவடியில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் லட்சுமி நாராயணா, கிருஷ்ணய்யா, சத்திய நாராயணா, ரவிக்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த டாடா ஏசி லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்த போது அந்த வாகனத்தில் எதுவும் இல்லை. ஆனால் லோடு ஆட்டோ டிரைவர் ஒரு வித பதட்டத்துடன் காணப்பட்டார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லோடு ஆட்டோவை தீவிர சோதனை செய்தனர். அப்போது லோடு ஆட்டோவின் உள்பகுதியில் அறை அமைத்து அதில் 2 வாலிபர்கள் மற்றும் 8 செம்மரங்கள் இருப்பதை கண்டு பிடித்தனர்.

    செம்மரங்களுடன் லோடு ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

    அவர்களிடம் ஜ.ஜி. காந்தாராவ் விசாரணை நடத்தினார். அதில் அவர்கள் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஈஸ்வர், ஹரிநாத், ரங்கநாதன் என தெரியவந்தது 3 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் அவர்கள் கூறுகையில் சிங்கம்-3 படத்தை பார்த்து ஆட்டோவில் ரகசிய அறை அமைத்து செம்மரம் கடத்தியதாக தெரிவித்துள்ளனர். #tamilnews
    Next Story
    ×