search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ronaldo"

    யூரோ சாம்பியன்ஸ் லீக்கில் ரொனால்டோ கோல் அடித்த நிலையிலும், ஓன் கோலால் மான்செஸ்டர் யுனைடெட் 2-1 என யுவான்டஸை வீழ்த்தியது. #Ronaldo
    யூரோ சாம்பியன்ஸ் லீக்கில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் யுவான்டஸ் - மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதின. யுவான்டஸ் அணியில் இடம்பிடித்து விளையாடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஏற்கனவே மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடினார்.

    புகழைத் தேடிக்கொடுத்த அணிக்கெதிராக ரொனால்டோ களம் இறங்கியதால் இந்த போட்டிக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக சொந்த மைதானத்தில் விளையாடியதால் யுவான்டஸ் வீரர்கள் கூடுதல் பலத்துடன் விளையாடினார்கள்.

    ஆனாலும் முதல் பாதி நேரத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 65-வது நிமிடத்தில் ரொனால்டோ கோல் அடித்தார். இதனால் யுவான்டஸ் 1-0 என முன்னிலைப் பெற்றது. ஆட்டம் முடிய 5 நிமிடங்கள் இருக்கும் வரை மான்செஸ்டர் யுனைடெட் பதில் கோல் அடிக்கவில்லை. இதனால் யுவான்டஸ் வெற்றிபெறும் என எதிர்பார்க்கபட்டது.



    86-வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் ஜுயன் மட்டா கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 1-1 என சமநிலைப் பெற்றது. 89-வது நிமிடத்தில் யுவான்டஸ் வீரர் அலெக்ஸ் சான்ட்ரோ ஓன் கோல் அடிக்க பரபரப்பான கட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் 2-1 என வெற்றி பெற்றது.

    ‘எச்’ பிரிவில் இடம்பிடித்துள்ள யுவான்டஸ் 4 போட்டியில் மூன்று வெற்றியுடன் 9 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. மான்செஸ்டர் யுனைடெட் 4 போட்டியில் இரண்டில் வெற்றி, தலா ஒரு தோல்வி, டிரா மூலம் 7 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.
    பிரேசில் நாட்டின் கால்பந்து ஜாம்பவான் ஆன பீலே, தனது அணியில் மெஸ்சிக்குதான் இடம், ரொனால்டோவிற்கு இல்லை என தெரிவித்துள்ளார். #Messi #Ronaldo #Pele
    கால்பந்து உலகில் ஜாம்பவனாக திகழ்பவர் பிரேசில் நாட்டின் பீலே. தற்போது மெஸ்சி, ரொனால்டோ ஆகியோர் சிறந்த வீரர்களாக திகழ்ந்து வருகிறார். நான் அணியை தேர்வு செய்தால் மெஸ்சிக்குதான் இடம் என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பீலே கூறுகையில் ‘‘மெஸ்சியையும், ரொனால்டோவையும் ஒப்பிடுவது கடினமானது. ரொனால்டோவை விட மெஸ்சி முற்றிலும் வித்தியாசமான ஸ்டைலை கொண்டவர். ஏராளமானோர் என்னை ஜார்ஜ் பெஸ்ட் உடன் ஒப்பிடவது உண்டு. ஆனால், நாங்கள் வித்தியாசமான விளையாட்டு ஸ்டைலை உடையவர்கள். மெஸ்சி (more organised), ரொனால்டோ (more of a center-forward).



    நான் எனது அணியை தேர்வு செய்தார் ரொனால்டோவை விட மெஸ்சியைத்தான் தேர்வு செய்வேன். என்னுடைய அப்பா சிறந்த (center-forward) வீரர். அவர் எனக்கு எப்படி விளையாட வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தார். என்னைவிட மூன்று முறை கூடுதலாக கோல் அடிக்க வேண்டும் என்று கூறினார். அவர்தான் என்னை கால்பந்து விளையாட ஊக்குவித்தார். அவர்தான் எனக்கு உத்வேகம் அளித்தவர்’’ என்றார்.
    ‘செரி ஏ’ லீக்கில் ரொனால்டோ இரண்டு கோல் அடிக்க உதவியதால் யுவான்டஸ் 3-1 என நபோலியை வீழ்த்தியது. #Ronaldo #SerieA #juventus
    இத்தாலி கால்பந்து லீக்கான ‘செரி ஏ’-வில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் யுவான்டஸ் - நபோலி அணிகள் மோதின. ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் நபோலி அணியின் டிரையிஸ் மெர்ட்டன்ஸ் கோல் அடித்தார். இதற்கு பதில் கோலாக மரியோ மாண்ட்சுகிச் 26-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் ஸ்கோர் 1-1 என சமநிலையில் இருந்தது.

    2-வது பாதி நேரத்தில் 49-வது நிமிடத்தில் யுவான்டஸ் அணிக்கு ‘ப்ரீ ஹிக்’ வாய்ப்பு கிடைத்தது. ரொனால்டோ பந்தை மின்னல் வேகத்தில் அடித்தார். நபோலி வீரர்களை தாண்டி கோல் கீப்பர் அருகில் சென்றது. அவர் பந்தை தடுக்க கோல் கம்பத்தில் பந்து பட்டு திரும்பியது. அதை மெண்ட்சுகிச் சிறப்பான வகையில் கோலாக்கினார். இதனால் யுவான்டஸ் 2-1 என முன்னிலைப் பெற்றது.



    ஆட்டத்தின் 76-வது நிமிடத்தில் யுவான்டஸ் அணிக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. பந்து கார்னர் பகுதியில் இருந்து வர ரொனால்டோ தலையால் முட்டி கோல் எல்லையை நோக்கி தள்ளினார். ஆனால் நபோலி கோல் கீப்பர் பந்தை அபாரமாக தடுத்தார்.

    ஆனால் பந்தை லியோனார்டோ பொனுச்சி கோலாக மாற்றினார். இதனால் யுவான்டஸ் 3-1 என வெற்றி பெற்றது. கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடிக்காவிடிலும் இரண்டு கோல்கள் அடிக்க உதவிகரமாக இருந்தார். யுவான்டஸ் தான் விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றியை ருசித்து முதல் இடத்தில் உள்ளது.
    யூரோ சாம்பியன்ஸ் லீக்கில் மெஸ்சி ஹாட்ரிக் கோல் அடிக்க, கிறிஸ்டியானோ ரொனால்டோ ரெட் கார்டு பெற்று ஏமாற்றம் அளித்தார். #Messi #Ronaldo
    ஐரோப்பா கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆண்டுதோறும் சிறந்த கிளப் அணிகளுக்கு இடையில் சாம்பியன்ஸ் லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 2018-19-ம் ஆண்டிற்கான தொடர் நேற்றிரவு தொடங்கியது. இதில் 32 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம்பிடித்துள்ளது. இந்த அணிகள் தங்களது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா இரண்டுமுறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

    ஒரு ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ள ஸ்பெயின் நாட்டின் முன்னணி கிளப்பான பார்சிலோனா நெதர்லாந்தின் பிஎஸ்வி எய்ன்டோவன் அணியை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கியது முதலே மெஸ்சி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    32-வது நிமிடத்தில் மெஸ்சி முதல் கோலை பதிவு செய்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் பார்சிலோனா 1-0 என முன்னிலைப் பெற்றது. 2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 77 மற்றும் 87-வது நிமிடத்தில் மெஸ்சி அடுத்தடுத்து கோல் அடித்தார். இதற்கிடையில் டெம்பேள் 75-வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க பார்சிலோனா 4-0 என வெற்றி பெற்றது.

    மற்றொரு ஆட்டத்தில் ‘எச்’ பிரிவில் இடம் பிடித்துள்ள இத்தாலியின் முன்னணி கிளப்பான யுவான்டஸ் வாலென்சியாவை எதிர்கொண்டது. யுவான்டஸ் அணியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம் பிடித்திருப்பதால், அந்த அணி சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    முதல் பாதி ஆட்டத்தில் ஆட்டம் பரபரப்பாக சென்றது. ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில் யுவான்டஸ் அணிக்கு ‘ப்ரீ ஹிக்’ வாய்ப்பு கிடைத்தது. அப்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ பந்தை அடிக்க முயற்சி செய்தார். அவருடன் வாலென்சியா வீரரும் சென்றார். அப்போது வாலென்சியா வீரர் கீழே விழுந்தார். உடனே கிறிஸ்டியானா ரொனால்டோ அவரை தலையில் தட்டினார். இதனால் நடுவர் அதிரடியாக ரெட் கார்டு கொடுத்து ரொனால்டோவை வெளியேற்றினார்.

    எவ்வளவு மன்றாடியும் நடுவர் தனது முடிவை மாற்றவில்லை. இதனால் ரொனால்டோ கண்ணீர் வடித்தபடி வெளியேறினார். ரொனால்டோ இல்லாமல் யுவான்டஸ் 10 வீரர்களுடன் விளையாடியது. முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.



    2-வது பாதி நேரத்தில் 45 மற்றும் 51 நிமிடத்தில் யுவான்டஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்புகள் கிடைத்தது. இதை மிராலெம் சரியாக பயன்படுத்தி கோல் அடித்தார். இதனால் 2-0 என யுவான்டஸ் முன்னிலைப் பெற்றது. அதன்பின் 39 நிமிடங்கள் கோல் அடிக்க விடாமல் பார்த்துக் கொண்டனர். இதனால் ரொனால்டோ இல்லாமலேயே யுவான்டஸ் 2-0 என வெற்றி பெற்றது.

    சாம்பியன்ஸ் லீக் முதல் லீக்கில் மெஸ்சி ஹாட்ரிக் கோல் அடித்து அசத்திய நிலையில், ரொனால்டோ ரெட் கார்டு பெற்று ஏமாற்றம் அளித்தார்.
    ரியல் மாட்ரிட் அணியில் இருந்து யுவான்டஸ் சென்ற ரொனால்டோவிற்கு இரண்டு பேர் 7-ம் நம்பரை விட்டுக் கொடுத்துள்ளனர். #CR7 #Ronaldo #Juventus
    கால்பந்து விளையாட்டில் தலைசிறந்த வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ திகழ்ந்து வருகிறார். 33 வயதானாலும் அவரது ஆட்டத்தில் சிறிது கூட தொய்வு ஏற்படவில்லை. சமீபத்தில் யூரோ சாம்பியன்ஸ் லீக்கில் தொடரில் இவர் இடம்பிடித்திருந்த ரியல் மாட்ரிட் சாம்பியன் பட்டம் வென்றது.

    ரியல் மாட்ரிட் அணியில் இருந்து வெளியேறி ரொனால்டோ தற்போது யுவான்டஸ் அணியில் இணைந்துள்ளார். ரியல் மாட்ரிட் அணிக்கு முன் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடினார். அந்த காலத்தில் இருந்தே 7-ம் நம்பர் கொண்ட ஜெர்சியை அணிந்து விளையாடி வருகிறார். இது அவருடைய ராசியான நம்பராக இருந்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் அவர் ‘CR7’ என்றே குறிப்பிடுகிறார்.


    கொலம்பியா வீரர்

    யுவான்டஸ் அணியில் கொலம்பியாவைச் சேர்ந்த ஜுயான் குவாட்ராடோ விளையாடி வருகிறார். இவர் 7-ம் நம்பர் ஜெர்சியுடன் விளையாடி வந்தார். யுவான்டஸ் ரொனால்டோவை ஒப்பந்தம் செய்த உடன், ஜுயான் 7-ம் நம்பரை விட்டுக்கொடுத்தார். இந்த அணியில் இத்தாலியைச் சேர்ந்த லெயோனார்டோ ஸ்பினாஸ்சோலா இடம்பிடித்துள்ளார். இவர் 2012-ல் இருந்து லோன் மூலம் வெவ்வேறு அணிக்காக விளையாடியுள்ளார். கடைசியாக அட்டாலான்டா அணிக்காக விளையாடினார்.

    தற்போது யுவான்டஸ் அணிக்கு திரும்பியுள்ளார். இவர் யுவான்டஸ் அணியில் விளையாடும்போது 7 நம்பர் ஜெர்சியுடன் விளையாடினார். தற்போது இவரும் ரொனால்டோவிற்காக 7-ம் நம்பரை விட்டுக்கொடுத்துள்ளார். இதனால் ரொனால்டோவிற்காக இரண்டு பேர் 7-ம் நம்பரை விட்டுக்கொடுத்துள்ளனர்.
    உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் நட்சத்திர வீரர்கள் மெஸ்சி மற்றும் ரொனால்டோ சிறப்பாக விளையாடி தங்கள் அணிக்கு வெற்றியை தேடி தருவார்களா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது. #worldcup2018 #LionelMessi #Ronaldo
    ரஷியாவில் நடந்து வரும் 2-வது உலக கோப்பை கால்பந்து போட்டியில் 32 அணிகள் பங்கேற்றன. இதன் லீக் ஆட்டங்கள் கடந்த 28-ந்தேதியுடன் முடிவடைந்தது. இதில் 2-வது சுற்றுக்கு உருகுவே, ரஷியா (‘ஏ’ பிரிவு), ஸ்பெயின், போர்ச்சுக்கல் (பி), பிரான்ஸ், டென்மார்க் (சி), குரோஷியா, அர்ஜென்டினா (டி), பிரேசில், சுவிட்சர்லாந்து (இ), சுவீடன், மெக்சிகோ (எப்), பெல்ஜியம், இங்கிலாந்து (ஜி), கொலம்பியா, ஐப்பான் (எச்) ஆகிய 16 அணிகள் தகுதி பெற்றன.

    நடப்பு சாம்பியனான ஜெர்மனி, சவுதி அரேபியா, எகிப்து, ஈரான், மொராக்கோ, பெரு, ஆஸ்திரேலியா, நைஜீரியா, ஐஸ்லாந்து, செர்பியா, கோஸ்டாரிகா, தென்கொரியா, துனிசியா, பனாமா, செனகல், போலந்து ஆகிய 16 அணிகள் முதல் சுற்றோடு வெளியேறின.

    2-வது சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. இதில் தோல்வி அடையும் அணி போட்டியில் இருந்து வெளியேறும். இதனால் ஒவ்வொரு ஆட்டமும் பரபரப்பாக இருக்கும். இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன. தற்போது கால்பந்து உலகில் நட்சத்திர வீரர்களாக மெஸ்சி (அர்ஜென்டினா), ரொனால்டோ (போர்ச்சுக்கல்) வலம் வருகிறார்கள்.

    அவர்கள் இருவருக்கும் உலகம் முழுவதும் தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. மெஸ்சி பார்சிலோனா கிளப் அணிக்கும், ரொனால்டோ ரியல் மாட்ரிட் கிளப் அணிக்கும் விளையாடி வருகிறார்கள்.

    இந்த இரு அணிகளும் மோதும்போது மெஸ்சி- ரொனால்டோ இருவருக்கும் இடையே நேரடி போட்டியாகவே கருதப்படும். அந்த அளவுக்கு இருவரும் களத்தில் நேருக்கு நேர் மல்லு கட்டுவார்கள்.

    உலக கோப்பையில் இன்று நடக்கும் ஆட்டங்களில் இருவரும் களம் இறங்குகிறார்கள். மெஸ்சி பிரான்சு அணிக்கு எதிராகவும், ரொனால்டோ உருகுவே அணிக்கு எதிராகவும் விளையாடுகிறார்கள். இதில் தங்களது அணியை வெற்றி பெற வைத்து கால் இறுதிக்கு அழைத்து செல்வது மெஸ்சியா, ரொனால்டோவா? என்று ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் நிலவுகிறது.

    இருவருமே தங்களது அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஜொலிக்க வேண்டும் என்று பெரும்பாலான ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

    இன்றைய போட்டியில் அர்ஜென்டினா- போர்ச் சுக்கல் அணிகள் வெற்றி பெற்றால் கால் இறுதி யில் இவ்விரு அணிகளும் மோதும் வாய்ப்பு ஏற்படும்.
    ஆனால் இருவரும் இன்று களம் இறங்கி எதிராக விளையாடும் அணிகள் பலம் பொருந்தியதாக இருக்கிறது. இதனால் அவர்களுக்கு கடும் சவால் காத்திருக்கிறது.

    மெஸ்சி மற்றும் ரொனால்டோ விளையாடும் போட்டி என்பதால் இது மிகவும் முக்கியமான ஆட்டங்களாக கருதப்படுகிறது. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் வெற்றி பெற்றால் காலிறுதியில் போர்ச்சுக்கல் - அர்ஜெண்டினா அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அனைவரும் இரண்டு அணிகளும் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையில் ரசிகர்கள் உள்ளனர். #worldcup2018 #LionelMessi #Ronaldo
    மற்றவர்களுக்கென்றால் பேசும் விதிமுறை, ரொனால்டோ மெஸ்சி என்றால் பேசாது என ரெட் கார்டு சர்ச்சையில் ஈரான் பயிற்சியாளர் பதில் அளித்துள்ளார். #WorldCup
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. உச்சக்கட்டமாக நேற்று நடைபெற்ற போர்ச்சுக்கல் - ஈரான் இடையிலான போட்டியில் அதிக சர்ச்சை ஏற்பட்டது. ஏற்கனவே சர்ச்சையில் சிக்கித் தவிக்கும் VAR, இந்த போட்டியின்போது உச்சக்கட்டத்தை எட்டியது.

    குரூப் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்த இரண்டு அணிகள் மோதிய நேற்றைய ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அது நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலை இருந்தது.

    இதனால் ஆட்டம் ஆக்ரோஷமாக இருந்தது. ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் ரொனால்டோ கோல் அடிக்க முயற்சி செய்தார். ஈரான் தடுப்பாட்டக்காரர் அவரை தடுக்க முயற்சி செய்யும்போது ரொனால்டோ கீழே விழுந்தார். ஆனால் நடுவர் பெனால்டி வாய்ப்பு கொடுக்கவில்லை. பின்னர், நடுவர் ரிவியூ (VAR) கேட்க பெனால்டி வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், ரொனால்டோ அதில் கோல் அடிக்கவில்லை.

    ஆட்டத்தின் 81-வது நிமிடத்தில் மைதானத்தில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. ரொனால்டோ தனது முழங்கையால் ஈரான் வீரர் மோர்டேசா போராலிகான்ஜியை தள்ளிவிட்டார். இதற்கு ஈரான் வீரர்கள் ரிவியூ (VAR) கேட்டனர். அப்போது ரொனால்டோ முழங்கையால் தாக்கியது தெளிவாக தெரிந்தது. பலமுறை டிவியை பார்த்து ஆராய்ந்த பராகுவே நடுவர், மஞ்சள் அட்டையை காண்பித்தார். இதனால் ரெனால்டோ மஞ்சள் அட்டை பெற்றார்.



    இது ஈரான் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. முழங்கையால் தாக்கினால் தானாகவே ரெட் கார்டு வழங்கப்பட வேண்டும். ஆனால், பலமுறை டிவியில் போட்டு தெளிப்படுத்திய பின்னரும் ரொனால்டோவிற்கு ரெட் கார்டு கொடுக்காதது அந்த அணிக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது. 81-வது நிமிடத்திற்குப் பிறகு சுமார் 16 நிமிட ஆட்டம் நடைபெற்றது. ஒருவேளை ரொனால்டோ வெளியேறியிருந்தால் 10 பேருடன் விளையாடும் போர்ச்சுக்கலை வென்று ஈரான் அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருக்கும்.

    அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த கோபத்தில் போட்டிக்குப்பின் ஈரான் பயிற்சியாளர் கார்லஸ் குய்ரோஸ் கூறுகையில் ‘‘நீங்கள் VAR-விற்காக போட்டியை நிரூத்தினீர்கள். அங்கே ரொனால்டோ முழங்கையால் தாக்கியது தெளிவாகத் தெரிந்தது. பிபா விதிமுறைப்படி முழங்கை என்றாலேயே, ரெட் கார்டுதான். ஆனால், மெஸ்சி அல்லது ரொனால்டோ என்றால் விதிமுறை ஒன்றும் சொல்லாது’’ என்று தெரிவித்தார்.
    உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஈரான் அணிக்கு எதிராக பெனால்டி வாய்ப்பை ரொனால்டோ தவறிவிட்டதால் போர்ச்சுகல் வெற்றி வாய்ப்பு பரிதாபமாக பறிபோனது. #WorldCup #RonaldoCR7
    உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்துள்ள ஈரான் மற்றும் போர்ச்சுகல் அணிகள் நேற்றிரவு மோதின.

    போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் 53-வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெனால்டி வாய்ப்பை தவற விட்டார். அவர் அடித்த பந்தை ஈரான் கோல் கீப்பர் அருமையாக தடுத்தார். அவர் கோல் அடித்து இருந்தால் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்து ஹாரி கேனை (இங்கிலாந்து) தொட்டு இருப்பார்.

    ஏற்கனவே அர்ஜென்டினாவை சேர்ந்த நட்சத்திர வீரர் மெஸ்சி பெனால்டியை தவற விட்டு இருந்தார்.

    நேற்றைய ஆட்டத்தில் ரொனால்டோ முரட்டுத் தனத்தில் ஈடபட்டார். ஈரான் வீரரின் முகத்தை கையால் குத்தியதற்காக அவருக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. #WorldCup #WorldCupRussia2018 #Portugal #RonaldoCR7
    ரஷிய உலகக்கோப்பை போட்டியில் 4 கோல்கள் அடித்துள்ள ரொனால்டோ இன்று ஈரானுக்கு எதிரான ஆட்டத்திலும் அதிரடியாக விளையாடுவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. #FIFA2018 #CristianoRonaldo
    உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவர் ரொனால்டோ. போர்ச்சுக்கல்லை சேர்ந்த அவர் உலக கோப்பையில் அபாரமாக ஆடி வருகிறார். ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில் ரொனால்டோ ‘ஹாட்ரிக்’ கோல் அடித்தார். அடுத்து மொராக்கோவுக்கு எதிராக 1 கோல் அடித்தார். 4 கோல்கள் அடித்துள்ள அவர் இன்று ஈரானுக்கு எதிரான ஆட்டத்திலும் அதிரடியாக விளையாடுவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5 கோல் அடித்து முன்னிலையில் இருக்கும் இங்கிலாந்து கேப்டன் ஹாரிகேனை முந்துவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. #FIFA2018 #CristianoRonaldo
    அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி GOAT அல்ல, Sheep என்று டுவிட்டர்வாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர். #WorldCup2018 #Messi
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அர்ஜென்டினா கோப்பையை வாங்கும் அணகளில் ஒன்றாக இருக்கும் என கணிக்கப்பட்டது. இதற்குக் காரணம் அந்த அணியில் மெஸ்சி இடம்பிடித்திருப்பது. இந்த தலைமுறையின் சிறந்த வீரராக கருதப்படும் மெஸ்சி, பார்சிலோனா அணிக்காக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

    அர்ஜென்டினா என்றாலே கால்பந்து ரசிகர்களுக்கு ஞாபகம் வருவது டியகோ மரடோனா, மெஸ்சி ஆகியோர்தான். இந்த இருவர்களுக்கும் இடையில் யார் சிறந்தவர்கள் என்பதுதான் தற்போதைய விவாதம் உள்ளது. இதில் மெஸ்சி சற்றே பின்தங்கியிருக்கிறார். ஏனென்றால் முக்கியமான சர்வதேச தொடரில் அவர் ஜொலித்தது கிடையாது. கடந்த வருடம் பிரேசிலில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ஜெர்மனியிடம் வீழ்ந்து கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை இழந்தார். அதனோடு கோபா அமெரிக்கா கோப்பையை இரண்டு முறை சிலியிடம் இழந்தார்.



    இதனால் அர்ஜென்டினாவிற்கு சர்வதேச கோப்பையை வாங்கி தந்தது கிடையாது என்ற விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்த உலகக்கோப்பையில் மெஸ்சி களம் இறங்கினார். இந்த தொடரில் அர்ஜென்டினாவின் ஆட்டத்தை பொறுத்து ஓய்வு முடிவு இருக்கும் என்று அறிவித்தார்.

    ஆனால், ரசிகர்கள் எதிர்பார்த்தற்கு நேர் எதிராக அர்ஜென்டினாவின் விளையாட்டு அமைந்து வருகிறது. ‘டி’ பிரிவில் இடம்பிடித்துள்ள அர்ஜென்டினா முதல் போட்டியில் சுவிட்சர்லாந்திற்கு எதிராக 1-1 என டிரா செய்தது. நேற்று நடைபெற்ற குரோசியாவிற்கு எதிராக 0-3 என படுதோல்வியடைந்தது. இந்த இரண்டு போட்டியிலும் மெஸ்சியால் ஒரு கோல் கூட அடிக்கமுடியவில்லை.



    அதேவேளையில் இவருக்கு போட்டியாக திகழும் போர்ச்சுக்கலின் கிறிஸ்டினோ ரொனால்டோ இரண்டு போட்டிகளில் நான்கு கோல்கள் அடித்து அசத்தியுள்ளார். இந்த தலைமுறையின் GOAT (Greatest Of All Time- எல்லா நேரத்திலும் சிறந்தவர்) யார் என்பதில் இருவருக்கும் இடையில் கடும் போட்டிய நிலவி வருகிறது. இந்நிலையில் மெஸ்சியின் சொதப்பல் ஆட்டத்தால் வெறுப்படைந்த ரசிகர்கள், அவர் GOAT அல்ல, Sheep  என்று டுவிட்டரில் கிண்டல் செய்து வருகின்றனர்.


    அழுது புரண்ட சிறுவனுக்காக பஸ்சை விட்டு இறங்கிய ரொனால்டோ, அவனுடன் போட்டோ எடுத்து இன்ப அதிர்ச்சி அளித்தார் #WorldCup2018
    உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. ரஷியா உலகக் கோப்பையில் போர்ச்சுக்கல் தனது முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் 3-3 என டிராவில் முடிந்தது. போர்ச்சுக்கல் அணிக்காக அடித்த மூன்று கோலும் கிறிஸ்டியானோ ரொனால்டோவை சார்ந்தது. தனது கால்பந்து வரலாற்றில் இதன்மூலம் 51-வது ஹாட்ரிக்கை பதிவு செய்தார்.

    கடந்த வாரத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது அணி வீரர்களுடன் பஸ் மூலம் விமான நிலையத்திற்கு செல்ல முயன்றார். அப்போது அவர் பஸ்ஸிற்குள் ஏறிவிட்டார். அப்போது பஸ் அருகில் நின்ற கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தீவிர ரசிகனான சிறுவன் ஒருவன், ரொனால்டோ அருகில் இருந்து போட்டோ எடுக்க முடியவில்லையே என்ற கவலையில் ரொனால்டோ அணியும் 7 நம்பர் ஜெர்சி அணிந்து கொண்டு அழுதுக்  கொண்டிருந்தான்.



    அப்போது பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அந்தச் சிறுவனை பிடித்து பஸ் அருகே செல்ல முடியாத வகையில் பார்த்துக் கொண்டார். இதை பஸ்ஸில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ரொனால்டோ, உடனடியாக பஸ்ஸில் இருந்து கீழே இறங்கினார்.

    அந்த சிறுவனை அழைத்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார் தன்னுடன் அனைத்துக் கொண்டார். அத்துடன் அந்த சிறுவனும் ரொனால்டோவை கட்டிப்பிடித்தான். இதை சற்றும் எதிபார்க்காத அந்த சிறுவனின் தாய், ரொனால்டோவின் அனுமதி பெற்று பொறுமையாக போட்டோ எடுத்துக் கொண்டார். சிறுவன் அணிந்த ஜெர்சியில் ரொனால்டோ தனது ஆட்டோகிராஃபை பதிவு செய்தார்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


    மெஸ்சி அடித்த பெனால்டி சூட்டை சிறப்பாக தடுத்த ஐஸ்லாந்து கோல்கீப்பர், கேட்கப்பட்ட கேள்வியால் அதிர்ந்து போனார். #WorldCup2018
    ரஷியா உலகக்கோப்பையில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பலம் வாய்ந்த அர்ஜென்டினா முதன்முறையாக தகுதிப்பெற்ற ஐஸ்லாந்தை எதிர்த்து விளையாடியது. இதில் ஐஸ்லாந்து 1-1 போட்டியை அசத்தலாக டிரா செய்தது. இதற்கு முக்கிய காரணம் ஐஸ்லாந்து கோல்கீப்பர் ஹேன்ஸ் ஹால்டோர்சன்தான். மெஸ்சி அடித்த பெனால்டி சூட்டை சிறப்பாக தடுத்தார்.

    மெஸ்சிக்கும், கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கும் இடையில் எப்போதுமே போட்டியிருக்கும். மெஸ்சி வாய்ப்பை முறியடித்த ஹேன்ஸ் ஹால்டோர்சனை பார்த்து, நீங்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மாமாவா? என்று கேட்க அதிர்ந்துபோனார். உடனடியாக அவர் மறுத்துள்ளார்.



    மேலும், அர்ஜென்டினாவிற்கு எதிரான ஆட்டம் குறித்து ஹேன்ஸ் ஹால்டோர்சன் கூறுகையில் ‘‘ஐஸ்லாந்து கோல்கீப்பராகிய எனக்கு, உலகின் தலைசிறந்த வீரர் அடிக்கும் பெனால்டி சூட்டை எதிர்கொள்வது சிறந்த தருணம். அதை தடுத்ததன் மூலம் எனது கனவு நினைவாகியுள்ளது. குறிப்பாக எனது அணிக்கு இது மிகவும் முக்கியமானது. எங்களுடைய இலக்கு அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதுதான்’’ என்றார்.
    ×