search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரொனால்டோவிற்கு வந்தால் ரத்தம், மற்றவர்களுக்கு தக்காளி சட்னியா?- பயிற்சியாளர் கேள்வி
    X

    ரொனால்டோவிற்கு வந்தால் ரத்தம், மற்றவர்களுக்கு தக்காளி சட்னியா?- பயிற்சியாளர் கேள்வி

    மற்றவர்களுக்கென்றால் பேசும் விதிமுறை, ரொனால்டோ மெஸ்சி என்றால் பேசாது என ரெட் கார்டு சர்ச்சையில் ஈரான் பயிற்சியாளர் பதில் அளித்துள்ளார். #WorldCup
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. உச்சக்கட்டமாக நேற்று நடைபெற்ற போர்ச்சுக்கல் - ஈரான் இடையிலான போட்டியில் அதிக சர்ச்சை ஏற்பட்டது. ஏற்கனவே சர்ச்சையில் சிக்கித் தவிக்கும் VAR, இந்த போட்டியின்போது உச்சக்கட்டத்தை எட்டியது.

    குரூப் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்த இரண்டு அணிகள் மோதிய நேற்றைய ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அது நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலை இருந்தது.

    இதனால் ஆட்டம் ஆக்ரோஷமாக இருந்தது. ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் ரொனால்டோ கோல் அடிக்க முயற்சி செய்தார். ஈரான் தடுப்பாட்டக்காரர் அவரை தடுக்க முயற்சி செய்யும்போது ரொனால்டோ கீழே விழுந்தார். ஆனால் நடுவர் பெனால்டி வாய்ப்பு கொடுக்கவில்லை. பின்னர், நடுவர் ரிவியூ (VAR) கேட்க பெனால்டி வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், ரொனால்டோ அதில் கோல் அடிக்கவில்லை.

    ஆட்டத்தின் 81-வது நிமிடத்தில் மைதானத்தில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. ரொனால்டோ தனது முழங்கையால் ஈரான் வீரர் மோர்டேசா போராலிகான்ஜியை தள்ளிவிட்டார். இதற்கு ஈரான் வீரர்கள் ரிவியூ (VAR) கேட்டனர். அப்போது ரொனால்டோ முழங்கையால் தாக்கியது தெளிவாக தெரிந்தது. பலமுறை டிவியை பார்த்து ஆராய்ந்த பராகுவே நடுவர், மஞ்சள் அட்டையை காண்பித்தார். இதனால் ரெனால்டோ மஞ்சள் அட்டை பெற்றார்.



    இது ஈரான் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. முழங்கையால் தாக்கினால் தானாகவே ரெட் கார்டு வழங்கப்பட வேண்டும். ஆனால், பலமுறை டிவியில் போட்டு தெளிப்படுத்திய பின்னரும் ரொனால்டோவிற்கு ரெட் கார்டு கொடுக்காதது அந்த அணிக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது. 81-வது நிமிடத்திற்குப் பிறகு சுமார் 16 நிமிட ஆட்டம் நடைபெற்றது. ஒருவேளை ரொனால்டோ வெளியேறியிருந்தால் 10 பேருடன் விளையாடும் போர்ச்சுக்கலை வென்று ஈரான் அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருக்கும்.

    அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த கோபத்தில் போட்டிக்குப்பின் ஈரான் பயிற்சியாளர் கார்லஸ் குய்ரோஸ் கூறுகையில் ‘‘நீங்கள் VAR-விற்காக போட்டியை நிரூத்தினீர்கள். அங்கே ரொனால்டோ முழங்கையால் தாக்கியது தெளிவாகத் தெரிந்தது. பிபா விதிமுறைப்படி முழங்கை என்றாலேயே, ரெட் கார்டுதான். ஆனால், மெஸ்சி அல்லது ரொனால்டோ என்றால் விதிமுறை ஒன்றும் சொல்லாது’’ என்று தெரிவித்தார்.
    Next Story
    ×