search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Russia World Cup"

    நடப்பு சாம்பியன் ஜெர்மனியை 2-0 என கொரியா வீழ்த்தியதால், அந்நாட்டு தூதருக்கு மதுக்குகொடுத்து கொண்டாடினார்கள் மெக்சிகோ ரசிகர்கள். #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ‘எஃப்’ பிரிவின் கடைசி லீக்கில் ஜெர்மனி - தென்கொரியா அணிகள் மோதின. இதில் வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற நிலையில் ஜெர்மனி விளையாடியது. ஆனால் 0-2 என தோல்வியை சந்தித்தது.

    அதேவேளையில் ஸ்வீடனிடம் மெக்சிகோ 0-3 என வீழ்ந்தது. ஒருவேளை கொரியாவை ஜெர்மனி வீழ்த்தியிருந்தால் மெக்சிகோ தொடக்க சுற்றோடு வெளியேறியிருக்கும்.

    ஆகவே ஜெர்மனியை வீழ்த்தி வயிற்றில் பால் வார்த்த கொரியாவின் வெற்றியை மெக்சிகோ விமர்சையாக கொண்டாடி வருகிறது. கொரிய வெற்றி பெற்றதும் மெக்சிகோ ரசிகர்கள் மெக்சிகோவிற்காக கொரிய தூதரகத்திற்கு சென்றார்கள்.



    அங்கு சென்ற அவர்கள் கொரியா தூதரை வெளியே அழைத்தனர். அப்போது ரசிர்கள் அவருக்கு மதுபானம் கொடுத்து வெற்றியை கொண்டினார்கள். அவரும் மது அருந்துவிட்டு கையை தூக்கி வெற்றி முழக்கமிட்டார்.
    அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி GOAT அல்ல, Sheep என்று டுவிட்டர்வாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர். #WorldCup2018 #Messi
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அர்ஜென்டினா கோப்பையை வாங்கும் அணகளில் ஒன்றாக இருக்கும் என கணிக்கப்பட்டது. இதற்குக் காரணம் அந்த அணியில் மெஸ்சி இடம்பிடித்திருப்பது. இந்த தலைமுறையின் சிறந்த வீரராக கருதப்படும் மெஸ்சி, பார்சிலோனா அணிக்காக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

    அர்ஜென்டினா என்றாலே கால்பந்து ரசிகர்களுக்கு ஞாபகம் வருவது டியகோ மரடோனா, மெஸ்சி ஆகியோர்தான். இந்த இருவர்களுக்கும் இடையில் யார் சிறந்தவர்கள் என்பதுதான் தற்போதைய விவாதம் உள்ளது. இதில் மெஸ்சி சற்றே பின்தங்கியிருக்கிறார். ஏனென்றால் முக்கியமான சர்வதேச தொடரில் அவர் ஜொலித்தது கிடையாது. கடந்த வருடம் பிரேசிலில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ஜெர்மனியிடம் வீழ்ந்து கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை இழந்தார். அதனோடு கோபா அமெரிக்கா கோப்பையை இரண்டு முறை சிலியிடம் இழந்தார்.



    இதனால் அர்ஜென்டினாவிற்கு சர்வதேச கோப்பையை வாங்கி தந்தது கிடையாது என்ற விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்த உலகக்கோப்பையில் மெஸ்சி களம் இறங்கினார். இந்த தொடரில் அர்ஜென்டினாவின் ஆட்டத்தை பொறுத்து ஓய்வு முடிவு இருக்கும் என்று அறிவித்தார்.

    ஆனால், ரசிகர்கள் எதிர்பார்த்தற்கு நேர் எதிராக அர்ஜென்டினாவின் விளையாட்டு அமைந்து வருகிறது. ‘டி’ பிரிவில் இடம்பிடித்துள்ள அர்ஜென்டினா முதல் போட்டியில் சுவிட்சர்லாந்திற்கு எதிராக 1-1 என டிரா செய்தது. நேற்று நடைபெற்ற குரோசியாவிற்கு எதிராக 0-3 என படுதோல்வியடைந்தது. இந்த இரண்டு போட்டியிலும் மெஸ்சியால் ஒரு கோல் கூட அடிக்கமுடியவில்லை.



    அதேவேளையில் இவருக்கு போட்டியாக திகழும் போர்ச்சுக்கலின் கிறிஸ்டினோ ரொனால்டோ இரண்டு போட்டிகளில் நான்கு கோல்கள் அடித்து அசத்தியுள்ளார். இந்த தலைமுறையின் GOAT (Greatest Of All Time- எல்லா நேரத்திலும் சிறந்தவர்) யார் என்பதில் இருவருக்கும் இடையில் கடும் போட்டிய நிலவி வருகிறது. இந்நிலையில் மெஸ்சியின் சொதப்பல் ஆட்டத்தால் வெறுப்படைந்த ரசிகர்கள், அவர் GOAT அல்ல, Sheep  என்று டுவிட்டரில் கிண்டல் செய்து வருகின்றனர்.


    உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் இரண்டு ஆட்டத்திலும் வெற்றி பெறாத அர்ஜென்டினா அணி தொடரில் இருந்து வெளியேற்றப்படும் விளிம்பில் உள்ளதால் மெஸ்சியின் உலகக்கோப்பை கனவு கேள்விகுறியாக உள்ளது. #FIFA2018 #Messi
    உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்சியால் அர்ஜென்டினா அணிக்கு பெருமை சேர்க்க முடியவில்லை. ஐஸ்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கோல் அடிக்காத அவர் நேற்றைய குரோஷியாவுக்கு எதிராகவும் கோல் அடிக்கவில்லை. 2 ஆட்டத்தில் விளையாடி வெற்றி பெறாத அர்ஜென்டினா போட்டியில் இருந்து வெளியேற்றப்படும் விளிம்பில் உள்ளது.

    30 வயதான மெஸ்சியின் உலககோப்பை கனவு கேள்விகுறியாகவும் இருக்கிறது. கடந்த உலககோப்பையில் அர்ஜென்டினாவை இறுதிப்போட்டி வரை கொண்டு வந்து அவர் மயிரிழையில் சாம்பியன் பட்டத்தை இழந்தார். இந்த முறை தொடக்கமே சரிவாக இருக்கிறது. மெஸ்சி சிறப்பாக ஆடினாலும் சக வீரர்களின் ஒத்துழைப்பு இல்லை. ஒருங்கிணைந்து விளையாட முடியாமல் அவர் தவிக்கிறார்.

    நேற்றைய ஆட்டத்தில் சக வீரர்கள் மெஸ்சியிடம் சரியான முறையில் பந்தை கொடுக்கவில்லை. மேலும் மெஸ்சி பந்தை கொண்டு செல்லும் போது அவருடன் நெருங்கி வரவில்லை. பார்சிலோனா கிளப்பில் மெஸ்சியால் சாதிக்க முடிந்ததுக்கு சக வீரர்களின் ஒத்துழைப்பு இருந்தது. ஆனால் அர்ஜென்டினா வீரர்கள் மெஸ்சியின் திறமைக்கு ஏற்ற வகையில் ஒத்துழைக்க முடியவில்லை.

    மெஸ்சியின் திறமையை பயிற்சியாளர் பாராட்டி இருக்கிறார். தோல்விக்காக அவரை குறை கூற முடியாது என்று விளக்கம் அளித்துள்ளார். #FIFA2018 #Messi #worldcup2018
    உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பலம் வாய்ந்த அர்ஜெண்டினாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி குரோஷியா அணி அபார வெற்றி பெற்றுள்ளது. #WorldCup2018
    உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் டி பிரிவில் இடம் பிடித்துள்ள அர்ஜெண்டினா மற்றும் குரோஷியா அணிகள் மோதின.

    ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. போட்டி தொடங்கியதில் இருந்தே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர்.

    இதைத்தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் குரோஷியா வீரர்கள் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அந்த அணியின் வீரர்கள் அடுத்தடுத்த இடைவேளையில் கோல் அடித்து தங்கள் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

    குரோஷியா அணியின்  ரெபிக் 53-வது நிமிடத்திலும், லூகா மாட்ரிக் 80-வது நிமிடத்திலும், இவான் ராகிடிக் 91வது நிமிடத்திலும் ஒரு கோல் அடித்தனர்.

    குரோஷியா வீரர்களின் ஆக்ரோஷ ஆட்டத்துக்கு முன் அர்ஜெண்டினா வீரர்கள் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதனால் போட்டியின் இறுதியில், குரேஷியா அணி அர்ஜெண்டினா அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. #FIFA2018 #WorldCupRussia2018 #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. #WorldCup2018
    உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு சி பிரிவில் இடம் பிடித்துள்ள பிரான்ஸ் மற்றும் பெரு அணிகள் மோதின.

    போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 34-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் கில்லான் மொபாபே ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைக்கு கொண்டு சென்றார்.

    இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இதையடுத்து, ஆட்டத்தின் இறுதி வரை இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இறுதியில், பிரான்ஸ் அணி பெரு அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. #FIFA2018 #WorldCupRussia2018 #WorldCup2018
    உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடக்கவிருக்கும் 2-வது ஆட்டத்தில் குரோஷியாவுடன் மோதும் அர்ஜென்டினா வெற்றி நெருக்கடியில் உள்ளது. #WorldCupRussia #FIFA2018
    நோவாசார்ட்:

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா, குரோஷியா, ஐஸ்லாந்து, நைஜிரியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ள ‘டி’ பிரிவு குரூப் ஆப் டெத் என்று அழைக்கப்படுகிறது.

    இந்த பிரிவில் குரோஷியா 3 புள்ளியுடன் முன்னிலையில் உள்ளது. அர்ஜென்டினா, ஐஸ்லாந்து அணிகள் தலா 1 புள்ளியுடன் உள்ளன. நைஜிரியா புள்ளி எதுவும் பெறவில்லை.

    2 முறை சாம்பியனான அர்ஜென்டினா 2-வது ஆட்டத்தில் குரோஷியாவை இன்று எதிர் கொள்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்குகிறது. புதுமுக அணியான ஐஸ்லாந்துடன் ‘டிரா’ செய்ததால் குரோஷியாவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் அர்ஜென்டினாவுக்கு உள்ளது.

    அந்த அணியின் கேப்டனும், உலகின் தலை சிறந்த வீரரான லியோனல் மெஸ்சி கடும் நெருக்கடியில் உள்ளார். ஐஸ்லாந்துக்கு எதிராக பெனால்டி கிக்கை தவறவிட்ட அவர் குரோஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அபாரமாக ஆடி தனது அணியை வெற்றி பெற வைக்க வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளார்.



    இதனால் வீரர்கள் வரிசையிலும் மாற்றம் இருக்கலாம்.

    குரோஷியா அணி பலம் பொருந்தியவை என்பதால் அர்ஜென்டினாவுக்கு சவாலாக இருக்கும். அந்த அணி தொடக்க ஆட்டத்தில் 1-0 என்ற கணக்கில் நைஜிரியாவை வீழ்த்தி இருந்தது. அந்த அணியில் மோட்ரிக் நம்பிக்கை நட்சத்திர வீரராக உள்ளார்.

    இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் அர்ஜென்டினா 2 முறையும், குரோஜியா 1 தடவையும் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் டிரா ஆனது.

    ‘சி’ பிரிவில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் டென்மார்க்-ஆஸ்திரேலியா (மாலை 5.30) பிரான்ஸ்-பெரு (இரவு 8.30) அணிகள் மோதுகின்றன.

    டென்மார்க், பிரான்ஸ் அணிகள் வெற்றி பெற்றது. 2-வது சுற்றுக்கு நுழையும் டென்மார்க் தொடக்க ஆட்டத்தில் 1-0 என்ற கணக்கில் பெருவையும், பிரான்ஸ் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி இருந்தது.

    இதனால் போட்டியில் இருந்து வெளியேறாமல் இருக்க ஆஸ்திரேலியா, பெரு அணிகள் வெற்றிக்காக கடுமையாக போராடும். #WorldCupRussia #FIFA2018
    உலகக்கோப்பை கால்பந்து தொடரில் உருகுவே அணி 1-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. #WorldCup2018
    உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின.

    போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 22வது நிமிடத்தில் உருகுவே அணியின் நடசத்திர வீரர் லூயிஸ் சுவாரசு ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் உருகுவே அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

    இதையடுத்து, ஆட்டத்தின் இறுதி வரை இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இறுதியில், உருகுவே அணி சவுதி அரேபியா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

    இந்த ஆட்டத்தில் பெற்ற வெற்றி மூலம் உருகுவே அணி 2-வது சுற்றை நெருங்கியுள்ளது. உருகுவேயின் நட்சத்திர வீரர் லூயிஸ் சுவாரசுக்கு இது 100-வது சர்வதேச போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. #FIFA2018 #WorldCupRussia2018 #WorldCup2018
    ரஷியா உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடக்கவிருக்கும் ஆட்டங்கள் குறித்த விவரத்தை காண்போம். #FIFA2018 #WorldCupRussia2018 #WorldCup2018
    இன்று நடக்கும் ஒவ்வொரு ஆட்டங்களையும் ஏறக்குறைய வாழ்வா-சாவா மோதல் என்று வர்ணிப்பதே சரியாக இருக்கும்.

    ஸ்பெயினுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 3-3 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ செய்த போர்ச்சுகல் அணி இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். ஆப்பிரிக்க தேசமான மொராக்கோ சற்று பலவீனமானது என்பதால் போர்ச்சுகல் அணி வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு உள்ளது. முந்தைய ஆட்டத்தில் ‘ஹாட்ரிக்’ கோல் அடித்து பிரமிக்க வைத்த போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இரண்டு முறை உலக சாம்பியனான உருகுவே அணி தனது முதல் லீக்கில் 1-0 என்ற கோல் கணக்கில் எகிப்தை வீழ்த்தியிருந்தது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் 2-வது சுற்றை நெருங்கிவிடலாம். உருகுவேயின் நட்சத்திர வீரர் லூயிஸ் சுவாரசுக்கு இது 100-வது சர்வதேச போட்டி என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். அதே சமயம் முதல் ஆட்டத்தில் 0-5 என்ற கோல் கணக்கில் ரஷியாவிடம் உதைவாங்கிய ஆசிய அணியான சவுதிஅரேபியா பலம் வாய்ந்த உருகுவேயை சமாளிப்பது கடினமே. உலக கோப்பை போட்டியில் சவுதிஅரேபியா அணி வெற்றி பெற்று 24 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பது நினைவு கூரத்தக்கது.

    முதல் ஆட்டத்தில் ‘டிரா’ கண்ட முன்னாள் உலக, ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயின் அணி கஜன் நகரில் இன்று இரவு நடக்கும் ஈரானுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிக்கனியை பறிக்க வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறது. இதில் தோற்றால் அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகி விடும். அதனால் இந்த முறை மிகுந்த எச்சரிக்கையுடன் ஆடுவார்கள். அதே சமயம் வெற்றியுடன் (மொராக்கோவுக்கு எதிராக) இந்த உலக கோப்பையை ஆரம்பித்த ஈரான் அணி இன்றைய ஆட்டத்தில் வாகை சூடினால் 2-வது சுற்றை கிட்டத்தட்ட உறுதி செய்து விடலாம். ஆனால் உலக கோப்பை போட்டியில் ஈரான் அணி ஐரோப்பிய அணிகளை வீழ்த்தியதாக (6-ல் விளையாடி 5 தோல்வி, ஒரு டிரா) வரலாறு கிடையாது. ஈரானுக்கு திடீர் பின்னடைவாக அந்த அணியின் பின்கள வீரர் ரோவ்ஸ்பே செஷ்மி தசைப்பிடிப்பு காரணமாக எஞ்சிய போட்டிகளில் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. #FIFA2018 #WorldCupRussia2018 #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து தொடரில் போலந்தை 2-1 என வீழ்த்தி செனகல் அணி வெற்றி பெற்றுள்ளது. #WorldCup2018
    உலக கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு போலந்து மற்றும் செனகல் அணிகள் மோதின.

    போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 37வது நிமிடத்தில் செனகல் அணியின் தியாகோ சியோனெக் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

    இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் செனகல் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் எம் பாயே நியாங் ஒரு கோல் அடிக்க, செனகல் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

    தொடர்ந்து ஆடிய போலந்து அணி ஆட்டத்தின் இறுதியில் 86 வது நிமிடத்தில் கிரிசோவியக் ஒரு கோல் அடித்தார். அதன்பின் ஆட்டம் முடியும் வரை போலந்து அணி மற்றொரு கோல் அடிக்கவில்லை.

    இறுதியில், செனகல் அணி போலந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. #FIFA2018 #WorldCupRussia2018 #WorldCup2018
    உலகக்கோப்பையில் நெய்மர் ஏராளமான தாக்குதலுக்கு உள்ளாவார் என்று சக வீரரான பிலிப்பே கவுட்டினோ தெரிவித்துள்ளார். #WolrldCup2018 #Neymar
    ரஷியாவில் உலகக்கோப்பை கால்பந்து திருவிழா நடைபெற்று வருகிறது. பிரேசில் அணி தனது முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தை எதிர்கொண்டது. காயத்திற்குப்பின் நெய்மர் இந்த போட்டியில் கலந்து கொண்டார். அவருடன் பார்சிலோனா புகழ் பிலிப்பே கவுட்டினோ, ஜீசஸ், ரியல் மாட்ரிட் புகழ் மார்சிலோ போன்ற தலைசிறந்த வீரர்கள் இணைந்து விளையாடுகிறார்கள்.

    பிரேசில் இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்த்த நிலையில் பிலிப்பே கவுட்டினோவின் கோலால் 1-1 என டிராதான் செய்தது.



    ஆட்டத்தின் பெரும்பாலான நேரத்தில் சுவிட்சர்லாந்து வீரர்கள் தடுப்பாட்டத்துடன், நெய்மரை தாக்கி Foul செய்வதிலேயே குறியாக இருந்தனர். தற்போதுதான் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள நெய்மர், இந்த தாக்குதலை அதிக அளவில் சந்திப்பார் என்று கவுட்டினோ தெரிவித்துள்ளார்.



    1998-ம் ஆண்டிற்குப் பிறகு நெய்மர்தான் 10 முறை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இதுகுறித்து கவுட்டினோ கூறுகையில் ‘‘சுவிட்சர்லாந்து வீரர்கள் எங்களை அதிக அளவில் தாக்கினார்கள். ஆனால், எல்லா போட்டிகளிலும் இப்படிதான் நடக்கும் என நான் யூகிக்கிறேன்.



    நாம் உலகக்கோப்பையை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். ஆகவே, எல்லோரும் போட்டிகளில் வெற்றி பெற முயற்சி செய்வோம். நெய்மர் நன்றாக இருக்கிறார். ஆனால், சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தவறு செய்ய வேண்டியதில்லை என்ற போதிலும், தவறு செய்தார்கள். இப்படி நடந்தால் போட்டி முடங்கிவிடும்.

    அனைத்து போட்டிகளிலும் இதுபோன்று நடைபெறும். அதனை எதிர்த்து நாங்கள் முன்னேற வேண்டும்’’ என்றார்.
    ரஷியா உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடக்கவிருக்கும் ஆட்டங்கள் குறித்த விவரத்தை காண்போம். #FIFA2018 #WorldCupRussia2018 #WorldCup2018
    செயின்ட் பீட்டர்ஸ்பர்க்:

    உலககோப்பை கால்பந்து போட்டியில் ‘ஏ’ பிரிவில் இன்று இரவு 11.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ரஷியா- ஆப்பிரிக்கா கண்டத்தை சேர்ந்த எகிப்து அணிகள் மோதுகின்றன.

    ரஷிய அணி தொடக்க ஆட்டத்தில் சவுதி அரேபியாவை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதனால் அந்த அணி மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது.

    எகிப்து அணி தொடக்க ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் உருகுவேயிடம் தோற்றது. இதனால் அந்த அணிக்கு வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது.

    உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவரான முகமது ஷாலா இன்றைய ஆட்டத்தில் விளையாடுகிறார். அவரது வருகையால் எகிப்து அணி எழுச்சி பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சாம்பியன்ஸ் ‘லீக்’ போட்டியின் இறுதி ஆட்டத்தில் லிவர்பூல் அணிக்காக ஆடிய போது ஷாலாவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் உருகுவேக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் நட்சத்திர வீரரான அவரால் எகிப்து அணிக்கு ஆட முடியவில்லை. இன்றைய ஆட்டம் மிகவும் முக்கியமானது என்பதால் முகமது ஷாலா களம் இறங்குகிறார்.

    இரு அணிகளும் முதல் முறையாக மோதுகின்றன. தரவரிசையில் எகிப்து 45-வது இடத்திலும், ரஷியா 70-வது இடத்திலும் உள்ளன.

    ‘எச்‘ பிரிவில் இன்று முதல் ஆட்டங்கள் தொடங்குகிறது. மாலை 5.30 மணிக்கு இந்த பிரிவில் நடைபெறும் ஆட்டத்தில் தென்அமெரிக்கா கண்டத்தை சேர்ந்த கொலம்பியா- ஆசிய கண்டத்தை சேர்ந்த ஜப்பான் அணிகள் மோதுகின்றன. இதில் கொலம்பியா வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இரு அணிகள் மோதிய ஆட்டத்தில் கொலம்பியா 2 முறை வெற்றி பெற்றுள்ளது. 1 ஆட்டம் ‘டிரா’ ஆனது.

    இரவு 8.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் போலந்து- செனகல் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். போலந்து வெற்றி பெற அதிகமான வாய்ப்புகள் உள்ளன. #FIFA2018 #WorldCupRussia2018 #WorldCup2018
    ரஷியா உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடக்கவிருக்கும் 3 ஆட்டங்கள் குறித்த விவரத்தை காண்போம். #FIFO2018 #WorldCupRussia2018 #WorldCup2018
    உலககோப்பை கால்பந்து போட்டியில் இன்று மூன்று ஆட்டங்கள் நடக்கின்றன. இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ‘எப்’ பிரிவில் உள்ள சுவீடன்- தென்கொரியா அணிகள் மோதுகின்றன.

    தரவரிசையில் 24-வது இடத்தில் உள்ள சுவீடன் 2006-ம் ஆண்டுக்கு பிறகு உலககோப்பையில் விளையாடுகிறது. இந்த அணியில் மார்கஸ் பெர்க், போர்ஸ் பெர்க், லின்டலாப் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    தென்கொரியாவைவிட சுவீடன் பலம் வாய்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த அணி வெற்றி பெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஆசிய கண்டத்தில் இருந்து தகுதி பெற்றுள்ள தென்கொரியா அணியில் நட்சத்திர வீரராக சன் ஹியூங்-மின் உள்ளார். அந்த அணி 2002-ம் ஆண்டு உலககோப்பையில் அரை இறுதி வரை சென்றது.

    சுவீடனுக்கு எதிராக வெற்றி பெற கடுமையாக போராட வேண்டியதிருக்கும். இரவு 8.30 மணிக்கு நடக்கும் போட்டியில் பெல்ஜியம்- பனாமா (‘ஜி’ பிரிவு) அணிகள் மோதுகின்றன.

    3-வது இடத்தில் உள்ள பெல்ஜியம் சிறந்த அணிகளில் ஒன்றாக திகழ்கிறது. ஈடன் ஹசார்ட், கெவின் புருனி, லூகாஸ் ஆகிய நட்சத்திர வீரர்கள் நல்ல நிலையில் உள்ளனர்.

    பலம் வாய்ந்த அந்த அணி பனாமாவை எளிதாக தோற்கடிக்கும்என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அமெரிக்க கண்ட அணியான பனாமா முதல் முறையாக உலக கோப்பையில் விளையாடுகிறது.

    அந்த அணி தகுதி சுற்றில் அமெரிக்காவை வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தது. இதுபோன்ற அதிர்ச்சியை உலக கோப்பையிலும் கொடுக்ககாத்து இருக்கிறது.

    இரவு 11.30 மணிக்கு ஆட்டத்தில் ‘ஜி’ பிரிவில் உள்ள இங்கிலாந்து- துனிசியா அணிகள் பலப் பரீட்சை நடத்துகின்றன.

    முன்னாள் சாம்பியான இங்கிலாந்து அணியில் ஹேரிகானே, ஜேமி வார்டி, ஸ்டெர்லிங் போன்ற நட்சத்திர வீரர்கள் உள்ளனர். மேலும் இளம் வீரர்களை அதிகமாக கொண்டு இருக்கிறது. இதனால் அந்த அணி எழுச்சியுடன் விளையாடும்.

    கடந்த உலக கோப்பை போட்டிகளில் இங்கிலாந்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் இந்த முறை சாதிக்கும் முனைப்பில் உள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள துனிசியா 5-வது முறையாக உலக கோப்பையில் விளையாடுகிறது. அந்த அணி இங்கிலாந்துக்கு எதிராக போராட வேண்டியது இருக்கும். #FIFO2018 #WorldCupRussia2018 #WorldCup2018
    ×