search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெய்மர் ஏராளமான தாக்குதலுக்கு உள்ளாவார்- சக வீரர் கவுட்டினோ சொல்கிறார்
    X

    நெய்மர் ஏராளமான தாக்குதலுக்கு உள்ளாவார்- சக வீரர் கவுட்டினோ சொல்கிறார்

    உலகக்கோப்பையில் நெய்மர் ஏராளமான தாக்குதலுக்கு உள்ளாவார் என்று சக வீரரான பிலிப்பே கவுட்டினோ தெரிவித்துள்ளார். #WolrldCup2018 #Neymar
    ரஷியாவில் உலகக்கோப்பை கால்பந்து திருவிழா நடைபெற்று வருகிறது. பிரேசில் அணி தனது முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தை எதிர்கொண்டது. காயத்திற்குப்பின் நெய்மர் இந்த போட்டியில் கலந்து கொண்டார். அவருடன் பார்சிலோனா புகழ் பிலிப்பே கவுட்டினோ, ஜீசஸ், ரியல் மாட்ரிட் புகழ் மார்சிலோ போன்ற தலைசிறந்த வீரர்கள் இணைந்து விளையாடுகிறார்கள்.

    பிரேசில் இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்த்த நிலையில் பிலிப்பே கவுட்டினோவின் கோலால் 1-1 என டிராதான் செய்தது.



    ஆட்டத்தின் பெரும்பாலான நேரத்தில் சுவிட்சர்லாந்து வீரர்கள் தடுப்பாட்டத்துடன், நெய்மரை தாக்கி Foul செய்வதிலேயே குறியாக இருந்தனர். தற்போதுதான் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள நெய்மர், இந்த தாக்குதலை அதிக அளவில் சந்திப்பார் என்று கவுட்டினோ தெரிவித்துள்ளார்.



    1998-ம் ஆண்டிற்குப் பிறகு நெய்மர்தான் 10 முறை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இதுகுறித்து கவுட்டினோ கூறுகையில் ‘‘சுவிட்சர்லாந்து வீரர்கள் எங்களை அதிக அளவில் தாக்கினார்கள். ஆனால், எல்லா போட்டிகளிலும் இப்படிதான் நடக்கும் என நான் யூகிக்கிறேன்.



    நாம் உலகக்கோப்பையை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். ஆகவே, எல்லோரும் போட்டிகளில் வெற்றி பெற முயற்சி செய்வோம். நெய்மர் நன்றாக இருக்கிறார். ஆனால், சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தவறு செய்ய வேண்டியதில்லை என்ற போதிலும், தவறு செய்தார்கள். இப்படி நடந்தால் போட்டி முடங்கிவிடும்.

    அனைத்து போட்டிகளிலும் இதுபோன்று நடைபெறும். அதனை எதிர்த்து நாங்கள் முன்னேற வேண்டும்’’ என்றார்.
    Next Story
    ×