search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெஸ்சியின் உலகக்கோப்பை கனவு கேள்விகுறி
    X

    மெஸ்சியின் உலகக்கோப்பை கனவு கேள்விகுறி

    உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் இரண்டு ஆட்டத்திலும் வெற்றி பெறாத அர்ஜென்டினா அணி தொடரில் இருந்து வெளியேற்றப்படும் விளிம்பில் உள்ளதால் மெஸ்சியின் உலகக்கோப்பை கனவு கேள்விகுறியாக உள்ளது. #FIFA2018 #Messi
    உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்சியால் அர்ஜென்டினா அணிக்கு பெருமை சேர்க்க முடியவில்லை. ஐஸ்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கோல் அடிக்காத அவர் நேற்றைய குரோஷியாவுக்கு எதிராகவும் கோல் அடிக்கவில்லை. 2 ஆட்டத்தில் விளையாடி வெற்றி பெறாத அர்ஜென்டினா போட்டியில் இருந்து வெளியேற்றப்படும் விளிம்பில் உள்ளது.

    30 வயதான மெஸ்சியின் உலககோப்பை கனவு கேள்விகுறியாகவும் இருக்கிறது. கடந்த உலககோப்பையில் அர்ஜென்டினாவை இறுதிப்போட்டி வரை கொண்டு வந்து அவர் மயிரிழையில் சாம்பியன் பட்டத்தை இழந்தார். இந்த முறை தொடக்கமே சரிவாக இருக்கிறது. மெஸ்சி சிறப்பாக ஆடினாலும் சக வீரர்களின் ஒத்துழைப்பு இல்லை. ஒருங்கிணைந்து விளையாட முடியாமல் அவர் தவிக்கிறார்.

    நேற்றைய ஆட்டத்தில் சக வீரர்கள் மெஸ்சியிடம் சரியான முறையில் பந்தை கொடுக்கவில்லை. மேலும் மெஸ்சி பந்தை கொண்டு செல்லும் போது அவருடன் நெருங்கி வரவில்லை. பார்சிலோனா கிளப்பில் மெஸ்சியால் சாதிக்க முடிந்ததுக்கு சக வீரர்களின் ஒத்துழைப்பு இருந்தது. ஆனால் அர்ஜென்டினா வீரர்கள் மெஸ்சியின் திறமைக்கு ஏற்ற வகையில் ஒத்துழைக்க முடியவில்லை.

    மெஸ்சியின் திறமையை பயிற்சியாளர் பாராட்டி இருக்கிறார். தோல்விக்காக அவரை குறை கூற முடியாது என்று விளக்கம் அளித்துள்ளார். #FIFA2018 #Messi #worldcup2018
    Next Story
    ×