search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Serie A"

    ‘செரி ஏ’ கால்பந்து லீக் தொடரில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு கோல் அடிக்க யுவுான்டஸ் 2-1 என எம்போலியை வீழ்த்தியது. #Juventus #Ronaldo
    இத்தாலியின் முன்னணி கால்பந்து லீக் தொடரான ‘செரி ஏ’-யில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் எம்போலி - யுவான்டஸ் அணிகள் மோதின. ஆட்டத்தின் 28-வது நிமிடத்தில் எம்போலி அணியின் கேபுட்டோ கோல் அடித்தார். இதனால் 1-0 என எம்போலி முன்னிலைப் பெற்றது.

    அதன்பின் முதல் பாதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்தில் யுவான்டஸ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 54-வது நிமிடத்தில் யுவான்டஸ்க்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி கிறிஸ்டியானோ ரொனால்டோ எளிதாக கோல் அடித்தார்.



    அதன்பின் 70-வது நிமிடத்தில் அபாரமான வகையில் ஒரு கோல் அடித்தார். இதனால் யுவான்டஸ் 2-1 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் 20 நிமிடங்களால் எம்போலி அணியால் கோல் அடிக்க இயலவில்லை. ஆகவே யுவான்டஸ் 2-1 என வெற்றி பெற்றது. இரண் கோல் அடித்து ரொனால்டோ வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
    ‘செரி ஏ’ லீக்கில் ரொனால்டோ இரண்டு கோல் அடிக்க உதவியதால் யுவான்டஸ் 3-1 என நபோலியை வீழ்த்தியது. #Ronaldo #SerieA #juventus
    இத்தாலி கால்பந்து லீக்கான ‘செரி ஏ’-வில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் யுவான்டஸ் - நபோலி அணிகள் மோதின. ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் நபோலி அணியின் டிரையிஸ் மெர்ட்டன்ஸ் கோல் அடித்தார். இதற்கு பதில் கோலாக மரியோ மாண்ட்சுகிச் 26-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் ஸ்கோர் 1-1 என சமநிலையில் இருந்தது.

    2-வது பாதி நேரத்தில் 49-வது நிமிடத்தில் யுவான்டஸ் அணிக்கு ‘ப்ரீ ஹிக்’ வாய்ப்பு கிடைத்தது. ரொனால்டோ பந்தை மின்னல் வேகத்தில் அடித்தார். நபோலி வீரர்களை தாண்டி கோல் கீப்பர் அருகில் சென்றது. அவர் பந்தை தடுக்க கோல் கம்பத்தில் பந்து பட்டு திரும்பியது. அதை மெண்ட்சுகிச் சிறப்பான வகையில் கோலாக்கினார். இதனால் யுவான்டஸ் 2-1 என முன்னிலைப் பெற்றது.



    ஆட்டத்தின் 76-வது நிமிடத்தில் யுவான்டஸ் அணிக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. பந்து கார்னர் பகுதியில் இருந்து வர ரொனால்டோ தலையால் முட்டி கோல் எல்லையை நோக்கி தள்ளினார். ஆனால் நபோலி கோல் கீப்பர் பந்தை அபாரமாக தடுத்தார்.

    ஆனால் பந்தை லியோனார்டோ பொனுச்சி கோலாக மாற்றினார். இதனால் யுவான்டஸ் 3-1 என வெற்றி பெற்றது. கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடிக்காவிடிலும் இரண்டு கோல்கள் அடிக்க உதவிகரமாக இருந்தார். யுவான்டஸ் தான் விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றியை ருசித்து முதல் இடத்தில் உள்ளது.
    ‘செரி ஏ’ லீக்கின் 4-வது ஆட்டத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது முதல் கோலை யுவான்டஸ் அணிக்காக பதிவு செய்தார். #Ronaldo
    உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்பவர் போர்ச்சுக்கல் அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ. ஸ்பெயின் லா லிகா ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வந்த இவர், தற்போது இத்தாலியில் உள்ள யுவான்டஸ் அணிக்கு மாறியுள்ளார்.

    ரொனால்டோ ‘செரி ஏ’ சீசனில் யுவான்டஸ் அணி விளையாடிய முதல் மூன்று போட்டிகளிலும் பங்கேற்றார். ஆனால் மூன்று போட்டிகளிலும் கோல் அடிக்காமல் ஏமாற்றம் அளித்தார்.

    யுவான்டஸ் அணிக்காக கோல் கணக்கை தொடங்காத ரொனால்டோ, நேற்று 4-வது ஆட்டத்தில் சஸ்சுவோலா அணிக்கெதிராக களம் இறங்கினார்.

    முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. அதன்பின் 2-வது பாதி நேரத்தில் யுவான்டஸ் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் கோலை அடித்தார். இதன்மூலம் யுவான்டஸ் அணிக்கான முதல் கோலை பதிவு செய்தார். அத்துடன் அல்லாமல் 65-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோலை பதிவு செய்தார்.



    சஸ்சுவோலா அணியைச் சேர்ந்த கவுமா பாபகார் இன்ஜூரி நேரமான 91-வது நிமிடத்தில் கோல் அடிக்க யுவுான்டஸ் 2-1 என வெற்றி பெற்றது. தொடக்க கோல் அடித்ததுடன் அணியை வெற்றி பெறவும் வைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

    இந்த வெற்றியின் மூலம் யுவான்டஸ் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று 12 புள்ளிளுடன் முதல் இடத்தில் உள்ளது. நபோலி 9 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.
    யுவான்டஸ் அணிக்கான தனது அறிமுக போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் ஏதும் அடிக்காமல் ஏமாற்றம் அளித்தார். #CR7, SerieA #juventus
    போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டனும் உலகின் தலைசிறந்த கால்பந்து வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் இருந்து இத்தாலியின் யுவான்டஸ் அணிக்கு மாறினார். யுவான்டஸ் அணிக்காக ரொனால்டோ விளையாடிய முதல் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் யுவான்டஸ் சியேவோவேரோனா அணியை எதிர்கொண்டதது. ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் யுவான்டஸ் அணியின் சமி கேடிரா முதல் கோலை பதிவு செய்தார். 38-வது நிமிடத்தில் சியேவோவேரோனா அணியின் மரியஸ் ஸ்டெபின்ஸ்கி பதில் கோல் அடித்தார்.



    இதனால் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் 1-1 என சமநிலைப் பெற்றிருந்தது. 2-வது பாதி நேரம் ஆட்டம் தொடங்கியதும் 56-வது நிமிடத்தில் சியேவோவேரோனாவிற்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி அந்த அணி இமானுலே ஜியாச்செரினி கோல் அடித்தார்.

    இதனால் யுவான்டஸ் 1-2 என பின்தங்கியிருந்தது. 64-வது நிமிடத்தில் ரொனால்டா வெளியேறினார். அதுவரை போராடி அறிமுக போட்டியில் அவரால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

    ரொனால்டோ வெளியேறியதும் 75-வது நிமிடத்தில் ஓன்கோல் மூலம் யுவான்டஸிற்கு ஒரு கோல் கிடைத்தது. அதன்பின் இன்ஜூரி நேரமான 93-வது நிமிடத்தில் பெர்னார்டெஸ்சி கோல் அடிக்க யுவான்டஸ் 3-2 என வெற்றி பெற்றது.
    இத்தாலியின் தலைசிறந்த கோல் கீப்பரான பஃபோனுக்குப் பதில் மட்டியா பெரினை ஒப்பந்தம் செய்துள்ளது யுவான்டஸ். #SerieA #Juventus
    இத்தாலி கால்பந்து அணியின் தலைசிறந்த வீரராக திகழ்ந்தவர் பஃபோன். 40 வயதாகும் கோல் கீப்பரான இவர், ரஷியாவில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை தொடருக்கு இத்தாலி அணி தகுதி பெறாததால் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

    இத்தாலி நாட்டின் கிளப் அணியான யுவான்டஸ் அணிக்காக 2001-ல் இருந்து விளையாடி வந்தார். இந்த சீசனுடன் (2017-18) யுவான்டஸில் இருந்து விலகியுள்ளார். இதனால் யுவான்டஸ் அணி மாற்று கோல்கீப்பரை தேடிவந்தது.



    இந்நிலையில் ஜெனோவா அணிக்காக விளையாடி வந்த மட்டியா பெரினை யுவான்டஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கான யுவுான்டஸ் டிரான்ஸ்பர் பீஸாக 14 மில்லியன் டாலரும், போனஸாக 3 மில்லியன் டாலரும் கொடுத்துள்ளது.

    பஃபோன் தலைமையில் ‘செரி ஏ’ கோப்பையை தொடர்ச்சியாக 7 முறை யுவான்டஸ் கைப்பற்றியுள்ளது. அந்த அணிக்காக 509 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
    ×