search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஃபோனுக்குப் பதில் மட்டியா பெரினை ஒப்பந்தம் செய்தது யுவான்டஸ்
    X

    பஃபோனுக்குப் பதில் மட்டியா பெரினை ஒப்பந்தம் செய்தது யுவான்டஸ்

    இத்தாலியின் தலைசிறந்த கோல் கீப்பரான பஃபோனுக்குப் பதில் மட்டியா பெரினை ஒப்பந்தம் செய்துள்ளது யுவான்டஸ். #SerieA #Juventus
    இத்தாலி கால்பந்து அணியின் தலைசிறந்த வீரராக திகழ்ந்தவர் பஃபோன். 40 வயதாகும் கோல் கீப்பரான இவர், ரஷியாவில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை தொடருக்கு இத்தாலி அணி தகுதி பெறாததால் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

    இத்தாலி நாட்டின் கிளப் அணியான யுவான்டஸ் அணிக்காக 2001-ல் இருந்து விளையாடி வந்தார். இந்த சீசனுடன் (2017-18) யுவான்டஸில் இருந்து விலகியுள்ளார். இதனால் யுவான்டஸ் அணி மாற்று கோல்கீப்பரை தேடிவந்தது.



    இந்நிலையில் ஜெனோவா அணிக்காக விளையாடி வந்த மட்டியா பெரினை யுவான்டஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கான யுவுான்டஸ் டிரான்ஸ்பர் பீஸாக 14 மில்லியன் டாலரும், போனஸாக 3 மில்லியன் டாலரும் கொடுத்துள்ளது.

    பஃபோன் தலைமையில் ‘செரி ஏ’ கோப்பையை தொடர்ச்சியாக 7 முறை யுவான்டஸ் கைப்பற்றியுள்ளது. அந்த அணிக்காக 509 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
    Next Story
    ×