search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "roads"

    • பள்ளிகளுக்கு நடந்தும், சைக்கிள்களிலும் செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
    • ஒரு வாரத்துக்கு முன்பே மெட்ரோ வாட்டர் பணிகள் முடிந்தும் பள்ளங்களை மூடி தார் சாலைகள் அமைக்கவில்லை.

    சென்னையில் முக்கிய பகுதிகளில் பல்வேறு பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்தையே தடுமாற வைத்துள்ளது.

    தொழில் நகரமான அம்பத்தூரில் ஆயிரக்கணக்கான சிறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. 20-க்கும் மேற்பட்ட பள்ளிகள், அலுவலகங்கள், குடியிருப்புகள் நிறைந்துள்ள போக்குவரத்து அதிகம் உள்ள பகுதி.

    இந்த பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க சாலைகளின் ஒரு பக்கம் பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. இன்னொரு பக்கத்தில் தனியார் கியாஸ் நிறுவனத்துக்கான குழாய்கள் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

    ஒரே நேரத்தில் நடைபெறும் இந்த பணிகளால் சாலைகள் குறுகி குண்டும் குழியுமாகிவிட்டன. சாலைகள் இருந்த இடமே தெரியாமல் செம்மண் பகுதியாக காட்சி அளிக்கிறது.

    கள்ளிக்குப்பம், கடப்பா சாலை, மதனங்குப்பம் சாலை, கருக்கு சாலை, பட்டரைவாக்கம் சாலை, கொரட்டூர் சாலை, தொழிற்பேட்டை - திருவேற்காடு சாலை ஆகிய சாலைகள் படுமோசமாக காட்சி அளிக்கின்றன.

    லேசான தூறல் விழுந்தாலே இந்த பகுதி சேறும் சகதியுமாகி விடுகிறது. இந்த வழியாக பள்ளிகளுக்கு நடந்தும், சைக்கிள்களிலும் செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இரு சக்கர வாகனங்கள், சைக்கிள்களில் செல்பவர்கள் மழை நேரங்களில் பள்ளம் தெரியாமல் விழுந்து எழுந்து செல்வது வாடிக்கையாகிவிட்டது.

    கலெக்டர் நகர் சந்திப்பு, இளங்கோ நகர் சந்திப்பு, மங்கல் ஏரி பார்க் சந்திப்பு ஆகிய பகுதிகள் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு படுமோசமாக கிடக்கின்றன. இந்த பகுதியில் ஒரு வாரத்துக்கு முன்பே மெட்ரோ வாட்டர் பணிகள் முடிந்தும் பள்ளங்களை மூடி தார் சாலைகள் அமைக்கவில்லை. சில இடங்களில் நிரப்புவதற்கு மண்கூட இல்லை.

    இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறும்போது, "ஓடை தோண்டும்போது ஒரு லாரி மண்ணை ரூ.2 ஆயிரம் விலைக்கு விற்று விடுகிறார்கள். இதில் அரசியல்வாதிகள் உடந்தையாக இருக்கிறார்கள். குழாய்கள் பதிக்கப்பட்ட பிறகும், கால்வாய் கரைகள் கட்டப்பட்ட பிறகும் மூடுவதற்கு போதுமான மண் கிடைப்பதில்லை. இதனால் அரை குறையாக மூடி போடுகிறார்கள். மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி விடுகிறது" என்றார்கள். சில இடங்களில் பணிகள் முடிந்தும் சாலையை சீர மைக்கவில்லை. இவ்வளவு முக்கியமான பகுதியில் சாலைகளை மாதக்கணக்கில் இப்படி போட்டிருப்பது சரி தானா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

    குறிப்பிட்ட அளவு தூரத்துக்கு பணிகள் முடிந்ததும் அந்த பகுதியில் சாலைகளை சீரமைத்து விட்டு அடுத்தக்கட்டமாக தொடரலாமே என்கிறார்கள் பொது மக்கள்.

    திரு.வி.க.நகரில் இருந்து மூலக்கடை வரை மழைநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது. கூவத்தில் கொண்டு இணைக்க பிருந்தா தியேட்டர் அருகே பணிகள் நடக்கிறது. மாதக்கணக்கில் நடக்கும் இந்த பணியால் அந்த பகுதியில் போக்குவரத்து முடங்கி உள்ளது.

    5 நிமிடங்களில் திரு.வி.க. நகருக்கு செல்லக்கூடியவர்கள் சந்து பொந்துகளில் நுழைந்து நெரிசலில் சிக்கி படாதபாடு பட்டு சுமார் ஒரு மணி நேரமாகிறது. நெரிசல் மிகுந்த சாலையால், மாலை நேரங்களில் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

    கோடம்பாக்கம் ஆற்காடு சாலை மெட்ரோ ரெயில் பணிகளால் ஏற்கனவே மேடு பள்ளங்களாக கிடக்கிறது. இதற்கிடையில் உட்புற பகுதிகளில் மழைநீர் கால்வாய்கள் அமைக்கும் பணிகளுக்காக தோண்டப்பட்டதால் பாத சாரிகளும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகிறார்கள். சுமார் 3 வருடங்களாக சிரமப்பட்டு வருவதாக அந்த பகுதியில் உள்ளவர்கள் கூறுகிறார்கள்.

    மெயின் ரோடு மட்டுமில்லாமல் உட்புற சாலைகளையும் குண்டும் குழியுமாக்கி பணிகளை முடிக்காமல் போட்டு இருப்பதால் குடியிருப்பு வாசிகள் தெருச்சாலைகள் வழியாக மெயின் ரோட்டுக்கு வர சிரமப்படுகிறார்கள். மெயின் ரோட்டிலும் மெட்ரோ பணிகள் நடப்பதால் போக்குவரத்து சுற்றி சுற்றி விடப்பட்டுள்ளது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த சிறு மழையில் கூட காந்தி ரோடு, முரளி கிருஷ்ணாநகர் மெயின் ரோடு முழுவதும் சகதி மற்றும் குளம்போல் ஆகிவிட்டதாக தெரிவித்தனர்.

    சில சாலைகளின் நடு பகுதியிலேயே தோண்டி கழிவுநீர் குழாய்கள் பதிக்கும் வேலைகள் நடப்பதால் அந்த பகுதிகளில் இரு சக்கர வாகனங்களில் கூட செல்வது சிரமமாக இருப்பதாக கூறினார்கள்.

    வளசரவாக்கம் பகுதி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டதும் பெரும்பாலும் அனைத்து ரோடுகளிலும் மெட்ரோ வாட்டர், பாதாள சாக்கடை இணைப்புகளுக்காக ஓடைகள் தோண்டப்பட்டன. சில பகுதிகளில் பணிகள் முடிந்தும் முறையாக மூடப்படாததால் போக்குவரத்துக்கு சிரமமாக இருப்பதாக கூறுகிறார்கள்.

    பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் இடையே மெட்ரோ ரெயில் பணிகளுக்காக சாலைகளின் நடுவே ராட்சத தூண்கள் அமைக்கப்படுவதால் போரூரில் இருந்து கோடம்பாக்கம், வடபழனி செல்லும் கனரக வாகனங்கள் அம்பேத்கர் சிலை, கே.கே.நநகர், வளசர வாக்கம் பகுதிகளில் மாற்று பாதைகளில் திருப்பி விடப்பட்டுள்ளன.

    அதேநேரம் வளசர வாக்கம், மேட்டுக்குப்பம், ஆழ்வார் திருநகர் பகுதிகளில் உட்புற சாலைகள் வழியாக திருப்பி விடப்பட்டு உள்ள இரு சக்கர வாகனங்கள், கார்கள் அந்த பகுதிகளில் நடந்து வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளால் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

    பரங்கிமலை - மேடவாக்கம் மெயின் ரோட்டில் மெட்ரோ ரெயில் பணிகளுக்காக சாலையின் நடுவே தூண்கள் அமைக்கப்படுவதால் இரு பக்கமும் இலகு ரக வாகனங்கள் செல்வதற்காக குறுகிய பாதைகள் உள்ளன.

    இந்த பாதைகளை தார் போட்டு சீரமைத்து கொடுக்காததால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். மேடவாக்கம் கூட்டு ரோடு அருகில் சாலை இருந்த அடையாளமே இல்லாமல் செம்மண் பாதையாக குண்டும் குழியுமாக கிடக்கின்றன. இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் விபத்துக்களில் சிக்குகிறார்கள்.

    சோழிங்கநல்லூர், சிறுசேரி, துரைப்பாக்கம் பகுதிகளில் ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் பலர் இந்த வழிகளில் இரவு நேரத்தில் வருவது வழக்கம். ஒரு பக்கம் பணிகள் நடந்தாலும் இன்னொரு பக்கம் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமலும் சாலைகளை அமைத்து கொடுப்பது நல்லது.

    • ராஜபாளையம் ஒன்றிய கிழக்கு பகுதிகளில் புதிதாக போடப்பட்ட சிமெண்ட் சாலைகளை சாத்தூர் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.
    • புதிதாக தார்சாலைகள் போடப்பட்டுள்ளது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய ஊராட்சி மற்றும் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக தார்சாலைகள் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நல்லம நாயக்கன்பட்டி ஊராட்சி பானாங்குளம் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் தெரு மற்றும் ஜமீன் நத்தம்பட்டி ஊராட்சியில் உள்ள வரகுண ராமபுரம் பெருமாள் கோவில் தெருவில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சாத்தூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. நிதியிலிருந்து புதிதாக போடப்பட்ட வாறுகாலுடன் கூடிய சிமெண்ட் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. ரகுராமன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    மேலும் வரகுண ராம புரம் சுகாதார நிலையத்தில் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். அங்குள்ள பணி செய்யும் செவிலியரிடம் கிராம மக்களின் எண்ணிக்கை குறித்தும், அவர்களுக்கு இல்லம் தேடி மருத்துவம் எவ்வாறு சென்று சேர்கிறது என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

    நிகழ்ச்சியில் விருதுநகர் ம.தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் ராஜபாளை யம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வில்லிசை மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பல்லாங்குழி போல் மாறிய சாலையால் வாகன ஓட்டிகள், மக்கள் அவதி அடைந்துனர்.
    • இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கூடலூர்

    கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து முதுமலை, கூடலூர் வழியாக ஊட்டிக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதேபோல் கேரள மாநிலம் மலப்புரம், திருச்சூர் உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு லாரிகள் கூடலூர் வழியாக இயக்கப்படுகிறது. மேலும் சீசன் காலங்களில் நூற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்களும் வந்து செல்கின்றன.

    இந்த நிலையில் கூடலூர் நகருக்குள் செல்லும் தேசிய நெடுஞ்சாலை பல இடங்களில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதை சீரமைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து மோசமான பள்ளங்களை சீரமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதற்கிடையே கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.

    இதனால் சீரமைத்த இடங்களில் சாலை மீண்டும் குண்டும், குழியுமாக மாறி வருகிறது. இதனால் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பல்லாங்குழி போல் உள்ள சாலையில் பயணம் செய்வதால் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இதேபோல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் அவசர காலங்களில் ஆஸ்பத்திரிக்கு விரைவாக கொண்டு செல்ல முடியாத நிலை சாலை காணப்படுகிறது.

    மேலும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகன ஓட்டிகளும் நோயாளிகளை கொண்டு செல்வதில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து உள்ளனர்.

    • புதிய சாய ஆலை அமைவதை தடுத்து நிறுத்த வேண்டி மனு அளிக்கப்பட்டது.
    • எம்.எஸ்.எம். ஆனந்தனை ஊர் மக்கள் சந்தித்து சாய ஆலையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே கரைப்புதூர் ஊராட்சி லட்சுமி நகர் பகுதியில் ஊராட்சி பொது நிதியிலிருந்து புதிய கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, நமக்கு நாமே திட்டத்தில் பச்சாங்காட்டு பாளையம் ராஜேஷ் நகரில் புதிய கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, மீனாம்பாறையில் இருந்து வீரபாண்டி பிரிவு வரை புதிய கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணி உள்ளிட்ட ரூ.81 லட்சம் மதிப்பிலான புதிய சாலை அமைக்கும் பணிகளை பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ், துணைத் தலைவர் கார்த்திகா மகேஸ்வரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தண்ணீர் பந்தல் நடராஜன், வடக்கு ஒன்றிய இளைஞரணி கோவிந்தராஜ் மற்றும் கரைப்புதூர் ராமமூர்த்தி, விஸ்வநாதன், ஹரி, மற்றும் வார்டு உறுப்பினர்கள், அதிமுக., நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து குன்னாங்கல் பாளையத்தில் புதிதாக சாயத் தொழிற்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஏற்கனவே, முதல்வர், மாவட்ட கலெக்டர் உள்ளிட்டவர்களுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

    ஆனால் சாய ஆலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக நேற்று சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். ஆனந்தனை குன்னாங்கல்பாளையம் ஊர் மக்கள் சந்தித்து சாய ஆலையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினர். மேலும் புதிய சாய ஆலை அமைவதை தடுத்து நிறுத்த வேண்டி மனு அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக் கொண்ட எம்.எல்.ஏ., இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் பேசுவதாகவும், அரசு அதிகாரிகள், ஊர் பொதுமக்கள், மற்றும் சாய ஆலை நிர்வாகத்தினரை வைத்து ஒரு அமைதி கூட்டம் நடத்தி அதில் சுமூக முடிவு எடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார்.

    • பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள பகுதிகளில் சாலைகள் அமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தோம்.
    • சாலைகள் குண்டும்குழியுமாக உள்ளதால் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகின்றன.

    திருப்பூர்:

    திருப்பூா் அங்கேரிபாளையத்தில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனா்.மறியலுக்கு பாஜக., மண்டலத் தலைவா் ராம்குமாா் தலைமை வகித்தாா்.

    மறியலில் பங்கேற்றவா்கள் கூறியதாவது:-

    திருப்பூா் மாநகராட்சிக்குள்பட்ட 15 வது வாா்டில் ஒரு தனியாா் நிறுவனம் மட்டுமே உள்ள பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஒப்பந்ததாரா்கள் ஈடுபட்டிருந்தனா். இது குறித்த தகவலின்பேரில் அங்கு சென்று பயன்பாட்டில் உள்ள பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்.ஸ்ரீநகா் பிரதான சாலை, மஹாவிஷ்ணு நகா், ஏவிபி லே- அவுட் பள்ளி வீதி ஆகிய இடங்களில் சாலைகள் குண்டும்குழியுமாக உள்ளதால் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகின்றன.

    ஆகவே பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள பகுதிகளில் சாலைகள் அமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தோம். ஆனால், ஒப்பந்ததாரா்கள் தனியாா் நிறுவனம் உள்ள இடத்தில் சாலை அமைக்கும் பணியைத் தொடா்ந்ததால் வேறுவழியின்றி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த அனுப்பா்பாளையம் காவல் துறையினா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.இதில் மாநகராட்சி நிா்வாகத்திடம் மனு அளிக்க அறிவுறுத்தியதன்பேரில் மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

    • கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து கவுன்சிலர்கள் பேசினர்.
    • கவுன்சிலர்கள் கூறிய பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது

    தென்காசி:

    கீழப்பாவூர் யூனியன் அலுவலகத்தில் கவுன்சி லர்கள் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை தலைமை தாங்கினார். துணைத் தலைவர் முத்துக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கீழப்பாவூர் யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் பேவர் பிளாக் சாலை, சிமெண்ட் சாலை மற்றும் அங்கன்வாடி கட்டிடங்களுக்கு சுற்றுச்சுவர் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து கவுன்சிலர்கள் பேசினர். முடிவில் ரூ. 1.22 கோடி மதிப்பீட்டில் கவுன்சிலர்கள் கூறிய பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • மழைநீர் கால்வாய், சாக்கடை ஓடைகள் கட்டுவதற்காக தோண்டப்பட்ட ரோடுகள் பல இடங்களில் சீர்செய்யப்படாமல் கிடக்கிறது.
    • போன மழைக்கு போட்ட ரோடுகள் இந்த மழையில் பெயர்ந்து சின்னாபின்னமாகி கிடக்கின்றன.

    சென்னையில் நேற்று முன்தினம் விடிய விடிய வெளுத்துகட்டிய மழை பகலில் கொஞ்சம் ஓய்வு கொடுத்து நேற்று இரவிலும் சில இடங்களில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக வெளுத்து வாங்கியது.

    ஒரேநாள் மழையை தாக்குபிடிக்க முடியாமல் பெரும்பாலான சாலைகள் பல்லாங்குழிகள் போல் காட்சியளிக்கின்றன. வளசரவாக்கம், மதுரவாயல், ஏரிக்கரை ஆழ்வார்திருநகர், மடிப்பாக்கம், கீழ்கட்டளை, கோடம்பாக்கம் உள்பட பல இடங்களில் சாலைகள் படுமோசமாக உள்ளன.

    மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெறும் பகுதிகளில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள பகுதிகளை சீரமைக்காமல் இருப்பதால் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறுகிறார்கள். பலர் கீழே விழுகிறார்கள்.

    சைக்கிளில் பள்ளி செல்லும் குழந்தைகள் பலர் குழிகளில் விழுந்து தடுமாறி விழுகிறார்கள். கை, கால்களில் காயங்களுடன் பரிதாபமாக செல்கிறார்கள். மழைநீர் கால்வாய், சாக்கடை ஓடைகள் கட்டுவதற்காக தோண்டப்பட்ட ரோடுகள் பல இடங்களில் சீர்செய்யப்படாமல் கிடக்கிறது.

    மெயின்ரோடுகள் பார்க்க பகட்டாக தெரிந்தாலும் உட்புற சாலைகள் படுமோசமாக உள்ளன. போன மழைக்கு போட்ட ரோடுகள் இந்த மழையில் பெயர்ந்து சின்னாபின்னமாகி கிடக்கின்றன.

    • ரூ.1 கோடியே 31 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை அமைக்கப்பட உள்ளது.
    • பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகளை சண்முகையா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் எட்டயபுரம் சாலை முதல் வடக்கு சோட்டையன் தோப்பு பகுதி வரை சுமார் 2.20 கிலோ மீட்டர் தூரத்திற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 31 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை அமைக்கப்பட உள்ளது.

    சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி வடக்கு சோட்டையன் தோப்பில் நடைபெற்றது. இதில் சண்முகையா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாலை அமைக்கும் பணிகளை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    அதைத்தொடர்ந்து ராஜீவ் காந்தி நகர் பகுதியில் உள்ள குடிசை மாற்று குடியிருப்பு பகுதியில் புதிதாக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பயணிகள் நிழற்குடை அமைக்க ரூ.5.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அங்கு பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகளையும் சண்முகையா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான சரவண குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹெலன் பொன்மணி, வசந்தா, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. ஆதி திராவிடர் அணி மாவட்ட அமைப்பாளர் டி.டி.சி. ராஜேந்திரன், தூத்துக்குடி மாநகராட்சி 3-வது வார்டு கவுன்சிலர், தெற்கு மாவட்ட தி.மு.க. வர்த்தக அணி துணை அமைப்பு செயலாளர் ரெங்கசாமி, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ் பாலன், வார்டு உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்க மாரியப்பன், இளைஞரணி வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மட்டக்கடை முதல் டேவிஸ்புரம் மெயின் ரோடு வழியாக பக்கிள் ஓடையை இணைக்கும் பகுதி வரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் புதிய சாலை அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார்.
    • பணிகள் விரைவில் நிறைவுபெற்று புதிய சாலை மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் வரும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்று வரும் புதிய சாலை அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார்.

    மட்டக்கடை முதல் டேவிஸ்புரம் மெயின் ரோடு வழியாக பக்கிள் ஓடையை இணைக்கும் பகுதி வரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் புதிய சாலை அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வை யிட்டார்.

    முதல்-அமைச்சர்

    அப்போது அவர் கூறுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி தூத்துக்குடி மாநகராட்சி முழுவதும் சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. பெரும்பாலான இடங்களில் புதிய சாலைகளும் வடிகால்களும் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக தற்போது இங்கு நடைபெறும் பணிகளை ஆய்வு செய்து வருகிறேன்.

    இந்த பகுதியிலும் பணிகள் விரைவில் நிறைவுபெற்று புதிய சாலை மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் வரும் என்று கூறினார்.

    ஆய்வின் போது துணை மேயர் ஜெனிடா செல்வ ராஜ், மண்டல தலைவர் நிர்மல்ராஜ், மாநகர கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், தனலட்சுமி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மரியஅந்தோணி, டேனி, அனந்தையா, சமூக ஆர்வலர் ஐசக், மாநகராட்சி அதிகாரிகள் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தரத்தை உறுதி செய்ய ஒன்றியம் வாரியாக தொழில்நுட்ப உதவியாளர்களை அரசு நியமித்துள்ளது.
    • புதிதாக கிராமப்புற இணைப்பு ரோடுகளை அமைக்க உள்ளது.

    திருப்பூர் :

    கிராம சாலை மேம்பாட்டு திட்ட பணிகளை கண்காணித்து, தரத்தை உறுதி செய்ய ஒன்றியம் வாரியாக தொழில்நுட்ப உதவியாளர்களை அரசு நியமித்துள்ளது. ஊரக வளர்ச்சித்துறையின் கீழ், கிராமங்களில், பல்வேறு திட்டங்களில், கிராமப்புற ரோடுகள் அமைக்கப்படுகிறது.

    இந்நிலையில், தமிழக அரசு, முதல்வர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அதில், புதிதாக கிராமப்புற இணைப்பு ரோடுகளை அமைக்க உள்ளது. இப்பணிகளில், தொய்வு ஏற்படுவதை தவிர்க்க, மாநிலம் முழுவதும், ஒரு வட்டாரத்துக்கு, 2 தொழில்நுட்ப உதவியாளர் நியமிக்க, அரசு உத்தரவிட்டது.

    அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் தற்காலிக முறையில், 30 ஆயிரம் ரூபாய் மாத சம்பளத்தில், ஒன்றியத்தில், 2 தொழில்நுட்ப உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • அபிராமத்தில் சாலைகளில் விபத்து ஏற்படுத்தும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
    • கால்நடைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் மற்றும் பார்த்தி பனூர், கமுதி வழியாக சாயல்குடி, தூத்துக்குடி, திருச்செந்தூர் செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையை நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.

    இந்த சாலையில் உள்ள அச்சங்குளம், அகத்தாரிருப்பு, நத்தம், கமுதி, பசும்பொன் அபிராமம் உள்ளிட்ட பகுதிகளில் ரோட்டில் அதிக அளவில் ஆடு, மாடுகள் சுற்றி திரிகின்றன. இதனால் அடிக்கடி விபத்ததுக்கள் ஏற்படுகிறது. சாலையின் குறுக்கே மாடுகள் அமர்ந்து விடுவதாலும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமமடைகின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இந்த நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் 85 கி.மீ வேகத்திற்கும் மேலாக செல்லும் நிலை உள்ளது. இந்த சூழ்நிலையில் கால்நடைகள் திடீரென ரோட்டின் குறுக்கே செல்வ தால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் நிலை உள்ளது. சில நேரங்களில் உயிர் சேதமும் பொருட் சேதமும் ஏற்படுகின்றன.

    எனவே முக்கிய சாலையான இப்பகுதியில் கால்நடைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றனர்.

    • பாசன பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் வாய்க்கால்களை தூர்வார வேண்டும்.
    • தலைஞாயிறு பகுதிகளில் உள்ள சாலைகளை மேம்படுத்த வேண்டும்.

    வேதாரண்யம்:

    தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி தலைமை தாங்கினார்.

    ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் அண்ணாதுரை, பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் மகேஷ் தீர்மானங்களை வாசித்தார்.

    கூட்டத்தில் மகேந்திரன், செல்வி சேவியர், உதயகுமார், கஸ்தூரி மாசிலாமணி, ஞானசேகரன் உள்ளிட்ட ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தலைஞாயிறு தொகுதியில் நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேட்டூர் அணையில் இருந்து அடுத்த மாதம் (ஜூன்) 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படுவதால் கடைமடை பாசன பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் வாய்க்கால்களை தூர்வார வேண்டும், ஒன்றியத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சாலைகளை மேம்படுத்த வேண்டும் என்பனஉள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தினர்.

    இதற்கு பதில் அளித்து ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி பேசியதாவது:-

    குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக முன்னுரிமை அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ×