என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தலைஞாயிறு பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும்
  X

  தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி பேசினார்.

  தலைஞாயிறு பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பாசன பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் வாய்க்கால்களை தூர்வார வேண்டும்.
  • தலைஞாயிறு பகுதிகளில் உள்ள சாலைகளை மேம்படுத்த வேண்டும்.

  வேதாரண்யம்:

  தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி தலைமை தாங்கினார்.

  ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் அண்ணாதுரை, பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் மகேஷ் தீர்மானங்களை வாசித்தார்.

  கூட்டத்தில் மகேந்திரன், செல்வி சேவியர், உதயகுமார், கஸ்தூரி மாசிலாமணி, ஞானசேகரன் உள்ளிட்ட ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசியதாவது:-

  தலைஞாயிறு தொகுதியில் நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேட்டூர் அணையில் இருந்து அடுத்த மாதம் (ஜூன்) 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படுவதால் கடைமடை பாசன பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் வாய்க்கால்களை தூர்வார வேண்டும், ஒன்றியத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சாலைகளை மேம்படுத்த வேண்டும் என்பனஉள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தினர்.

  இதற்கு பதில் அளித்து ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி பேசியதாவது:-

  குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக முன்னுரிமை அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

  Next Story
  ×