search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரைப்புதூர் ஊராட்சியில் ரூ. 81 லட்சம் மதிப்பில் புதிய சாலைகள் அமைக்கும் பணி
    X

    புதிய சாலை அமைக்கும் பணிகளைஎம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தக் காட்சி.

    கரைப்புதூர் ஊராட்சியில் ரூ. 81 லட்சம் மதிப்பில் புதிய சாலைகள் அமைக்கும் பணி

    • புதிய சாய ஆலை அமைவதை தடுத்து நிறுத்த வேண்டி மனு அளிக்கப்பட்டது.
    • எம்.எஸ்.எம். ஆனந்தனை ஊர் மக்கள் சந்தித்து சாய ஆலையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே கரைப்புதூர் ஊராட்சி லட்சுமி நகர் பகுதியில் ஊராட்சி பொது நிதியிலிருந்து புதிய கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, நமக்கு நாமே திட்டத்தில் பச்சாங்காட்டு பாளையம் ராஜேஷ் நகரில் புதிய கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, மீனாம்பாறையில் இருந்து வீரபாண்டி பிரிவு வரை புதிய கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணி உள்ளிட்ட ரூ.81 லட்சம் மதிப்பிலான புதிய சாலை அமைக்கும் பணிகளை பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ், துணைத் தலைவர் கார்த்திகா மகேஸ்வரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தண்ணீர் பந்தல் நடராஜன், வடக்கு ஒன்றிய இளைஞரணி கோவிந்தராஜ் மற்றும் கரைப்புதூர் ராமமூர்த்தி, விஸ்வநாதன், ஹரி, மற்றும் வார்டு உறுப்பினர்கள், அதிமுக., நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து குன்னாங்கல் பாளையத்தில் புதிதாக சாயத் தொழிற்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஏற்கனவே, முதல்வர், மாவட்ட கலெக்டர் உள்ளிட்டவர்களுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

    ஆனால் சாய ஆலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக நேற்று சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். ஆனந்தனை குன்னாங்கல்பாளையம் ஊர் மக்கள் சந்தித்து சாய ஆலையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினர். மேலும் புதிய சாய ஆலை அமைவதை தடுத்து நிறுத்த வேண்டி மனு அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக் கொண்ட எம்.எல்.ஏ., இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் பேசுவதாகவும், அரசு அதிகாரிகள், ஊர் பொதுமக்கள், மற்றும் சாய ஆலை நிர்வாகத்தினரை வைத்து ஒரு அமைதி கூட்டம் நடத்தி அதில் சுமூக முடிவு எடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார்.

    Next Story
    ×