search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Road facility"

    • மாற்றுவழியில் உடுமலை மருத்துவமனைக்கு வர 110 கிலோ மீட்டர் சுற்றி வர வேண்டிய நிலை உள்ளது.
    • மலைவாழ் மக்கள் நலன் கருதி உடனடியாக சாலை அமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரி

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சுமார் 18க்கும் மேற்பட்ட மலைகிராமங்கள் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை உதவிகளை பெற உடுமலை நகர் பகுதிக்குத்தான் வர வேண்டும்.

    இந்நிலையில் சரியான சாலை வசதி இல்லாததால் இந்த மலைகிராமங்களில் வசிக்கும் மலைவாழ் மக்கள் கர்ப்பிணிப்பெண்கள், பாம்பு கடித்தவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்களை மருத்துவமனைக்கு தொட்டில் கட்டி அழைத்து செல்லும் அவல நிலை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.

    இந்நிலையில் குருமலை மலைவாழ்கிராமத்தில் வசித்துவந்த முருகன் என்பவருக்கு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை தொட்டில் கட்டி தூக்கி கொண்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    மாற்றுவழியில் உடுமலை மருத்துவமனைக்கு வர 110 கிலோ மீட்டர் சுற்றி வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் மலைவாழ் மக்கள் தொட்டில் கட்டியே நோயாளிகளை தூக்கி செல்கின்றனர்.

    திருமூர்த்திமலை முதல் குருமலை வரை 6 கிலோ மீட்டருக்கு சாலை அமைத்தால் 110 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டியது இல்லை. அரை மணி நேரம் முதல் 1மணி நேரத்தில் உடுமலை அரசு மருத்துவமனைக்கு சென்று விடலாம். எனவே மலைவாழ் மக்கள் நலன் கருதி உடனடியாக சாலை அமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இறந்த குழந்தையை கையில் சுமந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
    • மலை கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி நிரந்தர தீர்வு காண வேண்டுமென மலை கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு ஒன்றியத்திற்குட்பட்ட அல்லேரிமலை அடுத்த அத்தி மரத்தூரை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி பிரியா. இவர்களது 1½ வயது மகள் தனுஷ்கா.

    இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    அப்போது பாம்பு ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. தூங்கிக் கொண்டிருந்த குழந்தை தனுஷ்காவை பாம்பு கடித்தது.

    இதனால் குழந்தை அலறி துடித்துள்ளது. சத்தம் கேட்டு பெற்றோர் எழுந்து பார்த்தனர். அப்போது குழந்தையை பாம்பு கடித்தது தெரிந்தது. உடனடியாக அணைக்கட்டு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். சாலை வசதி இல்லாததால் ஆஸ்பத்திரிக்கு செல்ல தாமதமானது. இதனால் வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது.

    தகவல் அறிந்து வந்த அணைக்கட்டு போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவ மனையில் பிரேத பரிசோதனை முடிந்த பிறகு குழந்தை உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தை உடலை வீட்டிற்கு ஆம்புலன்சு மூலம் அத்தி மரத்து கொல்லை கிராமத்திற்கு கொண்டு சென்றனர்.

    கிராமத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்பாக ஆம்புலன்சில் இருந்து இறக்கிவிட்டனர். பின்னர் இறந்த குழந்தை பிணத்தை 10 கிலோ மீட்டர் தூரம் கையில் சுமந்து சென்றனர்.

    அல்லேரி மலைப் பகுதியில் சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து சாலை வசதி கேட்டு பொது மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த கிராமங்களில் உடல்நலம் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் கர்ப்பிணிகளை டோலி கட்டி தூக்கி செல்லும் அவலம் நீடித்து வருகிறது.

    பாம்பு கடித்த உடன் குழந்தையை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம்.

    ஆனால் சாலை வசதி இல்லலாததால் உடனடியாக குழந்தையை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியவில்லை.

    மேலும் இறந்த குழந்தையை கையில் சுமந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    மலை கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி நிரந்தர தீர்வு காண வேண்டுமென மலை கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • அதிகாரியிடம் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ வலியுறுத்தல்
    • குடிதண்ணீர் வசதியை ஏற்படுத்தி கொடுப்பதற்காக கோரிக்கை வைத்தார்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பழைய துறை முகம் மீன் பிடி துறை முகமாய் இயங்கி வந்தது. ஆனால் தற்போது சரக்கு கப்பல் புதுவைல் பயன் பாட்டிற்கு வந்த நிலையில் புதுவை அரசு மீன் பிடி கப்பல் நிக்கும் இடத்தை அப்புறப்படுத்தியது.

    இது அறிந்த தி.மு.க உப்பளம் தொகுதி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ புதுவை அரசு மீன்வளத்துறை அதிகாரிகளிடம் பேசி அப்புறப்படுத்தாமல் அவர்களுக்கு மாற்று இடமாக மேற்கிலிருந்து கிழக்கு புறம் ஒதுக்கி கொடுக்கும்படி கோரிக்கை விடுத்தார்.

    சட்டமன்ற எம்.எல்.ஏவின் கோரிக்கை ஏற்று அதிகாரிகள் அவ்வாரே செய்து கொடுக்கும்படி ஒப்புக் கொண்டனர், மேலும் அங்கு கப்பல்கள் நிறுத்தி கட்டுவதற்காக ஜட்டி கட்டுதல் , சாலை வசதி செய்து கொடுக்கும் படியும், அங்கு பல ஐமாஸ் விளக்குகளை அமைத்துக் கொடுக்கவும், குடிதண்ணீர் வசதியை ஏற்படுத்தி கொடுப்பதற்காக கோரிக்கை வைத்தார்.

    அதை ஏற்றுக்கொண்டு அதிகாரிகள் செம்மண் கொட்டி தற்சமயம் சாலையும், அதை தொடர்ந்து ஒரு ஐமாஸ் மின் விளக்கும் அமைத்து தந்துள்ளனர். ஆனால், இதில் திருப்தி அடையாத எம்.எல்.ஏ வம்பாகீரப்பாளையம் பஞ்சாயத்தாரர்கள், மீனவர் சமுதாய சகோதரர்களுடன் துறைமுக செயற்பொறியாளரை நேரில் சென்று சந்தித்து இது குறித்து மீண்டும் பேசினார்கள்.

    மேலும் செம்மண் சாலையில் பணி செய்து கொடுக்கும்படி, அதிக அளவில் ஐமாஸ் விளக்குகள் அமைத்து கொடுக்கும்படி, ஜட்டியை கட்ட ஏற்பாடுகள் செய்து கொடுங்கள் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தார், சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கை ஏற்று இவை யாவற்றையும் செய்து தருவதாக அதிகாரி உறுதியளித்தார்.

    இது சம்பந்தமாக சட்ட சபையில் மாண்புமிகு முதல்வரிடம் திமுக உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் பேசி கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    உடன் தி.மு.க. கழக செயலாளர் சக்திவேல், துணை செயலாளர் ஆரோக்கியராஜ், கிளைச் செயலாளர்கள் செல்வம் மற்றும் ராகேஷ், கழக சகோதரர்கள் பாலாஜி, ரகுராமன், ஊர் பஞ்சாயத்தாரர்கள், ஊர் பிரமுகர்கள் உடனிருந்தனர்.

    • சேதுபாவாசத்திரம் ஒன்றிய குழு கூட்டம் பூக்கொல்லையில் உள்ள அலுவலகத்தில் நடந்தது.
    • பழுக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கழிப்பறை கட்டிடம் கட்டி தர வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றிய குழு கூட்டம் பூக்கொல்லையில் உள்ள அலுவலகத்தின் மாடியில் நடைபெற்றது.கூட்டத்திற்கு ஒன்றிய பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் தலைமை வகித்தார்.

    துணைத் தலைவர் முத்துலட்சுமி காளிமுத்து முன்னிலை வகித்தார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.

    கவுன்சிலர் குழ.செ.அருள்நம்பி (திமுக) :

    ருத்திரசிந்தாமணி ஊராட்சியில் பழுக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ஆண்கள், பெண்கள் தனித்தனியாக பயன்படுத்தும் வகையில் கழிப்பறை கட்டிடம் கட்டி தர வேண்டும். நீர் தேக்க தொட்டி, சமையல் கூடம் பழுது நீக்கி தர வேண்டும்.

    பாமா செந்தில்நாதன் (திமுக) :

    சாந்தாம்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் கட்டி தர வேண்டும்.சத்துணவு திட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும்.

    சிவ.மதிவாணன் (அதிமுக) :

    கொள்ளுக்காடு ஊராட்சி அந்தோணியார்புரம் பகுதியில் சாலை வசதி செய்து தர வேண்டும்.

    மீனவராஜன் (அதிமுக):

    மல்லிப்பட்டினத்தில் ராமர் கோயில் முதல் முஸ்லிம் தெரு வரை சாலை வசதி செய்து தர வேண்டும்.

    சாகுல் ஹமீது (திமுக) :

    சேதுபாவாசத்திரம் அருகே கழுமங்குடாவில் கஜா புயலில் சேதமடைந்த முத்தரையர் சுடுகாடு சீரமைத்து சாலை வசதி செய்து தர வேண்டும் என்றார்.

    மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவுன்சிலர்கள் பேசினர்.

    கூட்டத்தில் செய்யது முகமது, சுதாகர், அழகுமீனா, அமுதா, அருந்ததி, ராஜலெட்சுமி உள்ளிட்ட கவுன்சிலர்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    அனைத்து கோரிக்கைகளும் பரிசீலனை செய்து நிறைவேற்றப்படும் என ஒன்றிய பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் உறுதி கூறினார்.

    முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் சடையப்பன் நன்றி கூறினார்.

    • ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கம் பேட் பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் இலவச மனைபட்டா வழங்கப்பட்டது.
    • இந்திரா நகரில் இருந்து பணந்தோப்பு அரசு குடியிருப்பு பகுதிக்கு இணைப்பு சாலை ரூ.14.32 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.

    புதுச்சேரி:

    ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கம் பேட் பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் இலவச மனைபட்டா வழங்கப்பட்டது.

    இந்தப் பகுதிக்கு சாலை வசதி அமைத்து கொடுக்க தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமிகாந்தன் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார். அதனை தொடர்ந்து முதல் கட்டமாக ரூ.12.16 லட்சம் செலவில் செம்மண் சாலை அமைக்க ஆதிதிராவிடர் மேம்பாட்டு வகைகளை கழகம் சார்பில் அமைக்க திட்டமிடப்பட்டது.

    இதற்கான தொடக்க பூமி பூஜை விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமிகாந்தன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக

    இதில் புதுவை துணை சபாநாயகர் ராஜவேலு, கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து இந்திரா நகரில் இருந்து பணந்தோப்பு அரசு குடியிருப்பு பகுதிக்கு இணைப்பு சாலை ரூ.14.32 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிகளில் ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனர் தயாளன், உதவி பொறியாளர் பக்தவச்சலம், இளநிலை பொறியாளர் துரைசாமி, கிருமாம்பாக்கம் பேட் பஞ்சாயத்து தலைவர் ஜெயபால், துணைத் தலைவர் ஏழுமலை, செயலாளர்கள் சேகர், முருகன், முத்துபாலன், சுதர்சனன், கண்ணன், சேரலாதன், அன்பரசன் மற்றும் என் ஆர் காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • 70 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி இல்லாத கிராமத்தை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்ைல.
    • 1994ம் ஆண்டு பெய்த கனமழையால் அபிராமம் பேரூராட்சி எல்கையில் பாப்பனம்-அபிராமம் சாலை மண் அரிப்பு ஏற்பட்டது.

    அபிராமம்

    நாடு சுதந்திரம் அடைந்தபின் முதன் முதலாக 1952-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்தது. இதில் அப்போதைய ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்த முதுகுளத்தூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் அபிராமம் அருகே உள்ள பாப்பனம் கிராமத்தைச் சேர்ந்த மொட்டையன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். அவரது சொந்த ஊரான பாப்பனம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 70 ஆண்டுகளாக சரியான சாலை வசதி செய்து தரவில்லை என அந்தப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    1952-ம் ஆண்டு பாப்பனம் கிராமம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் இருந்தது. அப்போது சாலை வசதி செய்ய புறம்போக்கு நிலம் ஊர்ஜிதம் செய்து 1958ம் ஆண்டு செட்டில்மெண்ட் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் சாலைகள் அமைக்க தடை ஏற்பட்டது.

    தற்போது தொகுதி மறுசீரமைப்பில் பாப்பனம் பகுதி பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்குள் வந்துள்ளது. ஆனாலும் தற்போது வரை பாப்பனம் கிராமத்தில் சாலை வசதி செய்து தரப்படவில்லை. 1994ம் ஆண்டு பெய்த கனமழையால் அபிராமம் பேரூராட்சி எல்கையில் பாப்பனம்-அபிராமம் சாலை மண் அரிப்பு ஏற்பட்டது. ஆனால் அப்போது அரசு அதனை சீரமைத்து தரவில்லை. மக்கள் கடும் அவதியடைந்தனர். இதையடுத்து அந்த கிராம மக்களே பழுதாகி காணப்பட்ட சாலையை செப்பனிட்டு சரி செய்தனர். கடந்த சில ஆண்டுகளாகவே பாப்பனம் கிராமத்தில் சாலை வசதிகள் முழுமையாக செய்துதரவில்லை. இதனால் மழை காலங்களில் சேறும், சகதியுமாகவும் மற்ற நேரங்களில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    தற்போது பாப்பனம் ஊராட்சியில் 450 மீட்டர் சாலை அமைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. மீதமுள்ள 1550 மீட்டர் நீளமுள்ள சாலையில் தார்சாலை அமைக்க அபிராமம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் சாலை அமைத்துக்கொள்ள அபிராமம் பேரூராட்சி தீர்மானம் நிறைவேற்றி கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் ஒப்படைக்க வேண்டும்.

    இதன்மூலம் பாப்பனம் முதல் அபிராமம் வரை உள்ள சாலையை போர்க்கால நடவடிக்கை எடுத்து தார்சாலையாக மாற்றுவதன் மூலம் இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், விவசாய கூலிகள், பிற தொழில்கள் செய்து பிழைப்பு நடத்தி வருபவர்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள், அரசுப்பணிக்கு செல்பவர்கள் அனைவரும் பயனடைவார்கள்.

    • தேவராஜ் எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே வீரபத்திரன் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. இந்தப் பகுதியில் குடிநீர் மற்றும் சாலை வசதி கேட்டு பொதுமக்கள் தேவராஜ் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    அதனை ஒட்டி தேவராஜ் எம்.எல்.ஏ வேடியப்பன் வட்டம் பகுதிக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டு உடனடியாக அந்த பகுதியில் ஆழ்துளை கிணறு மற்றும் சாலை அமைக்க இடங்களை நேரில் சென்று பார்வையிட்டார் .

    பின்னர் அந்த பகுதிக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் செய்ய வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் க்கு உத்தரவிட்டார்உடன் மாவட்ட துணைச் செயலாளர் அ.சம்பத்குமார் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஞானவேல், இடைச் செயலாளர் பிரபு உட்பட ஏராளமானோர் உடன் இருந்தனர்.

    • மழைக்காலங்களில் மழை நீா் தேங்கி வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
    • சிஐடியு ஆட்டோ தொழிலாளா் சங்க கருவலூா் கிளை செயலாளா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    அவினாசி,நவ.16-

    அவிநாசி ஒன்றியம், ராமநாதபுரம் ஊராட்சி 3வது வாா்டு தொட்டகளாம்புதூா் பகுதி விநாயகா் கோயில் பகுதியில் சாலை வசதி இல்லாததால், மழைக்காலங்களில் மழை நீா் தேங்கி வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும் சாக்கடை கால்வாய் இல்லாததால், கழிவுநீா் சாலையில் தேங்கி நோய் தொற்று அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே சாலை வசதி, சாக்கடை கால்வாய் அமைக்க கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மக்களை சந்தித்து கையெழுத்து இயக்கம் நடத்தினா். இதில் சிஐடியு ஆட்டோ தொழிலாளா் சங்க கருவலூா் கிளை செயலாளா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    • கடந்த சில நாட்களாக குடிதண்ணீர் வராத நிலையில் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
    • வரும் வாரம் குடிநீர் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதை தொடர்ந்து குடிநீர் சீராக இருக்கும் என்றார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் கமலா அன்பழகன் தலைமையில் நடைபெற்றது .வட்டார வளர்ச்சி அலுவலர் ராமலிங்கம் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் தணிக்கை பக்கிரிசாமி வரவேற்றார்.கூட்டத்தில், கோடி யக்காடு, கோ டியக்கரை கிராமங்களில் நிலத்தடி நீர் உப்பாகி விட்டதால் கொள்ளிடம் கூட்டு குடிநீரை மட்டுமே பொதுமக்களுக்கு பயன்படுகிறது .

    கடந்த சில நாட்களாக குடிதண்ணீர் வராத நிலையில்பொது மக்கள் மிகுந்த சிரமப்படுகி ன்றனர். எனவே கொள்ளி டம் கூட்டுக் குடிநீரை தொடர்ந்து சீராக வழங்க வேண்டும், கழிவறை, சாலை வசதி வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துணைத் தலைவர் அறிவழகன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் வேதாரத்தினம், ராஜசேகர், தனபால் ,நடராஜன், கண்ணகி, ராசி கண்ணு, மாலதி, துரைராஜ் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் பேசினர்.இது பற்றி வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்க ரன் கூறும்போது, வரும் வாரம் குடிநீர் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன . அதன் பிறகு குடிநீர் சீராக இருக்கும் என்றார்.

    இதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சோழன்மற்றும் சுகாதாரத்துறை, வேளா ண்மை துறை, நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கே ற்று பேசினர்.போக்குவரத்து நெருக்கடி யாக உள்ள ஆயக்காரன்புலம் கடைத்தெரு, அய்யனார் கோயில் அருகில் வேகத்தடை அமைக்கப்படும் என உதவி செயற் பொறியாளர் மதன்குமார் கூறினார். முடிவில் மேலாளர் அண்ணாதுரை நன்றி கூறினார்.

    • சோலைக்காட்டில் இருந்து செல்ல வேண்டும் என்றால் சுமார் 2 கி.மீ தூரம் ஒத்தையடி பாதையில் நடந்தான் செல்ல வேண்டும்.
    • சாலை அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே சோலைக்காடு கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு வண்ணாந்துறை என்ற ஓடை உள்ளது.

    சோலைக்காட்டில் இருந்து இந்த பகுதிக்கு செல்ல வேண்டும் என்றால் சுமார் 2 கி.மீ தூரம் ஒத்தையடி பாதையில் நடந்தான் செல்ல வேண்டும். இந்த ஒத்தையடி பாதையில் இருபுறமும் முட்செடி, கொடிகள் படர்ந்து உள்ளது.

    மேலும் பாறைகளும் உள்ளன. இதனால் இப்பகுதி மக்களும், விவசாயிகளும் சென்றுவர மிகவும் சிரமப்படுகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலை அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கொடைக்கானலில் இருந்து 14 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது வெள்ளகவி மலைக்கிராமம்
    • பல ஆண்டுகளாக இந்த பகுதி மக்கள் சாலை வசதி கோரி பல்வேறு போராட்டங்கள் செய்துவந்த நிலையில் தற்போது சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அருகே உள்ளது வெள்ளகவி மலைக்கிராமம். கொடைக்கானலில் இருந்து 14 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது மிகப்பழமையான இந்த மலைக்கிராமம். இக்கிராமத்திற்கு செல்ல பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லை.

    இங்குள்ள விவசாய விளைபொருட்களை மலைக்கிராம மக்கள் தலைச்சுமையாகவும், குதிரைகள் மூலமாகவும் கொடைக்கானல் மற்றும் பெரியகுளம் பகுதிக்கு கொண்டு சென்று விற்று வாழ்ந்து வருகின்றனர். இந்த மலை கிராமத்தில் 500 குடும்பத் திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். சாலை வசதி இல்லாத காரணத்தினால் இந்த மலைக்கிராமத்தை சேர்ந்த பலர் இந்த ஊரை விட்டு வெளியூர்களுக்கு சென்று அங்கேயே தங்கி விட்டனர்.

    பல ஆண்டுகளாக இந்த பகுதி மக்கள் சாலை வசதி கோரி பல்வேறு போராட்டங்கள் செய்துவந்த நிலையில், பழனி எம்.எல்.ஏ. செந்தில்குமாரின் முயற்சியினால், கொடைக்கானல் ஆர்.டி.ஓ முருகேசனின் தனிப்பட்ட நடவடிக்கையாலும் தற்போது மண் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    கடந்த சில மாதங்களாக இந்த பணி பல்வேறு தடைகளையும், வனத்துறையின் எதிர்ப்பையும் மீறி நடைபெற்று வருகிறது. சுமார் 12 கி.மீ அளவிற்கு இந்த சாலை பணி முடிவுற்ற நிலையில், இன்னும் ஓரிரு கி.மீ தூரம் மண் சாலை அமைத்தால் இந்த பணி முடிவு பெறும். இருப்பினும் மண் சாலையில் வாகனங்கள் பயணிக்க முடியாது.

    எனவே சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் இந்த மக்கள் சாலை வசதி இன்றி இருந்து வரும் நிலையில் தற்போது மண் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த மண் சாலையை தார் சாலையாக அமைக்க வேண்டும் என்று இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசு பரிசீலனை செய்து இதற்கு தனி நிதி ஒதுக்கி உடனடியாக தார் சாலை பணிகளை தொடங்க வேண்டும் என்றும் வெள்ளகவி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மஞ்சூர் அருகே சாலை வசதி கேட்டு பள்ளி மாணவ– மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    மஞ்சூர்:

    மஞ்சூர் அருகே உள்ளது பேலிதளா ஸ்ரீராம் நகர். இங்கு 70–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஸ்ரீராம் நகரில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் கூலி தொழிலாளர்கள் ஆவர். பஸ் வசதி இல்லாத காரணத்தால், அருகிலுள்ள கன்னேரிக்கு சென்று அங்கிருந்து பஸ் ஏறி பல்வேறு இடங்களுக்கு சென்று கூலி வேலை செய்கின்றனர். தவிர குழந்தைகளும் கன்னேரிக்கு வந்து அங்கிருந்து மந்தனை, எடக்காடு பகுதிகளில் இயங்கி வரும் பள்ளிகளுக்கு சென்று படித்து வருகின்றனர். ஆரம்பத்தில் ஒத்தையடி பாதையாக இருந்த ஸ்ரீராம் நகர்– கன்னேரி வழியில் அரசு தார்ச்சாலை அமைத்து கொடுத்தது. அதன்பிறகு பல ஆண்டுகள் கடந்து விட்டதால் தற்போது அந்த சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

    இதற்கிடையே அந்த சாலையை மேம்படுத்த பாலகொலா ஊராட்சி சார்பில் ரூ.13 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கின. நேற்று முன்தினம் பொக்லைன் எந்திரம் மூலம் சாலையோரத்தில் இருந்த புதர் செடிகள் மற்றும் மண்ணை அகற்றும் பணி நடந்தது. அப்போது சாலை அமைந்துள்ள இடம் தனக்கு சொந்தமானது எனக்கூறி தனியார் ஒருவர் பணியை நிறுத்தியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்ரீராம் நகரை சேர்ந்த பள்ளி மாணவ– மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சாலை வசதி கேட்டு நேற்று காலை 9 மணியளவில் கன்னேரி பஜாரில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். கொட்டும் மழையிலும் நடந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த குந்தா தாசில்தார் ஆனந்தி, ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜ் மற்றும் அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஸ்ரீராம் நகர்– கன்னேரி சாலையை அனைவரும் பயன்படுத்த எந்த தடையும் இல்லை, அதை மேம்படுத்துவதை யாரும் தடுக்க முடியாது, மேலும் அந்த சாலை தனக்கு சொந்தம் எனக்கூற எந்தவொரு தனிநபருக்கும் உரிமை இல்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் கன்னேரி பஜாரில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #tamilnews
    ×