search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பழைய துறைமுகம் பகுதியில் சாலை வசதி
    X

    அதிகாரியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ நேரில் சந்தித்த காட்சி.

    பழைய துறைமுகம் பகுதியில் சாலை வசதி

    • அதிகாரியிடம் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ வலியுறுத்தல்
    • குடிதண்ணீர் வசதியை ஏற்படுத்தி கொடுப்பதற்காக கோரிக்கை வைத்தார்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பழைய துறை முகம் மீன் பிடி துறை முகமாய் இயங்கி வந்தது. ஆனால் தற்போது சரக்கு கப்பல் புதுவைல் பயன் பாட்டிற்கு வந்த நிலையில் புதுவை அரசு மீன் பிடி கப்பல் நிக்கும் இடத்தை அப்புறப்படுத்தியது.

    இது அறிந்த தி.மு.க உப்பளம் தொகுதி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ புதுவை அரசு மீன்வளத்துறை அதிகாரிகளிடம் பேசி அப்புறப்படுத்தாமல் அவர்களுக்கு மாற்று இடமாக மேற்கிலிருந்து கிழக்கு புறம் ஒதுக்கி கொடுக்கும்படி கோரிக்கை விடுத்தார்.

    சட்டமன்ற எம்.எல்.ஏவின் கோரிக்கை ஏற்று அதிகாரிகள் அவ்வாரே செய்து கொடுக்கும்படி ஒப்புக் கொண்டனர், மேலும் அங்கு கப்பல்கள் நிறுத்தி கட்டுவதற்காக ஜட்டி கட்டுதல் , சாலை வசதி செய்து கொடுக்கும் படியும், அங்கு பல ஐமாஸ் விளக்குகளை அமைத்துக் கொடுக்கவும், குடிதண்ணீர் வசதியை ஏற்படுத்தி கொடுப்பதற்காக கோரிக்கை வைத்தார்.

    அதை ஏற்றுக்கொண்டு அதிகாரிகள் செம்மண் கொட்டி தற்சமயம் சாலையும், அதை தொடர்ந்து ஒரு ஐமாஸ் மின் விளக்கும் அமைத்து தந்துள்ளனர். ஆனால், இதில் திருப்தி அடையாத எம்.எல்.ஏ வம்பாகீரப்பாளையம் பஞ்சாயத்தாரர்கள், மீனவர் சமுதாய சகோதரர்களுடன் துறைமுக செயற்பொறியாளரை நேரில் சென்று சந்தித்து இது குறித்து மீண்டும் பேசினார்கள்.

    மேலும் செம்மண் சாலையில் பணி செய்து கொடுக்கும்படி, அதிக அளவில் ஐமாஸ் விளக்குகள் அமைத்து கொடுக்கும்படி, ஜட்டியை கட்ட ஏற்பாடுகள் செய்து கொடுங்கள் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தார், சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கை ஏற்று இவை யாவற்றையும் செய்து தருவதாக அதிகாரி உறுதியளித்தார்.

    இது சம்பந்தமாக சட்ட சபையில் மாண்புமிகு முதல்வரிடம் திமுக உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் பேசி கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    உடன் தி.மு.க. கழக செயலாளர் சக்திவேல், துணை செயலாளர் ஆரோக்கியராஜ், கிளைச் செயலாளர்கள் செல்வம் மற்றும் ராகேஷ், கழக சகோதரர்கள் பாலாஜி, ரகுராமன், ஊர் பஞ்சாயத்தாரர்கள், ஊர் பிரமுகர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×