search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேதுபாவாசத்திரம் அருகே கழுமங்குடாவில் சாலை வசதி செய்து தர வேண்டும்
    X

    கூட்டத்தில் கவுன்சிலர் பேசியனார்.

    சேதுபாவாசத்திரம் அருகே கழுமங்குடாவில் சாலை வசதி செய்து தர வேண்டும்

    • சேதுபாவாசத்திரம் ஒன்றிய குழு கூட்டம் பூக்கொல்லையில் உள்ள அலுவலகத்தில் நடந்தது.
    • பழுக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கழிப்பறை கட்டிடம் கட்டி தர வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றிய குழு கூட்டம் பூக்கொல்லையில் உள்ள அலுவலகத்தின் மாடியில் நடைபெற்றது.கூட்டத்திற்கு ஒன்றிய பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் தலைமை வகித்தார்.

    துணைத் தலைவர் முத்துலட்சுமி காளிமுத்து முன்னிலை வகித்தார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.

    கவுன்சிலர் குழ.செ.அருள்நம்பி (திமுக) :

    ருத்திரசிந்தாமணி ஊராட்சியில் பழுக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ஆண்கள், பெண்கள் தனித்தனியாக பயன்படுத்தும் வகையில் கழிப்பறை கட்டிடம் கட்டி தர வேண்டும். நீர் தேக்க தொட்டி, சமையல் கூடம் பழுது நீக்கி தர வேண்டும்.

    பாமா செந்தில்நாதன் (திமுக) :

    சாந்தாம்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் கட்டி தர வேண்டும்.சத்துணவு திட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும்.

    சிவ.மதிவாணன் (அதிமுக) :

    கொள்ளுக்காடு ஊராட்சி அந்தோணியார்புரம் பகுதியில் சாலை வசதி செய்து தர வேண்டும்.

    மீனவராஜன் (அதிமுக):

    மல்லிப்பட்டினத்தில் ராமர் கோயில் முதல் முஸ்லிம் தெரு வரை சாலை வசதி செய்து தர வேண்டும்.

    சாகுல் ஹமீது (திமுக) :

    சேதுபாவாசத்திரம் அருகே கழுமங்குடாவில் கஜா புயலில் சேதமடைந்த முத்தரையர் சுடுகாடு சீரமைத்து சாலை வசதி செய்து தர வேண்டும் என்றார்.

    மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவுன்சிலர்கள் பேசினர்.

    கூட்டத்தில் செய்யது முகமது, சுதாகர், அழகுமீனா, அமுதா, அருந்ததி, ராஜலெட்சுமி உள்ளிட்ட கவுன்சிலர்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    அனைத்து கோரிக்கைகளும் பரிசீலனை செய்து நிறைவேற்றப்படும் என ஒன்றிய பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் உறுதி கூறினார்.

    முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் சடையப்பன் நன்றி கூறினார்.

    Next Story
    ×